
இந்தியப் பிரதமராகப் பதவியேற்றிருக்கும் நரேந்திரமோடிக்கு வாழ்த்துத் தெரிவித்து, இந்து சமயப் பேரவை மற்றும் இலங்கை இந்திய இந்து மக்கள் நட்புறவுக் கழகம் என்பன இணைந்து சிறப்பு பூசையை இன்று ஞாயிற்றுக்கிழமை நடத்தின. முன்னதாக நல்லூர் ஆலய முன்றலில் இருந்து இந்து சமயப் பேரவையின் வளாகம் வரை பேரணி நடத்தப்பட்டது. இலங்கை மக்களுக்கு நல் அமைதி வேண்டியும் , இலங்கை இந்திய நாடுகளிடையே பரஸ்பர உறவை மேம்படுத்த வேண்டியும் இந்த சிறப்பு பூஜை வழிபாடுகள் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன.
நன்றி:மலரும்.கொம்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.