![]() |
மேர்வின் சில்வா |
நான் என்ற ஆணவம் அதர்மமாக விஸ்வரூபமெடுத்தாலும்-ஒருநாள் தர்மத்தின் காலடியில் விழும்.
31 ஆகஸ்ட் 2013
நவனீதம்பிள்ளை கடும் அதிருப்தி!
28 ஆகஸ்ட் 2013
அபிவிருத்தியை மதிப்பிட நான் வரவில்லை-நவநீதம்பிள்ளை
27 ஆகஸ்ட் 2013
நவிபிள்ளை - அனந்தி சந்திப்பு!
யாழ்ப்பாணத்திற்கான விஜயத்தை மேற்கொண்டுள்ள ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் ஆணையாளர் நவநீதம்பிள்ளையை தமிழீழ விடுதலைப் புலிகளின் முன்னாள் போராளி எழிலனின் மனைவியும் வடமாகாண சபை வேட்பாளருமான அனந்தி சசிகரன் சந்தித்துப்பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார். யாழ்ப்பாணம் நல்லூர் கோவிலுக்கு அருகாமையிலுள்ள யு.என்.சி.எச்.ஆர் காரியாலயத்தில் வைத்தே இந்த சந்திப்பு இடம்பெற்றுள்ளது.வடமாகாண பிரஜைகள் குழுவுடன் சென்றே அனந்தி நவநீதம்பிள்ளையை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தியதாக தெரிவிக்கப்படுகின்றது. இந்த காரியாலயத்தில் வைத்து பல்வேறு சிவில் சமூக பிரதிகளையும் சந்தித்து கலந்துரையாடியுள்ளார். அதன் காணாமல் போன தங்களுடைய உறவுகளை தேடிதருமாறு தாயொருவர் கண்ணீருடன் மன்றாடியுள்ளார்.
அவரை கட்டியணைத்த நவீபிள்ளை உங்களுடைய நிலைமைகளை நானறிவேன் என்று தெரிவித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
26 ஆகஸ்ட் 2013
சுயநிர்ணய உரிமையை அடைந்து தீருவோம்!
நவநீதம்பிள்ளையை எதிர்த்து சிங்களவர்கள் போராட்டம்!
ஐக்கிய நாடுகள் அமைப்பிற்கான இலங்கைத் தலைமைக் காரியாலயத்திற்கு எதிரில் போராட்டம் நடத்தப்பட்டு வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது.
கொழும்பு பம்பலப்பிட்டியில் அமைந்துள்ள இந்தக் காரியாலயத்திற்கு எதிரில் ரவனா பலய அமைப்பு போராட்டம் நடத்தி வருகின்றது.
ஐக்கிய நாடுகள் மனித உரிமைப்பேரவையின் ஆணையாளர் நவனீதம்பிள்ளையின் இலங்கை விஜயத்திற்கு எதிர்ப்பை வெளியிட்டு இந்த போராட்டம் நடத்தப்படுகின்றது.
நவனீதம்பிள்ளையின் இலங்கை விஜயத்திற்கு அரசாங்கம் அனுமதியளித்திருக்கக் கூடாது என ரவனா பலய வலியுறுத்தியுள்ளது.
ஐக்கிய நாடுகள் அமைப்பிற்கும், நவனீதம்பிள்ளைக்கும் எதிராக பதாகைகள் காண்பித்தும் கோஷங்களை எழுப்பியும் ரவான பலாய அமைப்பின் பௌத்த பிக்களும் ஏனைய உறுப்பினர்களும் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்தப் போராட்டத்தின் காரணமாக பௌத்தலாகோ மாவத்தையின் போக்கவரத்து தடைப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
25 ஆகஸ்ட் 2013
கொழும்பு வந்தார் நவநீதம்பிள்ளை!
சில சண்டியர்கள் எதிரிகளை கண்டால் மறைந்துகொள்வர்!
24 ஆகஸ்ட் 2013
பகிரங்கமாகிறது இராணுவ அறிக்கை!
23 ஆகஸ்ட் 2013
தீவகத்தில் சுவரொட்டி ஒட்டுகிறது படைத்தரப்பு!
யாழ்.மாவட்டத்தில்; வடக்கு மாகணசபை தேர்தலில் வேட்பாளர்களாக நிறுத்தப்பட்டுள்ள ஆளும் தரப்பினை சேர்ந்தவர்களை வெற்றி பெறச்செய்ய கிழக்கிலிருந்து ஒரு தொகுதி போராளிகள் தருவிக்கப்பட்டுள்ளனர். இவர்கள் அனைவரும் அரியாலையிலுள்ள இராணுவ முகாமொன்றில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். இவர்களே அண்மையில் கூட்டமைப்பு வேட்பாளர் அனந்திக்கெதிரான ஆர்ப்பாட்டமொன்றில் ஈடுபடுத்தப்பட்டுமிருந்தனர்.
இதனிடையே ஆளும் தரப்பை சேர்ந்தவர்களை வெற்றியடையச் செய்வதற்கான சகல முயற்சிகளையும் இராணுவமும் முன்னெடுத்துவருகின்றது. வடக்கு தேர்தலில் றெமீடியஸ், சீராஸ், உள்ளிட்ட நான்கு வேட்பாளர்களை யாழ்.பாதுகாப்பு படைகளின் கட்டளைத் தலமையகம் தெரிவு செய்து தேர்தலில் களமிறக்கியுள்ளது. இவர்களை வெல்ல வைப்பதற்கான முயற்சிகளிலும் இராணுவம் கடும் முனைப்புடன் செயற்படுகின்றது. குறிப்பாக தீவுப்பகுதியில் றெமீடியஸின், விளம்பர சுவரொட்டிகளை சிவில் உடையில் இராணுவத்தினரே ஒட்டி வருவதாக கூட்டமைப்பு குற்றச்சாட்டுக்களை எழுப்பியுள்ளது.
