ஒரு பெண் வன்புணர்வுக்கு உட்படுத்தப்பட்டால் அதை பெரிதாக்கிப் பாதிக்கப்பட்ட பெண்ணை இழிவுபடுத்தும் நிலைமையே இங்கு காணப் படுகின்றது. இந்த நிலை மாற வேண்டும் எனத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வடமாகாணசபை உறுப்பினர் அனந்தி சசிதரன் தெரிவித்தார். யாழ்ப்பாண மகளிர் அபிவிருத்தி நிலையத்தின் ஏற்பாட்டில் நடைபெற்ற பெண்கள் விழிப்புணர்வு தொடர்பான குறும்பட மற்றும் அசையும் படவெளியீட்டு விழா திங்கட்கிழமை நடைபெற்றது. இதில் பிரதம விருந்தினராக கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் அங்கு தொடர்ந்து உரையாற்றுகையில்: ஆண்களுக்கு மேலான சுதந்திரம் ஒரு காலத்தில் பெண்களுக்கும் இருந்தது. பெண்களுக்கு எதிரான வீட்டு வன்முறைகள் தொடர்பில் பெரியளவில் அறியப்படாவிட்டாலும் இராணுவ வன்முறைகள் அதிகளவில் இடம்பெறுகின்றன. எமது சமூகத்தில் ஒரு பெண் வன்புணர்வுக்கு உட்படுத் தப்பட்டால் அதைப் பெரிது படுத்திப் பாதிக்கப்பட்ட பெண் இழிவுபடுத்தப்படுவதுபோல உலகத்துக்கே தெரியப்படுத்துகின்றனர். வன்புணர்வு செய்திகளில் பெண்கள் காட்சிப் பொருளாக மாற்றப்படுவதால்தான் பாதிக்கப்பட்ட பெண்கள் தமக்கு நேர்ந்த வன்முறைகளை வெளியே கூற அஞ்சுகின்றனர். பெண்கள் மேலும் வலுவூட்டப்பட வேண்டிய நிலைமை இங்கு காணப்படுகின்றது. சட்டங்களில் மாற்றத்தை கொண்டுவருவதன் மூலம் எதையும் மாற்றிவிட முடியாது. மக்கள் மனங்களில் மாற்றம் வேண்டும். சமூகத்தில் மாற்றம் வேண்டும். மக்களுக்கு பெண்கள்தான் வன்முறை பற்றிய விழிப்புணர்வை வழங்கக் கிராம மட்டத்தில் இருந்து செயற்பாடுகளை மேற்கொள்ள வேண்டும் என்றார்.
நான் என்ற ஆணவம் அதர்மமாக விஸ்வரூபமெடுத்தாலும்-ஒருநாள் தர்மத்தின் காலடியில் விழும்.
31 அக்டோபர் 2013
30 அக்டோபர் 2013
யாழ்ப்பாண இடப்பெயர்வின் நினைவு நாள் இன்றாகும்
29 அக்டோபர் 2013
புத்தூரில் இளம் யுவதி சடலமாக மீட்பு!
வலிகாமம் கிழக்கின் புத்தூர் பகுதியில் இளம் யுவதியொருவரது சடலம் கிணற்றினிலிருந்து மீட்கப்பட்டுள்ளது. இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டவர் புத்தூர் கிழக்கினை சேர்ந்தவரான அமிர்தலிங்கம் மைதிலி வயது 27 என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
குறித்த யுவதி நேற்றிரவு வழமை போன்று வீட்டினிலிருந்து தொலைக்காட்சி பார்த்துக்கொண்டிருந்ததாகவும் அவ்வேளையில் தொலைபேசி அழைப்பொன்று கைத்தொலைபேசிக்கு வந்ததையடுத்து வெளியே சென்றதாகவும் கூறப்படுகின்றது.
இந்நிலையில் வீட்டிற்கு வெளியே அருகாகவுள்ள புத்தூர் கிழக்கு மத்திய சனசமூக நிலைய கட்டிடத்திற்கு முன்னதாகவுள்ள கிணற்றிலிருந்து இவர் சடலமாக மீட்கப்ட்டுள்ளார். இன்று காலை வரை குறித்த யுவதி பற்றிய தகவல்கள் இல்லாத நிலையில் குடும்பத்தவர்கள் அச்சுவேலி பொலிஸில் முறைப்பாடொன்றை செய்துள்ளனர்.
இந்நிலையில் பொதுமகனொருவர் இன்று நண்பகல் குறித்த கிணற்றிற்கு அருகாக சென்றிருந்த வேளை சடலத்தை கண்டு வழங்கிய தகவலையடுத்து சடலம் மீட்கப்பட்டுள்ளது என தெரிவிக்கப்படுகிறது.
மனைவிகள் கை விட்டதால் தூக்கில் தொங்கினார்!
தனது இரண்டு மனைவிகளின் பிரிவை தாங்க முடியாத இலங்கை அகதி ஒருவர் இந்தியாவில் தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
இது குறித்து மேலும் தெரியவருவதாவது,
கரூர் மாவட்டம் குளித்தலை இரும்பூதிப்பட்டியில் இலங்கை அகதிகள் முகாம் உள்ளது. இங்கு யாழ்ப்பாணத்தை சேர்ந்த நாகேஸ்வரன் (33) என்பவர் வசித்தார். இவருக்கு நாகேஸ்வரி (26) என்ற மனைவியும் விஜயப்பிரியா (7), கவிப்பிரியா (6), சிநேகப்பிரியன்(5) ஆகிய 3 குழந்தைகளும் உள்ளனர்.
கடந்த ஆண்டு நாகேஸ்வரி தனது குழந்தைகளுடன் கணவரை பிரிந்து தாய் வீட்டுக்கு சென்றுவிட்டார்.
பின்னர் திருநெல்வேலி அகதிகள் முகாமில் தங்கியிருந்த கலைச்செல்வி என்பவரை நாகேஸ்வரன் 2வது திருமணம் செய்தார். இவர்களுக்கு பவீஸ்னா என்ற 11 மாத குழந்தை உள்ளது.
இவரும் கடந்த 25ம் திகதி பிரிந்து விட்டதாக கூறப்படுகிறது. இந்நிலையில் மிகவும் மனமுடைந்த நிலையில் காணப்பட்ட நாகேஸ்வரன் நேற்று முன்தினம் (27) வீட்டின் சாரத்தில் சேலையால் தூக்கு மாட்டி தற்கொலை செய்து கொண்டார்.
குளித்தலை பொலிஸார் வழக்கு பதிவு செய்து விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
28 அக்டோபர் 2013
தமிழ் செல்பேசி நிறுவனத்தைக் குறிவைக்கும் கே.பி குழு!

குடாநாட்டை முற்றுகையிடும் தெற்கு வியாபாரிகள்!
27 அக்டோபர் 2013
மகிந்தவுக்கு அமெரிக்கா எச்சரிக்கை!
அமெரிக்க இராஜாங்கத் திணைக்கத்தின் கடுமையான எச்சரிக்கை செய்தி ஒன்று சிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்சவிடம், நேரடியாக கையளிக்கப்பட்டுள்ளதாக கொழும்பு ஆங்கில வாரஇதழ் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.
கடந்தவாரம், அமெரிக்கத் தூதுவர் மிச்சேல் ஜே சிசன் அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தின் சிறப்புச் செய்தி ஒன்றுடன் அலரி மாளிகைக்குச் சென்று சிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்சவைச் சந்தித்தார்.
ஈரானிடம் இருந்து எண்ணெய் வாங்குவதை சிறிலங்கா நிறுத்தத் தவறினால் பயங்கரமான விளைவுகளை சந்திக்க நேரிடும் என்று, அமெரிக்க இராஜாங்கத் திணைக்களம் அதில் எச்சரித்துள்ளது. ஈரான் மீது அமெரிக்கா பொருளாதாரத் தடைகளை விதித்துள்ளது.
அதேவேளை, ஈரானுடன் சிறிலங்கா நெருக்கமான இராஜதந்திர உறவுகளை வைத்துள்ளது. அமெரிக்காவின் தடைகளை அடுத்து, ஈரானிடம் இருந்து மசகு எண்ணெய் வாங்குவதை சிறிலங்கா நிறுத்தியுள்ளது.
எனினும், அமெரிக்காவின் தடையை மீறும் வகையில், மூன்றாவது தரப்பு ஊடாக ஈரானிய மசகு எண்ணெயை சிறிலங்கா வாங்குவதாக, அமெரிக்காவுக்கு புலனாய்வுத் தகவல்கள் கிடைத்துள்ளன. இதையடுத்தே, அமெரிக்கா இந்த எச்சரிக்கையை விடுத்துள்ளது.
சிறிலங்கா அதிபரிடம் அமெரிக்கத் தூதுவர் சிசன் கையளித்த சிறப்புச் செய்தியில், ஈரானிடம் எண்ணெய் வாங்குவதை சிறிலங்கா உடனடியாக நிறுத்தத் தவறினால், பயங்கரமான விளைவுகளை சந்திக்க நேரிடும் என்று இராஜதந்திர மொழியில் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக, வெளிநாட்டு ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர் என்றும் அந்தச் செய்தியில் கூறப்பட்டுள்ளது.
26 அக்டோபர் 2013
இந்துப் பெண்ணை மணம் செய்ய இந்துவாக மாறிய இஸ்லாம் இளைஞர்!
மட்டக்களப்பு கரடியனாறு கிராமத்தைச்சேர்ந்த தமிழ் யுவதி ஒருவரை மணம் முடிப்பதற்காக முஸ்லீம் இளைஞர் ஒருவர் இந்து மதத்திற்கு மாறியதுடன் இந்துமத முறைப்படி திருமணமும் செய்துகொண்டுள்ளார்.
