யாழ்ப்பாணத்தில் சிறுவர்களுக்கு எதிரான பாலியல் துன்புறுத்தல்கள் அதிகரித்து வருகின்றமைக்கு பெற்றோரின் கவனமின்மையே முக்கிய காரணம் என யாழ்.மாவட்ட அரச அதிபர் இமல்டா சுகுமார் தெரிவித்துள்ளார். யாழ்.மாவட்ட செயலகத்தில் நேற்று நடைபெற்ற சிறுவர் பாதுகாப்பு பிரிவால் ஏற்பாடு செய்த நிகழ்ச்சியில் பேசும் போதே அவர் இதனைத்தெரிவித்தார்.
யாழ்ப்பாணத்தில் பெற்றோர்கள் தொலைக்காட்சி நாடகங்களில் மூழ்கி விடுகின்றார்கள். தங்கள் பிள்ளைகள் என்ன செய்கிறார்கள் என்பது கூட அவர்களுக்கு தெரியாத நிலையில் அவர்களின் வாழ்க்கை போகிறது. பெற்றோரின் கட்டுப்பாடு இல்லாத பிள்ளைகள் கட்டாக்காலிகளுக்கு சமன். பிள்ளைகளை பாதுகாப்பது பெற்றோரின் முதன்மையான கடமையாகும். பெற்றோரின் கட்டுப்பாட்டுக்குள் இருக்காத பிள்ளைகள் துஸ்பிரயோகத்திற்கு உள்ளாகுவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.