
திமுக தலைவர் கருணாநிதி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருக்கும் நிலையில், தமிழகம் முழுக்க போலீஸ் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டு இருக்கிறது.
திமுக தலைவர் கருணாநிதிக்கு உடல் நிலை தற்போது மோசமாகி உள்ளது. அவர் காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். காவேரி மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இதனால் தற்போது தமிழகம் முழுவதும் பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரம் செய்யப்பட்டுள்ளது. காவேரி மருத்துவமனையில் 500க்கும் அதிகமான போலீசார் குவிக்கப்பட்டு இருக்கிறார்கள். அங்கு தொண்டர்கள் குழுமுவதால் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.
திமுக தலைவர் கலைஞர் மருத்துவமனையில் இருப்பதால் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. பாதுகாப்பு காரணங்களுக்காக போலீஸ் குவிக்கப்பட்டுள்ளது. தற்போது விடுப்பில் உள்ள காவலர்கள் அனைவரையும் பணிக்கு திரும்ப உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
திருவாரூர் மாவட்டத்திலும், திருக்குவளை கிராமத்திலும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு இருக்கிறது. பதட்டத்தை தணிக்கவும், மக்களுக்கு நம்பிக்கை அளிக்கும் வகையிலும் விரிவான பாதுகாப்பு அளிக்கப்படுவதாக போலீஸ் கூறியுள்ளது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.