நான் என்ற ஆணவம் அதர்மமாக விஸ்வரூபமெடுத்தாலும்-ஒருநாள் தர்மத்தின் காலடியில் விழும்.
30 நவம்பர் 2013
பொலிசார் தாக்கவில்லையென்பது பொய்-வணபிதா
29 நவம்பர் 2013
கணக்கெடுப்பில் தலைவரின் குடும்பம் சேர்க்கப்படாதாம்!

28 நவம்பர் 2013
யாழில் படை முகாமிலும் மாவீரர் சுடர் ஏற்றப்பட்டது!

சிறீதரனின் கருத்து கூட்டமைப்பின் கருத்தல்ல என சம்பந்தன் தெரிவிப்பு!

27 நவம்பர் 2013
நெடுந்தீவு பிரதேச சபை தலைவர் சுட்டுக் கொலை!
நெடுந்தீவு பிரதேச சபை தலைவரும் ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் உறுப்பினருமான டானியல் றெக்ஷிசன் சுட்டுக் கொலை செய்யப்பட்டுள்ளார் என தெரிவிக்கப்படுகின்றது. இவரின் சடலத்தை பிரதே பரிசோதனைக்கு உட்படுத்தியபோது சுட்டுக் கொலை செய்யப்பட்டுள்ளார் என கண்டறியப்பட்டுள்ளது. இந்த கொலைக்கு ஒன்பது மில்லி மீற்றர் ரக கைத் துப்பாக்கி பயன்படுத்தப்பட்டதாகவும் அதன் சன்னம் அவரின் மூளையிலிருந்து மீட்கப்பட்டுள்ளது. 47 வயதான நெடுந்தீவு பிரதேச சபை தலைவர் டானியல் றெக்ஷிசன் நேற்று செவ்வாய்க்கிழமை அவரது வீட்டிலிருந்து சடலமாக மீட்கப்பட்டுள்ளார். குடும்பத் தகராறு காரணமாகவே இவர் தற்கொலை செய்து கொண்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டது.
எனினும் இவர் கழுத்து பகுதியில் சுட்டுக் கொலை செய்யப்பட்டுள்ளதாக பிரேத பரிசேதனையின் மூலம் தெரியவந்துள்ளது. இது தொடர்பான மேலதிக விசாரணைகளை நெடுந்தீவு பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
வல்வெட்டியில் தடைகளை மீறி நடந்த பிறந்தநாள் கொண்டாட்டம்!

26 நவம்பர் 2013
மகிந்தவின் படத்தை கிழித்ததாக கூறி இளைஞர்கள் கைது!
மகிந்த ராஜபக்சவின் பதாகைகளை கிழித்ததாக குற்றம் சாட்டப்பட்டு 4 இளைஞர்கள் தெல்லிப்பளைப் பொலிஸ் நிலையத்தில் இராணுவத்தினரால் ஒப்படைக்கப்பட்டுள்ளனர். அதன்படி இராணுவத்தினரால் தாக்குதலுக்கு உள்ளான நிலையில் இந்த நான்கு இளைஞர்களும் தெல்லிப்பளை பொலிசாரிடம் இராணுவத்தினரினால் நேற்று இரவு 8.30 மணியளவில் ஒப்படைக்கப்பட்டுள்ளார்கள்.
தெல்லிப்பளை கிழக்கு கட்டுவன்புலம் பகுதியில் உள்ள நாமகள் சனசமூக நிலையத்தடியைச் சேர்ந்த நான்கு இளைஞர்களே இவ்வாறு இராணுவத்தினரால் தாக்குதலுக்கு உள்ளானவர்களாவர்.
சம்பவம் குறித்து தெரியவருவதாவது,
இவர்கள் சனசமூக நிலைத்திற்கு அண்மையாக இருந்து கதைத்தக்கொண்டிருந்த வேளையில் குறித்த இடத்திற்கு இராணுவத்தினர் நால்வர் வந்தனர். அதனையடுத்து அதில் இருந்த இளைஞர்களை தாக்கியதுடன் அவர்களை பிடித்து வைத்துக் கொண்டு இராணுவத்தினரின் மேலதிகாரிக்கு தொலைபேசியில் தொடர்பு கொண்டதாகவும் பொது மக்கள் தெரிவிக்கின்றார்கள்.
இதனை தொடர்ந்து சுமார் இருபத்தைந்தக்கும் மேற்பட்ட இராணுவத்தினர் அந்தப் பகுதியில் நின்றிருந்த ஏனையவர்களையும் தாக்கியதுடன் பெண்களையும் தகாத வார்த்தை பிரயோகங்களால் திட்டியதாகவும் அந்தப் பகுதியில் உள்ள மக்கள் தெரிவிக்கின்றார்கள். எனினும் இவ்வாறு நாகேஸ்வர ஸ்ரீ யர்சன் 22 வயது, ரவீந்திரன் கஜீபன் 21 வயது, முருகையா அசோக்குமார் 35 வயது மற்றும் அல்பிரட் பிரதீபன் 30 வயது ஆகியவர்களே கைது செய்யப்பட்டவர்களாவார்கள். மேலும் மேலதிக விசாரணைகளை தெல்லிப்பளை பொலிசார் மேற்கொண்டு வருகின்றனராம்.
25 நவம்பர் 2013
கஜேந்திரகுமார் எதிர் பீரிஸ். வென்றது யார்?

நன்றி:பரிஸ் தமிழ்
சிங்களவர்களும் மாவீரர் தினத்தை அனுஷ்டிக்கவேண்டும்-ஜே.வி.பி!

