இலங்கையின் இறுதி யுத்தத்தில் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் தலைவர் பிரபாகரன் இராணுவத்தினரிடம் சரணடையவில்லை. கைத்துப்பாக்கியால் தன்னைத் தானே சுட்டு தற்கொலை செய்து கொண்டார் என முன்னாள் அமைச்சர் விநாயமூர்த்தி முரளிதரன் (கருணா) தெரிவித்துள்ளார். அத்துடன் அவரது மனைவி, மகள் ஆகியோர் ராணுவ ஷெல்வீச்சில் உயிரிழந்தனர் எனவும் தெரிவித்துள்ளார். தமிழக ஊடகமான 'புதிய தலைமுறை' தொலைக்காட்சிக்கு வழங்கி செவ்வியிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். எனக்கும் தலைவர் பிரபாகரனுக்கும் இடையில் சில முரண்பாடுகள் காணப்பட்டன என்பது உண்மையே. நான் என்றும் மதிக்கும் ஒரு தலைவர் பிரபாகரன். அவரது தியாகத்தையும், ஒழுக்கத்தையும் நாம் மதிக்க வேண்டும். போராட்டத்தில் மரணித்தவர்களின் தியாகத்திற்கு நாம் மரியாதை அளிக்க வேண்டும். - என்றார். புதிய தலைமுறை தொலைக்காட்சியின் 'அக்னிப்பரீட்சை' நிகழ்ச்சிக்கு கருணா அளித்த செவ்வி காணொளியாக இங்கே.
நான் என்ற ஆணவம் அதர்மமாக விஸ்வரூபமெடுத்தாலும்-ஒருநாள் தர்மத்தின் காலடியில் விழும்.
30 ஆகஸ்ட் 2015
28 ஆகஸ்ட் 2015
உள்ளக விசாரணை! தர்மசங்கடத்தில் கூட்டமைப்பு ஆதவாளர்கள்!
தமிழ் தேசியக்கூட்டமைப்பு தலைமை உள்ளக விசாரணைக்கு சாதகமான சமிக்ஞை காட்டியுள்ள நிலையினில் அதன் ஆதவாளர்கள் பலரும் மக்களிடத்தே கடுமையான எதிர்விளைவுகளை எதிர்நோக்க தொடங்கியுள்ளனர்.
குறிப்பாக ஆதரவாளர்களிற்கு பதிலளிப்பதற்காக தெரிவு செய்யப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களது தொலைபேசிகள் தயாராக இல்லையெனவும் கூறப்படுகின்றது.இதனால் பல ஆதவாளர்களும் முடக்க நிலையினை அடையத்தொடங்கியுள்ளனர்.நிஸா பிஸ்வாலுடனான சந்திப்பின் பின்னர் சுமந்திரன் ஊடககங்களிற்கு தெரிவித்துள்ள கருத்தினில் சர்வதேச பொறிமுறைகளின் கீழ் உள்ளக விசாரணையினை கூட்டமைப்பு ஏற்றுக்கொள்வதாக தெரிவித்துள்ளார்.இது தமிழ் மக்களிடையே கடுமையான சீற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.தமிழ் மக்களது இத்தகைய எதிர்ப்பு நிலைப்பாடு தேர்தல் வெற்றிக்காக பாடுபட்ட ஆதவாளர்களை தர்மசங்கடத்திற்குள்ளாக்கியுள்ளது.இதற்கு பதிலளிக்க முடியாது பலரும் தற்போது முடங்கிப்போயுள்ளனர்.குறிப்பாக சமூக வலைத்தளங்களினில் குரல் எழுப்பிய பலரும் தற்போது சுருண்டு போயுள்ளனரென அவதானிப்பாளர்கள் தெரிவிக்கின்றனர்.தொடர்ந்து வரப்போகும் ஜ.நா விசாரணை அறிக்கை வெளியீடு மற்றும் உள்ளக விசாரணை காலங்கள் கடுமையான எதிர்வினைகளினை கூட்டமைப்பு ஆதரவாளர்கள் மற்றும் செயற்பாட்டாளர்களிற்கு கடுமையான தர்மசங்கடங்களை தரலாமென நம்பப்படுகின்றது.
16 ஆகஸ்ட் 2015
மாவையும் சிறீகாந்தாவும் சேர்ந்து திட்டமிட்ட குண்டுத்தாக்குதல்!
15 ஆகஸ்ட் 2015
சுமந்திரனுக்கு மூன்றடுக்கு பாதுகாப்பு!

14 ஆகஸ்ட் 2015
தேவியனை அரசபடைகளுக்கு காட்டிக் கொடுக்க சிறீதரன் 4 கோடி ரூபா பெற்றார்!
![]() |
தேவியன் |
இவ்வாறு இணையமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.
13 ஆகஸ்ட் 2015
தோல்வி பயத்தால் முன்னணியினர் மீது கூட்டமைப்பு வன்முறைத்தாக்குதல்!
![]() |
தமிழ்த்தேசிய மக்கள் முன்னணி |
11 ஆகஸ்ட் 2015
கொள்கையின் சின்னமாக உந்து ஊர்தி!
![]() |
புளியங்கூடல் |
07 ஆகஸ்ட் 2015
மன்னார் ஆயரின் சிகிச்சைக்கு நிதி உதவி கோரப்படுகிறது!

06 ஆகஸ்ட் 2015
சுமந்திரனின் விதண்டாவாதம்!(காணொலி இணைப்பு)
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் யாழ் மாவட்ட வேட்பாளர் சுமந்திரன் அவர்கள் இன்று மதியம் யாழ் ஊடக அமையத்தில் ஊடகவியலாளர் சந்திப்பு ஒன்றினை நடாத்தினார். அதில் முக்கியமான தரவு ஒன்றினை பிழையாகச் சொன்னது மட்டுமல்லாது, மூத்த ஊடகவியலாளர் ஒருவர் அதனைச் சுட்டிக் காட்டிய போது அவரது கருத்தை பரிசீலிக்காமல் தான் சொன்னது தான் சரி என்கிற வகையில் நடந்து கொண்டுள்ளார்.
உண்மையில் 1982 ஆம் ஆண்டு நடந்த ஜனாதிபதித் தேர்தலில் யாழ் மாவட்டத்தில் அமரர் குமார் பொன்னம்பலம் அவர்கள் தான் அதிக வாக்குகளைப் (87,263) பெற்றார். அதே நேரம் கொப்பேக்கடுவ அவர்கள் (77,300) வாக்குகளைப் பெற்று யாழில் இரண்டாவதாக வந்தார்.
ஆனால், சுமந்திரனோ யாழில் கொப்பேக்கடுவா தான் முதலாவதாக வந்தார். குமார் பொன்னம்பலம் இரண்டாவதாக வந்ததாக திரும்பத் திரும்பக் கூறினார்.
குறித்த தேர்தலில் தமிழ்த் தேசியத்தை முன்னிறுத்தி நின்றுதான் குமார் பொன்னம்பலம் அதிக வாக்குகளைப் பெற்று இருந்தமை குறிப்பிடத்தக்கது.
03 ஆகஸ்ட் 2015
கொள்கை மாறாதவர் கஜேந்திரகுமார் என்கிறார் தினேஷ்!

இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)