தோப்பூர் அல்லை நகர்-05ஐ சேர்ந்த முகமது றியாஸ்தீன் முகமது இப்ஹான் என்ற முஸ்லீம் இளைஞருக்கும் கரடியனாறு கொலனியைச் சேர்ந்த ஞானச்செல்வம் வேவிசரளா என்ற பெண்னுக்கும் இடையில் கைத்தொலைபேசி மூலம் ஏற்பட்ட உறவு காரணமாக இவர்கள் இருவரும் திருமணம் செய்வதற்கு சம்மதித்து இன்று செங்கலடி ஸ்ரீ வெள்ளிமலைப் பிள்ளையார் ஆலயத்தில் வைத்து இந்துமத முறைப்படி திருமணம் செய்து கொண்டனர்.
குறித்த முஸ்லீம் இளைஞர் மேற்படி பெண்னை திருமணம் செய்வதற்காக இந்துமதத்தை தழுவிக்கொண்டதோடு அவர் தனது பெயரை கிசாந்தன் எனவும் மாற்றிக்கொண்டுள்ளார். இவருக்கு செங்கலடி வர்த்தக சங்கத் தலைவர் மோகன் அவர்கள் இந்துமத முறைப்படி தாலி எடுத்துக்கொடுத்து திருமணம் செய்துவைத்தார்.
தீவகத்தில் அஷ்தமனமாகிறது ஒட்டுக்குழு!
யாழ்.குடநாட்டின் தீவகப்பகுதிகளிலிருந்து ஒட்டுக்குழு பிரமுகர்கள் பலரும் தமது குடும்பங்களை வெறியேற்ற தொடங்கியுள்ளனர்.
தமது கோட்டையாக அவர்கள் கருதி வந்த தீவகப்பகுதியினில் கடந்த மாகாணசபை தேர்தலினில் ஏற்பட்ட படுதோல்வியால் ஈ.பி.டி.பி அதிர்ச்சிக்குள்ளாகியுள்ளது.இதையடுத்தே தமது குடும்பங்களை அங்கிருந்து வெளியேற்ற ஈபிடிபியின் தலைமைகள் முடிவு செய்துள்ளன.
பெரும்பாலான ஈபிடிபியினது தீவக அலுவலகங்கள் வெறிச்சோடிப்போயுள்ளன.மக்கள் அவர்களது அலுவலகங்களிற்கு செல்வதும் நின்று போயுள்ளது. ஒட்டுக்குழுவினர் தமது அஸ்தமனத்தை நோக்கி சென்றுகொண்டிருப்பதாக ஆதரவாளர்கள் தரப்பினில் கூறப்படுகின்றது.
குறிப்பாக கடந்த காலங்களினில் தமது வாகனங்களை தீவகப்பகுதிகளினிலேயே கூடுதலாக தரித்து வைத்திருந்த ஈபிடிபியினர் தற்போது அவற்றை யாழ்.நகரின் சிறீதர் தலைமையகத்தினில் தரித்து வைக்க தொடங்கியுள்ளனர்.
நடந்து முடிந்த மாகாணசபை தேர்தல் வாக்களிப்பினில் தீவகப்பகுதிகளினில் கூட்டமைப்பு கூடிய வாக்குகளை பெற்று ஈபிடிபியை பின் தள்ளியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
25 அக்டோபர் 2013
கூட்டமைப்பின் வெற்றிக்கு தனிப்பட்ட ரீதியில் எவரும் உரிமை கொண்டாட முடியாது!

24 அக்டோபர் 2013
தமிழ் பெண்களுக்கு கட்டாயக் கருத்தடை!
23 அக்டோபர் 2013
“சிறிதரனே நிகழ்கால பிரபாகரன்”கடுப்பான சங்கரியார்!
தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினரான சிறிதரன் நிகழ்கால பிரபாகரனே! என தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணியின் தலைவர் ஆனந்தசங்கரி குறிப்பிடுகிறார்.
வார இறுதிச் செய்திப் பத்திரிகையொன்றின் நேர்காணலிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். அவர் தெரிவித்திருப்பதாவது:
தற்போது ஸ்ரீதரன்தான் தமிழ் மக்களின் தலைவராக இருக்கின்றார். அவர்தான் நிகழ்கால பிரபாகரன். அந்த முட்டாளின் செய்தியை நான் கேட்கத் தயாராக இல்லை. அவரது இலக்குகளை அடைய அவர் இலகு வழிகளைத் தேடிவருகின்றார்.வட மாகாணசபை தேர்தலில் கிளிநொச்சி மாவட்டத்தில் தமிழ் தேசியக் கூட்டமைப்பு சார்பாக ஆனந்த சங்கரியின் பெயரை தவிர்த்து, தமிழரசுக்கட்சி சார்பாக போட்டியிட்ட மூவருக்கும் மட்டுமே ஸ்ரீதரன் பிரச்சாரத்தில் ஈடுபட்டதும், அம்மூவரும் தான் TNA சார்பாக களம் இறக்கப்பட்டவர்கள் என்ற தோரணையில் பிரச்சாரத்தில் ஸ்ரீதரன் ஈடுபட்டதனால் தான் ஆனந்தசங்கரி தோல்வியை தழுவினார் என்பதும் குறிப்பிடத்தக்கது.. அதனால் சிறிதரன் மீது கடுப்பாகி கொதித்து எழுந்திருக்கிறார் ஆனந்தசங்கரி!
யாழில் இளம் குடும்பஸ்தர் குத்திக் கொலை!
யாழ்ப்பாணம், பழம் வீதி, ஆறுகால்
மடம் பிரதேசத்தில் இளம் குடும்பஸ்தர் ஒருவர் கத்தியால் குத்திக் கொலை செய்யப்பட்டுள்ளார். நேற்று (22) இரவு 8.30 மணியளவில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக யாழ். பொலிஸார் தெரிவித்தனர். பழம் வீதி, ஆறுகால் மடத்தைச் சேர்ந்த 30 வயதான தர்மராசா சத்தியபாபு என்பவரே இவ்வாறு கொலை செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டனர். குடும்ப பிரச்சினை காரணமாக இந்த கொலைச் சம்பவம் இடம்பெற்றுள்ளதாக பொலிஸாரது முதற்கட்ட விசாரணைகளின் மூலம் தெரியவந்துள்ளது. சடலம் கொலை செய்யப்பட்ட இடத்திலேயே வைக்கப்பட்டுள்ள அதேவேளை மரண விசாரணைகள் இன்று (23) இடம்பெறவுள்ளன. இந்த கொலைச் சம்பவம் தொடர்பில் உயிரிழந்தவரின் மனைவியின் தந்தை உட்பட மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர். சந்தேகநபர்கள் இன்று (23) யாழ். நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளனர். இந்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை யாழ். பொலிஸார் மேற்கொண்டுள்ளனர்.

22 அக்டோபர் 2013
பால் காச்சினார் முதல்வர் விக்கினேஸ்வரன்!
யாழ்.கைதடியில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள வடக்கு மாகாணசபைக் கட்டடத்திற்கான சம்பிரதாயபூர்வமாக பால்காச்சும் நிகழ்வு இன்று செவ்வாக்கிழமை காலை இடம்பெற்றது.
காலை 7 மணியளவில் இடம்பெற்ற இந்நிகழ்வினை வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் ஆரம்பித்து வைத்தார். கைதடி பிள்ளையார் ஆலயத்தில் விசேட பூஜை வழிபாடுகள் முடிந்த பின்னர் அங்கிருந்து நடைபவணியாக வந்து புதிய கட்டடத்திற்கு பால் காச்சி சாந்தி செய்யப்பட்டது.
கனடாவில் மோதலில் பலியான தமிழ் மாணவர் அடையாளம் காணப்பட்டார்!
வின்சர் பொலிசார் கடந்த சனிக்கிழமை அதிகாலையில் இடம்பெற்ற கத்திக்குத்துச் சம்பவத்தில் பலியானவர் யார் என்பதை அடையாளம் கண்டுள்ளனர்.
நகர மத்தியில் கத்திக்குத்துச் சம்பவம் இடம்பெற்றது.
வின்சர் பல்கலைக்கழக மாணவரான ஸ்காபறோ குடும்பம் ஒன்றைச் சேர்ந்த கௌத்தம் (கெவின்) குகதாசன் என்ற 19 வயது மாணவரே கொல்லப்பட்டதாக பொலிசார் தெரிவித்தனர்.
பெலிசிய ஸ்றீற் – யுனிவேசிற்றி அவனியூவில் இரண்டு குழுக்களுக்கிடையே ஏற்பட்ட வாய்த்தர்க்கத்தை அடுத்து கத்தியால் குத்தப்பட்ட கௌத்தம் குகதாசன் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட வேளையில் அங்கு உயிரிழந்தமை உறுதிப்படுத்தப்பட்டது.
மொத்தமாக 5 பேர் காயமடைந்தனர்.
இருவர் மருத்துவமனையில் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகின்றனர். அவர்களின் உடல்நிலை தேறுமென்றே எதிர்பார்க்கப்படுகிறது. படிப்பதற்காக வந்த இந்த மாணவர் ரொறொன்ரோ பல்கலைக்கழகத்தின் வின்ட்சர் வளாகத்தின் அருகே வாழ்ந்து வந்ததையும் பொலிஸார் உறுதிப்படுத்தியுள்ளனர். விசாரணைகள் தொடர்ந்து இடம்பெற்று வருகின்றன. ஏதாவது தகவல் தெரிந்தவர்களை தம்முடன் தொடர்பு கொள்ளுமாறு பொலிசார் கேட்டுள்ளனர்.

21 அக்டோபர் 2013
ஊர்காவற்றுறையில் இளைஞர் மீது தாக்குதல்!
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வெற்றிக்காகவும் முதல்வரின் வெற்றிக்காகவும் பாடுபட்ட ஆதரவாளர்கள் பலரும் தொடர்ந்தும் பழிவாங்கப்படுவது தொடர்ந்து கொண்டேயிருக்கின்றது.