இனவாதத்தை திணிக்கக்கூடாது. எம்மைப் பொறுத்தவரை தமிழர்களுக்கு மட்டுமன்றி, சிங்களவர்களுக்கும் மாவீரர் தினத்தை அனுஷ்டிப்பதற்கு முழு உரிமையுண்டு' என அவர் கூறியுள்ளார்.
24 நவம்பர் 2013
தமிழர் இறையாண்மைக்கான அமைப்பு விடுத்துள்ள அறிக்கை!
அன்பான தமிழ் மக்களிற்கு,
தேச விடுதலைக்காக தமது இன்னுயிர்களை புனிதமான எங்கள் தேசிய மாவீரர்களை ஒட்டுமொத்த தமிழினமும் ஒருசேர நின்று,மெய்யுருகி வணங்கும் மாவீரர் நாளை எதிர்கொண்டு நிற்கும் இக்காலத்தே இந்நிகழ்வு தொடர்பாக எமது நிலைப்பாட்டை மக்களுடன் பகிர்ந்துகொள்ள விளைகின்றோம்.
தமிழீழ விடுதலையை நேசிக்கும் அனைத்து தமிழர்களினதும் ஒற்றுமையை கருத்திற்கொண்டு புலம்பெயர் நாடுகளில் தமிழர் மத்தியில் ஏற்பட்டுள்ள குழப்பங்களிற்கும்,முரண்பாடுகளிற்கும் தீர்வுகாணும் முகமாக நடத்தப்படும் ஒற்றுமை முயற்சிக்கு ஆதரவு வழங்கும் முகமாக தமிழர் இறையாண்மைக்கான அமைப்பினால் நடாத்தப்பட்டு வந்த மாவீரர் நாள் நிகழ்வு தவிர்க்கப்பட்டுள்ளது என்பதை தாழ்மையுடன் தெரிவித்துக்கொள்கிறோம்.இந்நாளை சடங்காகவும்,சம்பிரதாயமாகவும்,ஆடம்பரமாகவும் கொள்ளாமல் காலத்தை கருத்திற்கொண்டு உணர்வெழுச்சியுடன் எம்முன்னால் இருக்கின்ற மாபெரும் கடமையை கூடிச்சுமக்கின்ற பொறுப்பை உணர்வோம்.மாவீரர்களின் நினைவுகள் அற்பத்தனங்களை அகற்றி ஆன்மாவை சுத்தப்படுத்தட்டும்.நான் பெரிது நீ பெரிது என்ற சிறுமதி தொலைத்து நாடும்,இனமும் பெரிதென்ற எண்ணத்தை விதைக்கட்டும்.மாவீரர்கள் எல்லோருக்கும் உரித்துடையவர்கள்.அவர்கள் விட்டுச்சென்ற பணியும் எல்லோருக்கும் உரித்தான தேசியக்கடமை.அவர்தம் புனிதம் கெடாமல் தூய்மையான அகத்துடன் நினைவேந்துவோம்.
தமிழர் இறையாண்மைக்கான அமைப்பு
ஜெர்மனி
தடைகளை உடைத்தவர்களே மாவீரர்கள்!

23 நவம்பர் 2013
அனந்தி மனித உரிமை ஆணைக்குழுவில் முறைப்பாடு!

22 நவம்பர் 2013
தமிழீழத்திற்கான பொது வாக்கெடுப்பு!

மாவீரர் தினத்தால் கதிகலங்கும் அரசபடைகள்!
21 நவம்பர் 2013
பிரிட்டிஷ் பிரதமரை கோமாளி என்கிறது அரச ஊடகம்!

20 நவம்பர் 2013
யாழில் படையினனை மணம் புரிந்த தமிழ் யுவதி!
யாழ்ப்பாணத்தில் சிங்களப் படையினன் ஒருவருக்கும் தமிழ் யுவதியொருவருக்கும் இந்து சமய முறைப்படி இன்று புதன்கிழமை திருமணம் நடைபெற்றுள்ளது. அனுராதபுரம் தம்புத்தேகம பகுதியைச் சேர்ந்த ரஞ்சித் அமரசிங்க என்ற சிங்களப் படைத்துறையின் இரண்டாவது சிங்க படையணியில் கடமையாற்றும் படையினனும்
மானிப்பாய் சுதுமலையைச் சேர்ந்த ரகு தர்மினி என்ற யுவதியுமே திருமண பந்தத்தில் இணைந்துகொண்டுள்ளனர் என தெரியவருகின்றது.
மானிப்பாய் சுதுமலையைச் சேர்ந்த ரகு தர்மினி என்ற யுவதியுமே திருமண பந்தத்தில் இணைந்துகொண்டுள்ளனர் என தெரியவருகின்றது.
உள்ளக விசாரணையில் எமக்குத் திருப்தியில்லை-கமரூன்

