 |
கோத்தபாய |
கோத்தபாய ராஜபக்சவின் வெள்ளைவான் கொடுங்கோல் ஆட்சி மற்றும் ஒடுக்குமுறைக்கு எதிராக மக்களை அணிதிரட்டப் போவதாக ஸ்ரீலங்காவின் நிதியமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்துள்ளார்.
பொதுஜன பெரமுனவின் வேட்பாளராக கோத்தபாய ராஜபக்ச அறிவிக்கப்பட்ட பின்னர்“ வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே இவ்வாறு கூறியுள்ளார்.
தனது பொறுப்புகளை கைவிட்டுவிட்டு நாட்டைவிட்டு ஒருபோதும் தப்பியோடாத வலுவான வேட்பாளரை நிறுத்தி ஐக்கிய தேசிய கட்சி கோத்தபாய ராஜபக்சவை தோற்கடிக்கும்.
இந்த தேசத்தின் அடுத்த ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்சவோ அல்லது வேறு எந்த ராஜபக்சவோயில்லை, இலங்கையின் அடுத்த ஜனாதிபதி பல பத்திரிகையாளர்களினதும் அப்பாவிகளினதும் குருதிகளை தனது கைகளில் கொண்டுள்ள குற்றவாளியில்லை .
இலங்கையின் அடுத்த ஜனாதிபதி இலங்கையில் பிறந்தவராகவும் இந்தநாட்டிலிருந்து தப்பியோடி இன்னொரு நாட்டிற்கு விசுவாசம் வெளியிடாதவராகவும் காணப்படுவார் .
இலங்கையின் அடுத்த ஜனாதிபதி ஜனநாயகம் என்ற தளத்திலிருந்து நீதித்துறை பொதுச்சேவை மற்றும் ஏனைய சுயாதீன கட்டமைப்புகளை பாதுகாப்பதற்கு உறுதிபூண்டவராகவும் ஐக்கிய தேசிய கட்சியினாலும் அதன் கூட்டணிகளாலும் ஜனநாயக ரீதியில் தெரிவு செய்யப்பட்டவராகவும் காணப்படுவார் .
மகிந்த ராஜபக்ச எதிர்கட்சியில் பதவி வகித்த கடந்த நான்குவருட காலப்பகுதியில் எந்த பாடத்தையும் கற்கவில்லை,அவர் தனது குடும்பத்திற்கு அதிக அதிகாரங்களை வழங்கினார் என்பதை உணரவில்லை, தான் நாட்டை அதிகளவிற்கு பயமுறுத்தினேன் என்பதை உணரவில்லை, தான் நாட்டின் நீதித்துறையின் சுயாதீனத்திற்கு அச்சுறுத்தினேன் என கவலையடையவில்லை.
பிரகீத் எக்னலிகொட காணாமல்போகச் செய்யப்பட்டமை குறித்தும் லசந்த விக்கிரமதுங்க படுகொலை செய்யப்பட்டமை குறித்தும் கீத் நொயார் தாக்கப்பட்டமை குறித்தும் மகிந்த ராஜபக்ச கவலைப்படவில்லை எனவும் மங்கள சமரவீர தெரிவித்துள்ளார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.