
காலை 8.00 மணியளவில் சிறீலங்கா கடற்படையினரின் கெப் வாகனம் மோதி, வேலணை மேற்கு நடராஜா வித்தியாலயத்தில் தரம் 10 இல் கல்வி கற்கும் நாரந்தனையை சேர்ந்த உதயகுமார் உசாந்தினி என்ற மாணவி உயிரிழந்துள்ளார். இன்று காலை பாடசாலைக்கு வீதியால் நடந்து சென்று கொண்டிருந்த வேளை, வீதியை கடக்க முற்பட்ட மாணவி மீது கடற்படையினரின் வாகனம் மோதியதில் மாணவி படுகாயமடைந்துள்ளார்.
படுகாயமடைந்த மாணவியை யாழ். போதனா வைத்தியசாலைக்கு அம்புலன்ஸ் வண்டியில் எடுத்து வரும் போது மாணவி உயிரிழந்துள்ளார். உயிரிழந்த மாணவியின் சடலம் தற்போது யாழ். போதனா வைத்தியசாலையில் பிரேத பரிசோதனைக்காக வைக்கப்பட்டுள்ளது என தெரிவிக்கப்படுகிறது.