மேலும் வீதிகள் முழுவதும் குறித்த வேட்பாளரின் பெயரை நள்ளிரவு 12மணி முதல் அதிகாலை வரை இராணுவமே எழுதி வருகின்றது. இதனை பலர் அவதானித்திருக்கின்றனர். இதனைவிட றெமீடியஸிற்கு வாக்களிக்குமாறு சகல முன்னாள் போராளிகளுக்கும் படைமுகாம்களிற்கு அழைக்கப்பட்டு பணிப்புரை விடுக்கப்பட்டுள்ளது.
இதனிடையே கிழக்கிலிருந்து தருவிக்கப்பட்டுள்ள போராளிகள் தேர்தல் முடியும் வரை தம்மை வீடு திரும்ப படையினர் அனுமதிக்கப் போவதில்லையென கூறியிருப்பதாக தத்தம் குடும்பங்களிற்கு தொலைபேசி மூலம் தகவல் வழங்கியுள்ளனர்.
22 ஆகஸ்ட் 2013
புளியங்கூடல் மகாமாரி அம்பாள் ஆலயத்தில் கொள்ளையர் கைவரிசை!

இந்த கொள்ளை சம்பவம் தொடர்பாக ஊர்காவற்றுறை பொலிசார் விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் செய்திகள் தெரிவிக்கின்றன.
போர்த்தடயங்கள் அழிப்பு முள்ளிவாய்க்காலில் அரங்கேறுகிறது!
இறுதிப்போர் இடம்பெற்ற முள்ளிவாய்க்கால் பகுதியில் போர் எச்சங்களாகக் கிடந்த வாகனங்கள் மற்றும் பொருள்கள் கடந்த சில நாள்களாக வேகமாக அகற்றப்பட்டு வருகின்றன என்று வன்னிப் பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர். ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணையாளர் நவிப்பிள்ளையின் (நவநீதம் பிள்ளை) வருகைக்கு முன்பாக இவை அகற்றப்படுகின்றனவா என்ற அச்சத்தையும் அவர்கள் வெளியிட்டுள்ளனர்.இராணுவத்தினர் போன்று உடையணிந்தவர்களே போர் எச்சங்களை அகற்றும் பணியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர் என்று அதனை நேரில் கண்ட மக்கள் தெரிவித்தனர்.பணிகள் மிக வேகமாக மேற் கொள்ளப்படுகின்றன என்றும் அப்பகுதியால் செல்லும் மக்கள் இதனை ஒளிப்படம் எடுக்க முற்பட்டால் விரட்டப்படுகின்றனர் என்றும் அவர்கள் கூறினர்.இறுதிப் போரில் கைவிடப்பட்ட பல நூற்றுக் கணக்கான வாகனங்களின் சிதைந்த பகுதிகள் போர் எச்சங்களாக கரையாம் முள்ளிவாய்க்கால் பகுதியில் வீதியோரமாகக் குவிக்கப்பட்டிருந்தது.இவற்றி பெரும் பகுதி திங்கட்கிழமை இரவு 7 மணியில் இருந்து அதிகாலை 5 மணிக்குள் அங்கிருந்து அகற்றப்பட்டதாக மக்கள் கூறுகின்றனர்.கனரக வாகனங்களின் உதவியுடன் போர் எச்சங்களை அகற்றும் பணியில் இராணுவத்தினர் போன்று தோற்றமளித்தவர்களே ஈடுபட்டனர்'' என்று மக்கள் தெரிவித்தனர்.இது தவிர புதுக்குடியிருப்பு பொது விளையாட்டு மைதானம்,சதந்திரபுரம் விளையாட்டுக் கழகமைதானம் ஆகியவற்றிலும் போரில் சிதைந்த வாகனங்களின் பாகங்கள் குவிக்கப்பட்டிருந்தன. இவை வெளியே தெரியாதவாறு மூடி பெரிய மறைப்புக்களை இராணுவத்தினர் ஏற்படுத்தி வருகின்றனர் என்றும் மக்கள் கூறினர்.இலங்கைக்கு எதிர்வரும் 25 ஆம் திகதி வருகை தரும் ஐ.நா.மனித உரிமைகள் ஆணையாளர் நவநீதம் பிள்ளை 27 ஆம் திகதி வடக்குக்கான தனது பயணத்தை ஆரம்பிப்பார். முள்ளிவாய்க்கால் பகுதிக்கும் செல்ல திட்டமிட்டுள்ளார் என்று கூறப்பட்டிருந்தது.தனது பயணக் காலத்தில் பெரும் பகுதியை அவர் வடக்கிலேயே செலவிடுவார் என்று அரசு கூறியிருக்கிறது.
21 ஆகஸ்ட் 2013
சாவகச்சேரியில் பெண் சடலமாக மீட்பு!
புலிகள் இயக்கத்தை சேர்ந்த தம்பதிகள் கைதாம்!

