
தூத்துக்குடியில் பொதுமக்கள் மீது தடியடி நடத்திய போலீஸ் மீது பெட்ரோல் குண்டு வீசப்பட்டதால் நகரம் மீண்டும் போர்க்களமாகியுள்ளது. தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்குள், நேற்று துப்பாக்கியால் சுடப்பட்டு கொல்லப்பட்டவர்கள் உடல்களை பார்க்க உறவினர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டது. இதையடுத்து, போலீசார் மீது மக்கள் கல்வீசினர்.இதையடுத்து போலீசார் அவர்களை தடியடி நடத்தி கலைக்கபார்த்தனர். அப்படியும் மக்கள் கோபத்தோடு முன்னேறினர். இதையடுத்து 2 ரவுண்டுகள் போலீசார் சுட்டனர். இதனால் கோபமடைந்த போராட்டக்காரர்களில் சிலர், போலீசார் மீது பெட்ரோல் குண்டை வீசினர். கடலோர கிராமங்களில் பெட்ரோல் குண்டு புழக்கம் சகஜமானது என்பதால், இந்த குண்டு எங்கிருந்து வந்திருக்கும் என்பதில் பெரிய ஆச்சரியம் இல்லை என்கிறார்கள் போலீசார். அதிருஷ்டவசமாக இந்த தாக்குதலில் யாருக்கும் காயம் இல்லை.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.