
வேலூர் சிறையில் கைத்தொலைபேசி வைத்திருந்ததாக ராஜிவ் கொலை வழக்கில் தண்டனை பெற்ற நளினி மீது வேலூர் குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் நடக்கும் வழக்கை ரத்துச் செய்யுமாறு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டிருக்கிறது.
2010ஆம் ஆண்டில் வேலூர் மகளிர் சிறையில் தன்வசம் கைத்தொலைபேசி வைத்திருந்தார் என்று நளினி மீது குற்றஞ்சாட்டப்பட்டு, வேலூர் குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் வழக்கு நடந்து வந்தது.
ஆனால், இதனை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்றத்தில் நளினி சார்பில் ஒரு வழக்கு தாக்கல் செய்யப்பட்டது. அந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது, கைத்தொலைபேசி வைத்திருந்த குற்றத்துக்கான தண்டனையாக நளினி ஏற்கனவே சிறையின் 'ஏ' பிரிவில் இருந்து 'பி' பிரிவுக்கு மாற்றப்பட்டுவிட்டதாகவும், ஆகவே தண்டனை வழங்கப்பட்ட பின்னர் அது தொடர்பில் ஒரு வழக்கு நடப்பதில் நியாயமில்லை என்றும் வாதிடப்பட்டது.
இதனை ஏற்ற சென்னை உயர் நீதிமன்றம் வேலூர் குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் கைத்தொலைபேசி வைத்திருந்த விவகாரம் குறித்து நடக்கும் வழக்கை ரத்துச் செய்யுமாறு உத்தரவிட்டுள்ளது.
நன்றி:பி.பி.சி
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.