
புளியங்கூடல் செருத்தனைப்பதி அருள்மிகு சிறீ இராஜமகாமாரி அம்பாள் ஆலய வருடாந்த மகோற்சவம் 09.06.2017 வெள்ளிக்கிழமை கொடியேற்றத்துடன் ஆரம்பமாகி பதினெட்டு(18)தினங்கள் விழா நடைபெறும்.பதின்நான்காம் திருவிழாவாகிய 22.06.2017 வியாழக்கிழமை வேட்டைத்திருவிழாவும்,பதினாறாம் திருவிழாவாகிய 24.06.2017 சனிக்கிழமை இரதோற்சவமும் நடைபெற்று பின்னர் மறுநாள் 25.06.2017 ஞாயிற்றுக்கிழமை தீர்த்தோற்சவமும் நடைபெறும்.18ம் திருவிழாவாகிய 26.06.2017 திங்கட்கிழமை பூங்காவனமும் இடம்பெற்று கொடியிறக்கத்துடன் அம்பாளின் 2017ம் ஆண்டின் வருடாந்த உற்சவம் நிறைவுக்கு வரும்,
ஆலய விழா தொடர்பான விபரங்களை ஆலய நிர்வாகத்தினர் வெளியிட்டுள்ளனர்.