19 நவம்பர் 2013
சாட்டிக்கடலில் குளித்துக்கொண்டிருந்த பெண்களுடன் சேஷ்டை!
சாட்டிக் கடலில் தண்ணீருக்குக் கீழால் நீந்திச் சென்று பெண்களுடன்
சேஷ்டை புரிந்தனர் என்ற குற்றச்சாட்டில் பொலிஸாரால் கைது செய்யப்பட்ட 3 பேருக்கு ஊர்காவற்றுறை நீதிமன்றம் தலா 2 ஆயிரத்தி 500 ரூபா அபராதம் விதித்ததுடன் அவர்களை எச்சரித்து விடுதலை செய்தது .
இந்த விடயம் குறித்துத் தெரியவந்துள்ளதாவது :
சனிக்கிழமை சாட்டிக் கடலில் பெண்கள் குளித்துக்கொண்டிருந்த சமயம் தண்ணீருக்குக் கீழால் நீந்திச்சென்ற 3 இளைஞர்கள் அவர்களுடன் சேஷ்டை புரிந்துள்ளனர் .
இவ்விடயம் தொடர்பாக சந்தேகத்தின் பேரில் ஊர்காவற்றுறைப் பொலிஸார் 3 பேரைக் கைதுசெய்து விளக்கமறியலில் வைத்திருந்தினர் .
இது தொடர்பான வழக்கு விசாரணை ஊர்காவற்றுறை நீதிமன்றில் ஊர்காவற்றுறை மாவட்ட நீதிமன்ற நீதிபதி முன்னிலையில் இடம்பெற்றது .
விசாரணைகளை மேற்கொண்ட நீதிபதி 3 பேருக்கும் தலா 2 ஆயிரத்தி 500 ரூபா வீதம் அபராதம் வழங்கியதுடன் அவர்களை எச்சரித்து விடுதலைசெய்தார்.
ஒலிபரப்பாளர் கௌசி ரவிசங்கர் காலமானார்!
தமிழ்த் தேசிய ஊடக உலகில் பிரசித்தி பெற்ற ஒலிபரப்பாளராக விளங்கிய திருமதி கௌசி ரவிசங்கர் அவர்கள் காலமானார்.
2009 மே 18இற்கு முன்னர் தமிழ்த் தேசிய செயற்பாட்டாளர்களின் நிர்வாகத்தின் கீழ் அனைத்துலக ஒலிபரப்புக் கூட்டுத்தாபனம் - தமிழ் (ஐ.பி.சி) இயங்கிய காலத்தில் அதன் ஒலிரபரப்பாளராகவும், செய்தி வாசிப்பாளராகவும், நிகழ்ச்சித் தொகுப்பாளராகவும் கௌசி ரவிசங்கர் கடமையாற்றினார்.
அக்காலப் பகுதியில் தமிழ்த் தொலைக்காட்சி இணையத்தில் (ரி.ரி.என்) கலை நிகழ்ச்சிகள் சிலவற்றையும் கௌசி ரவிசங்கர் தொகுத்து வழங்கினார்.
2002ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் முகமாலையில் யாழ் - கண்டி நெடுஞ்சாலை திறக்கப்பட்ட பொழுது அங்கிருந்தவாறு ரி.ரி.என் தொலைக்காட்சிக்கும், ஐ.பி.சி வானொலிக்கும் நிகழ்வுகளை அவர் தொகுத்து வழங்கினார்.
அதன் பின்னர் கிளிநொச்சியில் நடைபெற்ற தமிழீழத் தேசியத் தலைவரின் செய்தியாளர் மாநாட்டில் இரு ஊடகங்களின் சார்பாகவும் கௌசி ரவிசங்கர் கலந்து கொண்டார்.
2010ஆம் ஆண்டு பிரித்தானியாவில் அனைத்துலக உயிரோடை – தமிழ் (ஐ.எல்.சி) வானொலி ஆரம்பிக்கப்பட்ட பொழுது மூன்று மாதங்களுக்கு அதன் செய்தி வாசிப்பாளராக கௌசி ரவிசங்கர் கடமையாற்றினார்.
தவிர 2003ஆம் ஆண்டுக்கு முற்பட்ட காலப்பகுதியில் பிரித்தானியாவில் நடைபெற்ற மாவீரர் நாள் நிகழ்வுகள் உட்பட பல்வேறு எழுச்சி நிகழ்வுகளிலும், கலை நிகழ்வுகளிலும் நிகழ்ச்சிகளைத் தொகுத்து வழங்கும் ஒருவராகவும் கௌசி ரவிசங்கர் திகழ்ந்தார்.
அண்மைக் காலமாக உடல்நலக் குறைவுக்கு ஆளாகியிருந்த கௌசி ரவிசங்கர் 18.11.2013 திங்கட்கிழமை மருத்துவமனையில் காலமானார்.
மிலிபான்டின் கேள்விகளும் கமரூனின் பதில்களும்!

18 நவம்பர் 2013
நிந்தவூரில் அதிரடிப்படையுடன் மக்கள் முறுகல்!
நிந்தவூர் கடற்கரை பகுதியில் பொதுமக்களுக்கும் விசேட அதிரடிப்படையினருக்கும் இடையில் முறுகல் நிலையொன்று ஏற்பட்டதையடுத்து அங்கு பதற்றம் ஏற்பட்டுள்ளது. நிந்தவூர் பகுதியில் இரவு வேளைகளில் தொடர்ச்சியாக இடம்பெறுகின்ற கொள்ளை சம்பவங்களை கட்டுப்படுத்தல் மற்றும் கொள்ளையர்களை கண்டுபிடித்தல் தொடர்பில் விசேட விழிப்பு குழுவொன்று அமைக்கப்பட்டு ஆராயப்பட்டது.
இதன் பிரகாரம் இரவு 9 மணிக்கு பின்னர் வீடுகளிலிருந்து வெளியே செல்கின்றவர்கள் தங்களுடைய ஆள் அடையாளத்தை உறுதிப்படுத்தும் ஆவணங்களை எடுத்துசெல்லவேண்டும் என்று அந்த குழு தீர்மானித்தது. அந்த தீர்மானத்தை பள்ளிவாயில்களின் ஊடாக பொதுமக்களுக்கு அறிவித்தது.
இந்நிலையில், விசேட அதிரடிப்படையினர் அணியும் ஆடைகளை ஒத்த ஆடைகளை அணிந்து நிந்தவூர் கடற்கரை பகுதிக்கு வந்த ஐந்து பேர் அடங்கிய குழுவினர் கடற்கரையில் வைத்து ஆடைகளை மாற்றிக்கொண்டு நேற்றிரவு ஊருக்குள் வருவதை கண்ட பொதுமக்கள் அவர்களை சுற்றிவளைத்து ஆள் அடையாளத்தை உறுதிப்படுத்துமாறு கேட்டுள்ளனர்.
ஆள் அடையாளத்தை உறுதிப்படுத்த தவறிய அவர்கள், தங்களை சுற்றிவளைத்த மக்களை தாக்கிவிட்டு தப்பியோடுவதற்கு முயன்றுள்ளனர். இதனையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த விசேட அதிரடிப்படையினர் பொதுமக்களை தாக்கிவிட்டு அவர்களை மீட்டு சென்றுள்ளனர்.
இதனை கண்டித்து நிந்தவூர் பகுதியில் இன்று பணிப்புறக்கணிப்பு போராட்டம் நடத்தப்பட்டதுடன் நிந்தவூர் ஊடான போக்குவரத்துக்களும் தடைப்பட்டிருந்தது.
17 நவம்பர் 2013
ஊர்காவற்றுறை தம்பாட்டி மக்கள் அச்சுறுத்தப்பட்டுள்ளனர்!