20 ஆகஸ்ட் 2013
அமோக வெற்றி எமக்கே-சம்பந்தன்
நன்றி:உதயன்
19 ஆகஸ்ட் 2013
யாரும் காணாமல் போகவில்லை வெளிநாடுகளுக்கு தப்பிவிட்டார்கள்-கோத்தபாய
சிறிலங்காவில் போரின்போது காணாமற்போனவர்களாகப் பட்டியலிடப்பட்டுள்ள பலர் வெளிநாடுகளில் புதிய அடையாளத்துடன் வாழ்வதாக சிறிலங்கா பாதுகாப்புச் செயலர் கோத்தாபய ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
இவ்வாறு காணாமற்போனதாக பட்டியலிடப்பட்ட ஒருவரை கனடா நாடுகடத்தியுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
“முன்னதாக நாடுகடத்தப்பட்டவரின் தாயார், போர் முடிவுக்கு வந்த பின்னர் தனது மகன் எங்கே என்று தனக்குத் தெரியவில்லை என்று கூறியிருந்தார்.
இது ஒன்றும் தனித்ததான ஒரு சம்பவம் அல்ல. இங்கே காணாமற்போனதாக அறிவிக்கப்பட்ட பெரும் எண்ணிக்கையானவர்கள் பல்வேறு நாடுகளில் வாழ்கிறார்கள்.
அவர்களில் சிலர் இங்கு தீவிரவாத குற்றச்சாட்டுகளை எதிர்கொள்பவர்கள்.
சில வெளிநாட்டு அரசாங்கங்கள், எம்முடன் ஒத்துழைக்க விரும்பவில்லை.
போதிய பாதுகாப்பின்மையால், வெளிநாடுகளில் அரசியல் அடைக்கலம் தேடியவர்கள் பொய்யான பெயர்களில் புதிய கடவுச்சீட்டுகளைப் பெற முடிகிறது.
இதற்கு ஒரு நல்ல உதாரணம், ஒருகாலத்தில் ஜேவிபி முன்னணி உறுப்பினராக இருந்த பிறேம்குமார் குணரட்ணத்துக்கு வேறோரு பெயரில் கடவுச்சீட்டு வழங்கப்பட்டுள்ளதைக் குறிப்பிடலாம்.
வவுனியா மருத்துவமனையில் பாதுகாப்புக்கு மத்தியில் சிகிச்சை பெற்று வந்த போது சிலர், வெளிநாட்டுக்குத் தப்பிச் சென்றுள்ளனர்.
2009 மே மாதம் போர் முடிவுக்கு வந்தவுடன் நிலவிய குழப்பமான சூழலைப் பயன்படுத்தி, வவுனியா மருத்துவமனையில் இருந்து புலிகள் தப்பிச் சென்றுள்ளனர்.இவ்வாறு தப்பிச்சென்றவர்களில் பலர் விடுதலைப் புலிகளின் முக்கியமான போராளிகள்.
வெளிநாடுகளில் தங்கியுள்ள அவர்களிடம் விசாரணை நடத்த சிறிலங்கா அரசாங்கம் மேற்கொண்ட முயற்சிகள் தோல்வியில் முடிந்தன.
சட்டவிரோத குடியேற்றங்கள் தொடர்பான விசாரணை நடத்த பல்வேறு சந்தர்ப்பங்களில் சிறிலங்கா அரசாங்கம் கோரழிக்கைகளை விடுத்த போதிலும், அதற்கு வெளிநாட்டு அரசாங்கங்கள் ஒத்தழைக்க மறுத்து விட்டன” என்றும் அவர் மேலும் கூறியுள்ளார்.
முகநூல் நிருவனருக்கே ஆப்பு!

18 ஆகஸ்ட் 2013
ஆயுதக்குழுவின் அராஜகத்தை தீவகத்தில் தடுத்து நிறுத்துக!
17 ஆகஸ்ட் 2013
நெடுந்தீவுக்குள் சிறிதரன்!

எம்.பி சிறிதரன் தன்னுடன் 40 பேர் கொண்ட படையணியுடன் நெடுந்தீவுக்கு சென்றுள்ளதாக தவல்கள் தெரிவிக்கின்றன. நேற்று முன்தினம் அங்கு கூட்டமைப்பு உறுப்பினர்கள் ஈ.பி.டி.பியால் தாக்கப்பட்டதன் பின் இவ்வாறு சிறிதரன் தனது ஆதரவாளர்களுடன் அங்கு காலடி வைத்துள்ளதால் அப் பகுதியில் பதற்றம் ஏற்படும் ஆபத்து உள்ளதாகத் தெரியவருகின்றது.
16 ஆகஸ்ட் 2013
நெடுந்தீவில் ஆளும்தரப்பு தாக்குதல்!

வருகிறார் நவநீதம்பிள்ளை!
உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு இலங்கை வரவுள்ள ஐக்கிய நாடுகளின் மனித
உரிமைகளுக்கான ஆணையாளர் நவநீதம்பிள்ளை வடக்கு மற்றும் கிழக்கு பகுதிகளுக்கு விஜயம் செய்வார் என அவரது அலுவலகம் அறிவித்துள்ளது.
இலங்கை அரசாங்கத்தின் அழைப்பை ஏற்று செல்லும் நவநீதம் பிள்ளை ஓகஸ்ட் 25ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை இலங்கையில் தங்கியிருப்பார் என அவரது ஊடகப் பிரிவு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.
இலங்கைக்கு வரும் நவநீதம்பிள்ளை இலங்கை நீதித்துறை சிரேஷ்ட அதிகாரிகளையும் சந்திக்கவுள்ளார். அத்துடன்,மஹிந்த ராஜபக்ஷ மற்றும் அமைச்சர்கள், அதிகாரிகள், அரசியல் கட்சிகளின் தலைவர்கள், சிவில் அமைப்புக்களின் பிரதிநிதிகள் ஆகியோரையும் சந்தித்துக் கலந்துரையாடுவார் என தெரிவிக்கப்படுகிறது.
