யாழ்ப்பாணம், வேலணை கிழக்கு, 4ஆம் வட்டாரத்தைச் சேர்ந்த ராஜ்குமார் விமலினி (வயது 20) என்ற யுவதியை வியாழக்கிழமை (21) முதல் காணவில்லையென அவரது உறவினர்கள் முறைப்பாடு பதிவு செய்துள்ளதாக ஊர்காவற்றுறை பொலிஸார் தெரிவித்தனர்.
யாழ்ப்பாணத்திலுள்ள நண்டு பதனிடும் நிறுவனம் ஒன்றில் பணியாற்றும் இந்தச் யுவதி, வியாழக்கிழமை (21) காலை வேலைக்குச் சென்று, இதுவரையில் வீடு திரும்பவில்லை.
இதனையடுத்து, உறவினர்கள் ஊர்காவற்றுறை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்துள்ளனர். முறைப்பாட்டின் பிரகாரம் விசாரணைகளை முன்னெடுத்து வருவதாக பொலிஸார் கூறினர்.முன்னர் நாரந்தனையை சேர்ந்தவர் என செய்திகள் வந்திருந்தமையால் நாமும் அதை பிரசுரித்திருந்தோம் என்பதை குறிப்பிட விரும்புகிறோம்.
நான் என்ற ஆணவம் அதர்மமாக விஸ்வரூபமெடுத்தாலும்-ஒருநாள் தர்மத்தின் காலடியில் விழும்.
23 மே 2015
22 மே 2015
நாரந்தனையை சேர்ந்த இளம்பெண்ணை காணவில்லை!

21 மே 2015
வித்தியா கொலையாளிகள் 10 பேரையும் பகிரங்கமாக தூக்கிலிடவேண்டும்!

19 மே 2015
சுவிசிற்கு தப்பிச்செல்ல முயன்ற மகாலிங்கம் சிவகுமார் கைது!

17 மே 2015
புங்குடுதீவில் மாணவி படுகொலை!மேலும் ஐவர் கைது!
நல்லூரில் போராட்டம் |
15 மே 2015
புலிகளின் காலத்தில் பெண்களால் நள்ளிரவிலும் தனியாக நடமாட முடிந்தது!
விடுதலைப் புலிகளின் காலப்பகுதியில் பெண்களால் நள்ளிரவிலும் தன்னந்தனியாக நடமாடமுடிந்தது. அதுபோன்ற ஒரு காலம் மீளவும் வராதா என்று மக்கள் இப்போது ஏங்க ஆரம்பித்துள்ளனர் என்று வடக்கு விவசாய அமைச்சர் பொ.ஐங்கரநேசன் தெரிவித்திருக்கிறார்.
புங்குடுதீவில் பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்திப் படுகொலை செய்யப்பட்ட மாணவியின் இறுதி அஞ்சலி நிகழ்ச்சி இன்று வெள்ளிக்கிழமை ( 15.05.2015 ) புங்குடுதீவு மகாவித்தியாலயத்தில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் கலந்துகொண்டு அஞ்சலி உரையாற்றியபோதே அமைச்சர் பொ.ஐங்கரநேசன் இவ்வாறு தெரிவித்தார்.
அவர் மேலும் உரையாற்றுகையில்,
மாணவி சிவலோகநாதன் வித்தியாவின் படுகொலையை மிருகத்தனமானது என்று சிலர் குறிப்பிட்டார்கள். நான் அவ்வாறு சொல்லமாட்டேன். மிருகங்கள்கூடச் செய்யத்துணியாத கொடுஞ்செயல் இது. இந்த மாபாதகத்தில் ஈடுபட்டவர்கள் எத்தனை பிறவிகள் எடுத்தாலும் எந்தப் பிறவியிலும் அவர்களுக்கு மன்னிப்பே கிடையாது.
போருக்குப் பிறகு இதுபோன்ற கொலைகளும், சமூகவிரோதச் செயற்பாடுகளும் அதிகிரித்துள்ளன. இவற்றின் பின்னணியில் போதைப்பழக்கம் ஒரு பிரதான காரணமாக இருக்கிறது. என்றும் இல்லாத வகையில் இளைய தலைமுறையிடையே போதைப்பொருள் பாவனை அதிகரித்துள்ளது. எமது இளைய தலைமுறையைத் தவறான பாதையில் வழிநடத்துவதன்மூலம் அவர்களின் விடுதலை உணர்வை மழுங்கடிக்கச் செய்யலாம் என்ற நோக்கத்துடனேயே இங்கு போதைப்பொருள் பாவனை திட்டமிட்டு ஊக்கிவிக்கப்படுகிறது.
விடுதலைப் புலிகளின் காவல்துறை குற்றங்களைக் கட்டுப்படுத்தியிருந்தது. இப்போது கடும்குற்றவாளிகள்கூட சுதந்திரமாக நடமாடக்கூடியதாக உள்ளது. எனவே, எமது இளைய தலைமுறையின் பாதுகாப்புக் குறித்து பெற்றோர்கள் எப்போதும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். எமது இளைய தலைமுறையின் பழக்கவழக்கங்கள் குறித்துப் நாம் விழிப்பாயிருக்க வேண்டும். வடக்கு மாகாண சபையும் குற்றச் செயல்களைக் கட்டுப்படுத்துவதற்குரிய தீர்க்கமான வழிமுறைகளை ஆராய வேண்டிய கட்டாயத்தில் உள்ளது என்றும் தெரிவித்துள்ளார்.
நூற்றுக்கணக்கான மாணவர்கள் பங்கேற்ற இவ்வஞ்சலி நிகழ்ச்சியில் நாடாளுமன்ற உறுப்பினர் மாவைசேனாதிராஜா, சிவஞானம் சிறீதரன், வடமாகாணசபை அவைத் தலைவர் சீ.வீ.கே.சிவஞானம், மாகாணசபை உறுப்பினர்கள் அனந்தி சசிதரன், பா.கஜதீபன், விந்தன் கனகரத்தினம், க.சிவாஜிலிங்கம் ஆகியோருடன் கல்வித் திணைக்கள அதிகாரிகள் பலரும் கலந்துகொண்டு உரையாற்றியிருந்தார்கள்.
நூற்றுக்கணக்கான மாணவர்கள் பங்கேற்ற இவ்வஞ்சலி நிகழ்ச்சியில் நாடாளுமன்ற உறுப்பினர் மாவைசேனாதிராஜா, சிவஞானம் சிறீதரன், வடமாகாணசபை அவைத் தலைவர் சீ.வீ.கே.சிவஞானம், மாகாணசபை உறுப்பினர்கள் அனந்தி சசிதரன், பா.கஜதீபன், விந்தன் கனகரத்தினம், க.சிவாஜிலிங்கம் ஆகியோருடன் கல்வித் திணைக்கள அதிகாரிகள் பலரும் கலந்துகொண்டு உரையாற்றியிருந்தார்கள்.
14 மே 2015
புங்குடுதீவில் பாழடைந்த வீட்டிலிருந்து மாணவியின் சடலம் மீட்பு!

