பன்னிரண்டு நாடுகளில் இருக்கும் விடுதலைப் புலிகளின் முன்னாள் முக்கியஸ்தர்கள் 67 பேர் அந்த அமைப்பிற்கு புத்துயிரூட்டும் செயற்பாடுகளை தொடர்ந்து மேற்கொள்வதாக இராணுவப் புலனாய்வுப் பிரிவினரை மேற்கோள் காட்டி சிங்கள ஊடகம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது. விநாயகம், கபில் மாஸ்டர், முகுந்தன், தேவன் மற்றும் சிரஞ்சீவி மாஸ்டர் உள்ளிட்ட விடுதலைப் புலிகளின் முன்னாள் முக்கியஸ்தர்கள் 67 பேர் 12 நாடுகளில் வாழ்கின்றனர்.பிரான்ஸ், பிரித்தானியா, கனடா, இந்தியா, ஜேர்மனி, தென் ஆபிரிக்கா, நோர்வே, மலேசியா, டென்மார்க், கட்டார், நெதர்லாந்து மற்றும் சுவிற்சலாந்து ஆகிய பன்னிரண்டு நாடுகளிலேயே மறைந்து வாழ்கின்றனர். வெளிநாடுகளுக்குத் தப்பித்துச் சென்ற எந்தவொரு விடுதலைப் புலி முக்கியஸ்தரையும் இதுவரை கைது செய்ய முடியவில்லை. இவர்கள் தங்களுக்குள் ஒரு வலையமைப்பை ஏற்படுத்திக் கொண்டு விடுதலைப் புலிகள் அமைப்பிற்கு மீண்டும் புத்துயிரளிக்கும் செயற்பாடுகளில் ஈடுபட்டுள்ளனர்.
விடுதலைப் புலிகளின் முன்னாள் முக்கியஸ்தர்கள் சிலரின் உதவியுடன் இராணுவத்தினர் மேற்கொண்ட ஒபரேசன் டபள் எட்ஜ் புலனாய்வு நடவடிக்கையின் போது இவர்கள் தங்களையறியாமல் இராணுவத்தின் வலையில் வீழ்ந்திருந்தனர். எனினும் குறித்த நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த இராணுவப் புலனாய்வாளர்கள் தொடர்பான விபரங்கள் வெளியானதன் காரணமாக தற்போது இந்த நடவடிக்கையும் இடைநிறுத்தப்பட்டுள்ளது என்றும் சிங்கள ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது.
நான் என்ற ஆணவம் அதர்மமாக விஸ்வரூபமெடுத்தாலும்-ஒருநாள் தர்மத்தின் காலடியில் விழும்.
28 ஏப்ரல் 2016
27 ஏப்ரல் 2016
தொடர்ந்து கைது செய்யப்படும் முன்னாள் போராளிகள்! - சிவாஜிலிங்கம் சந்தேகம்!
எதிர்வரும் மே-18ம் திகதி அனுஷ்டிக்கப்படும் முள்ளிவாய்க்கால் நினைவு தினத்தை குழப்பவே முன்னாள் போராளிகள் கடத்தப்படுவதும் விசாரணைக்கு அழைப்பதும் இடம்பெறுவதாக, வடமாகாண சபை உறுப்பினர் எம்.கே. சிவாஜிலிங்கம் தெரிவித்துள்ளார். “படைத்தரப்பினராலும் பொலிஸாராலும் முன்னாள் போராளிகள் கைது செய்யப்படுவதும் சட்டரீதியாக கைது செய்யப்படுவதற்கு அப்பால் கடத்தப்பட்டு பின்னர் விசாரணைக்கு அழைத்துச் செல்லப்படுவதாகக் கூறப்படுவதும் மிகப் பெரிய அச்சுறுத்தல்.
இம்மாதம் 30ம் திகதி பல நூற்றுக் கணக்கானவர்களை கொழும்பிற்கு வாருங்கள், விசாரணைக்கு ஆஜராகுங்கள் என அழைப்பு விடுக்கப்பட்டமையானது எதிர்வரும் மே 18ம் திகதி நடைபெறவுள்ள முள்ளிவாய்க்கால் நினைவு தினத்தை தடுக்கும் முயற்சிகாகவே பார்க்க வேண்டியுள்ளது. நல்லாட்சி அரசாங்கம் எனக்கூறும் இந்த அரசாங்கம் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக் ஷவின் செயற்பாட்டையே தொடருகின்றது என்ற குற்றச்சாட்டை நாம் முன்வைக்கின்றோம். கடந்த காலங்களில் ஒரு கோரமுகத்துடன் முன்னாள் ஜனாதிபதி மேற்கொண்ட விடயங்களை சிரித்த முகத்துடன் தற்போது ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவும், பிரதமர் ரணில் விக்ரமசிங்கவும் மேற்கொள்கிறார்கள்.
இப்போது அவர்கள் இறுக்கமான முகத்தோடு எமது இனத்தை அழிக்க, பழிவாங்க முற்படுகிறார்களா என்ற சந்தேகம் எம்மில் எழுகிறது. இதற்குப் பிரதான விடயம் யாதெனில், அரசியல் தீர்வு விடயங்களில் தமிழ் மக்கள் தமது உள்ளக் குமுறல்களை, வெளிப்பாடுகளை வெளியே சொல்ல முடியாதவாறு ஒரு அச்சமான சூழலை ஏற்படுத்தி இனப்பிரச்சினைக்கு அரைகுறையான தீர்வை எங்கள் மீது திணிப்பதாகவே பார்க்கின்றோம். வடமாகாண பிரேரணை தொடர்பில், தீர்வுத்திட்டம் முன்யோசனைகள் தொடர்பில் வடமாகாண சபையில் முழுமை பெறமுன்னமே தென்னிலங்கையில் இருக்கக்கூடிய இனவாதிகளிடமிருந்து கூச்சல், குழப்பங்கள் வெடிக்கத் தொடங்கியுள்ளது.