இலங்கை நீதித்துறையின் சிரேஷ்ட அதிகாரிகள், மனித உரிமை ஆணைக்குழுவின் உறுப்பினர்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகளைச் செயல்படுத்துவதற்கான தேசிய செயற்றிட்டக் கண்காணிப்புக் குழுவின் உறுப்பினர்கள் ஆகியோரையும் நவநீதம்பிள்ளை சந்திக்கவுள்ளார்.
இதேவேளை கோட்டாபய ராஜபக்ஷவையும் நவநீதம்பிள்ளை சந்திப்பார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
15 ஆகஸ்ட் 2013
கொலையாளி ராஜ பக்ஷவை விரட்டியடிக்க வேண்டும்!
வெலிவேரிய தாக்குதல் சம்பவத்தைக் கண்டித்து கொழும்பு கோட்டை ரயில் நிலையத்துக்கு முன்பாக பொது எதிரணி நேற்று மாபெரும் ஆர்ப்பாட்டமொன்றை முன்னெடுத்தது.ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் திரண்டு வந்து இதில் பங்கேற்று அரசுக்கு எதிராகக் கோஷங்களை எழுப்பினர். ரணில் விக்கிரமசிங்க, மனோ கணேசன், சுமந்திரன், விக்கிரமபாகு, சிறிதுங்க ஜயசூரிய, சரத் மனமேந்திரா, ஹேமகுமார நாணயக்கார ஆகியோர் உட்படப் பல அரசியல் பிரமுகர்களும் கலந்து கொண்டனர்.அத்துடன்,தொழிற்சங்கங்கள்,ஊடக அமைப்புகள் ஆகியனவும் ஆர்ப்பாட்டத்துக்குத் தமது ஆதரவை வழங்கும் வகையில் பங்கேற்றிருந்தன.பல அம்சங்கள் அடங்கிய கோரிக்கைகளை முன்வைத்து பிற்பகல் 3 மணியளவில் கோட்டை ரயில் நிலையத்திலிருந்து பேரணியாக ஜனாதிபதி செயலகத்தை நோக்கிச் சென்றஆர்ப்பாட்டக்காரர்கள், "கொலையாளி ராஜபக்ஷவை விரட்டியடிக்க வேண்டும்'', "தண்ணீருக்கு குண்டு தான் பரிசா?'' என்றெல்லாம் கோஷமெழுப்பினர்.பஸ் மீது ஐ.தே.க. எம்.பிக்கள்.ஐ.தே.கவின் எம்.பிக்கள் சிலர் ஜனாதிபதி செயலகத்துக்கு முன்னால் இருந்த பஸ் ஒன்றின் மீது ஏறி கோ மெழுப்பினர். இதனால் அவ்விடத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. செயலகத்தை சூழப் பொலிஸாரும், விசேட அதிரடிப் படையினரும், கலகம் அடக்கும் பொலிஸாரும் குவிக்கப் பட்டிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.அதேவேளை, நேற்றைய ஆர்ப்பாட்டத்தால் காலி வீதியில் பெரும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. அவ்வீதியூடாக நடந்துசென்ற மக்களும் பெரும் அசெளகரியங்களுக்கு உள்ளாகினர்.
14 ஆகஸ்ட் 2013
விழிப்புணர்வு சுவரொட்டிகள்!
நல்லூர் ஆலய சுற்றாடல், திருவிழா காலத்தில் புனிதமாக பாதுகாக்கப்படவேண்டும் என்ற நோக்கில்சில அமைப்புக்கள் நடவடிக்கை எடுத்துள்ளன. இந் நிலையில் ஆலய சுற்றாடலில் அமைக்கப்பட்டுள்ள வர்த்தக நிலையங்களில் அதிகரித்துள்ள மதுபானப் பாவனை மற்றும் புகைத்தல் ஆகியவறைத் தடுககும் நோக்குடன் சோஷலிச இளைஞர் சங்கத்தால் விழிப்புணர்வு சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளன. இதனை கடைப்பிடிப்பது ஆலய சுற்றாடலில் உள்ள அனைவரினதும் கடமையும் பொறுப்பும் ஆகும். இதனை சீர்குலைக்கும் வகையில் நடந்துகொள்பவர்கள் மீது பாதுகாப்புக் கடமையில் ஈடுபட்டுள்ளவர்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்களும், இந்து அமைப்புக்களும் வேண்டி நிற்கின்றன.
13 ஆகஸ்ட் 2013
யாழில் புலம்பெயர்ந்த பெண்களால் கலாச்சார சீரழிவாம்!
முஸ்லிம் அரசியல்வாதிகளுக்கு வெட்கம் இல்லையா?
முஸ்லிம்களுக்கு எதிராக மதத்துக்கு எதிராக பௌத்த இனவாத காடையர் குழுக்கள் தாக்குதலை மேற்கொள்கின்றபோது அரசுடன் ஒட்டிக்கொண்டிருந்து சுகபோகங்களை அனுபவிப்பது முஸ்லிம் அரசியல்வாதிகளுக்கு வெட்கம் இல்லையா?
இவ்வாறு தமிழ்த் தேசியக்கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் பா.அரியநேத்திரன் கேள்வியெழுப்பியுள்ளார்.
கொழும்பு கிராண்ட்பாஸ் முஸ்லிம் பள்ளிவாசல் மீதான தாக்குதலை வன்மையாகக் கண்டித்துள்ள அவர், இந்தத் தாக்குதலை அரசின் அனுமதியுடன் பௌத்த இனவாத காடையர் குழுவே நடத்தியது என்றும் தெரிவித்தார்.
