நிரலின் ஒழுங்குக்கு அமைவாக, நிகழ்வுகளை முன்னெடுக்க
முதலமைச்சர் சந்திப்பில் இணங்கியிருந்தார். இன்று
புதன்கிழமையே, முள்ளிவாய்க்கால் ஏற்பாட்டுக்குழு
முள்ளிவாய்க்கால் மண்ணில் சந்திப்பு நடத்தும் என்றிருந்த
நிலையில், மாணவர்களுடன் இணக்கப்பாடு எட்டப்பட்டதும்
நேற்றுக் கூட்டத்துக்கு முதலமைச்சர் அழைப்பு விடுத்தார்.
நினைவேந்தல் ஏற்பாட்டுக்குழுவில் 9 பேர் உள்ள நிலையில் 4 பேர் மாத்திரமே நேற்றைய கலந்துரையாடலில் பங்கேற்றனர். வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன், வடக்கு மாகாண அவைத் தலைவர் சி.வி.கே.சிவஞானம், வடக்கு மாகாண சபை உறுப்பினர்களான து.ரவிகரன், த.குருகுலராஜா ஆகியோரே நேற்றைய கலந்துரையாடலில் பங்கேற்றனர். யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர்கள் சார்பில் 3 பேரும், தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் முன்னாள் போராளியான பசீர் காக்காவும் கலந்து கொண்டனர்.மாணவர்களுடன் கடந்த சனிக்கிழமை
பங்கேற்ற பொதுஅமைப்புக்களின் பிரதிநிதிகள் எவரும் நேற்றுச் சந்திப்பில் பங்கேற்கவில்லை. முதலமைச்சர் முன்னரே எழுதிவந்த, நிகழ்வு ஒழுங்கை வாசித்தார். அனைவரும் ஏற்றுக் கொண்டனர். இதேவேளை சுடரேற்றல் காலை 10 மணிக்கு இடம்பெற வேண்டும் என்று வடக்கு மாகாண சபை தீர்மானித்திருந்தது. பல்கலைக்கழக மாணவர்கள் மதியம் 12.30 மணிக்கே இடம்பெறவேண்டும் என்று வலியுறுத்தியிருந்தனர். இந்த நிலையில் தற்போது 11 மணிக்கு சுடரேற்றல் மாற்றப்பட்டுள்ளது. வடக்கு – கிழக்கின் எட்டு
மாவட்டங்களையும், ஏனைய மாவட்டங்கள் எல்லாவற்றையும் சேர்த்து ஒன்றாகவும், மொத்தமாக 9 சுடர்கள் ஏற்றுவது என்றும், அவை அந்தந்த மாவட்டங்களைப் பிரதிநித்துவப்படும்
பாதிக்கப்பட்ட ஒருவர் ஏற்றுவார் என்றும் வடக்கு
மாகாணசபையின் நினைவேந்தல் குழு முடிவெடுத்திருந்தது.
இதற்குப் பல்கலைக்கழக மாணவர்கள் ஆட்சேபம்
தெரிவித்துள்ளனர்.சரியான ஒருவரை எல்லா
மாவட்டங்களிலிருந்தும் தெரிவது கடினம் என்றும் ஒரேயொரு முதன்மைச் சுடரை ஏற்றுவதுதான் சரியானது என்றும்
கூறியுள்ளனர்.இதனை வடக்கு மாகாண சபை நினைவேந்தல்
ஏற்பாட்டுக்குழு ஏற்றுக் கொண்டுள்ளது.போரால்
பாதிக்கப்பட்டவர்களே சுடரேற்றுவர் என்று முன்னர்
தீர்மானிக்கப்பட்டிருந்தாலும்,தற்போது முதலமைச்சர் சுடரை
ஏற்றி,பாதிக்கப்பட்ட ஒருவரிடம் கையளிக்க அவர் ஏற்றுவார் என்று மாற்றப்பட்டுள்ளது. அதேவேளை,இதுகுறித்துக் கருத்து வெளியிட்ட பல்கலைக்கழக மாணவர் ஒன்றிய தலைவர் கி.கிருஸ்ணமேனன், நினைவேந்தல் நிகழ்வுக்கான பணிகளை, கடந்த காலங்களில் முரண்பட்டிருந்த தரப்புக்களை ஒன்றிணைத்து மேற்கொள்ளவுள்ளோம் என்று தெரிவித்துள்ளார். முள்ளிவாய்க்காலில் இன்றுஇடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார். “முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வுக்கான பணிகளை அனைத்து தரப்புக்களையும் இணைத்து அதாவது கடந்த காலங்களில் முரண்பட்டு இருந்த நான்கு தரப்புக்களையும் ஒன்றாக இணைத்து ஏற்பாடுகளை செய்வதற்காக முள்ளிவாய்க்கால் மண்ணுக்கு வந்துள்ளோம். எதிர்வரும் 18ம் திகதி பல்கலைக்கழகத்தில் இருந்து பாரிய மோட்டார் சைக்கிள் பேரணி ஒன்று ஆரம்பமாகி முள்ளிவாய்க்கால் மண்ணை அது வந்தடையும். பல்கலைக்கழக மாணவர்கள் அனைவரும் கலந்துகொண்டு உலகுக்கு காத்திரமான செய்தி ஒன்றினை சொல்ல தயாராகிக்கொண்டிருக்கின்றோம். அதற்கு ஆதரவு தருமாறு கேட்டுக்கொள்கின்றோம். தாயகத்தில் எவ்வாறு நாங்கள் ஒற்றுமையான நினைவு நிகழ்வை நடத்துகின்றோமோ, அதேபோல் புலம்பெயர் நாடுகளிலும் அனைவரும் இலங்கை தூதரகத்துக்கு முன்பாகவோ அல்லது நாட்டின் தூதரகத்துக்கு முன்பாக சென்று நினைவேந்தலை செய்வதன் ஊடாக, அந்த நாட்டின் அரசாங்கம் ஊடாக காத்திரமான செய்தி ஒன்றினை ஐ.நா சபைக்கு கொண்டு செல்ல முடியும். எங்கள் உரிமையைப் பெற்றுக்கொள்ள அது வலுசேர்க்கும்” என தெரிவித்துள்ளார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.