
அமெரிக்க நகரான டல்லஸில் ஐந்து காவல் அதிகாரிகள் துப்பாக்கியால் சுட்டுக்கொல்லப்பட்டனர்.ஏழு பேர் காயமடைந்துள்ளனர்.
அமெரிக்காவில் கருப்பின ஆண்கள் காவல்துறை அதிகாரிகளால் தொடர்ச்சியாக கொல்லப்படுவதை எதிர்க்கும் அமைதி ஊர்வலத்தின் முடிவில் இது நடந்தது.
இத்தாக்குதலை நான்கு பேர் ஒருங்கிணைத்ததாக காவல்துறை கருதுகிறது. இரண்டுபேர் துப்பாக்கியால் சுட்டனர். மற்ற இருவர் உயரமான இடங்களில் இருந்து தாக்குதல் தொடுத்தனர்.
இந்த சம்பவத்தில் கைதான சந்தேக நபர் ஒருவர், வெள்ளை இனத்தவரை, குறிப்பாக காவல்துறை அதிகாரிகளை கொல்ல விரும்பியதை தம்மிடம் ஒப்புக்கொண்டதாக காவல்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இந்த துப்பாக்கிச்சூட்டு சம்பவம் கொடூரமானது, திட்டமிடப்பட்டது, அறுவெறுக்கத்தக்கது என்று அதிபர் ஒபாமா தெரிவித்துள்ளார்.
நன்றி:பிபிசி தமிழ்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.