.jpg)
யாழ்ப்பாணம்- குப்பிளானில இன்று பிற்பகல், மின்னல் தாக்கி தோட்ட வேலையில் ஈடுபட்டிருந்த சகோதரர்கள் இருவர் உள்ளிட்ட மூன்று பேர் உயிரிழந்தனர்.
யாழ்ப்பாணக் குடாநாட்டில் இன்று மதியத்துக்குப் பின்னர், சில இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய மழை பெய்தது. இதன்போதே சுன்னாகம் குப்பிளான்,மயிலங்காடு பகுதியில் மின்னல் தாக்கிய இந்தச் சம்பவம் இடம்பெற்றது.
புகையிலைத் தோட்டத்தில் நான்கு பேர் வேலை செய்து கொண்டிருந்தனர். ஒருவர் மதிய உணவு எடுப்பதற்காக வீட்டிற்கு சென்றுள்ளார். ஏனையோர் வேலை செய்து கொண்டிருந்த போது, திடீரென மழை பெய்தது, இதனால், அவர்கள் அருகில் இருந்த தென்னை மரத்திற்கு கீழ் அமைக்கப்பட்டிருந்த கொட்டிலில் ஒதுங்கியுள்ளனர். இதன் போது இடி மின்னல் அந்தத் தென்னை மரத்தின் மீது விழுந்ததில் மூன்று பேரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். உணவு எடுக்கச் சென்றவர் திரும்பி வந்த போதே மூன்று பேரும் மின்னல் தாக்கி இறந்தமை தெரியவந்துள்ளது.
சகோதரர்களான திருநாவுக்கரசு கண்ணன் (வயது- 48), கந்தசாமி மைனாவதி (வயது 52) மற்றும் ரவிக்குமார் சுதா (வயது 38) ஆகியோரே உயிரிழந்துள்ளனர்.
.jpg)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.