வவுனியாவில் மாபெரும் தீப்பந்த போராட்டம்!

16 நவம்பர் 2013
சுயாதீன விசாரணை இன்றேல் சர்வதேச விசாரணை-கமரூன்(காணொளி)

15 நவம்பர் 2013
யாழ்,போராட்டக் களத்தில் சனல்4!
தொடரும் உண்ணாநிலைப் போராட்டத்தில் மாகாணசபை உறுப்பினர்கள்!
வலி வடக்கில் இருந்து இடம் பெயர்ந்த மக்கள் இன்று தமது சொந்த இடங்களுக்கு செல்ல
அனுமதிக்கக் கோரி நான்காவது நாளாகவும் உண்ணாவிரப் போராட்டதை மாவிட்டபுரம் கந்தசுவாமி கோவில் வாசலில் மேற்க் கொண்டார்கள்.
யாழ் மாவட்டத்தின் பல பகுதிகளிலும் இடம் பெயர்ந்து தமது சொந்த இடங்களுக்கு செல்ல முடியாது உறவினர் நண்பர்கள் வீடுகளில் தங்கி வாழும் மக்கள் இந்தப் போராட்டத்தில் கலந்து கொண்டுள்ளார்கள்.
உண்ணாவிரத்தில் ஈடுபட்ட மக்களுடன் தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களான மாவை சேனாதிராசா,இரா சம்பந்தன்,சுரேஸ் பிறேமச்சந்திரன்,சிவசக்தி ஆனந்தன்,ஈ.சரவணபவான்,செல்வம் அடைக்கலநாதன் மற்றும் வட மாகாண சபை உறுப்பினர்களான தர்மலிங்கம் சித்தார்த்தன் எம் .கே.சிவாஜிலிங்கம் பா.கஜதீபன் க.சாவேஸ்வரன்,க.பரம்சோதி,கனகரெட்னம் விந்தன்,கே.சயந்தன் யாழ் மாநகர சபை உறுப்பினர்கள் மற்றும் பிரதேச சபைகளின் தலைவர்கள் உறுப்பினர்கள் எனப் பலரும் கலந்து கொண்டார்கள்.
இத்துடன் யாழ்ப்பாணம் பல் கலைக்கழக ஆசிரியர்கள் சங்க உறுப்பினர்களும் கலந்து கொண்டார்கள்.
வழமை போன்று இன்றும் உண்ணாவிரதம் இடம் பெற்ற சுற்றாடலில் பொலிசாரும் புலனாய்வாளர்களும் அதிக அளவில் காணப்பட்டனர்.
14 நவம்பர் 2013
போராட்டத்தை குழப்ப மக்கள் மீது தொடர் தாக்குதல்!
போராட்டத்தில் கலந்துகொள்ளும் மக்கள் மீது இனந்தெரியாதவர்கள் தொடர்ந்தும் தாக்குதல்களை மேற்கொண்டு வருகின்றனர். யாழ்ப்பாணம் வலி,வடக்கு மக்கள் தமது நிலங்களை தங்களிடம் வழங்குமாறு கோரி மாவிட்டபுரம் கந்தன் ஆலயத்திற்கு முன்னால் தொடர் உணவு தவிர்ப்புப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அதன்படி வலி.வடக்கில் இருந்து இடம்பெயர்ந்து முகாம்களிலும் நண்பர்கள் வீடுகளிலும் வாடகை வீடுகளிலும் தங்கி இருக்கும் மக்கள் குறித்த ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொள்ள வரும் வாகனங்களை நிறுத்தும் நோக்குடன் இனந்தெரியாதவர்களினால் பிரத்தியேகமாக ஆணிகளால் செய்யப்பட்ட இரும்புக் கட்டைகளை வீதிகளில் வீசுவதுடன் மக்கள் மீது வீசியும் தாக்குதல் நடாத்தி வருவதாக மக்கள் தெரிவித்துள்ளனர். மேலும் நேற்று இரவு மக்கள் வருகை தரஇருந்த பஸ்கள் மீது கல்லெறி தாக்குதல் நடாத்தியதுடன் சாரதிகள் மற்றும் மக்களையும் இனந்தெரியாதவர்கள் அச்சுறுத்தியுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. தொடர்ந்தும் போராட்டத்தில்
கலந்து கொள்ளும் மக்களை ஏற்றிச் செல்ல அனுமதிக்க கூடாது என இன்றைய தினம் வடமராட்சி தனியார் சிற்றூர்திகள் சங்கத்திற்கு அறிவுறுத்தியுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. எனினும் மக்கள் தமது பணத்தை கொடுத்து ஹயெஎஸ் என்பனவற்றிலேயே வந்துகொண்டு இருக்கின்றனர். இதேவேளை நேற்யை தினமும் இந்த தாக்குதல் நடாத்தப்பட்டு இருந்தமை குறிப்பிடத்தக்கது:
கலந்து கொள்ளும் மக்களை ஏற்றிச் செல்ல அனுமதிக்க கூடாது என இன்றைய தினம் வடமராட்சி தனியார் சிற்றூர்திகள் சங்கத்திற்கு அறிவுறுத்தியுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. எனினும் மக்கள் தமது பணத்தை கொடுத்து ஹயெஎஸ் என்பனவற்றிலேயே வந்துகொண்டு இருக்கின்றனர். இதேவேளை நேற்யை தினமும் இந்த தாக்குதல் நடாத்தப்பட்டு இருந்தமை குறிப்பிடத்தக்கது:
தனியார் பஸ்கள் மீது கல்வீச்சு!
13 நவம்பர் 2013
கனேடிய தமிழர் ஐ,நாவில் இலங்கைக்கு எதிராக குற்றப்பத்திரிகை!
இலங்கையில் சுமார் மூன்று வருடங்கள் தான் சித்தரவதைக்கு உட்படுத்தப்பட்டதாகக் கூறி 43 வயதுடைய ரோய் சமாதானம் என்ற கனேடிய தமிழர் ஒருவர் ஐநா மனித உரிமை குழுவில் முறைப்பாடு செய்துள்ளார்.
இலங்கையில் பொலிஸாரால் கைது செய்யப்பட்ட தான், பிளாஸ்டிக் குழாய் மற்றும் ரி-56 ரக துப்பாக்கி போன்றவற்றால் தாக்கப்பட்டு சித்திரவதைக்கு உட்படுத்தப்பட்டதாகவும், கொலை அச்சுறுத்தல் விடுக்கப்பட்டதாகவும் கூறப்பட்டுள்ளது.
ஐநா மனித உரிமை குழுவில் தான் செய்த முறைப்பாடு குறித்து டொரொன்டோவில் இன்று (13.11.13) ஊடக சந்திப்பு நடத்தி ரோய் சமாதானம் தெளிவுபடுத்துவார் என தகவல்கள் வெளியாகி உள்ளன.
தனக்கு நடந்தவை என்னவென்று உயிர் அச்சுறுத்தலை எதிர்கொண்ட நபரே கூறுவது சிறந்தது என ரோய் சமாதானத்திற்கு சட்ட உதவி அளித்துவரும் கடனாவின் சர்வதேச நீதி உதவி மையத்தின் சட்ட இயக்குநர் மேட் ஈசென்பிரேன்ட் தெரிவித்துள்ளார்.
இலங்கையில் சர்வதேச தலைவர்கள் பலர் கலந்து கொள்ளும் பொதுநலவாய மாநாடு நடைபெற்றுக் கொண்டிருக்கும் தருணத்தில் ஐநா மனித உரிமை குழுவில் இவ்வாறானதொரு முறைப்பாடு செய்யப்பட்டுள்ளமை குறிப்படத்தக்கது.கனேடிய தமிழர் ஐ,நாவில் இலங்கைக்கு எதிராக குற்றப்பத்திரிகை!
12 நவம்பர் 2013
சனல்4 ஊடகவியலாளர்களை தேநீர் விருந்துக்கு வருமாறு மஹிந்த அழைப்பு!