அரசின் இத்தகைய அராஜகங்களைத் தடுத்துநிறுத்த தமிழ் மக்களுடன் முஸ்லிம் மக்கள் அணிதிரண்டு போராட முன்வரவேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
இதுகுறித்து அவர் மேலும் தெரிவித்ததாவது:
அரச தரப்பும் அதன் காடையர் குழுவும் தமிழ், முஸ்லிம் இனங்களுக்கு எதிராக தொடர்ச்சியாகத் தாக்குதலை நடத்தி வருகின்றன. இதன் ஒரு கட்டமாகத்தான் கிராண்ட்பாஸ் முஸ்லிம் பள்ளிவாசல் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
அண்மைக்காலமாக முஸ்லிம் பள்ளிவாசல்கள் மீது அரசின் மறைமுக அனுமதியுடன் அராஜகங்கள் தொடர்கின்றன.ஆனால், முஸ்லிம் அமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள் கண்டனங்களை மட்டும் வெளியிட்டு விட்டு அரசுடன் சேர்ந்திருக்கின்றார்கள்.
எனவே, முஸ்லிம் அரசியல்வாதிகளும் முஸ்லிம் மக்களும் சிந்தித்து ஒரு தீர்க்கமான முடிவொன்றை எடுக்க வேண்டும் என்றார்.
12 ஆகஸ்ட் 2013
யாழ்ப்பாணத்தமிழர்களை வெல்ல முடியாது-சிங்கப்பூர் பிரதமர்!
சிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்ச ஒரு சிங்களத் தீவிரவாதி, அவரை திருத்தவே முடியாது என சிங்கப்பூரின் முதல் பிரதமரும், தற்போதைய பிரதமரின் தந்தையுமான லீ குவான் யூ தெரிவித்துள்ளார். “லீ குவான் யூ உடனான உரையாடல்கள்“ என்ற தலைப்பில், லொஸ் ஏஞ்சல்ஸை சேர்ந்த பேராசிரியர் ரொம் பிளேட், லீயிடம் செவ்வி கண்டு நூல் ஒன்றை எழுதியுள்ளார். முன்னணி பத்திரிகையாளரான பேராசிரியர் ரொம் பிளேட், எழுதியுள்ள இந்த நூலில்தான் மகிந்த ராஜபக்ச குறித்து லீ குவான் யூ இவ்வாறு கூறியுள்ளார். சிறிலங்காவின் தற்போதைய நிலவரம் குறித்து சிங்கப்பூரின் முதல் பிரதமர் லீ குவான் யூ அளித்துள்ள செவ்வியில் கூறியுள்ளதாவது. சிறிலங்காவில் சிங்களவர்கள் எப்போது முதல் இருக்கிறார்களோ அப்போதிலிருந்தே தமிழர்களும் இருக்கின்றனர். தமிழர்களும், சிங்களவர்களும் இணைந்து வாழ்வதற்கான சூழல் இல்லை. சிறிலங்கா ஒரே நாடாக இருக்கும் வரை மகிழ்ச்சியான நாடாக இருக்க முடியாது. சிறிலங்காவில் தமிழர்களுக்காகப் போராடி வந்த விடுதலைப் புலிகள் வீழ்த்தப்பட்டு விட்டனர். இதன்மூலம் சிறிலங்கா இனச்சிக்கலுக்குத் தீர்வு காணப்பட்டு விட்டது என்று சிறிலங்காஅதிபர் ராஜபக்ச கூறி வருகிறார். இதை மற்றவர்களும் நம்ப வேண்டும் என்று எதிர்பார்க்கிறார். ஆனால், தமிழர்கள் அடங்கிப் போகமாட்டார்கள். சிங்களவர்களுக்குப் பயந்து ஓடிவிடவும் மாட்டார்கள். சிறிலங்கா அதிபர் ராஜபக்சவின் பேச்சுக்களை நான் படித்திருக்கிறேன். அவர் ஒரு சிங்களத் தீவிரவாதி. இதை நான் நன்றாக அறிவேன். அவரது மனதை மாற்றவோ, அவரைத் திருத்தவோ முடியாது.சிறிலங்கா இன்று மகிழ்ச்சியுடன் இல்லை. பெரும்பான்மையாக உள்ள சிங்களவர்கள், விடுதலைப் புலிகளை அழித்து விட்டனர் என்பது உண்மைதான். ஆனால், சிறுபான்மையினரான தமிழர்களை வெல்லும் தகுதியும், துணிச்சலும் அவர்களுக்கு நிச்சயம் இல்லை. யாழ்ப்பாணத் தமிழர்களை அவர்களால் நிச்சயம் வெல்லவே முடியாது. அதனால்தான் அவர்களை நசுக்கி, ஒடுக்க முனைகிறார்கள். முன்பும் இப்படித்தான் செய்தார்கள். இதுதான் ஆயுதப் போராட்டமாக வெடித்தது. இப்போதும் அதையே செய்ய முனைகிறார்கள். ஆனால் ஒட்டுமொத்த தமிழ் இனத்தையும் அழித்துவிட முடியும் என்ற அவர்களின் எண்ணம் நிச்சயம் ஈடேறாது என்று நான் கருதுகிறேன். சிறிலங்காவில் இன்று நடந்து கொண்டிருப்பது அப்பட்டமான ஒரு இன அழிப்பு என்பதில் சந்தேகமே இல்லை. தமிழர்கள் மீண்டும் ஆயுதப் போராட்டத்தை தொடங்குவார்களா என்பதை என்னால் சொல்ல முடியாது. ஆனால் நிச்சயம் தமிழர்கள் பொறுமையோடு நீண்டகாலம் காத்திருக்க மாட்டார்கள் என்றே நான் கருதுகிறேன். அதற்கேற்றபடி தான் சிறிலங்கா அரசு இப்போது நடந்து கொண்டிருக்கிறது. என்னைப் பொறுத்தவரை, சிங்களவர்களை விட தமிழர்களுக்குத் தான் அதிக மரியாதை தரப்பட வேண்டும்.அதற்கு முற்றிலும் தகுதியானவர்கள் தமிழர்கள் தான். மலேசியா, சிங்கப்பூரில் மலாய் இனத்தவரை விட சீனர்களும், தமிழர்கள் உள்ளிட்டோரும் தான் கடுமையாக உழைக்கிறார்கள். அதேபோல இஸ்ரேலியர்களும், ஜப்பானியர்களும் மிகக் கடுமையான உழைப்பாளிகள். எதிர்கால உலகம் சீனர்கள் மற்றும் ஆசியர்களிடம் தான் இருக்கப் போகிறது என அவர் குறிப்பிட்டுள்ளார்.
