
வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்கினேஸ்வரனை தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் இன்று காலை சந்தித்துக் கலந்துரையாடியுள்ளார். இச்சந்திப்பில் கஜேந்திரகுமார் பொன்னம்பலத்துடன் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் செயலாளர் செல்வராஜா கஜேந்திரன் மற்றும் கட்சியின் தேசிய அமைப்பாளர் விஸ்வலிங்கம் மணிவண்ணனும் உடன் பங்கேற்றிருந்தனர்.மரியாதையின் நிமிர்த்தம் குறித்த சந்திப்பு நிகழ்ந்ததாக இரு தரப்புத் தகவல்களும் தெரிவித்துள்ள போதும் உள்ளூராட்சித் தேர்தல் நடைபெற்று கட்சிகள் ஆட்சியமைப்பத்தில் இக்கட்டான தொங்கு நிலை ஏற்பட்டிருக்கும் இத்தருணத்தில் குறித்த சந்திப்பு அரசியல் முக்கியத்துவம் மிக்க சந்திப்பாகப் பார்க்கப்படுகின்றது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.