காணாமற் போன லலித்குமார் மற்றும் குகன் ஆகியோர் தொடர்பாக விசாரணைகளை மேற்கொள்ளுமாறு மேன்முறையீட்டு நீதிமன்றம், யாழ் மாவட்ட நீதவானுக்கு உத்தரவு பிறப்பித்துள்ளது. காணாமற்போன இவர்கள் இருவரையும் நீதிமன்றில் ஆஜர்படுத்துமாறு உறவினர்களால் தாக்கல் செய்யப்பட்ட மனு மீதான விசாரணை இன்று எடுத்துக் கொள்ளப்பட்டது.
இதன் போதே மேன்முறையீட்டு நீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது. லலித், குகன் ஆகியோர் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர் எனக் கூறப்படும் இடம் தொடர்பாக அரசு எதுவித தகவல்களையும் வெளியிடவில்லை என குற்றஞ்சுமத்தப்பட்டுள்ளது.
இது தொடர்பிலேயே விசாரணைகளை மேற்கொள்ளுமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.