
யாழ்.தட்டாதெரு சந்தியில் இன்றிரவு (30) பத்து மணியளவில் இடம்பெற்ற விபத்தொன்றில் யுவதி ஒருவர் ஸ்தலத்திலேயே உயிரிழந்ததுடன் மேலுமொரு யுவதி பலத்த காயமடைந்தார். கோப்பாய் ராஜ வீதியைச் சேர்ந்த எஸ். தீபிகா (20) என்பவரே உயிரிழந்த யுவதியாவார்.
சம்பவத்தில் உயிரிழந்த யுவதி சென்ற மோட்டார் சைக்கிளை இராணுவத்தினரை ஏற்றிச் சென்ற பஸ் ஒன்று மோதிய போதே இந்த உயிரிழப்பு ஏற்பட்டது.
இதேவேளை, இந்த
சம்பவத்தில் பலத்த காயங்களுக்கு இலக்கான இன்னொரு யுவதி யாழ். போதனா வைத்தியசாலையின் அவசரப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அத்துடன் உயிரிழந்த யுவதியின் சடலமும் யாழ் போதனா வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது. இந்தச் சம்பவம் தொடர்பில் யாழ் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.