தொடரூந்து மறியலில் ஈடுபட்ட ம.தி.மு.கவினர் கைது!

11 நவம்பர் 2013
வடக்கில் படைக் காவலரண்கள் உருமறைப்பு!
பொதுநலவாய மாநாட்டிற்காக இலங்கை வந்துள்ள வெளிநாட்டு ஊடகவியலாளர்கள் வடக்கிற்கு வருகை தந்துள்ளனர்.
அவர்களில் சில ஊடகவியலாளர்கள் யாழ்ப்பாணத்திற்கும் விஜயம் மேற்கொண்டுள்ளனர்.
யாழ்ப்பாணம் எக்ஸ்போ பிற் ஹோட்டலில் தங்கியுள்ள இவர்கள் யாழ்ப்பாணத்தில் பல சந்திப்புக்களை இன்று முதல் மேற்கொள்ளவுள்ளனர்.
இதேவேளை யாழ்ப்பாணத்தின் பிரதான வீதிகள் மற்றும் நகரங்களை அண்டிய பகுதிகளிலிருந்தும் கிராமங்களின் சில இடங்களில் இருந்தும் இராணுவத்தினர் நிலைகொண்டிருந்த காவலரண்கள் உருமறைப்புச் செய்யப்பட்டுள்ளதுடன் சில காவலரண்களை தற்காலிகமாக அகற்றியும் உள்ளமை குறிப்பிடத்தக்கது.
10 நவம்பர் 2013
சந்திரசிறியின் உரையை புறக்கணிக்கப்போவதாக அனந்தி தெரிவிப்பு!

09 நவம்பர் 2013
கோமா நிலைக்குச் செல்லும் அபாயத்திலிருந்து பரமேஸ்வரன் காப்பாற்றப்பட்டார்!

யாழ்,பல்கலைக்கு விடுமுறை அறிவிப்பு!

