
பதவிக்காகவே வடக்கு முதலமைச்சர் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைமையை விமர்சிக்கின்றார் என்று கூறினால் அதை சிறுபிள்ளை கூட ஏற்காது என்று தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்தார்.தமிழ்த் தேசிய மக்கள் பேரவையின் வேட்பாளர்களை அறிமுகப்படுத்தும் நிகழ்வு நேற்று வட்டுக்கோட்டையில் உள்ள பேரவையின் அலுவலகத்தில் நடைபெற்றது. அதில் கருத்துத் தெரிவித்தபோது அவர் இவ்வாறு தெரிவித்தார்.
தமிழ் தேசியக் கூட்டமைப்புக்கு விசுவாசமாக இருந்திருந்தால் அடுத்த தலைமையாக அவர் இருந்திருப்பார். முதலமைச்சர் சம்பந்தனை வீழ்த்தி தலைமைப் பதவியை பெறவேண்டும் என நினைக்கவில்லை.சம்பந்தன் மீது ஒருவித நன்றிக்கடன் இருப்பதால்தான் இப்போதும் ஒரு நிலைப்பாட்டுக்கு வராது இன்றும் அமைதியாக இருக்கின்றார். தமிழ் மக்களை சுமத்திரன் மட்டும் அழிக்கவில்லை, சம்பந்தனும் சேர்ந்து அழித்துக் கொண்டிருக்கின்றார்.முதலமைச்சர் ஒரு பக்கத்தில் எழுதிய அறிக்கைக்கு பத்து பக்கத்தில் தமிழரசுக் கட்சி பதிலை வழங்கியுள்ளது என்றால் அவர்கள் எந்தளவுக்கு அந்தரத்தில் உள்ளனர் என விளங்கு கின்றது.தமிழ் தேசியக் கூட்டமைப்பினர் இடைக்கால அறிக்கையில் உள்ள விடயங்களை வீடு வீடாக சென்று மக்கள் மத்தியில் பொய்யான பரப்புரைகளை மேற்கொண்டு குழப்பப் போகின்றனர். தமிழ் மக்கள் இந்த விடயத்தில் தெளிவடைய வேண்டும். அபிவிருத்தி என்ற பெயரில் தமிழ் தேசியக் கூட்டமைப்பினர் இந்த தேர்தலில் வெற்றியீட்டினால் சர்வதேச மட்டத்தில் தமிழ் மக்கள் தமக்கு ஆதரவு உள்ளது என்று வெளிக்காட்டி அரசமைப்பை நிறைவேற்ற உத்தேசிக்கின்றனர் என்பதையும் கஜேந்திரகுமார் தெளிவுபடுத்தியுள்ளார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.