
ஜெர்மனியின் பெர்லின் நகரத்தில் உள்ள மக்கள் நெரிசல் மிகுந்த சந்தைப் பகுதியில், லாரியை ஓட்டிச் சென்று 12 பேர் கொல்லப்பட்டதற்கு காரணமான தாக்குதல் சம்பவத்துக்கு எப்போது பதிலடி கொடுக்கப் போகிறீர்கள் என்று, ஜெர்மனியின் கன்சலர் அங்கெலா மெர்கலுக்கு அந்நாட்டில் உள்ள குடியேறிகளுக்கு எதிரான கட்சியான ஏஎஃப்டி கட்சி கேள்வி எழுப்பியுள்ளது.இத்தாக்குதலுக்கு பதில் நடவடிக்கையை எப்போது ஜெர்மனி எடுக்கப் போகிறது என்றும் அவர்கள் வினவியுள்ளனர்.
நேற்றிரவு ( திங்கள்கிழமை) நடந்த தாக்குதல் சம்பவத்தை, மெர்கலின் குடியேறிகளுக்கான திறந்தவெளி கொள்கையே காரணம் என ஏஎஃப்டி கட்சியினர் குற்றம் சாட்டியுள்ளனர். அங்கெலா மெர்கலின் குடியேறிகளுக்கு ஆதரவான கொள்கை திட்டத்தால், கடந்த ஆண்டு சுமார் பத்து லட்சம் பேர் ஜெர்மனிக்கு வந்துள்ளனர்.
நன்றி:பிபிசி தமிழ்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.