 |
செல்வம் |
தமிழ் மக்களுடைய தேசிய பிரச்சினைக்கு தீர்வு கிடைக்காவிடில் சாகும் வரை உண்ணாவிரதத்தில் ஈடுபடப் போவதாக வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் தெரிவித்ததாவது,
அரசாங்கத்தினால் அடுத்த வருடத்துக்குள் தீர்வு முன்வைக்கப்படாவிடின் சாகும் வரை உண்ணாவிரதப் போராட்டமொன்றை மேற்கொள்ளப் போவதாக கடந்த வருடம் நவம்பர் மாதம் பாராளுமன்றத்தில் தெரிவித்திருந்தேன்.
7 மாதங்கள் கடந்த நிலையிலும் அரசினால் இன்னும் எந்தவொரு தீர்வும் வழங்கப்படவில்லை. அரசுக்கான கால அவகாசம் இன்னும் நான்கு மாதங்களே உள்ளன. அதற்குள் தமிழ் மக்களுடைய தேசிய பிரச்சினை தீர்க்கப்படாது போனால் நான் கூறியபடி எதிர்வரும் நவம்பரில் இருந்து சாகும்வரை உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபடப்போகின்றேன் என்றார்.
இதேவேளை, இதற்கு ஆதரவு வேண்டி ரெலோ அமைப்பினரால் சுவரொட்டிகளும் ஒட்டப்பட்டு வருகின்றன.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.