08 நவம்பர் 2013
அழகுராணிப் போட்டிக்கு சிறிலங்கா சொர்க்கபுரியல்ல!

07 நவம்பர் 2013
லண்டனில் உள்ள மகனைப்பார்க்க துடிக்கும் முதியோர் இல்லத்தில் இருக்கும் தாய்!
யாழ்ப்பாணம், கைதடி முதியோர் இல்லத்திலுள்ள தாயொருவர் இலண்டனில் பொறியியலாளராக கடமையாற்றும் தன் மகனை பார்க்க வேண்டுமென்று முதியோர் இல்ல அதிகாரிகள் மற்றும் உறவினர்களிடம் கோரிக்கையொன்றையும் முன்வைத்துள்ளார்.
கைதடி முதியோர் இல்லத்தில் கடந்த பத்து வருடங்களாக வசித்து வரும் வயோதிபத் தாயான பூவேந்திரம் தவபோசனம் (வயது 61) என்பவரே இவ்வாறு கோரிக்கை முன்வைத்துள்ளார். இவர் நெல்லியடி, வதிரியைச் சேர்ந்தவராவார்.
இவர் தொடர்பில் தகவலளித்த கைதடி முதியோர் இல்ல அத்தியட்சகர் த.கிருபாகரன் கூறியதாவது, 'குறித்த பெண் திருமணமான ஒரு மாத காலத்தில் கணவனை இழந்ததாகவும் இவருக்கு ஒரே ஒரு மகன் இருப்பதாகவும் எமக்கு தெரிவிக்கப்பட்டது.
கணவனின் இழப்பு காரணமாக இவர் மனநலம் பாதிக்கப்பட்டதால் கடந்த 10 வருடங்களக்கு முன்னர் கைதடி முதியோர் இல்லத்தில் அவரது உறவினர்களால் அனுமதிக்கப்பட்டார்.
குறித்த பெண்ணின் மகன் உறவினர்களால் வளர்க்கப்பட்டு தற்போது அவர் லண்டனில் பொறியியலாளராக கடமை புரிகின்றார். இந்நிலையில், இவர் ஓரளவு மனநலம் தேறி பழைய நினைவுகளுக்கு திரும்பி தனது மகனின் பெயர் மற்றும் உறவினர்களின் பெயர்களை கூறி வருகின்றார்.
தற்போது அவர் தனது மகனை தேடுவதாகவும் மகன் தன்னை வந்து பார்ப்பாரா? என குறித்த தாய் பாசம் மேலிட்ட நிலையில் ஏங்கி அதற்கான சந்தர்ப்பத்தினை ஏற்படுத்தித் தருமாறும் எம்மிடம் கோருகின்றார்.
இதனால், கைதடி முதியோர் இல்லத்தில் வசிக்கும் தாயைப் பார்ப்பதற்காக அவரது மகன் எங்கு இருந்தாலும் இல்லத்துடன் தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம்' என்று முதியோர் இல்ல அத்தியட்சகர் மேலும் தெரிவித்தார்.
வவுனியாவில் சிசுவை கொன்று புதைத்த தாய்!

