
ஜல்லிக்கட்டு போராட்டக் களமான மெரீனாவில் தொடர்ந்து நான்கு நாட்களாக இரவு பகலாக லாரன்ஸ் இருந்ததால் அவருக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டது இதனைத் தொடர்ந்து அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். ஜுரம் மற்றும் கழுத்து வலி காரனமாக 100 அடி சாலையில் உள்ள பல்லவா மருத்துவமனையில் அவர் சிகிச்சைப் பெற்று வருகிறார்.முன்னதாக போராட்டக் களத்தில் இருந்த அவர், மாணவர்களுக்குத் தேவையான அனைத்து உதவிகளையும் செய்யத் தயார் என அறிவித்தார். கையிலிருந்த ஒரு லட்ச ரூபாயைக் காண்பித்து, "பேங்க்ல இவ்வளவுதான் என்னால இன்னைக்கி பணம் எடுக்க முடுஞ்சுது. நான் உங்க கூடவேதான் இருப்பேன். என்ன வேன்னாலும் கேளுங்க உங்க அண்ணன் என்கிற முறையில கூச்சப்படாம கேளுங்க நான் செய்றேன். உங்களுக்குக்காக நான் தினமும் பேங்க் படி ஏற தயாராக இருக்கிறேன். நீங்க எனக்கு குடுத்த வாழ்க்கை தான் இந்த ஆடம்பரம். இதெல்லாம் உங்க காசுதான். நீங்க என்னை வாழ்த்தி அன்பளிப்பாக குடுத்த காசு," என்றார் லாரன்ஸ்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.