
ஆசனப் பங்கீட்டின் போது, இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியால் வாய்ப்பு மறுக்கப்பட்ட இடங்களில் தேர்தல் பிரசாரங்களில் இருந்து ஒதுங்கியிருக்க புளொட் அமைப்பு தீர்மா னித்துள்ளதாக கூறப்படுகிறது. தமது கட்சியின் வேட்பாளர்கள் களமிறங்கும் வட்டாரங்களில் மட்டும் பரப்புரைகளைத் தீவிரமாக மேற்கொள்ள அந்தக் கட்சி திட்டமிட்டு வருகின்றது என்றும் தெரியவந்துள்ளது.
எதிர்வரும் உள்ளூராட்சித் தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பாக, இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் வீட்டுச் சின்னத்தில் போட்டியிட பங்காளிக் கட்சிகளான ரெலோ மற்றும் புளொட் என்பன இணங்கின.ஆசனப் பங்கீட்டில் பங்காளிக் கட்சிகளுக்கு இடையில் ஆரம்பத்தில் இணக்கப்பாடு காணப்பட்டிருந்தாலும் பின்னர் அது குழம்பியது. ரெலோ அமைப்பு இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியுடன் இணைந்து போட்டியிட முடியாது என்று அறிவித்தது.
பின்னர் கட்சிகளுக்கு இடையே கொழும்பில் இணக்கப்பாடு எட்டப்பட்டிருந்தது. கொழும்பில் எட்டப்பட்ட இணக்கப்பாட்டுக்கு அமைவாக இலங்கைத் தமிழ் அரசுக் கட்சி ஆசனங்களை வழங்கவில்லை என்று பங்காளிக் கட்சிகள் குற்றம் சுமத்தியிருந்தன.
கிளிநொச்சி, மன்னார், அம்பாறை மாவட்டங்களில் புளொட் அமைப்புக்கு எந்தவொரு ஆசனமும் வழங்கப்படவில்லை என்று கூறப்படுகின்றது. ஏனைய மாவட்டங்களிலும் ஒதுக்கப்பட்ட வட்டாரங்களை விடக் குறைவான வட்டாரங்களே அந்த அமைப்புக்கு வழங்கப்பட்டுள்ளது என்று தெரிவிக்கப்படுகின்றது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.