06 நவம்பர் 2013
சிங்களச்சிப்பாய்தான் இசைப்பிரியா பிடித்து செல்லப்படும் காணொளியை கொடுத்தார்!
![]() |
இசைப்பிரியா |
குறிப்பிட்டுள்ளார்.
05 நவம்பர் 2013
பொன்காந்தன் விடுதலை!
தமிழ் தேசியக்கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினரான சிவஞானம் சிறிதரனின் செயளாலரான பொன்னம்பலம் லட்சுமிகாந்தன் (பொன்காந்தன்) மற்றும் தமிழ் தேசிய கூட்டமைப்பின் கிளிநொச்சி மாவட்ட அமைப்பாளரான அருணாசலம் வேலமாலிதன் ஆகியவர்கள் குற்றங்கள் நிருபிக்கப்படாத நிலையில் இன்று விடுதலை செய்யப்பட்டுள்ளனர். பொன்.காந்தன் அ.வேலமாலிதன் ஆகியவர்கள் சார்பில் சிரேஸ்ர சட்டத்தரணி கே.வி.தவராசா,கெலும் ஒபயசேகர மற்றும் கே.சயந்தன் ஆகிய சட்டத்தரணிகள் ஆஜராகியிருந்தனர்.
பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்ட இவர்களின் குற்றங்கள் எதுவும் நிரூபிக்கப்படவில்லை என்பதுடன் இவர்கள் உண்மைக்கு புறம்பான வகையில் கைது செய்யப்பட்டமையால் வழக்கிலிருந்து இன்று விடுவிக்கப்பட்டுள்ளனர். விடுதலையின் பின்னணியில் கைது செய்யப்பட்டவர்களிடம் இது வரை குற்ற ஒப்புதல் வாக்கு மூலம் பெறப்பட்டிருக்கவில்லை. இக்கைதுக்கான காரணத்தை பொலிசார் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கவில்லை. அத்துடன் வெடி பொருட்கள் ஆபாச பொருட்களை கைப்பற்றிய முறையில் குழப்பம் ஆகிய காரணங்கள் இவர்களது விடுதலையில் தாக்கம் செலுத்தின. அத்துடன்; உடல், உள ரீதியாக பொன்.காந்தன் பல சித்திரவதைகளுக்கு உட்படுத்தப்பட்டு பாதிப்புக்குள்ளாகியிருந்த நிலையில் இவர் தொடர்பில் சிரேஸ்ரசட்டத்தரணி கே.வி.தவராசா சட்ட வைத்திய அதிகாரியின் அறிக்கையை கேட்டிருந்தார். இந் நிலையில் இவர்கள் இருவர் மீதும் வழக்குகள் ஏதும் தாக்கல் செய்யப்படாது கொழும்பு நீதவான் நீதிமன்ற நீதிபதி நிரோசா பெர்னான்டோ முன்னிலையில் விடுதலை செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
04 நவம்பர் 2013
மாயாவின் இசை நிகழ்வில் ஜூலியன் அசான்ஜே!
இலங்கையை பூர்வீகமாக கொண்ட பிரித்தானியாவின் பொப்பிசைக் கலைஞரான எம்.ஐ.ஏ என்று அழைக்கப்படும் மாயா (மாதங்கி) அருள்பிரகாசம் அமெரிக்காவின் நியூயோர்க் நகரில் நடத்திய நிகழ்ச்சி ஒன்றின் ஆரம்பத்தில் விக்கிலீக்ஸ் இணையதளத்தின் ஸ்தாபகர் ஜூலியன் அசான்ஜே பிரதம பேச்சாளராக திரையில் தோன்றினார். நியூயோர்க் நகரின் டெர்மினல்-5 என்ற இடத்தில் நேற்றிரவு நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் அமெரிக்காவினால் தேடப்பட்டு வரும் அசான்ஜே ஸ்கைப் மூலம் தோன்றி மாயாவுக்கு ஆதரவு வழங்கி உரையாற்றினார். அவர் அங்கு திரையில் தோன்றியது அங்கிருந்தவர்களை ஆச்சரியத்திலும் பிரமிப்பிலும் ஆழ்த்தியதாக தெரிவிக்கப்படுகிறது. இதேவேளை, இலங்கை அரசு தம்மை ஓர் தீவிரவாதியாக முத்திரை குத்த முயற்சிப்பதாக மாயா அருள்பிரகாசம் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
03 நவம்பர் 2013
பரமேஸ்வரன் உண்ணாநிலை போராட்டம்!
சிங்கள தேசத்தில் நடைபெறுவதற்கு ஏற்பாடாகியுள்ள பொதுநலவாய மாநாட்டில் கலந்து கொள்ளும் முடிவை பிரித்தானியா மீளப்பெற வேண்டும் என்று வலியுறுத்தி 04.11.2013 திங்கட்கிழமை முதல் தொடர் பட்டினிப் போராட்டத்தில் சுப்ரமணியம் பரமேஸ்வரன் குதிக்கின்றார்.
இலண்டனில் உள்ள பிரித்தானியப் பிரதமரின் வாசத்தலமான 10 டவுணிங்க் வீதிக்கு முன்பாக திங்கட்கிழமை மாலை 5:30 மணிக்கு தனது உண்ணாநிலைப் போராட்டத்தை பரமேஸ்வரன் ஆரம்பிக்கின்றார்.
பொதுநலவாய மாநாட்டில் பங்கேற்கும் முடிவை பிரித்தானியா மீளப்பெறும் வரை தொடரவுள்ள இவ் உண்ணாநிலைக் கவனயீர்ப்புப் போராட்டத்தில் பல்லாயிரக்கணக்கில் இணைந்து அடையாள உண்ணாநோன்பை மேற்கொள்ளுமாறு பிரித்தானியாவாழ் தமிழீழ உறவுகளுக்கு பரமேஸ்வரன் அறைகூவல் விடுத்துள்ளார்.
வேறு வழியை பார்க்கப்போகும் சம்பந்தன்!
வலி.வடக்கு வீடழிப்பு விவகாரம் ஜனாதிபதியின் கவனத்துக்குக் கொண்டுவரப்பட்டு அதனை நிறுத்துமாறு அவர் உத்தரவிட்ட பின்னரும் அது தொடர்கிறது. இதனால் நாம் வேறு வழியைத் தான் பார்க்க வேண்டும்'' என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலை வரும் நாடாளுமன்ற உறுப்பினருமான இரா. சம்பந்தன் "தெரிவித்தார். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் வலி.வடக்கில் வீடழிப்பை உடன் நிறுத்துமாறு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவிடம் தொலைபேசி மூலம் கோரியிருந்தார். இதற்கமைவாக வீடழிப்பை நிறுத்துமாறு ஜனாதிபதி யாழ். மாவட்ட இராணுவத் தளபதிக்கு உத்தரவிட்டுள்ளார் என்று ஜனாதிபதியின் செயலாளர் லலித் வீரதுங்க சம்பந்தனுக்குத் தெரியப்படுத்தியிருந்தார். இதனையும் மீறி நேற்றும் வீடழிப்பு தொடர்ந்தது. இது தொடர்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் கூறுகையில்,தொடர்ந்து வீடழிப்பு இடம்பெற்றால் தனக்கு உடனடியாக அறிவிக்குமாறு ஜனாதிபதியின் செயலாளர் என்னிடம் தெரிவித்தார். இதனடிப்படையில் இன்றும் (நேற்றும்) வீடழிப்பு நடவடிக்கைகள் தொடர்வதைத் தெரியப்படுத்த அவருடன் பலமுறை தொடர்பு கொண்ட போதும் அழைப்புக் கிடைக்கவில்ல. நாங்கள் எமது மக்கள் சார்பாக ஜனாதிபதியுடன் வேண்டுகோளை விடுப்பது கடமை. ஜனாதிபதியின் உத்தரவையும் மீறி அது நடந்தால் என்ன செய்வது? நாங்கள் வேறு வழியைத்தான் பார்க்க வேண்டும். நிச்சயமாக நடவடிக்கை எடுப்போம் என்றார்.
02 நவம்பர் 2013
சோகமயமானது வடக்கு!
இறுதி யுத்தம் நடந்த வடபகுதியில் தீபாவளி தினம் சோக முகத்துடன் காணப்படுகின்றது. கடந்த சில தினங்களின் முன்னர் சனல் 4 தொலைக்காட்சியால் வெளியிடப்பட்ட இசைப்பிரியா தொடர்பான வீடியோ வடக்கு மக்கள் மத்தியில் தீபாவளி தினமான இன்று பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
பட்டாசு கொளுத்தி தீபாவளியைக் கொண்டாட வேண்டிய இளைஞர்கள் பலரும் குறித்த வீடியோக் காட்சியை கண்டு கதி கலங்கிப் போயுள்ளனர். வடக்கில் பட்டாசு கொளுத்தும் வெடிச்சத்தங்கள் எதுவும் கேட்கப்படவில்லை. புதிய ஆடை வாங்க முண்டியடிக்கும் மக்களை வடக்கு நகரங்களில் காணவும் கிடைக்கவில்லை.
தமிழீழத் தேசியத் தொலைக்காட்சியில் செய்தி வாசிப்பாளராகவும் நிகழ்ச்சித் தயாரிப்பாளராகவும் திரைப்படங்களில் நடித்தவருமான இசைப்பிரியா வன்னி மக்களுக்கு மிகவும் பரிச்சியமானவர். இவர் தொடர்பில் சனல் 4 வெளியிட்ட வீடியோ மக்களை பெரும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கியுள்ளது.
இதனால் காணாமல் போனவர்களின் வீடுகளில் அழுகையும் சோகமும் அதிகரித்துள்ளது. இறுதி யுத்தகளத்தில் தமது பிள்ளைகளுக்கு என்ன நேர்ந்தது என்று அவர்கள் கொந்தளிக்கின்றனர். இன்றைய நாள் காணாமல் போன தமது பிள்ளைகளின் நினைவுகளை கிளறியிருப்பதாகத் தெரிவிக்கின்றனர்.
01 நவம்பர் 2013
இராஜதந்திரம் வாக்களித்த மக்களை ஏமாற்றுவதல்ல!