11 ஆகஸ்ட் 2013
தமிழர்களிடமும் பொதுமன்னிப்பு கோருமா அரசு?சுரேஷ் பிரேமச்சந்திரன்

சுரேஷ் பிரேமச்சந்திரன்.
10 ஆகஸ்ட் 2013
கள்ளக்காதலனுடன் சேர்ந்து கணவனைக்கொன்றாள்!
கள்ளக்காதலனுடன் உல்லாசமாக இருக்க தடையாய் கணவன் இருந்ததால் அவரை கொலை செய்தோம் என்று நாம் தமிழர் கட்சி பிரமுகர் பசும்பொன் ராஜாவின் மனைவி சரண்யா விசாரணையில் தெரிவித்துள்ளார்.
திருத்தணி மேட்டுத் தெருவைச் சேர்ந்தவர் பசும்பொன்ராஜா (28). நாம் தமிழர் கட்சி திருவள்ளூர் மேற்கு மாவட்ட இணை செயலாளராக இருந்தார். கோணிப்பை வியாபாரம் செய்து வந்தார். இவரது மனைவி சரண்யா. இவர்களுக்கு 4 வயதில் மருதபாண்டி என்ற மகன் உள்ளான்.
நேற்று முன்தினம் இரவு பசும்பொன்ராஜா திருத்தணி நகர எல்லையில் சித்தூர் சாலையில் மர்ம நபர்களால் வெட்டிக் கொலை செய்யப்பட்டு கிடந்தார். அருகில் அவரது மோட்டார்சைக்கிளும், செல்போனும் கிடந்தது.
இதுகுறித்து திருத்தணி போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினர். கொலையாளிகளை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டது.
பசும்பொன் ராஜா உடலுக்கு நாம் தமிழர் கட்சி தலைவர் சீமான் மற்றும் கட்சி நிர்வாகிகள் அஞ்சலி செலுத்தினர்.
நேற்று மதியம் பசும் பொன்ராஜா உடல் பரிசோதனை முடிந்து உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. அப்போது அவரது மனைவி சரண்யாவின் நடவடிக்கை போலீசாருக்கு சந்தேகத்தை ஏற்படுத்தியது. மேலும் அவர் அதே பகுதியைச் சேர்ந்த ஒருவரிடம் நெருங்கி பழகி வந்ததும் தெரிந்தது.
இதையடுத்து சரண்யாவிடம் கிடுக்கிப்பிடி விசாரணை நடத்தினர். அப்போது திருத்தணியில் வசிக்கும் கள்ளக்காதலன் சசிக்குமாருடன் சேர்ந்து கூலிப் படையினரை ஏவி கணவரை தீர்த்து கட்டியதை ஒப்புக் கொண்டார்.
இதையடுத்து சரண்யா, கள்ளக்காதலன் சசிக்குமார், கூலிப்படையைச் சேர்ந்த திருத்தணி இந்திராநகரைச் சேர்ந்த நாகராஜன் ஆகியோரை கைது செய்தனர். மேலும் தப்பி ஓடிய கூலிப்படையைச் சேர்ந்த அதே பகுதியில் வசிக்கும் சுகுமாரை தேடி வருகின்றனர்.
பசும்பொன்ராஜா, அகூர் பகுதியில் கோணிப்பை தைக்கும் கடை நடத்தி வந்தார். அங்கு கொரியர் கலெக்ஷன் சென்டரும் வைத்திருந்தார்.
இதில் சசிக்குமாரும், சரண்யாவும் வேலை பார்த்தனர். அப்போது பசும் பொன்ராஜாவுக்கும், சரண்யாவுக்கும் காதல் ஏற்பட்டது. இருவரும் திருமணம் செய்து கொண்டனர்.
ஆனாலும் வேலை பார்த்த போது சசிக்குமாருடன் கிடைத்த நட்பை சரண்யா தொடர்ந்தார். பின்னர் இது கள்ளக்காதலாக மாறியது.
சசிக்குமார் அடிக்கடி சரண்யாவை சந்திக்க வீட்டிற்கு வந்தார். கடையில் வேலை பார்த்தவர் என்பதால் பசும்பொன்ராஜாவுக்கு சந்தேகம் வர வில்லை.
இதனை சாதகமாக பயன் படுத்திய கள்ளக்காதலர்கள் தனிமையில் ஜாலியாக இருந்தனர். 4 வருடத்திற்கும் மேலாக அவர்கள் உல்லாச வாழ்க்கை நடத்தி வந்தனர்.