அவ்வகையில் யாழ்.தீவகப்பகுதியில் இன்று திங்கட்கிழமை மாலை (21.10.13) சிறிலங்கா இராணுவத்தின் தாக்குதலுக்கு இலக்காகிய நிலையில் கூட்டமைப்பு ஆதரவாளரான இளைஞர் ஒருவர் சிகிச்சைக்காக யாழ்.போதனா வைத்திய சாலையில் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.
ஊர்வாவற்றுறை பகுதியைச் சேர்ந்த 28 வயதுடைய அல்பிட் கனிவூட் என்பவரே இந்தச் சம்பவத்தில் தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளார். குறித்த இளைஞர் நடந்து முடிந்த வடக்குமாகாணசபைத் தேர்தலில் தமிழ் தேசியக் கூட்டமைப்பிற்கு ஆதரவாக தேர்தல் பிரச்சாரங்களில் ஈடுபட்டிருந்தவரென தகவல்கள் தெரிவிக்கின்றன. குறிப்பாக கூட்டமைப்பிற்கு ஆதரவான கூட்டங்களையும் இவரே தீவகப்பகுதியில் ஒழுங்கமைத்து இருந்தவரெனவும் கூறப்படுகின்றது. இதன் காரணமாகவே அவர் பழிவாங்கும் வகையில் தாக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது. ஏற்கனவே பல தடைவைகள் படைப் புலனாய்வாளர்களினால் அச்சுறுத்தப்பட்டிருந்ததாக கூறப்படுகின்றது.
இதனிடையே வன்னிப்பகுதியிலும் கூட்டமைப்பின் ஆதரவாளர்கள் பயமுறுத்தல்களுக்கு உட்படுவதோடு படையினரின் பழிவாங்கல் நடவடிக்கைகளுக்கும் உள்ளாகி வருவதாக தெரிவிக்கப்படுகிறது.விக்னேஸ்வரன் சம்மந்திகளுடன் கும்மாளம் அடிக்கிறார் அவரது வெற்றிக்கு பாடுபட்டவர்களோ வதைகளுடன் துடிக்கிறார்கள்!நிலை மாறும் உலகில் நிலைக்கும் என்ற கனவில் வாழும் மனித ஜாதி அதில் வாழ்வதில்லை நீதி.
இந்தியப்படைகளால் கொல்லப்பட்டவர்களுக்கு அஞ்சலி!
20 அக்டோபர் 2013
மாவீரர் துயிலும் இல்லங்களை சுற்றி முள்வேலி அமைக்கிறது படைத்தரப்பு!
இலங்கை படைத்தரப்பினை பிடித்து ஆட்டிவரும் மாவீரர் துயிலுமில்ல காய்ச்சல் இரவோடிரவாக முட்கம்பி வேலிகளை அமைத்துக்கொள்வது வரை சென்றுள்ளது. வன்னியிலுள்ள தேராவில் வன்னிவிளாங்குளம் முழங்காவில் மற்றும் கனகபுரம் மாவீரர் துயிலுமில்ல காணிகளிற்கு எல்லையிடும் நடவடிக்கைகளை படைத்தரப்பு இரவோடிவாக அமைத்து வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. ஆயிரக்கணக்கில் படையினர் குவிக்கப்பட்டு பெருமளவு வாகனங்கள் சகிதம் முட்கம்பிகள் எடுத்து வரப்பட்டு இவ்வேலிகள் அமைக்கப்பட்டுவருவதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
வட-கிழக்கிலுள்ள படையினரால் இடித்தழிக்கப்பட்டுள்ள மாவீரர் துயிலுமில்லங்களை மீளக்கட்டியெழுப்ப வேண்டுமென்ற கோரிக்கை வலுக்கத் தொடங்கியுள்ளது. பிரதேச சபைகளுள் சாவகச்சேரி மற்றும் கரைச்சி பிரதேசசபை என்பவை இடித்தழிக்கப்பட்ட மாவீரர் துயிலுமில்லங்களை மீளக்கட்டியெழுப்ப தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளது. இந்நிலையினில் குறித்த தீர்மானங்களை நிறைவேற்றிய பிரதேச சபைகளை இலங்கைப்புலனாய்வு பிரிவுகள் வேட்டையாடத் தொடங்கியுள்ள நிலையில் அதற்கு ஆதரவாக கூட்டமைப்பின் அனைத்துவுள்ளூராட்சி மன்றங்களும் தீர்மானங்களை நிறைவேற்ற தீர்மானித்துள்ளன. அத்துடன் வடக்கு மாகாண சபையிலும் இத்தீர்மானத்தை கொண்டுவர ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருவதாக தகவல்கள் வெளிவந்துள்ளது.
இந்நிலையினில் அவசர அசவரமாக வன்னியிலுள்ள மாவீரர் துயிலுமில்லங்களை தம் வசம் கையகப்படுத்த ஏதுவாகவே படைத்தரப்பு புதிய எல்லைகளை அமைப்பதிலும் முகாம்களை அமைப்பதிலும் முயற்சிகளை முன்னெடுத்துவருகின்றது.
19 அக்டோபர் 2013
சனால்4விடம் இன அழிப்பு காணொளி?
சிங்கள அரச படைகளினால் இறுதி சமரின் போது வெள்ளை கொடி பிடித்து வந்த அரசியற்துறை பொறுப்பாளர் நடேசன் மற்றும் புலித்தேவன் உட்பட்ட பிரபல தளபதிகள் இராணுவத்தினரிடம் சரண் அடைந்தனர். இவர்களுடன் மேலும் 400 க்கு மேற்பட்ட முதன்மை மற்றும் சாதாரண போராளிகள் சரணடைதலில் உள்ளடங்குவார்கள். அரசியற்துறை பொறுப்பாளர் நடேசனும் புலித்தேவனும் வதைகள் செய்யபட்டு சுட்டு கொலை செய்யபட்டனர்,குறித்த காணொளி காட்சி சனல் போவிடம் சிக்கியுள்ளதாக பர பரப்பாக பேசப்பட்டது. இந்த காணொளி வெளியிடப்பட்டால் அது இலங்கை அரசுக்கு உலகளாவிய ரீதியில் பாரிய நெருக்கடியினை தோற்றுவிப்பதோடு இந்திய மத்தியில் ஆளும் காங்கிரஸ் கட்சி படு தோல்வியை தழுவ இது உதவும் என கூறபடுகிறது.
அத்துடன் இலங்கையில் இடம்பெறும் கொமன்வெல்த் மாநாட்டையும் இது பாதிக்கும் என நம்பப்படுகிறது.அந்த தேர்தலை இலக்கு வைத்து இந்த காட்சிகள் வெளியாகலாம் என்பதும் இதில் இறுதி வேளை இலங்கையில் நின்று களமாடிய இந்தியச் சிப்பாய்களின் ஆவணமும் உள்ளடங்கபடுவதாக பேசப்படுகிறது.
1500 க்கும் மேற்பட்ட இந்தியப் படைகள் குறித்த புலிகளின் முற்றுகை திடீர் தாக்குதலில் உடல் சிதறி பலியான சம்பவங்கள் அந்த களத்தில் அரங்கேறின என முன்னர் செய்திகள் வெளியாகி இருந்தது இங்கே சுட்டி காட்டத்தக்கது. பொறுத்திருந்தே பார்க்க வேண்டும். வரப்போவது எது என்பது. ஆனால் வெளிவரும் காட்சிகள் உலக தமிழரை கொந்தளிக்க வைக்கும் என்பது அடித்து கூறபடுகிறது.
18 அக்டோபர் 2013
நாரந்தனையில் சிறுமியை வல்லுறவு புரிந்தவருக்கு விளக்கமறியல்!
நாரந்தனையில் 14வயது சிறுமியை வல்லுறவு புரிந்த குற்றச்சாட்டில் அதே இடத்தை சேர்ந்த இளைஞரை 14 நாள் காவலில் வைக்குமாறு ஊர்காவற்றுறை நீதவான் உத்தரவிட்டுள்ளார்.
யாழ்,பிரதேச பொலிஸ் அத்தியட்சகர் எம்.சி.எம்.ஜெவ்ரி இது பற்றி தெரிவிக்கையில்,நாரந்தனையில் 24 வயதுடைய இளைஞரொருவர் 14 வயது சிறுமியை பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தியுள்ளதாக கடந்த 12ம் திகதி முறைப்பாடொன்று பதிவு செய்யப்பட்டுள்ளது.இந்த முறைப்பாட்டினை தொடர்ந்து அதே இடத்தை சேர்ந்த இளைஞர் கைது செய்யப்பட்டு ஊர்காவற்றுறை நீதிமன்றில் ஆயர்படுத்தப்பட்டார்,அவ்விளைஞரை 14நாள் காவலில் வைக்குமாறு நீதிபதி உத்தரவிட்டார் என பொலிஸ் அத்தியட்சகர் தெரிவித்தார்.

ஐ.ரி.வி வெளியிட்ட போர் குற்ற வாக்குமூலம்!
இலங்கையில் யுத்தத்தின்போதுதான் இராணுவத்தினர் போர் குற்றங்களில் ஈடுபட்டார்கள் என்று பலராலும் பேசப்பட்டு வருகிறது. அதற்கான ஆதாரங்கள் வெளியிடப்பட்டும் வருகிறது. ஆனால் போருக்குப் பின்னர் சரணடைந்த போராளிகள் மற்றும் பொதுமக்களையும் இலங்கை இராணுவம் விட்டபாடாக இல்லை. நேற்றைய தினம்(17) இரவு பிரித்தானியாவை தளமாகக் கொண்டு இயங்கும், ஐ.ரி.வி என்னும் ஆங்கிலத் தொலைக்காட்சி, இது தொடர்பாக 2 நிமிட ஆவணச் செய்தி ஒன்றை வெளியிட்டுள்ளது.
இரவு 10 மணிச் செய்தி இடம்பெற்றவேளையே இந்தச் செய்தியும் இணைக்கப்பட்டுள்ளது.
