
உலகத் தமிழர்களுக்கு அடையாளம் தந்த தமிழீழத் தேசியத் தலைவர் மேதகு வே.பிரபாகரனது 59வது பிறந்த தினம், சிறீலங்கா ஆக்கிரமிப்பு இராணுவத்தின் பல கெடுபிடி முற்றுகைகளை தாண்டி நேற்று அவரது சொந்த மண்ணான வடமராட்சியினில் மகிழ்வுடன் கொண்டாடப்பட்டது. இரவு வேளை எவரும் எதிர்பாராத வண்ணமாக வெடிகள் வீதிகளினில் வெடிக்க வைக்கப்பட்டுள்ளன. எவரும் எதிர்பார்த்திராத இரவு வேளையினில் 7 மணி முதல் பரவலாக வெடிகளை வெடிக்க வைத்தும் சிற்றுண்டிகள் வழங்கியும் கொண்டாட்டம் முன்னெடுக்கப்பட்டிருந்தது.
யாழ்ப்பாணத்திலுள்ள வெதுப்பகங்கள் தோறும் படையினர் காவலிருக்க நேற்றைய கொண்டாட்டம் நடந்துள்ளமை படைத்தரப்பினை சீற்றமடைய வைத்துள்ளது. எனினும் பின்னர் வெடிகள் கொழுத்தப்பட்ட இடங்களெங்கும் நள்ளிரவு தாண்டியும் படையினர் குவிக்கப்பட்டிருந்தனர். இதேவேளை, தம் மீது தாக்குதல் இடம்பெறலாம் என்ற அச்சத்தில் படையினர் பெரிய அணிகளாகவே தரொருவரது வீடு இனந்தெரியாத கும்பலொன்றினால் தாக்கி சேதமாக்கப்பட்டுள்ளது.இவ்விரு தாக்குதல் சம்பவத்தையும் கண்டித்து வல்வெட்டிற்போது செயற்படுவதாக தெரியவருகிறது.
இதனிடையே வல்வெட்டித்துறை நகரசபை பிரதி தவிசாளர் சதீஸின் வீடு தாக்கப்பட்டதன் எதிரொலியாக அதே நகரசபையினது ஈபிடிபி ஒட்டுக்குழு அங்கத்தவத்துறை நகரசபை இன்று கண்டன தீர்மானமொன்றை நிறைவேற்றியுள்ளது.
இதேவேளை, தீருவில் நினைவுத் தூபி இருந்த பகுதியை சிங்கள இராணுவ மயமாக்கும் நடவடிக்கையை எதிர்த்து நடவடிக்கை எடுத்த திரு. அனந்தராஜ் அவர்களை தமிழரசுக்கட்சி ஈபிடிபி ஒட்டுக்குழுவோடு இணைந்து வல்வெட்டித் துறை நகரசபை பொறுப்பிலிருந்து நீக்கும் தீர்மானத்தை கொண்டுவந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.