இதற்கிடையே மனைவியின் தொடர்பு குறித்து அக்கம் பக்கத்தினர் பசும் பொன் ராஜாவிடம் தெரிவித்தனர். இதனால் அவர்களை கண்காணிக்க தொடங்கினார். சில நாட்களுக்கு முன்பு சசிக்குமாரும், சரண்யாவும் ஒன்றாக இருப்பதை பசும் பொன்ராஜா பார்த்து விட்டார். அவர்கள் 2 பேரையும் கடுமையாக திட்டி கண்டித்தார். மேலும் மனைவி சரண்யா வெளியில் செல்ல கட்டுப்பாடுகள் விதித்தார்.
கள்ளக்காதலனை சந்திக்க முடியாமல் சரண்யா தவித்தார். கணவர் இருக்கும் வரை ஜாலியாக இருக்க முடியாது என நினைத்த அவர் கணவனை தீர்த்து கட்ட முடிவு செய்தார்.
திட்டம் குறித்து கள்ளக்காலன் சசிக்குமாரிடம் கூறினார். அவரும் கொலை செய்ய ஒப்புக் கொண்டார். இதுபற்றி அவர் அதே பகுதியைச் சேர்ந்த கூலிப் படையினர் சுகுமார், நாகராஜிடம் தெரிவித்து கொலை திட்டங்களை வகுத்தனர். நேற்று முன்தினம் வியாபாரம் சம்பந்தமாக வெளியில் செல்வதாக பசும் பொன்ராஜா மனைவி சரண்யாவுக்கு தகவல் கொடுத்து உள்ளார்.
கணவரை தீர்த்து கட்ட இதுதான் சரியான நேரம் என நினைத்த அவர் இதுபற்றி கள்ளக்காதலன் சசிக்குமார், கூலிப்படையினருக்கு தெரிவித்தார். அவர்கள் பசும்பொன் ராஜாவை மோட்டார் சைக்கிளில் பின் தொடர்ந்து சென்று வெட்டிக் கொலை செய்து உள்ளனர். மேற்கண்ட தகவல் சரண்யாவிடம் நடத்திய விசாரணையில் தெரிய வந்தது.
இந்த கொலையில் மேலும் பலருக்கு தொடர்பு இருக்கலாம் என காவல்துறையினர் சந்தேகிக்கிறார்கள். தொடர்ந்து தீவிர விசாரணை நடந்து வருகிறது.
சுகுமாரும், நாகராஜும் திருநின்றவூரில் ஆட்டோ ஓட்டி கூலிப்படையினராக பல்வேறு குற்றச்செயல்களில் ஈடுபட்டு வந்தது விசாரணையில் தெரிய வந்துள்ளது.
கணவரை மனைவியே கள்ளக்காதலனை ஏவி கொன்ற சம்பவம் திருத்தணி பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
மத்தியில் காட்டாட்சி மாநிலத்தில் சுத்துமாத்து ஆட்சி!
09 ஆகஸ்ட் 2013
பொய்யிலே பிறந்து பொய்யிலே வளர்ந்த அஸ்வர்!

08 ஆகஸ்ட் 2013
அருட்சகோதரியை துப்பாக்கியால் மிரட்டிய சிறிலங்கா படையினர்!
07 ஆகஸ்ட் 2013
யாழில் மீற்றர் வட்டியால் உயிர் போகிறது!
06 ஆகஸ்ட் 2013
ஜெயரட்ணத்திற்கு பதவி உயர்வு வேண்டுகிறார் அவரது மனைவி!
விடுதலைப் புலிகளால் கடத்திச் செல்லப்பட்டு, கொல்லப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ள, சிறிலங்கா காவல்துறையின் தீவிரவாத முறியடிப்புப் பிரிவைச் சேர்ந்த இன்ஸ்பெக்டர் ஜெயரட்ணத்துக்கு, மரணத்தின் பின்னரான பதவிஉயர்வை சிறிலங்கா காவல்துறை அளிக்கத் தவறிவிட்டதாக அவரது மனைவி சரளா ஜெயரட்ணம் விசனம் வெளியிட்டுள்ளார்.
சிறிலங்கா காவல்துறையில், விடுதலைப் புலிகளுக்கு மிகவும் சவாலாக விளங்கிய, இன்ஸ்பெக்டர் ஜெயரட்ணம், புலனாய்வு செய்வதில் நிபுணராக இருந்தவர்.
இவர் கல்கிசைப் பகுதியில் உள்ள விடுதி ஒன்றில் இருந்து 2005 ஏப்ரல் 20ம் நாள் கடத்தப்பட்டு, வன்னிக்குக் கொண்டு செல்லப்பட்டு, கொல்லப்பட்டதாக கடந்த சனிக்கிழமை கைது செய்யப்பட்ட நான்கு விடுதலைப் புலிகள் இயக்க முன்னாள் உறுப்பினர்கள் வாக்குமூலம் அளித்துள்ளனர்.
இந்தநிலையில், தமது கணவருக்கு மரணத்துக்குப் பிந்திய பதவி உயர்வை சிறிலங்கா காவல்துறை கொடுக்கத் தவறிவிட்டதாக அவரது மனைவி சரளா ஜெயரட்ணம் குற்றம்சாட்டியுள்ளார்.
அவருக்கு மரணத்துக்குப் பிந்திய பதவிஉயர்வு மற்றும் ஓய்வூதியத்தை வழங்க நடவடிக்கை எடுக்குமாறு தாம் சிறிலங்கா காவல்துறை அதிகாரிகளிடம் கோரியுள்ளதாகவும், அவர் கூறியுள்ளார்.
இன்று ஆடி அமாவாசை விரதம்!
05 ஆகஸ்ட் 2013
தமிழனை சுடும்போது சிரித்தவர்கள் இப்போ அழுகிறார்கள்!
04 ஆகஸ்ட் 2013
புலிகளை அழித்தது அல்லா என்றால் பொதுபல சேனாவை உருவாக்கியதும் அல்லாதான்!