பிரித்தானியா மற்றும் ஐரோப்பிய நாடுகளில் பல மில்லியன் மக்கள் பார்க்கும் ஆங்கிலத் தொலைக்காட்சியாக ஐ.ரீ.வி உள்ளது. அதுவும் இரவு 10.00 மணிச் செய்தி என்பது மிகவும் பிரபல்யமான செய்தி ஆகும். இன் நேரத்தில் குறிப்பிட்ட 2 நிமிட ஆவணப் படம் காண்பிக்கப்பட்டுள்ள விடையம், இலங்கை அரசை பெரும் சங்கடத்தில் ஆழ்த்தியுள்ளது. சிறையில் அடைத்து வைத்து சுமார் தன்னை 300 தடவைகள் இராணுவத்தினர் கற்பழித்ததாக ஒருவர் தெரிவித்துள்ளார். அவரை சிகரெட்டால் இராணுவத்தினர் சுட்டு, சித்திரவதை செய்தமையும் ஆதாரங்களோடு வெளியாகியுள்ளது.
இதனைத் தவிர மேலும் ஒரு பெண் தனது சாட்சியத்தையும் பதிவுசெய்துள்ளார். இலங்கை இராணுவத்தினர் தம்மை பல தடவை கற்பழித்ததாக அவர் நேரடியாகவே ஐ.ரிவிக்கு தெரிவித்துள்ளார். இலங்கையில் காமன்வெலத் நாடுகளின் உச்சிமாநாடு நடைபெறவுள்ள நிலையில், பிரித்தானியப் பிரதமருக்கு இதனால் பல அழுத்தங்கள் செல்ல ஆரம்பித்துள்ளது. இவ்வளவு கொடுமைகள் நடைபெற்றுள்ள இலங்கைக்கு பிரித்தானியப் பிரதமர் செல்லவேண்டுமா என்று தற்போது வெள்ளை இனத்தவர்களே கேள்வி எழுப்ப ஆரம்பித்துள்ளார்கள்.
சிறீதரன் கொழும்புக்கு வரக்கூடாது என்கிறார் தேரர்!
17 அக்டோபர் 2013
அநாதரவான நிலையில் பெண்ணின் சடலம்!
யாழ்ப்பாணம் நாச்சிமார் கோவிலடிப் பகுதியில் அநாதரவான நிலையில் பெண்ணொருவரது சடலம் இன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்தப் பெண் பாலியல் வல்லுறவின் பின்னராக படுகொலை செய்யப்பட்டாரா என்ற சந்தேகம் வலுப்பெற்றுள்ளதாக ஆரம்ப தகவல்கள் தெரிவிக்கின்றன. நடுத்தர வயதுடைய குறித்த பெண்மணி கடந்த ஓரிரு நாட்களிற்கு முன்னதாக படுகொலை செய்யப்பட்டு ஆலய தேர் முட்டியினுள் வீசப்பட்டிருக்கலாமென சந்தேகிக்கப்படுகின்றது.
காங்கேசன்துறை வீதியில் அதிக மக்கள் நடமாட்டம் மிக்க பகுதியில் இவ்வாறு சடலம் கிடந்தமை பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. துர்நாற்றம் வீசிய நிலையில் அயலவர்கள் தேடுதல் நடத்திய வேளையில் சடலம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
தற்போது பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ள நிலையில் சடலம் அடையாளம் காண்பதற்காக யாழ். போதனா வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது.
மீண்டும் மகிந்த முன்னிலையில் பதவியேற்றார் விக்னேஸ்வரன்!
வட மாகாண சபை முதலமைச்சர் சிவி விக்னேஸ்வரனுக்கு வட மாகாண சபையில் 13 முக்கிய அமைச்சுப் பொறுப்புக்கள் வழங்கப்பட்டுள்ளன.
அதன்படி, வட மாகாண சபையின் முதலமைச்சர் சிவி விக்னேஸ்வரன் வட மாகாண சபையின் நிதி திட்டமிடல், சட்டம் மற்றும் ஒழுங்கு, காணி மற்றும் வீதி அபிவிருத்தி, மின்சாரம், வீடு மற்றும் கட்டுமாணம், நீர்பாசனம், நுகர்வோர் அபிவிருத்தி, சமூக சேவை மற்றும் புனர்வாழ்வு, மகளிர் விவகாரம், தொழில் மற்றும் விவசாய அபிவிருத்தி, சுற்றுலா, உள்ளூராட்சி மற்றும் மாகாண சபைகள், நிர்வாக மற்றும் உணவு விநியோக அமைச்சராக இன்று (17) காலை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ முன்னிலையில் சத்தியப்பிரமாணம் செய்து கொண்டார்.
ஜனாதிபதி அலுவலகத்தில் இடம்பெற்ற இந்நிகழ்வில் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் பொதுச் செயலாளர் அமைச்சர் மைத்திரிபால சிறிசேன, அமைச்சர்களான நிமல் சிறிபால டி சில்வா, சுசில் பிரேமஜயந்த், டளஸ் அழகப்பெரும, அநுர பிரியதர்ஷன யாப்பா, வட மாகாண ஆளுநர் ஜி.ஏ.சந்திரசிறி மற்றும் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
16 அக்டோபர் 2013
ஈபிஆர்எல்எப் மாகாண சபை உறுப்பினர்கள் பதவி ஏற்பு!
ராமச்சந்திர ஆதித்தனார் மறைந்தார் வைகோ இரங்கல்!
தமிழ் மான உணர்வுச் சுடர் அணைந்தது என்று மாலைமுரசு அதிபர் பா.ராமச்சந்திர ஆதித்தன் மறைவுக்கு இரங்கல் தெரிவித்துள்ளார் மதிமுக பொதுச் செயலாளர் வைகோ.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கை...
தமிழர் தந்தை சி.பா.ஆதித்தனார் அவர்களின் தலைமகன், மாலை முரசு ஏட்டின் அதிபர் ராமஇச்சந்திர ஆதித்தனார் மறைந்தார் என்ற செய்தி பேரிடியாய் தாக்கியது. அதிர்ச்சியால் மனம் கலங்குகிறேன். தன் தந்தையாரைப் போலவே தமிழ் இனமான உணர்வு கொண்டவராக தமிழ் ஈழ விடுதலை உணர்வாளராகவே வாழ்ந்தார். தமிழர்கள் உரிமைக்காக, தமிழ் ஈழ விடியலுக்காக தனது மாலைமுரசு ஏட்டையும், தான் நடத்திய கதிரவன் பத்திரிகையையும் அர்ப்பணித்தார். பல ஆண்டுகளாக அவரது பரிவான நட்பைப் பெற்றிருந்தேன். நான் சந்திக்கும்போதெல்லாம் தமிழர் நலன், ஈழ விடியல் குறித்தே பேசுவார். மெர்க்கெண்டைல் வங்கியை மீட்கின்ற பணியில் அவர் ஈடுபட்டபோது, அன்றைய பிரதமர் வாஜ்பாய் அவர்களிடமும், நிதியமைச்சர் யஷ்வந்த் சின்கா அவர்களிடமும் நிலைமையை எடுத்துக் கூறி, அவரது கோரிக்கைகளை நான் நிறைவேற்றிக் கொடுத்ததற்காக எனது இல்லம் தேடி வந்து நன்றி கூறிய பண்பாளர் ஆவார். 2008 ஆம் ஆண்டு கடைசியிலும், 2009 ஆம் ஆண்டு முள்ளிவாய்க்கால் கொடுந்துயர் வரையிலும் சிங்கள அரசு நடத்திய தமிழ் இனப் படுகொலையை நாள்தோறும் ஆதாரங்களுடன் விரிவாக மாலைமுரசு ஏட்டில் வெளியிட்டதனாலும், முத்துக்குமார் உள்ளிட்ட வீரத் தியாகிகளின் உயிர்கொடையை தமிழ் மக்களுக்கு விழிப்புணர்வூட்டும் செய்திகளாக தனது மாலைமுரசு ஏட்டில் தந்ததனாலும், மத்திய அரசு பல வகையிலும் நெருக்கடி கொடுத்து மிரட்டியபோதும், அதற்கு சற்றும் அஞ்சாது, தலைவணங்காது நீதிக்காகவும், தமிழர் உரிமைக்காகவும் மாலைமுரசு பத்திரிகையை காண்டீபம் என ஏந்திய வீரமிக்க பெருந்தகையாளர்தான் இராமச்சந்திர ஆதித்தனார் அவர்கள் ஆவார்கள். துன்பப்படுகின்றவர்வகளுக்கு உதவுகின்ற இரக்க சுபாவம் மிக்கவர். அன்னாரது இளவலான சிவந்தி ஆதித்தனார் அவர்கள் மறைந்த ஆறு மாத காலத்திற்குள் இராமச்சந்திர ஆதித்தனாரும் மறைந்த துக்கம் பத்திரிகை உலகத்துக்கு ஈடு செய்ய முடியாத இழப்பாகிவிட்டது. அவரது மறைவால் துயரத்தில் துடிக்கும் அவரது குடும்பத்தினருக்கும், மாலைமுரசு ஏட்டின் செய்தியாளர்கள் மற்றும் அலுவலர்களுக்கும் மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில், கண்ணீர் அஞ்சலியைத் தெரிவித்துக் கொள்கிறேன் என்று கூறியுள்ளார் வைகோ.

15 அக்டோபர் 2013
சுவிஸ் தாய்வீடு நிறுவனர் கருணாகரன் விடுதலை!
தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு நிதி உதவி வழங்கியதாக பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்ட சுவிஸ் குடியுரிமை பெற்ற நடராஜா கருணாகரன் கொழும்பு மேல் நீதிமன்றத்தினால் விடுதலை செய்யப்பட்டுள்ளார். சுவிஸ் தாய் வீடு பணமாற்று நிறுவனத்தின் உரிமையாளருமான நடராஜா கருணாகரன் புலிகளுக்கு நிதி உதவி வழங்கியதாக குற்றம் சாட்டப்பட்டு சட்டமா அதிபரினால் கொழும்பு மேல் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கில் அரசதரப்பு சாட்சியங்களையும் குற்ற ஒப்புதல் வாக்குமூலத்தையும் நிராகரித்த மேல் நீதிமன்ற நீதிபதி லலித் ஜயசுரிய அவரை விடுதலை செய்தார்.