09 மே 2015
ஊர்காவற்றுறையில் இளைஞர் தற்கொலை!
08 மே 2015
புளியங்கூடல் இந்தன் முத்து விநாயகர் நாளை கொடியேற்றம்!

07 மே 2015
ஐ.எஸ் பாணியில் யாழில் புதிய இயக்கம்!
மத்தியகிழக்கு நாடுகளில் கடும் தண்டனைகளின் மூலம் புகழ்பெற்ற ஐ.எஸ் இயக்கத்தின் பாணியிலான இயக்கமொன்று யாழ்ப்பாணத்தில் உருவாகிவிட்டதோ என்ற சந்தேகம் எழுந்துள்ளது.
ரௌடித்தனம், புகைத்தல் உள்ளிட்ட குற்றங்கள் செய்யும் வாலிபர்கள் மற்றும் குட்டையான கவர்ச்சியான ஆடைகள் அணியும் பெண்களின் கைகளை வெட்டவுள்ளதாக எச்சரிக்கைவிட்டு அனாமதேய சுவரொட்டிகள் குடாநாட்டின் பல இடங்களிலும் நேற்று ஒட்டப்பட்டிருந்தது.
யாழ்க்குடாவில் ரௌடித்தனங்கள் எல்லைமீறிச் சென்று கொண்டிருக்கும் நிலையில், அத்தகைய குற்றங்களிற்கு மன்னிப்பு வழங்கப்பட மாட்டாதென்றும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. இளைஞர், யுவதிகள் எல்லைமீறி சென்றால் எப்படியான தண்டனைகள் வழங்கப்படும் என அதில் விபரிக்கப்பட்டுள்ளது.
குடிபோதையில் பொதுமக்களிற்கு இடையூறு விளைவித்தல், வாள்வெட்டில் ஈடுபடுதல் போன்ற குற்றங்களிற்கு கை துண்டிக்கப்படும் என்றும் மாலை 6 மணிக்கு பின்னர் சந்திகளில் மூன்றுபேருக்கு மேல் கூடி நின்றால், பொது இடத்தில் கும்பலாக சிகரெட் புகைத்தால் தண்டனை வழங்கப்படும் என்று அதில் எச்சரிக்கப்பட்டுள்ளது.
பெண்களிற்கும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அரைகுறை ஆடையணிந்து சென்றால் அவர்களிற்கும் தண்டனை வழங்கப்படும் என அதில் எச்சரிக்கப்பட்டுள்ளது.
எம்.கே.ஓ என்ற அமைப்பு அதற்கு உரிமை கோரியுள்ளது.
05 மே 2015
39-வது அகவையில் கால் பதிக்கிறது தமிழீழ விடுதலைப்புலிகள்!

