யாழ்ப்பாணத்தின் புங்குடுதீவுக்கடற்பகுதியில் உருக்குலைந்த நிலையில் ஆண் ஒருவரின் சடலம் இன்று புதன்கிழமை மீட்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
உருக்குலைந்த நிலையில் புங்குடுதீவு 10ம் வட்டார கடற்பரப்பில் கரையொதுங்கிய இந்த சடலத்தை கடற்படையினர் மீட்டு பொலிஸாரிடம் ஒப்படைத்திருந்தனர்.
அடையாளம் காணமுடியாதவாறு உருக்குலைந்துள்ள நிலையில் மீட்கப்பட்டுள்ள இந்த சடலம் தற்போது யாழ் போதனா வைத்திய சாலையின் சவச்சாலையில் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
இதனிடையே யாழ்ப்பாணம் கொக்குவில் பகுதியில் இளைஞர் ஒருவர் காணாமல் போயுள்ளதாக யாழ்.பொலிஸ் நிலையத்தில் இன்று முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. கொக்குவில் பிடாரி அம்மன் கோயிலடியைச் சேர்ந்த தேவாராசா தினேஸ் என்ற 26 வயது இளைஞரே இவ்வாறு காணாமல் போயுள்ளார்.கடந்த 4 ஆம் மாதம் 10ஆம் திகதியில் இருந்து இவர் காணமல் போயுள்ளதாக அவரின் சகோதரனால் இந்த முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
நான் என்ற ஆணவம் அதர்மமாக விஸ்வரூபமெடுத்தாலும்-ஒருநாள் தர்மத்தின் காலடியில் விழும்.
31 ஜூலை 2013
சுயேச்சை குழுவாக போட்டியிடும் எண்ணம் எனக்கு கிடையாது!
வித்தியாதரன் |
30 ஜூலை 2013
கூட்டமைப்பு வேட்பாளர்களுக்கு படைகள் மிரட்டல்!
![]() |
சுரேஷ் பிறேமச்சந்திரன் |
29 ஜூலை 2013
சாகும்வரை உண்ணாவிரதம் - செல்வம் அடைக்கலநாதன்
![]() |
செல்வம் |
28 ஜூலை 2013
இரவல் வாங்கிய நகையை கொடுக்க மறுத்தவர் கைது!
12 இலட்சம் ரூபா பெறுமதியான தங்க நகைகளை இரவலாக பெற்றுக் கொண்டு ஏமாற்றிய குற்றச்சாட்டின் அடிப்படையில்;
ஒருவர் யாழ்ப்பாணம் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார்.
யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த ஒருவரிடம் இரவலாக பன்னிரெண்டு இலட்சத்தி ஐம்பதாயிரம் ரூபா பெறுமதியான தங்க நகைகளை இரவலாக பெற்றுக் கொண்டு ஏமாற்றிய மானிப்பாய் சுதுமலையைச்சோந்த 30 வயதான ஒருவருக்கு எதிராக யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையத்தில் கடந்த 22ஆம் திகதி முறையிடப்பட்டுள்ளது.
இது சம்பந்தமாக விசாரணைகளை மேற்கொண்ட யாழ்ப்பாணம் பொலிஸார் குறிப்பிட்ட சந்தேகநபரை அவரது விட்டில் வைத்து கைதுசெய்து யாழ்ப்பாணம் நிதிமன்றில் ஆயர்படுத்தியதைத் தொடர்ந்து எதிர்வரும்; 05 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றத்தினால் கட்டளையிடப்பட்டுள்ளது என பொலிஸ் அத்தியட்சகர் எக்கநாயக்கா தெரிவித்துள்ளார்.
வாக்குகளை சிதறடிக்க தயா மாஸ்டரை சுயேட்சையாக களமிறக்க சதி!
சுதந்திரக்கட்சியில் வடக்கு தேர்தலில் குதிக்கப் போவதாக அறிவிப்பை விடுத்திருந்த விடுதலைப் புலிகளது பேச்சாளர் தயாமாஸ்டரையும் மஹிந்த அரசாங்கம் ஏமாற்றியுள்ளதா? அல்லது மகிந்த ராஜபக்ஸ சகோதரர்களின் அரசியல் வியூகமா என்ற சந்தேகங்கள் எழுந்துள்ளன. இன்றிரவு வெளியான சுதந்திரக்கட்சியின் யாழ்.மாவட்ட வேட்பாளர் பட்டியலில் தயா மாஸ்டரது பெயர் இருந்திருக்கவில்லை. இதனையடுத்து தேர்தலில் தனித்து சுயேட்சையாகப் போட்டியிட தயா மாஸ்டர் முடிவு செய்துள்ளதாக தெரிய வருகின்ற போதும் அதனை தயா மாஸ்டர் உறுதிப்படுத்தவில்லை.