இதேவேளை இரத்த ஆறு ஓடும் என்று பொதுபலசேனா, இராவணா பலய போன்ற அமைப்புக்களின் கருத்துக்களை நாம் முழுமையான இனவெறி கூற்றுக்களாகவே பார்க்கின்றோம். முஸ்லிம் மக்கள் 1974ம் ஆண்டு புத்தளத்திலுள்ள பள்ளிவாசலில் கொல்லப்பட்ட போது முஸ்லிம் பிரதிநிதிகள் எவரும் கருத்துக்கள் முன்வைக்கவில்லை. தந்தை செல்வாவே கருத்துக்களை முன்வைத்தார். அதாவது முஸ்லிம் மக்களுக்கும் மலையக தமிழ் மக்களுக்கும் சுய உரிமையை கேட்டு நிற்கின்றோம்.ஆகவே இலங்கையில் இரண்டு தேசிய இனங்கள்தான் இருந்தது என்பதை எங்களுடைய தலைவர்கள் கூறியுள்ளார்கள்.
முஸ்லிம் மக்கள் உரிமைகளை நிலைநாட்டும் வகையில் முஸ்லிம் சுயாட்சி பிராந்தியம் அதேபோல் மலையக தமிழ் மக்களுக்கான மலையக தமிழ் சுயாட்சி சபை ஆகியவற்றை வடமாகாண சபை முன்வைத்துள்ளது. இது இன்று நேற்று அல்ல தந்தை செல்வா காலத்தில் கூறப்பட்டுள்ளது என்பதை தெரியப்படுத்துகின்றேன் எனத் தெரிவித்தார்.
26 ஏப்ரல் 2016
துருக்கியில் இறந்த இளைஞனின் தாயும் அதிர்ச்சியில் மரணம்!
கள்ள வழியால் சுவிற்ஸர்லாந்த் செல்வதற்காக சென்று கடத்தல்காரர்களிடம் அகப்பட்டு சித்திரவதை செய்யப்பட்டு இறந்த முல்லைத்தீவு வட்டுவாகலைச் சேர்ந்த காண்டீபனின் தாயாரும் மகன் இறந்த காரணத்தால் இன்று அதிர்ச்சியுற்று மரணமாகியுள்ளார்.நாகராசா புவனேஸ்வரி 65 வயது என்பவரே இவ்வாறு உயிரிழந்தவராவார். மகன் இறந்ததை அறிந்து தாயார் மரணமான சம்பவம் அப்பகுதி மக்களை பெரும் கவலையில் ஆழ்த்தியுள்ளது. அத்துடன் தாய், மகனின் பாசம் நெகிழ வைப்பதாக அப்பகுதி மக்கள் கவலையுடன் தெரிவித்துள்ளனர். தற்போது காண்டீபனின் சடலத்தை இலங்கைக்குக் கொண்டு வருவதற்காக உறவினர்கள் துருக்கித் துாதரகத்தில் காத்திருப்பதாக தெரியவருகின்றது.
நன்றி.NEW JAFFNA
நன்றி.NEW JAFFNA
20 ஏப்ரல் 2016
பொலிசாரிடம் ஒப்படைக்கப்பட்ட சுவிஸ் குமார் எவ்வாறு தப்பினார்?
17 ஏப்ரல் 2016
சுவிஸ் கிறென்சனில் லிங்கநாதருக்கு திருமுழுக்கு விழா!
சுவிற்சர்லாந்தின் கிறென்சன் நகரில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள சித்தர் பீடத்தில் நூற்றியெட்டு(108)லிங்கநாதருக்கும் திருமுழுக்கு விழா மிகவும் பக்திபூர்வமாக சிறப்பான முறையில் நடைபெற திருவருள் கூடியுள்ளதால் அந்நாளில் அனைவரும் வருகைதந்து மெய்யருளை பெற்றுய்யுமாறு விழா ஏற்பாட்டாளர்கள் கேட்டுக்கொள்கிறார்கள்.
காலம்:22.05.2016 ஞாயிற்றுக்கிழமை
நேரம்:காலை 7:30க்கு விழா ஆரம்பமாகி விசேட பூசைகள் இடம்பெறும்.
இடம்:Marien str-06
2540 Grenchen
Switzerland
காலம்:22.05.2016 ஞாயிற்றுக்கிழமை
நேரம்:காலை 7:30க்கு விழா ஆரம்பமாகி விசேட பூசைகள் இடம்பெறும்.
இடம்:Marien str-06
2540 Grenchen
Switzerland
09 ஏப்ரல் 2016
சிந்தாமணி பத்திரிக்கை ஸ்தாபகர் அமரர் சிவநாயகத்தின் பாரியார் காலமானார்!
07 ஏப்ரல் 2016
ம.ந.கூத்தணியில் கோழைலட்சுமி!
![]() |
வை.வீ.வி |
உலகத் தமிழர்களின் நம்பிக்கை ஒளி.
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)