தமிழீழ விடுதலைப்புலிகள் அமைப்பின் நிர்வாகக் கட்டமைப்பின் கீழ் இயங்கியவை:
01. இராணுவம் (தரைப் படை -பல்வேறு படை அணிகள்) இம்ரான் பாண்டியன் படையணி, ஜெயந்தன் படையணி, சார்ள்ஸ் அன்ரணி. சிறப்புப் படையணி, கிட்டு பீரங்கிப் படையணி, ராதா வான்காப்புப் படையணி, குட்டிஸ்ரீ மோட்டார் படையணி, சிறப்பு உந்துகணை செலுத்திப் படையணி, விக்டர் கவச எதிர்ப்புப் படையணி, சோதியா படையணி, மாலதி படையணி, அன்பரசி படையணி, ஈருடப் படையணி, குறிபார்த்து சுடும் படையணி, சிறுத்தைப் படையணி, எல்லைப்படை, துணைப்படை, பொன்னம்மான் மிதிவெடிப் பிரிவு, ஆயுதக் களஞ்சிய சேர்க்கை, பாதுகாத்தல் பிரிவு. 02. கடற்புலிகள் நீரடி நீச்சல் பிரிவு கடல் வேவு அணி சார்லஸ் சிறப்புக் கடற்புலிகள் அணி அங்கயற்கண்ணி ஆழ்கடல் நீச்சல் அணி (பெண்கள்) நிரோஜன் ஆழ்கடல் நீச்சல் அணி கடல் சிறுத்தைகள் சிறப்பு அணி 03. வான்படை 04. கரும்புலிகள் 05. அரசியற்துறை அரசியல்துறை – பரப்புரைப் பிரிவு. 06. புலனாய்வுத்துறை 07. வேவுப்பிரிவு 08. ஒளிப்பதிவுப் பிரிவு 09. மருத்துவப் பிரிவு லெப். கேர்ணல் திலீபன் சிறப்பு மருத்துவப் பிரிவு 10. கணணிப் பிரிவு 11. மாணவர் அமைப்பு 12. தமிழீழ வைப்பகம் 13. தமிழர் புனர்வாழ்வுக் கழகம் 14. அனைத்துலகச் செயலகம் 15. சுங்கவரித் துறை 16. தமிழீழ பொருண்மிய மேம்பாட்டுக் கழகம் 17. தமிழீழப் படைத்துறைப் பயிற்சிப் பள்ளி 18. அரசறிவியற் கல்லூரி 19. தமிழீழக் காவற்துறை காவல்துறை – குற்றத் தடுப்புப் பிரிவு காவல்துறை – குற்ற புலனாய்வுப் பிரிவு 20. வன வளத்துறை 21. தமிழீழ நிதித்துறை 22. விடுதலைப்புலிகள் கலை, பண்பாட்டுக் கழகம் 23. தமிழீழ சட்டக்கல்லூரி, தமிழீழ நீதித்துறை, நீதிமன்றுகள் 24. தமிழீழக் கல்வி மேம்பாட்டுப் பேரவை 25. காந்தரூபன் அறிவுச்சோலை (ஆதரவற்ற ஆண் குழந்தைகள்) 26. செந்தளிர் இல்லம் (5 வயதுக்குட்பட்ட ஆதரவற்ற குழந்தைகள்) 27. செஞ்சோலைச் சிறார் இல்லம் (ஆதரவற்ற பெண் குழந்தைகள்) 28. வெற்றிமனை (வலுவிழந்தோர்) 29. அன்பு இல்லம் (முதியோர்) 30. பொத்தகசாலை 31. விடுதலைப் புலிகள் செய்தி இதழ் 32. ஈழநாதம் செய்தி இதழ் 33. வெளிச்சம் செய்தி இதழ் 34. ஆவணப்படுத்தல்-பதிப்புத்துறை 35. தமிழீழ தேசியத் தொலைக்காட்சி 36. நிதர்சனம் 37. புலிகளின் குரல் வானொலி 38. மாவீரர் பணிமனை 39. நவம் அறிவுக்கூடம் (பார்வை இழந்த போராளிகளுக்கான) 40. மயூரி இல்லம் (இடுப்பின்கீழ் வலுவிழந்த பெண் போராளிகளுக்கானது) 41. சேரன் வாணிபம் 42. சேரன் சுவையகம் 43. பாண்டியன் உற்பத்திப் பிரிவு 44. பாண்டியன் வாணிபம் 45. பாண்டியன் சுவையூற்று 46. சோழன் தயாரிப்புகள் 47. வழங்கற் பிரிவு 48. சூழல் நல்லாட்சி ஆணையகம் 49. நிர்வாக சேவை 50. ஆயுத ஆராய்ச்சி மற்றும் உருவாக்கல் பிரிவு 51. மின்னணுவியல் சிறப்பு உதவிப் பிரிவு 52. திரைப்பட வெளியீட்டுப்பிரிவு, மொழியாக்கப்பிரிவு 53. பெண்கள் மறுவாழ்வு அபிவிருத்தி மையம் 54. தமிழீழ பொறியியல் தொழில்நுட்ப வளர்ச்சித் துறை 55. தமிழீழ விளையாட்டுத்துறை 56. தமிழீழ காலநிலை அறிவுறுத்தல் வாரியம்.
தமிழரின் தாகம் தமிழீழத் தாயகம்
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)