நடராஜா கருணாகரன் இலங்கை வங்கியுடன் பணமாற்று வர்த்தக ஒப்பந்தத்தில் கையெழுத்திட இலங்கை வங்கியின் வேண்டுகோளையடுத்து, கொழும்புக்கு சென்ற வேளையில் இன்டர் கொண்டினன்ட் ஹோட்டலில் வைத்து 2010ம் ஆண்டு நவம்பர் மாதம் 19ம் திகதி பயங்கரவாதத் தடைப்பிரிவுப் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டார்.
நடராஜா கருணாகரனின் கைதும் தடுப்புக் காவலும் சட்டரீதியற்றதென உயர்நீதிமன்றில் அடிப்படை மனித உரிமை மீறல் மனுவை சட்டத்தரணி தவராசா தாக்கல் செய்தார். குற்ற ஒப்புதல் வாக்குமூலம் சரியாக பெறப்படவில்லை என சட்டத்தரணியால் சுட்டிக்காட்டப்பட்டதை ஏற்றுக்கொண்ட நீதிபதி இவரை விடுதலை செய்துள்ளார்.
14 அக்டோபர் 2013
ஒற்றையாட்சி முறையை தமிழ் மக்கள் பல தடவை எதிர்த்துள்ளனர்!

சிவாஜிலிங்கம் முள்ளிவாய்க்காலில் சத்தியப்பிரமாணம்!
வட மாகாண சபைத் தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு சார்பில் யாழ். மாவட்டத்தில் போட்டியிட்டு வெற்றிபெற்ற ரெலோ அமைப்பின் அரசியல் துறை தலைவர் எம்.கே.சிவாஜிலிங்கம் இன்று (14.10.13) சத்தியப்பிரமாணம் செய்து கொண்டார். தியாகங்களிற்கு மதிப்பளிக்கும் முள்ளிவாய்க்காலிற்கு தனது வெற்றியை சமர்ப்பணம் செய்வதாக அவர் தெரிவித்தார்.
இதற்கான நிகழ்வு இன்று காலை 10.30 மணிக்கு இறுதி யுத்தம் இடம்பெற்ற முல்லைத்தீவு மாவட்ட முள்ளிவாய்க்கால் பகுதியில் இடம்பெற்றுள்ளது.
சமாதான நீதவான் மருத்துவர் மயிலேறும்பெருமாள் முன்னிலையில் சத்தியப்பிரமாணம் செய்து கொண்டதாக எம்.கே.சிவாஜிலிங்கம் தெரிவித்துள்ளார்.இதேவேளை ஏனையவர்கள் மன்னார் ஆயரின் வேண்டுகோளிற்கு இணங்க சத்தியபிரமாண நிகழ்வை பிற்போட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
13 அக்டோபர் 2013
ஒன்பது அங்கத்தவர்களின் பதவிப் பிரமான நிகழ்வு ஒத்திவைப்பு!
உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் தெரிவித்துள்ளதாவது: நாளை 14ஆம் திகதி முல்லைத்தீவில் நடக்கவிருந்த வடக்கு மாகாணசபையின் ஒன்பது உறுப்பினர்களின் பதவிப்பிரமானம் தொடர்பாக மன்னார் ஆயர் அவர்கள் என்னுடன் கலந்துரையாடினார். தற்பொழுது கூட்டமைப்பிற்குள் ஏற்பட்டுள்ள மனத்தாங்கல்கள் தீர்க்கப்பட வேண்டியதும் தீர்க்கப்படக்கூடியதும் ஆகும். ஆகவே நாளை நடைபெறவுள்ள பதவிப் பிரமானத்தை நீங்கள் ஒத்திவைத்து அதனை மாகாண சபையின் தொடக்கத்தின் போதோ அல்லது அதற்கு முன்பாகவோ செய்வதினூடாக கூட்டமைப்பின்மேல் நாங்கள் வைத்துள்ள நம்பிக்கையை வெளிப்படுத்தும்படிக் கேட்டிருந்தார். அவரது கோரிக்கை தொடர்பாக கூட்டமைப்பின் அங்கத்துவக் கட்சிகளைச் சேர்ந்த திரு.சித்தார்த்தன் அவர்களுடனும் திரு.சிவாஜிலிங்கம் அவர்களுடனும் கலந்துரையாடப்பட்டது. அதுமட்டுமன்றி, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் எதிர்கால நடவடிக்கைகள் மற்றும் அதனை உறுதியான அமைப்பாக ஒருகட்சியாகப் பதிவு செய்து அரசியல் நடவடிக்கைகளை முன்னெடுத்துச் செல்லல் போன்ற விடயங்கள் தொடர்பாகவும் தான் சகல கட்சிகளையும் அழைத்து மிகவிரைவாகப் பேசவிருப்பதாகவும் குறிப்பிட்டார். இவற்றைச் சரியான முறையில் முன்னெடுத்துச் செல்வதற்கு ஏதுவாக அவரது கருத்தை ஏற்று நாளை நடைபெறவிருந்த பதவிப்பிரமான வைபவத்தை நாங்கள் ஒத்திவைக்க முடிவு செய்துள்ளோம். இதனை சபையின் ஆரம்ப நிகழ்வின்போதோ அல்லது அதற்கு முன்னதாக இன்னொரு திகதியிலோ எண்ணியுள்ளோம் என்பதைக் கூறிக்கொள்ள விரும்புகின்றேன். இவ்வாறு அவரது அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ந.சிவசக்தி ஆனந்தன்,
நாடாளுமன்ற உறுப்பினர்,
வன்னி மாவட்டம்.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு
எவ்வளவு ஞானஸ்தன் பாருங்கள் தயா!
தமிழர்களின் உரிமைப் போராட்ட வரலாற்றில் ஆயுதப் போராட்டம் தவிர்க்க முடியாததொன்று அதனை எவரும் கொச்சைப்படுத்த முடியாது என விடுதலைப்புலிகளின் முன்னாள் ஊடகப்பேச்சாளர் தயா மாஸ்டர் தெரிவித்துள்ளார்.
யாழ்ப்பாணம் ரில்கோ விடுதியில் நேற்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் அங்கத்துவக் கட்சிகளைச் சேர்ந்த ஈ.பி.ஆர்.எல்.எப் செயலாளர் நாயகம் சுரேஸ் பிரேமச்சந்திரன், ரெலோ அமைப்பின் எம்.கே.சிவாஜிலிங்கம் மற்றும் புளொட் அமைப்பின் தலைவர் தர்மலிங்கம் சித்தார்த்தன் ஆகியோர் கலந்துகொண்ட ஊடகவியலாளர் மாநாடு நடைபெற்றது.
இந்த ஊடகவியலாளர் மாநாட்டின் கலந்து கொண்ட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் அங்கத்துவக் கட்சியினர், ஆயுதக்குழுக்களை தமிழரசுக்கட்சி கொச்சைப்படுத்தி வருகின்றது என்று தெரிவித்தனர்.
இதன்போது குறுக்கிட்ட தயா மாஸ்டர் தமிழர்களின் உரிமைப் போராட்ட வரலாற்றில் ஆயுதப்போராட்டம் என்பது தவிர்க்க முடியாத ஒன்று. அதனை யாரும் கொச்சைப்படுத்த முடியாது என்றும் அங்கத்துவக் கட்சி உறுப்பினர்களிடம் தெரிவித்தாராம்.அடேங்கப்பா....!எவ்வளவு ஞானஸ்தன் பாருங்கள் தயா!
12 அக்டோபர் 2013
விக்னேஸ்வரன் ஆயுதப்போராட்டத்தை மலினப்படுத்துகிறார்!

பாலச்சந்திரனை படையினரே கொன்றனர்!
கொழும்பில் சர்வதேச பத்திரிகையாளர்கள் மற்றும் ஊடகவியலாளர்களுக்கான கருத்தரங்கு நடந்தது. இந்தியா, பாகிஸ்தான், ஆஸ்திரேலியா, ஈரான், மலேசியா, வங்காளதேசம், சிங்கப்பூர், ஆப்கானிஸ்தான், இலங்கை, பூடான், மாலை தீவு, நேபால் ஆகிய 12 நாடுகளின் ஊடகவியலாளர்கள், இந்தக் கருத்தரங்கில் பங்கேற்றனர்.
இதில் உலக அளவில் பிரபலமான தி எக்கனோமிஸ்ட் இதழின் தெற்காசியப் பிரிவு பொறுப்பாளர் அடம் ராபர்ட்ஸ் கலந்து கொண்டு பேசியதாவது,
2009 மே மாதம் இலங்கை போரின் இறுதிக்கட்டத்தில், விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரனின் இளைய மகனான 12 வயதான பாலச்சந்திரனை இலங்கை ராணுவத்தினரே படுகொலை செய்தனர்.
போர் குற்றவாளிகளான இலங்கைப் படையினர் படுகொலைகளை நிறைவேற்றிய வீடியோ காட்சிகளை வெளியிடாதிருந்தால், போரின் முடிவில் சிறை பிடிக்கப்பட்டவர்கள், கைகள் பின்புறம் கட்டப்பட்டு படுகொலை செய்யப்பட்டது, வெளிச்சத்துக்கு வந்திருக்காது.
அண்மையில் இலங்கை மாகாண சபைத் தேர்தல் குறித்து செய்தி சேகரிப்பதற்காக சென்றிருந்த போது, யாழ்ப்பாணத்தில் வாழும் தமிழ் மக்களிடம் பேசும் வாய்ப்பு கிடைத்தது. அவர்கள் ராணுவப் புலனாய்வு பிரிவு குறித்து அச்சத்துடன் வாழ்வதாக தெரிவித்தனர்.
