
பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான், விடுதலைப் புலிகளின் தாக்குதல்கள் தொடர்பாக பாகிஸ்தான் நாடாளுமன்றத்தில் உரையாற்றியிருக்கிறார். பாகிஸ்தானில் சிறைப்பட்டு இருக்கும் இந்திய விமானி அபிநந்தனை நாளை விடுதலை செய்வதாக பாகிஸ்தான் நாடாளுமன்றத்தில் பிரதமர் இம்ரான் கான் இன்று முக்கிய அறிவிப்பை வெளியிட்டார்.“இஸ்லாமிய தீவிரவாதிகள் தான் தற்கொலை தாக்குதல்களை மேற்கொள்வதாக இந்தியா தொடர்ச்சியாக குற்றம்சாட்டி வருகிறது. தீவிரவாதத்திற்கு மதம் கிடையாது. தற்கொலை தாக்குதல்கள் மதத்தின் பெயரால் நடப்பது இல்லை. அமெரிக்காவின் இரட்டை கோபுர தாக்குதலுக்கு முன்னதாகவே உலக அளவில் வீரியமான தற்கொலை தாக்குதல்களை விடுதலைப் புலிகள் நடத்தியிருந்தனர். விடுதலைப் புலிகள் சார்பில் தற்கொலை தாக்குதல் நடத்தியவர்கள் அனைவருமே இந்துக்கள். அவர்கள் மதத்தின் பெயரால் நடத்தவில்லை. மாறாக தங்களது விரக்தி மற்றும் கோபத்தின் விளைவாகவே அதனை செய்தனர்” என இம்ரான் கான் கூறியுள்ளார் என தெரிவிக்கப்படுகிறது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.