
அப்பல்லோ மருத்துவமனை கம்ப்யூட்டர்களை ஹேக் செய்திருப்பதாக லெஜ்ஜியன் குழு அறிவித்துள்ளது. அத்துடன் அப்பல்லோ மருத்துவமனையில் விஐபிகளுக்கு அளிக்கப்பட்ட சிகிச்சை விவரங்களை வெளியிட்டால் பெரும் குழப்பம் வரும் எனவும் அக்குழு கூறியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ராகுல் காந்தி, விஜய் மல்லையாவின் ட்விட்டர் அக்கவுண்ட்டுகளை முடக்கி பரபரப்பை கிளப்பிய ஹேக்கர்ஸ்தான் லெஜ்ஜியன் குழுவினர். தற்போது அப்பல்லோ மருத்துவமனை கம்ப்யூட்டர்களை ஹேக் செய்துவிட்டதாக அறிவித்துள்ளனர்.அத்துடன் அப்பல்லோ மருத்துவமனையில் விஐபிக்களுக்கு அளித்த சிகிச்சை விவரங்கள் தங்களிடம் இருப்பதாகவும் அதை வெளியிட்டால் பெரும் குழப்பம் ஏற்படும் எனவும் லெஜ்ஜியன் குழுவினர், வாஷிங்டன் போஸ்ட் நாளிதழுக்கு அளித்த பேட்டியில் கூறியுள்ளனர்.
மேலும் அடுத்ததாக இங்கிலாந்தில் பதுங்கி இருக்கும் ஐபிஎல் முன்னாள் தலைவர் லலித் மோடியின் ட்விட்டர் அக்கவுண்ட்டை தாங்கள் ஹேக் செய்யப் போவதாவும் மிரட்டல் விடுத்துள்ளது லெஜ்ஜியன் குழு.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.