இலங்கையின் வடக்குப் பகுதியில் உள்ள மக்கள் 2009 மே மாதம் போர் முடிவுக்கு வந்த போதிலும், முரண்பாடுகள் தீரவில்லை என்று கருதுகிறார்கள். இவ்வாறு அவர் பேசினார்.
11 அக்டோபர் 2013
மக்கள் ஆர்வம் காட்டாத தமிழரசுக்கட்சியின் பதவியேற்பு!

10 அக்டோபர் 2013
கூட்டமைப்புக்குள் குழப்பம் வலுக்கிறது மாவைக்கு சுரேஷ் கடிதம்!
கௌரவ மாவை.சோ. சேனாதிராசா, பா.உ,
பொதுச்செயலாளர்
இலங்கைத் தமிழரசுக் கட்சி
மாட்டின் வீதி
யாழ்ப்பாணம்
10.10.2013
அன்புடன் தமிழரசுக் கட்சி செயலாளர் அவர்கட்கு,
ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியினால் பரிந்துரைக்கப்பபட்டு தழிரசுக் கட்சியின் சின்னமான வீட்டுச் சின்னத்தில் யாழ்ப்பாணத்தில் போட்டியிட்டு வடமாகாணசபையின் உறுப்பினராகத் தெரிவு செய்யப்பட்ட பொ.ஐங்கரநேசன் என்பவர் தனிப்பட்ட முறையில் வடமாகாணசபைக்கான அமைச்சுப் பதவியைப் பெற்றதன் காரணமாகவும் தனக்கும் ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணிக்கும் இனி எவ்விதத் தொடர்பும் இல்லை என்றும் இந்த அமைச்சுப் பதவியானது தமிழரசுக் கட்சியினுடைய தலைமையின் பரிந்துரையின் பேரில், முதலமைச்சரினால் தனக்குத் தனிப்பட்டரீதியில் வழங்கப்பட்டது என்றும் அவர் கூறியுள்ளார். அதுவே உண்மையுமாகும். ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் செயலாளர் நாயகமான என்னுடன் பொ.ஐங்கரநேசன் அவர்கட்கு அமைச்சுப் பதவி வழங்குவது தொடர்பாக தமிழரசுக் கட்சியோ முதலமைச்சரோ எவ்விதக் கருத்துப் பரிமாற்றங்களையும் மேற்கொள்ள வில்லை என்பதையும் சுட்டிக்காட்ட விரும்புகின்றேன்.

ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணிக்கு ஒரு அமைச்சுப் பதவியை நீங்கள் வழங்க விரும்பினால் அதனை முல்லைத்தீவு மாவட்டத்திற்கு வழங்குமாறு நான் கோரியிருந்தபோதிலும் என்னுடன் எவ்விதக் கலந்துரையாடலும் மேற்கொள்ளப்படாமல், முடிவெடுக்கப்பட்டுள்ளது.
எனவே திரு பொ. ஐங்கரநேசன் தெரிவித்துள்ளபடி, அவருக்கும் ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணிக்கும் எதிர்காலத்தில் எவ்விதத் தொடர்பும் இல்லை என்பதைத் தங்களுக்குத் தெளிவு படுத்துவதுடன் அவர் கூறியது போன்றே அவருக்குக் கொடுக்கப்பட்ட அமைச்சுப் பொறுப்பானது தனிப்பட்ட முறையில் அவருக்கு வழங்கப்பட்டதென்ற அடிப்படையில், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் அங்கம் வகித்து ஆறு ஆசனங்களைப் பெற்றுக்கொண்ட ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணிக்கு எந்தவிதமான அமைச்சுப் பதவியும் வழங்கப்படவில்லை என்பதைத் தங்களுக்குச் சுட்டிக்காட்ட விரும்புகின்றேன். எதிர்காலத்தில் ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணிக்கு ஓர் அமைச்சுப் பதவியை வழங்கியதாக தவறானதும் பொய்யானதுமான பரப்புரைகளைச் செய்ய வேண்டாமென்று கேட்டுக்கொள்வதுடன் செய்ய மாட்டீர்கள் என்றும் நம்புகின்றேன்.
நன்றி.
இப்படிக்கு
சுரேஷ். க.பிரேமச்சந்திரன், பா.உ.,
செயலாளர் நாயகம்,
ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு
வட மாகாணசபை உறுப்பினர்கள் நாளை பதவியேற்பு!

09 அக்டோபர் 2013
கமலேஷ் சர்மாவும் கூட்டமைப்பும் புதுடெல்லியின் கட்டளைப்படி செயற்படுவதாக குற்றச்சாட்டு!
இந்தியாவின் ஆசீர்வாதம் இல்லாமல் பொதுநலவாய நாடுகளின் செயலாளர் கமலேஷ் சர்மா சிறீலங்காவுக்கு துணைபோக முடியாது . இந்த விடயத்தில் இந்தியா சொல்வதைத்தான் பொதுநலவாய நாடுகளின் செயலாளர் கமலேஷ் சர்மா நிறைவு செய்து வருகின்றார். இவ்வாறு தெரிவித்துள்ளார் கனேடிய நாடாளுமன்ற உறுப்பினர் சேகல் அவர்கள்.
இந்தியாவின் இரகசிய அறைகள் தமிழருக்கு எதிராகவும் இந்தியாவின் அரசியல் அறைகள் தமிழருக்கு உதவிசெய்வது போல் நடித்துவருகின்றது குறிப்பிடத்தக்கது என்று தெரிவித்துள்ளார் ஈழத் தமிழ் எழுத்தாளர் ஒருவர். . ஈழத்தமிழர் மீதான இனஅழிப்புக்கு துணைநின்ற புது டெல்லி தற்போது சிறீலங்காவை பாதுகாக்கும் முயற்சியில் தீவிரம் காட்டி வருகிறது என்கிறார் மனித உரிமைச் செயற்பாட்டாளர் ஒருவர்.
கனடாவின் குற்றசாட்டு
கமலேஷ் சர்மா, சிறீலங்கா அரசாங்கம் செய்கின்ற அனைத்து தவறுகளையும் நியாயப்படுத்தும் வகையில் செயற்படுகிறார். அத்துடன் சிறீலங்கா அரசாங்கத்தின் தவறான நடவடிக்கைகளுக்கும் துணைபோவதாக சேகல் அவர்கள் குற்றம் சுமத்தியுள்ளார்.இந்திய இராஜதந்திரியான கமலேஷ் சர்மா, சிறீலங்காவின் முன்னாள் பிரதம நீதியரசர் பதவி விலக்கப்பட்டமை உட்பட்ட உரிமை மீறல்களை கண்டுகொள்ளவில்லை என்றும் சேகல் குற்றம் சுமத்தியுள்ளார்.இது பிரித்தானியாவின் காடியன் பத்திரிகையில் வெளிவந்துள்ளது.
இதேவேளை, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு புது டெல்லியின் கட்டளைகளுக்கு கீழ்படிந்து செயற்படுவதாக அமெரிக்க பல்கலைக்கழக்கத்தில் கற்பித்து வரும் பேராசிரியர் கீதா பொன்கலன் தெரிவித்துள்ளார்.
மீண்டும் படையினரின் கெடுபிடி அதிகரித்துள்ளது!

08 அக்டோபர் 2013
வடமாகாணத்தின் அமைச்சர்கள் இவர்களாம்!
பலத்த இழுபறிகள் மத்தியில் கடந்த இரு வாரங்களாகத் தொடர்ந்த மாகாணசபைக்கான அமைச்சுக்கள் பதவி தொடர்பில் தற்போது முடிவு எட்டப்பட்டுள்ளது.இந்தப் பேச்சுக்களின் முடிவில் அமைச்சுப் பதவிகள் தீர்மானிக்கப்பட்டுள்ளன. இலங்கைத் தமிழரசுக் கட்சியைத் சேர்ந்த கிளிநொச்சி மாவட்ட மாகாண சபை உறுப்பினர் த.குருகுலராஜா கல்வி அமைச்சராகவும், அந்தக் கட்சியின் வவுனியா மாவட்ட மாகாண சபை உறுப்பினர் மருத்துவர் பி.சத்தியலிங்கம் சுகாதார அமைச்சராகவும், ரெலோவைச் சேர்ந்த மன்னார் மாவட்ட மாகாண சபை உறுப்பினர் டெனீஸ்வரன் உள்ளூராட்சி அமைச்சராகவும், ஈ.பி.ஆர்.எல்.எவ்வைச் சேர்ந்த யாழ்.மாவட்ட மாகாண சபை உறுப்பினர் பொ.ஐங்கரநேசன் விவசாய அமைச்சராகவும் பதவியேற்கவுள்ளனர். இது தொடர்பான அறிவிப்பு வடக்கு மாகாண முதலமைச்சரினால் யாழ்ப்பாணத்தில் இன்று வெளியிடப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.
07 அக்டோபர் 2013
பொதுநலவாய மாநாட்டில் கனடிய பிரதமர் கலந்துகொள்ள மாட்டார்!
விக்னேஸ்வரன் மஹிந்த ராஜபக்ஷ முன்னிலையில் சத்தியப்பிரமாணம்!
இலங்கை வட மாகாண முதல்வராக , ஓய்வு பெற்ற உச்ச நீதிமன்ற நீதிபதி, சி.வி.விக்னேஸ்வரன் இன்று திங்கட்கிழமை பதவிப்பிரமாணம் செய்து கொண்டார்.
கொழும்பில், அலரி மாளிகையில் நடந்த வைபவத்தில், ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவருக்கு பதவிப் பிரமாணம் செய்து வைத்தார்.
ஜனாதிபதி முன் பதவிப்பிரமாணம் செய்வது குறித்து தமிழ் தேசியக் கூட்டமைப்புக்குள் கருத்து வேறுபாடுகள் நிலவும் சூழலில் இந்தப் பதவிப் பிரமாண வைபவம் நடந்திருக்கிறது.