இந்த நிலையில் நடைபெறவுள்ள வடமாகாண சபைத் தேர்தலில் சுதந்திரக்கட்சியின் சார்பில் யாழ். மாவட்டத்தில் போட்டியிடும் வேட்பாளர்களின் விபரங்களை சுதந்திரக்கட்சி வெளியிட்டுள்ளது. யாழ் மாவட்டத்தில் சுதந்திரக்கட்சியின் சார்பில் போட்டியிடுவதற்கு ஏழு பேர் தெரிவு செய்யப்பட்டு உள்ளதாகவும் நாளைய தினம் இவர்கள் வேட்பு மனுவில் ஒப்பமிடவுள்ளதாக அக்கட்சியின் யாழ் மாவட்ட அமைப்பாளா அங்கஜன் இராமநாதன் தெரிவித்துள்ளார்.
இதேவேளை சுதந்திரக்கட்சியின் யாழ் மாவட்ட அமைப்பாளர் அங்கஜன் இராமநாதன், முன்னாள் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் மாநகர சபை உறுப்பினரும் சட்டத்தரணியுமான முடியப்பு றேமிடியஸ், சாவற்காட்டு கடற்தொழிலாளர் கூட்டுறவுச் சங்கத்தின் தலைவர் எஸ். பொன்னம்பலம், நெல்லியடி வணிகர் கழகத்தலைவர் அகிலதாஸ், யாழ் மாநர சபை உறுப்பினர் அகமட் சுபியான், எஸ்.செந்தூரன், எஸ். கதிரவேல் ஆகியோர் போட்டியிட உள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
தயாமாஸ்டரை சுதந்திரக் கட்சி சார்பில் தேர்தலில் களமிறக்கினால் தெற்கில் கடும்போக்காளர்களிடையே ஏற்படும் அதிர்ப்தி ஒரு புறமிருக்க தேர்தலில் கூட்டமைப்பின் வாக்குகளை சிதறடிக்கும் இலக்கையே கொண்டிருக்கும் மகிந்த அரசாங்கத்தின் அரசியல் வியூகத்தில் தயாமாஸ்டர் தலைமையிலான முன்னாள் போராளிகளை தனித்து சுயேட்சையாக களமிறக்குவதனையும் அரசாங்கம் விரும்புவதாக தெரியவருகிறது.
27 ஜூலை 2013
பஷில் கவலைப்பட வேண்டியதில்லை-சுரேஷ்
வடமாகாண மக்களின் விருப்பத்துக்கு இணங்கவே முன்னா
ள் நீதியரசர் விக்கினேஸ்வரனை நாம் முதலமைச்சர் வேட்பாளராக நியமித்துள்ளோம். தேர்தலில் அவர் அமோக ஆதரவைப் பெற்று பெரு வெற்றி அடையும்போதுதான் வட பகுதி மக்களை யார் அவமதித்தார்கள் என்பதனை அமைச்சர் பஷில் ராஜபக்ஷ அறிந்துகொள்ள முடியும். எனவே வடமாகாண மக்கள் குறித்து அமைச்சர் கவலைப்பட வேண்டியதில்லை என்று தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளரும் யாழ்.மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான சுரேஷ் பிரேமச்சந்திரன் தெரிவித்தார்.

பிரித்தானிய நாடாளுமன்றக் குழுவை கோத்தா சந்திக்க மறுப்பு!
