
வேலணை 5ம் வட்டாரம், மண்கும்பான் பகுதியில் கிணற்றில் வீழ்ந்த வாளியை எடுக்க முற்பட்ட இளம் பெண் தவறுதலாக கிணற்றில் வீழ்ந்து உயிரிழந்துள்ளதாக ஊர்காவற்துறை பொலிஸாரை மேற்கோள் காட்டி செய்திகள் தெரிவிக்கின்றன.இன்று நடந்த இச்சம்பவத்தில் சோமசேகரம் கோசலா (வயது 20) என்ற இளம் பெண்ணே நீரில் மூழ்கி உயிரிழந்தார். சம்பவம் தொடர்பில் ஊர்காவற்துறை பொலிஸாருக்கு தகவல் வழங்கப்பட்டதை அடுத்து உயிரிழந்தவரின் சடலம் கிணற்றில் இருந்து மீட்கப்பட்டது.மரண விசாரணைகளை தீவகத்துக்கு பொறுப்பான திடீர் மரண விசாரணை அதிகாரி எஸ்.தியாகராஜா மேற்கொண்டார். உடற்கூற்று பரிசோதனையின் பின்னர் சடலம் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது என மேலும் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.