இதற்கிடையே, வட மாகாணத் தேர்தலில் தமிழ் தேசியக் கூட்டமைப்பு வேட்பாளராகப்போட்டியிட்டு தேர்ந்தெடுக்கப்பட்ட அனந்தி சசிதரன் தான் விக்னேஸ்வரன் முன்னர் சத்தியப்பிரமாணம் செய்துகொள்ளப்போவதில்லை என்று கூறியிருப்பதாகவும் செய்திகள் வந்துள்ளன.
சல்மான் குர்ஷித் இலங்கையில்
இதனிடையே, இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் சல்மான் குர்ஷீத் இரண்டு நாள் விஜயமாக இன்று இலங்கை வந்தடைந்திருக்கிறார்.
அவர் இலங்கை அரசுடன், இனப்பிரச்சினையில் கண்டுள்ள முன்னேற்றம் குறித்து விவாதிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
சம்பூரில் இந்திய உதவியுடன் தொடங்கப்படும் மின்சார உற்பத்தித் திட்டம் குறித்த சில ஒப்பந்தங்களும் இந்த விஜயத்தின் போது கையெழுத்தாகும் என்று கூறப்படுகிறது.
சல்மான் குர்ஷீத் செவ்வாய்க்கிழமையன்று யாழ்ப்பாணம் விஜயம் செய்வார்.
06 அக்டோபர் 2013
பங்காளி கட்சிகள் தனித் தனியே பேச்சு- சித்தார்த்தன்
நடைபெற்று முடிந்த வடக்கு மாகாண சபைத் தேர்தலில் வரலாறு காணாத வெற்றியை தமிழ் மக்கள் தமிழ் தேசியக் கூட்டமைப்புக்கு வழங்கியுள்ளார்கள் என்பதுடன், மிகப்பெரிய ஆணையையும் எமக்கு கொடுத்திருக்கின்றனர்.
ஆனால், தேர்தலின் பின்னரான தமிழரசுக் கட்சியின் நடவடிக்கைகள் அனைத்தும் ஏனைய அங்கத்துவக் கட்சிகளின் கருத்துக்களை உள்வாங்காமல் முடிவுகளை தன்னிச்சையாக எடுக்கும் போக்கு தொடர்கின்றது என கூட்டமைப்பின் சார்பாக வடமாகாண சபைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டவரும், புளொட் அமைப்பின் தலைவருமான தர்மலிங்கம் சித்தார்த்தன் தெரிவித்துள்ளார்.
வட மாகாண முதல்வரது பதவிப் பிரமாணம் தொடர்பில் தர்மலிங்கம் சித்தார்த்தன் வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
கூட்டமைப்பின் ஒற்றுமையை வலியுறுத்தி, அதேசமயம் எமது தேர்தல் அறிக்கைக்கு ஆதரவாகவும், மக்கள் கொடுத்த மிகப் பலமான ஆணையை மதிக்காமல் நடக்கின்ற தமிழரசுக் கட்சியின் செயற்பாடுகள் குறித்து அவர் கவலை வெளியிட்டுள்ளார்.
குறிப்பாக முதலமைச்சரின் பதவி ஏற்பு வைபவம் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஏனைய கட்சிகளுக்கு அதிருப்தியை அளிப்பதாக சித்தார்த்தன் தெரிவித்துள்ளார்.
இவை சம்பந்தமாக TELO, EPRLF, PLOTE போன்ற கட்சிகள் தத்தமது கட்சிகளுடன் கூடி ஆராய்ந்து ஒரு தீர்க்கமான முடிவினை எடுத்து, மக்களின் ஆணையை முன்னெடுத்துச் செல்வதாக தீர்மானித்துள்ளதாகவும் சித்தார்த்தன் மேலும் தெரிவித்துள்ளார்.
05 அக்டோபர் 2013
முடிவின்றி முடியும் கூட்டமைப்பின் கூட்டங்கள்!
வடமாகாண சபை அமைச்சர்கள் தெரிவு தொடர்பில் இறுதி முடிவெடுப்பதற்கான கூட்டம் இன்று மாலை பம்பலப்பிட்டியில் உள்ள தமிழ் தேசியக் கூட்மைப்பின் அலுவலகத்தில் இடம்பெற்றது.
எனினும் இந்தக் கூட்டத்தில் இறுதி முடிவுகள் எதுவும் அறிவிக்கப்படவில்லை என, கூட்டமைப்பின் சார்பாக வடமாகாண சபைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டவரும், புளட் அமைப்பின் தலைவருமான தர்மலிங்கம் சித்தார்த்தன் தெரிவித்துள்ளார்.
எனினும் வடமாகாண அமைச்சர்களை தெரிவுசெய்வது தொடர்பான சகல அதிகாரமும் முதலமைச்சராக நியமிக்கப்படவுள்ள, சி.வி. விக்னேஸ்வரனிடம் ஒப்டைக்கப்பட்டுள்ளதாகவும், அவரே இது குறித்து அறிவிப்பார் எனவும் தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் கூறியுள்ளார்.
இதேவேளை, தான் பதவி ஏற்றபின் அமைச்சர்களின் விபரம் குறித்து அறவிப்பதாக சி.வி.விக்னேஸ்வரன் இதன்போது கூறியதாக தர்மலிங்கம் சித்தார்த்தன் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
இந்தநிலையில் எதிர்வரும் 7ம் திகதி ஜனாதிபதி முன்னிலையில் விக்னேஸ்வரன் வடமாகாண முதலமைச்சராக சத்தியப் பிரமாணம் செய்துகொள்ளவுள்ளார்.
இந்த நிகழ்வில் கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் அனைத்து கட்சிகளின் தலைவர்கள் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்களும் கலந்துகொள்ள வேண்டும் என, சம்பந்தன் இன்று அழைப்பு விடுத்ததாக தர்மலிங்கம் சித்தார்த்தன் தெரிவித்துள்ளார்.
எதுஎவ்வாறு இருப்பினும் கூட்டமைப்பின் அனைத்து தலைவர்கள் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்களும் இந்த நிகழ்வில் பங்கேற்பது என்பது சந்தேகத்திற்குரியதொன்றாகவே உள்ளது.
காரணம் ஜனாதிபதி முன்னிலையில் விக்னேஸ்வரன் சத்தியப்பிரமாணம் செய்து கொள்வதற்கு கூட்டமைப்புக்குள் எதிர்ப்புக்கள் எழுந்துள்ளதோடு, மாகாண அமைச்சர்கள் தெரிவு குறித்தும் முரண்பாடுகள் காணப்படுகின்றன.
குறிப்பாக அண்மையில் இடம்பெற்ற கூட்டமொன்றில் ஏற்பட்ட முரண்பாடு காரணமாக மாவை சேனாதிராஜா வெளிநாடு சென்றுள்ளதாக கூட்டமைப்பின் உள்ளக தகவல்கள் கூறுகின்றன.
இதேபோல் தமிழீழ விடுதலை இயக்கத்தின் (டெலோ) மன்னாரை சேர்ந்த ஒருவருக்கு வழங்கப்பட வேண்டிய அமைச்சுப் பதவி, யாழ்பாணத்தை சேர்ந்த ஒருவருக்கு வழங்கப்படவுள்ளதாக சர்ச்சைகளும் ஏற்பட்டுள்ளன.
இதனால் அக்கட்சியின் (டெலோ) தலைவர் பதவியில் இருந்து இராஜினாமா செய்ய உத்தேசித்துள்ளதாக, செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
எனவே இவ்வாறான ஒரு சந்தர்ப்பத்தில் விக்னேஸ்வரனின் சத்தியப்பிரமாண நிகழ்வில் கூட்டமைப்பின் அனைத்து கட்சி தலைவர்கள் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்களும் கலந்து கொள்வது சாத்தியமா எனும் கேள்வி எழுத்துள்ளது.
வாக்களித்த மக்களுக்கு ஆப்படித்த சம்பந்தனுக்கு மக்கள் எதிர்ப்பு!
வடமாகாண சபையின் முதலமைச்சர் க.வி.விக்னேஸ்வரன், ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச முன்னிலையில் பதவியேற்பதை தாம் விரும்பவில்லை என்று வடக்கில் உள்ள பெரும்பான்மையான மக்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.
மாகாண முதலமைச்சர் க.வி.விக்னேஸ்வரன் எதிர்வரும் திங்கட்கிழமை ஜனாதிபதிக்கு முன்பாக பதவியேற்கவுள்ளார் என்று நேற்றுத் தகவல் வெளியானது.
வடக்கு மக்களுக்கு இந்தச் செய்தி கடும் அதிர்ச்சியை அளித்தது. இந்த முடிவை விமர்சித்து முகநூல் போன்ற சமூக வலைத் தளங்களிலும் காரசாரமான விமர்சனங்கள் உடனடியாப் பதியப்பட்டன. கூட்டமைப்பின் இந்த முடிவு குறித்து "உதயன்' மக்களிடம் கருத்துக் கேட்டது.
வடமாகாணத்தைச் சேர்ந்த வைத்திய அதிகாரிகள், ஆசிரியர்கள், அரசியல் ஆர்வலர்கள், பிரதேச சபை உறுப்பினர்கள், பொது மக்கள் ஆகியோர் இந்தக் கருத்துக் கணிப்பில் கலந்து கொண்டனர்.
அவர்களில் அறுதிப் பெரும்பான்மையானோர் கூட்டமைப்பின் இந்த முடிவு தமக்கு ஏமாற்றம் அளிப்பதாகவும் நல்லிணக்கத்தின் பேரால் இவ்வாறு செய்யவேண்டிய அவசியம் எதுவும் கிடையாது எனவும் கருத்து வெளியிட்டனர். அவர்களின் எண்ணங்களின் சாரமாக சிலரது கருத்துக்கள் வருமாறு:
எஸ்.தவபாலசிங்கம் - புளியங்குளம்
தமிழ் மக்களின் அரசயில் தீர்வு மற்றும் உரிமை விடயங்களை கருத்தில் கொண்டே தமிழ் மக்கள் தமிழ்த் தேசிக் கூட்டமைப்புக்கு வாக்களித்தனர். வடமாகாண முதலமைச்சர் ஜனாதிபதி, ஆளுநர் முன்னிலையில் தான் சத்தியப் பிரமாணம் செய்ய வேண்டும் என்றோ பதவியேற்க வேண்டும் என்றோ கட்டாய சட்டம் எதுவும் இல்லை. நாங்கள் எங்களது தனித்துவத்தை வெளிப்படுத்தவே தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு வாக்களித்தோம். எனவே கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தன் முன்னிலையில் பதவியேற்பதை விடுத்து ஜனாதிபதி முன்னிலையில் பதவியேற்பதை ஒருபோதும் ஏற்றுக்கொள்ள முடியாது - என்றார்.