![]() |
கோத்தா படைகளுடன் |
26 ஜூலை 2013
இணக்க அரசியல் நடத்துவதற்கு விக்னேஸ்வரனே பொருத்தமானவர் - பஸில்
"அரசுடன்
இணக்க அரசியல் நடத்துவதற்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு சார்பாக வட மாகாண முதலமைச்சர் வேட்பாளராக நிறுத்தப்பட்டுள்ள சி.வி.விக்னேஸ்வரனே பொருத்தமானவர். ஏனெனில் அவர் எமது அமைச்சர் ஒருவரின் உறவினர். இவரின் நியமனத்தை நாம் வரவேற்கிறோம். இந்த விடயத்தில் கூட்டமைப்பின் முடிவு எமக்குச் சாதகமானது."இவ்வாறு பஸில் ராஜபக்ஷ நேற்றுத் தெரிவித்தார்.தமிழ்ப் பத்திரிகை ஊடகவியலாளர்களுடன் பஸில் ராஜபக்ஷ நேற்று விசேட கலந்துரையாடலொன்றை நடத்தினார்.பொருளாதார அபிவிருத்தி அமைச்சில் இடம்பெற்ற இந்தச் சந்திப்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முதலமைச்சர் வேட்பாளர் தொடர்பில் கருத்து கேட்டபோதே அவர் இதனைத் தெரிவித்தார். அவர் மேலும் தெரிவித்ததாவது;உயர்நீதிமன்றத்தின் ஓய்வுபெற்ற நீதியரசர் சி.வி.விக்னேஸ்வரனை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வடமாகாண முதலமைச்சர் வேட்பாளராக நியமித்துள்ளமை எமக்குச் சாதகம்தான்.இவரது நியமனத்தை நாம் வரவேற்கிறோம்.ஏனெனில் அவர் எமது அமைச்சர் ஒருவரின் உறவினர்.அத்துடன்,எம்முடன் இணைந்து செயற்படக் கூடியவர்.தமிழ்க் கூட்டமைப்பைப் பொறுத்தவரையில்,முதலமைச்சர் வேட்பாளர் விடயத்தில் வடக்குத் தமிழர்களை அவமதித்து விட்டது என்று சொல்லலாம்.ஏனெனில்,நாடாளுமன்றம் என்பது தேசிய இடம்.அங்கு எவரும் பிரதிநிதித்துவப்படுத்தலாம். ஆனால் மாகாணசபை எனும்போது குறித்த மாகாணத்தைச் சேர்ந்தவரே அதைப் பிரதிநிதித்துவப்படுத்த வேண்டும்.முதலமைச்சர் வேட்பாளராகவும் அந்த மாகாணத்தைச் சேர்ந்தவரையே நியமிக்க வேண்டும். இந்த விடயத்திலேயே வடக்குத் தமிழர்களை கூட்டமைப்பு அவமதித்து விட்டது. விக்னேஸ்வரனை தேசிய அரசியலில் களமிறக்கலாம்.கூட்டமைப்புக்குத் தேவையாயின் சுமந்திரனின் தேசியப் பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை விக்னேஸ்வரனுக்கு வழங்கலாம்.வட மாகாணத்தைப் பொறுத்தவரையில்,நான்கு மாவட்டங்களில் நாம் முன்னணியில் இருக்கின்றோம்.எமக்கான வெற்றிவாய்ப்புகள் அங்கு அதிகமாக இருக்கின்றன.அந்த வெற்றியை நாம் எதிர்பார்க்கிறோம்.வடக்குத் தேர்தலுக்கு நாம் ஏற்கனவே தயாராகிவிட்டோம் என்றார் பஸில்.

25 ஜூலை 2013
மாதகலில் மீட்கப்பட்ட மண்டை ஓடுகள்!
இராணுவத்தின் உயர் பாதுகாப்பு வலயமாக இருந்து விடுவிக்கப்பட்ட மாதகல் மேற்குப் பிரதேசத்தில் தொடர்ச்சியாக மனித மண்டையோடுகள், எலும்புக் கூடுகள் என்பன மீட்கப்பட்டு வருகின்றன. நேற்றுப் புதன்கிழமை இரண்டு மனித மண்டையோடுகள் மற்றும் பல் தாடைகள், எலும்புகள் என்பன இந்தப் பகுதியில் உள்ள மலசல கூட குழி ஒன்றை மீள்நிர்மாணம் செய்ய முற்பட்டபோது மீட்கப்பட்டுள்ளன.
இராணுவத்தினரால் யாழ். குடாநாடு கைப்பற்றப்பட்ட பின்னர் மாதகல் மேற்குப் பகுதி உயர்பாதுகாப்பு வலயமாகப் பிரகடனப்படுத்தப்பட்டு கடந்த வருடமே விடுவிக்கப்பட்டது.
அண்மையிலும் இதேபோன்று மலசலகூடம் ஒன்றை அமைப்பதற்காக அத்திபாரம் வெட்டப்பட்ட போது அந்தக் குழியிலிருந்து மண்டையோடுகள் மற்றும் எலும்புக் கூடுகள் என்பன மீட்கப்பட்டிருந்தன என்பது குறிப்பிடத்தக்கது.
24 ஜூலை 2013
மக்கள் விழிப்புடன் இருக்கவேண்டும் என்கிறது தமிழரசு கட்சி!
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)