ன் கடிதம் கடந்த 28 ஆம் திகதி இந்திய பிரதமருக்கு கிடைத்ததாக தெரிவித்தார் இந்தநிலையில் பிரதமரின் இலங்கை பயணம் விக்னேஸ்வரனின் அழைப்பையும் மையமாகக்கொண்டு அமையும் என்று அக்பருதீன் தெரிவித்தார் விக்னேஸ்வரனின் இந்தக் கடிதம் சுயமாகவோ அல்லது கருத்து விளக்கம் தெரியாமலோ எழுதப்பட்டது அல்ல. இது இலங்கை இந்திய தலைவர்களால் திட்டமிட்டு எழுதி தருமாறு கேட்கப்பட்டது. தமிழக மற்றும் உலகத்தமிழர்களின் வேண்டுகோளை புறக்கணிப்பதற்கு விக்னேஸ்வரனின் இந்தக் கடிதம் ஒன்றே போதும் என்பதே டில்லியின் நிலைப்பாடு. கூடவே இதனூடாக ஈழத்தமிழர்களிற்கு இடையேயும், தமிழக-உலகத் தமிழர்களிற்கு இடையேயும் இடைவெளியினை ஏற்படுத்தும் ஒரு சதியாகவும் இந்த கடிதம் அமையலாம். இந்திய- சிறிலங்கா நலன்களுக்கு ஏற்ப செயற்பட்டுக்கொண்டு அதற்கு ராயதந்திரம் என கற்பிதம் கொடுத்து வருகின்றார் விக்னேஸ்வரன். உண்மையை ஏற்றுக்கொள்வது வேறு ஆனால் அரசல் புரசலாக கருத்துக்களைக் கூறி தனக்கு வாக்களித்த மக்களை ஏமாற்றுவதற்குப் பெயர் ராஜதந்திரம் அல்ல. இவர் மட்டுமல்ல இவருக்கு ஆலோசனை கூறுபவர்கள் [முன்னாள் ஐ. நா. திட்ட ஊழியர்கள், அரச திணைக்களச் செயலர்கள்.] எல்லோரும் சமாதான காலத்தில் விடுதலைப்புலிகளின் சமாதான செயலகத்தில் வந்து தமது பதவி நீடிப்பிற்காக சிபார்சு செய்யுமாறு தவம் இருந்தவர்கள்தான். ஆனால் விடுதலைப்புலிகள் அதனைச் செய்யவில்லை. ஆகவே இவர்கள் இந்தியா, கொழும்பு கேட்டால் எதனையும் செய்யத் தயாராகவே உள்ளார்கள். ஆனால் வெளியாக செய்யமுடியாது இப்படித்தான் [மன்மோகன் சிங்கிற்கு கடிதம் எழுதியது போல] செய்வார்கள்.
இசைப்பிரியா பிடித்துச் செல்லப்படும் காட்சி!
பிரித்தானியாவை மையமாக கொண்டியங்கும் சனல் 4 ஊடகம் அவ்வப்போது இலங்கைப் போர்க்குற்றங்களை காணொளியாக அம்பலப்படுத்திவரும் இந்நிலையில் இன்றும் ஒரு சிறு காணொளியினை வெளியிட்டுள்ளது அதில் ஊடகவியலாளர் இசைப்பிரியா முள்ளிவாய்க்காலில் இராணுவத்தினரால் பிடித்துச் செல்லப்படும் காட்சி தெளிவாக காண்பிக்கப்பட்டுள்ளது.
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)