சீட்டுக்காசு கட்ட முடியாததால் பெண் தற்கொலை!
யாழ்ப்பாணத்தில் சீட்டுப் பணத்தை செலுத்த முடியாமல் குடும்ப பெண்ணொருவர் தற்கொலை செய்து கொண்டுள்ளதாக மானிப்பாய் பொலிஸார் தெரிவித்துள்ளனர். யாழ்.சுதுமலை பகுதியிலுள்ள எட்டு பிள்ளைகளின் தாயான பெண்ணொருவரே இவ்வாறு நேற்று தற்கொலை செய்து கொண்டுள்ளார். வீட்டுக்குச் சென்ற சீட்டுக்காரனின் அவமான பேச்சைத் தாங்க முடியாமல் இவர் தற்கொலை செய்து கொண்டுள்ளார். இவரது சடலம் பிரேதப் பரிசோதனைகளின் பின்னர் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. யாழ்ப்பாணத்தில் சீட்டு, மீற்றர் வட்டி, காசோலை மோசடி போன்ற செயற்பாடுகளால் அதிகளவான தற்கொலைகள் இடம்பெற்று வருகின்றதாக பொலிஸார் தெரிவித்திருந்ததும் இங்கு குறிப்பிடத்தக்கது
.
.
03 ஆகஸ்ட் 2013
சம்பந்தன் பிரசாரத்திற்கு வர வேண்டாம்!
வடமாகாணசபை தேர்தலில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பிரசாரக் கூட்டங்களுக்கு சம்பந்தனை அழைக்க வேண்டாம் என யாழ். தமிழரசுக்கட்சியினர் மாவை சேனாதிராசாவுக்கு தெரிவித்துள்ளனர். சம்பந்தன் மீது யாழ். மக்கள் வெறுப்படைந்திருக்கிறார்கள். அவர் தமிழ் தேசியக் கூட்டமைப்பு பிரசார மேடைகளில் ஏறினால் பெரும்பாலான யாழ். மக்கள் தமிழ் தேசியக் கூட்டமைப்புக்கு எதிராகவே வாக்களிப்பார்கள். இதனால் அவரை யாழ்ப்பாணம் அழைத்து வர வேண்டாம் என யாழ். தமிழரசுக்கட்சியினர் மாவை சேனாதிராசாவுக்கு தெரிவித்துள்ளனர்.
சம்பந்தன் யாழ்ப்பாணத்திற்கு பிரசாரத்திற்கு வரும் போது சிங்கள பேரினவாத கொடியான சிங்க கொடியையும் கொண்டு வந்து விடுவார் என்றும் தமிழரசுக்கட்சியில் உள்ள ஒரு சாரார் அச்சம் தெரிவித்துள்ளனர்.
அண்மையில் அலரிமாளிகையில் பத்திரிகை ஆசிரியர்களை சந்தித்த மகிந்த ராசபக்ச தமிழ் தேசியக் கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் தன்னை இரகசியமாக சந்தித்து வருகிறார் என்றும் அவர் அரசுக்கு ஆதரவு வழங்கி வருகிறார் என்றும் தெரிவித்திருந்தார். மகிந்த ராசபக்சவை அடிக்கடி சந்தித்து வருபவர் வேறு யாருமல்ல சம்பந்தனே என்றும் அவர் மகிந்தவை சந்தித்து இரகசிய திட்டங்களை தீட்டி வருகிறார் என்றும் யாழ். தமிழரசுக்கட்சியினர் தெரிவிக்கின்றனர்.
02 ஆகஸ்ட் 2013
முள்ளிவாய்க்கால் ஞாபகத்தில் வெலிவேரியாவில் சுட்டு விட்டனர்!
நன்றி:குளோபல் தமிழ் செய்தி
தமிழீழ தேசியக்கொடியுடன் மூன்றாம் தலைமுறையினர்!
.jpg)
01 ஆகஸ்ட் 2013
தேர்தலைத் தடுக்க அரசு முயற்சி-விக்னேஸ்வரன்
வடமாகாண சபைத் தேர்தலை நடத்துவதற்கு இலங்கை அரசுக்கு விருப்பமில்லை. இதனால் இந்தத் தேர்தலை ஜனநாயக ரீதியிலும் தடுக்க நடவடிக்கை மேற்கொண்டு வருவதாக, இலங்கைத் தமிழரசுக் கட்சியின் வடமாகாண முதன்மை வேட்பாளர் சி.வி.விக் னேஸ்வரன் தெரிவித்தார். இலங்கைத் தமிழரசுக் கட்சியின் யாழ். மாவட்ட அலுவலகத்தில் நேற்று முன்தினம் திங்கட்கிழமை நடத்திய ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார். அங்குஅவர் மேலும் தெரிவித்ததாவது: அரசு வடமாகாண சபைத் தேர்தலை நடத்தாமல் இருப்பதையே விரும்புகின்றது. இங்கு ஆளுநரும், ஒரு சில அரசியல்வாதிகளும் அரச அதிகாரிகளைச் சட்ட ரீதியாகக் கடமைகளைச் செய்யவிடாது தடுத்துக் கொண்டிருக்கின்றனர். அரசு தனக்கு ஏற்பட்டுள்ள நெருக்குதல் காரணமாகவே தேர்தலை நடத்த நடவடிக்கை எடுத்துள்ளது. இதனைத் தடுப்பதற்கு அவர்கள் பல்வேறு முயற்சிகளை எடுக்கின்றனர். ஜனநாயக ரீதியில் கூட தடுக்க நடவடிக்கை மேற்கொள்கின்றனர் என்றார்.
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)