
வடக்கு மாகாண சபை அமைச்சர் திருமதி அனந்தி சசிதரன் மற்றும் தமிழ் அரசுக் கட்சியின் இளைஞர் அணியின் முன்னாள் செயலர் சிவகரன் இருவரையும், இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியிலிருந்து நீக்குவது என்று அந்தக் கட்சியின் மையச் செயற்குழுக் கூட்டத்தில் ஏகமனதாக முடிவெடுக்கப்பட்டுள்ளது. இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் மையச் செயற்குழுக் கூட்டம் கொழும்பில் நேற்று முந்தினம் நடைபெற்றது. ஏற்கனவே ஒழுக்காற்று நடவடிக்கைக்கு உட்படுத்தப்பட்டுள்ள வடக்கு மாகாண சபை அமைச்சர் திருமதி அனந்தி சசிதரன் மற்றும் சிவகரன் இருவரையும் கட்சியிலிருந்து நீக்கும் தீர்மானம் அதில் முன்மொழியப்பட்டுள்ளது.சிவகரனை மாத்திரம் இப்போது நீக்கலாம். அனந்தி சசிதரன் பற்றிப் பின்னர் பார்த்துக் கொள்ளலாம் என்று யோசனை அப்போது முன்வைக்கப்பட்டுள்ளது. நடவடிக்கை எடுப்பதாயின் இருவருக்கும் எதிராகவே நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கருத்தும் முன்வைக்கப்பட்டுள்ளது. இறுதியில் இருவரையும் கட்சியிலிருந்து நீக்குவது என்று ஏகமனதாக முடிவு எடுக்கப்பட்டுள்ளது.2015ஆம் ஆண்டு அரச தலைவர் தேர்தலில், மைத்திரிபால சிறிசேனவை ஆதரிப்பது என்று இலங்கைத் தமிழ் அரசுக் கட்சி தீர்மானம் எடுத்த பின்னர் அதனை மீறி இவர்கள் இருவரும் செயற்பட்டனர் என்ற குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டே ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்க
ப்பட்டது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.