ஜெ.ஜெயரூபன் - நெடுங்கேணி
வல்வெட்டித்துறையில் மாவீரன் பிரபாகரன் என்று முழங்கிய விக்னேஸ்வரன், போர்க்குற்ற வாளியான மஹிந்தவிடம் மண்டியிட்டு பதவியேற்பதை ஒரு போதும் ஏற்க முடியாது. சாதாரணமாக கட்சித் தலைவர் முன்னிலையில் பதவியேற்று மக்கள் வழங்கிய ஆணையுடன் எமது தனித்துவத்தை காட்ட வேண்டும். இவ்வாறான சந்தர்ப்பத்தில் தான் தமிழ் தொடர்ந்தும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு ஆதரவாக செயற்படுவார்கள் - என்றார்.
சின்னையா சிவரூபன்- யாழ். போதனா வைத்திய சாலை சட்ட வைத்திய அதிகாரி
உலக நாடுகளே போர்க்குற்றவாளியாக அறிவிக்கப்பட்ட மஹிந்த ராஜபக்ச முன்னிலையில் வடமாகாண முதலமைச்சர் பதவியேற்பது ஏற்றுக் கொள்ள முடியாதது. தமிழ் மக்களால் நிராகரிக்கப்பட்ட ஒருவராகவே மஹிந்த ராஜபக்ச உள்ளார். அவர் முன்னிலையில் முதலமைச்சர் பதவியேற்பது தமிழ் மக்களுக்கு இழைக்கும் துரோகம்.
து.தமிழ்மாறன் - காரைநகர்
வடக்கு மாகாண முதலமைச்சர் ஜனாதிபதியின் முன்பாகப் பதவிப் பிரமாணம் செய்யவுள்ளமை வெட்கம்கெட்ட செயல். கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தன் இந்த விடயத்தில் மட்டும் ஏன் அவசரப்பட்டு முடிவு எடுத்தார் என்பது கேள்வியாக உள்ளது. தமிழ் மக்களுக்கு உரிமைகள் கிடைக்கவிடாமல் தடுத்து முட்டுக்கட்டைகளை ஏற்படுத்தி வரும் அரசின் தலைவர் முன்னிலையில் வடக்கு மாகாண முதல்வர் சத்தியப்பிரமாணம் செய்து தமிழினத்தை மஹிந்தவிடம் அடகு வைக்கும் செயல் - என்றார்.
ஆர்.அரசரத்தினம் - வேலணை
ஜனாதிபதி முன் முதலமைச்சர் பதவி ஏற்பது என்ற தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முடிவு தமிழ் மக்களுக்குப் பலத்த ஏமாற்றத்தை அளித்துள்ளது. இதன்மூலம் கூட்டமைப்பின் எதிர்கால நடவடிக்கைகள் சந்தேகத்துக்குரியனவாக இருக்கும் என்றும் அவர் கூறினார். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் ஐந்து கட்சிகள் அங்கம் வகிக்கின்றன. இவ்வாறு இருக்கையில் சம்பந்தன் மட்டும் தனித்துச் சென்று ஜனாதிபதியைச் சந்திதமை சந்தேகத்தை ஏற்படுத்துவதாகவும் அவர் கூறினார்.
விஜயகாந்தன் அசோக் - தனியார் நிறுவன ஊழியர் யாழ்ப்பாணம்
ஜனாதிபதி முன்னிலையில் முதலமைச்சர் பதவியேற்பது என்பது ஏற்றுக்கொள்ளமுடியாத விடயம். காரணம் தாம் மஹிந்த முன்னிலையில் பதவியேற்கமாட்டோம் என்று தெரிவித்த இவர்கள் இந்த வாக்குறுதியையே காப்பாற்ற முடியாது உள்ளனர். அப்படியானால் தேர்தல் விஞ்ஞாபனத்தில் குறிப்பிட்டுள்ள விடயத்தை முழுமையாக எவ்வாறு செயற்படுத்துவர் என்ற கேள்விக்குறி தவிர்க்கமுடியாதது. தேர்தல் விஞ்ஞாபனத்தில் மஹிந்தவை ஒருபக்கத்தில் போக்குற்றவாளி என்று குறிப்பிடும் இவர்கள் அப்படியான ஒருவரின் முன்னிலையில் பதவியேற்பது என்பது எந்தவகையிலும் நியாயமற்றது.- என்றார்.
சிவம் - முள்ளியவலை
ஜனாதிபதி முன்னிலையில் விக்னேஸ்வரன் பதவியேற்பது பொருத்தமற்றது. குறிப்பாக ஜனாதிபதி முன்னிலையில் பதவியேற்க வேண்டும் என்ற கட்டாயம் இல்லை. சாதாரணமாக ஒரு சமாதான நீதிவான் முன்னிலையிலேயே பதவியேற்காலம் என்று குறிப்பிட்ட கூட்டமைப்பினர் தற்போது எடுத்திருக்கும் முடிவு பொறுப்பற்றது. தாம் எடுக்கும் முடிவில் கூட நிலையான கடைப்பாடு அற்றவர்கள் எப்படி தமிழ் மக்களது பிரச்சினையில் ஒரு நிலைக்கொள்கையோடு நடந்துகொள்ளப்போகிறார்கள் - என்றார்.
ச.சஜீவன் - வலி.வடக்கு
கூட்டமைப்பு வெளியிட்ட தேர்தல் விஞ்ஞாபனத்தில் போர்க்குற்ற விசாரணைக்கு வலியுறுத்தப்பட்டுள்ளது. இதில் இலங்கை ஜனாதிபதி தலைமையிலான இராணுவத்தினர் தமிழின அழிப்பில் ஈடுபட்டனர் என்ற கருத்து நிலவுகிறது. அப்படியானால் ஒரு பக்க போர்க்குற்றவாளி மஹிந்தவே. இவர் முன்னிலையில் வடமாகாண முதலமைச்சர் பதவியேற்பது என்பது கூட்டமைப்பின் தேர்தல் விஞ்ஞாபனத்தையே கேள்விக்குறியாக்கி உள்ளது.
நாடக கலைஞர் - நீர்வேலி
வடமாகாண சபைத் தேர்தலில் தமிழ் மக்கள் வாக்களித்தது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை நம்பியோ தேர்தல் விஞ்ஞாபனத்தை நம்பியோ அல்ல. சிங்கள பேரினவாதம் வெல்லக்கூடாது என்பதற்காகவே அவர்கள் வாக்களித்தனர். இதனை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உணர்ந்துகொள்ள வேண்டும். பேரினவாதிகளுக்கு துணை போவதால் எதிர்காலத்தில் தமிழனின் இருப்பு இல்லாமலே போய்விடும் என்றார்.

04 அக்டோபர் 2013
மகிந்த முன்னிலையில் விக்னேஸ்வரன் பதவிப்பிரமாணம்!
வட மாகாணசபைத் தேர்தலில் போட்டியிட்டு வெற்றியீட்டிய தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முதலமைச்சர் அலரி மாளிகையில் பதவிப் பிரமாணம் செய்து கொள்ள உள்ளார்.
முதலமைச்சர் வேட்பாளராக போட்டியிட்ட முன்னாள் நீதியரசர் சீ.வி. விக்னேஸ்வரன் ஸ்ரீலங்கா ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ முன்னிலையில் பதவிப் பிரமாணம் செய்ய உள்ளார்.மஹிந்த ராஜபக்ஷ முன்னிலையிலேயே பதவிப் பிரமாண நிகழ்வுகள் நடைபெறும் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அறிவத்துள்ளது.
முன்னதாக யாழ்ப்பாணத்தில் பதவிப் பிரமாண நிகழ்வுகளை நடாத்த உள்ளதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அறிவித்திருந்தது.
எதிர்வரும் 7ம் திகதி திங்கட் கிழமை காலை 9 மணிக்கு மகிந்த முன்னிலையில் அலரி மாளிகையில் விக்னேஸ்வரன் பதவிப் பிரமாணம் செய்து கொள்ள உள்ளார்.
இதேவேளை, இதுவரையில் அமைச்சர்கள் பற்றிய தீர்மானம் எடுக்கப்படவில்லை எனத் தெரிவிக்கப்படுகிறது.
பெரும்பாலும் எதிர்வரும் 11ம் திகதி வெள்ளிக்கிழமை யாழ்ப்பாணத்தில், விக்னேஸ்வரன் முதலமைச்சராக பதவிப் பிரமாணம் செய்து கொண்டதன் பின்னர் அவரின் முன்னிலையில் கூட்டமைப்பின் உறுப்பினர்களும் அமைச்சர்களும் பதவிப் பிரமாணம் செய்து கொள்வார்கள் என கூட்டமைப்பு தகவல்கள் தெரிவிக்கின்றன.
இன்று காலை மஹிந்த ராஜபக்ஷவுடன், அலரி மாளிகையில் சம்பந்தன் நடத்திய பேச்சுவார்த்தையின் பின்னரே இந்தத் தகவல்கள் வெளியிடப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
பதவிப் பிரமாண நிகழ்வுகள் குறித்து மகிந்தவிற்கும்
சம்பந்தனுக்கும் இடையில் இணக்கப்பாடு எட்டப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது.
சம்பந்தனுக்கும் இடையில் இணக்கப்பாடு எட்டப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது.
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)