கனடியத் தமிழர்களின் உண்மையான நண்பனாக திகழ்கிற ஒரு அரசியற் தலைவர் பற்றிக் பிரவுண் என்று கனடிய ஆங்கிலப் பத்திரிகையொன்று மக்களைப் பேட்டி கண்டு எழுதியுள்ளது. கடந்த வாரம் மார்க்கம் நகரில் இடம்பெற்ற சமூக விருந்துபசார நிகழ்வொன்றில் கலந்து கொண்ட மேற்படி நிருபர் 36 வயதான திரு. பற்றிக் பிரவுணை சூழ்ந்து கொண்ட கோட்-சூட் அணிந்த தமிழ் ஆண்களும், சேலை அணிந்த தமிழ் பெண்களுமாக பலர் திரு. பற்றிக் அவர்களோடு மிக அன்னியோன்யமாகப் பழகியதா குறிப்பிட்டுள்ளார்.
சிலர் அவரை “ஹேய் பற்றிக்” என உரிமையோடு அழைத்தனர். வேறு சிலரோ அவரைத் தோளில் தழுவி நீர் எங்களில் ஒருவன் என உரிமை பாராட்டிச் சென்றனர், வேறு சிலரோ மிகவும் மரியாதையோடு கைலாகு கொடுத்துச சென்றனர் எனத் தெரிவித்த பத்திரிகையாளர், யாருமே திரு பற்றிக்கை அணுக சம்பிரதாயங்களைப் பார்க்கவில்லை, தங்களது பக்கத்து வீட்டுப் பையன் போல அவ்வளவு உரிமையோடு பழகினார்கள். அவருடன் தங்களின் விடயங்களை இலகுவாகப் பகிர்ந்து கொண்டனர் எனவும்,குறிப்பிட்டுள்ளார்.
அந்த விழாவில் கலந்து கொண்ட சாந்தா பஞ்சலிங்கம் என்பவர் “பற்றிக் தமிழர்களது நண்பன்” , “எங்களது இன்ப, துன்பமோ எந்த நிகழ்வென்றாலும் பற்றிக் எங்களுடன் நிற்பார்” எனப் பெருமிதமாகச் சொன்னார். ஒரு பல் வைத்தியரும், அவரது குடும்பமும் பற்றிக்குடன் படம் எடுத்துக் கொண்டார்கள். அந்த வைத்தியரின் மகனான சிறுவன் பற்றிக்கோடு மிகவும் உரிமையோடு பழகினான்.
பற்றிக்கை தெரிந்ததையிட்டு மிகவும் பெருமைப்படுகின்றேன் எனத் தெரிவித்த பொறியியலாளரான மூர்த்தி நாராயணன் பற்றிக் வேகமாகவும், சுறுசுறுப்பாகவும் செயற்படுவதற்கு அவர் மரதன் வீரராய் இருப்பதுகூடக் காரணமாக இருக்கலாம் எனத் தெரிவித்தார். இவ்வாறு தமிழர்களிற்கும் திரு.பற்றிக் பிரவுனிற்குமான உறவை மேற்படி ஆங்கிலப் பத்திரிகை சிலாகித்துள்ள அதேவேளை, திரு.பற்றிக் பிரவுண் இந்து ஆலயமொன்றிற்கு சென்று அங்கு வழிபாடுகளில் ஈடுபட்டதோடு அங்கிருந்த மக்களுடன் இணைந்து உணவருந்திச் சென்றார்.
நான் என்ற ஆணவம் அதர்மமாக விஸ்வரூபமெடுத்தாலும்-ஒருநாள் தர்மத்தின் காலடியில் விழும்.
23 ஏப்ரல் 2015
17 ஏப்ரல் 2015
சமர்க்கள நாயகன் பிரிகேடியர் பால்ராஜ்!
தமிழீழ மக்களால் நேசிக்கப்பட்ட மூத்த தளபதி பிரிகேடியர் பால்ராஜ் 27.11.1965 ஆம் ஆண்டு பிறந்தவர் . முல்லைத்தீவு மாவட்டம், கொக்குத் தொடுவாயைச் சேர்ந்தவர்.
1984 ஆம் ஆண்டு விடுதலைப் போராட்டத்தில் தன்னை இணைத்துக்கொண்ட அவர் விடுதலைப் புலிகளால் மேற்கொள்ளபட்ட பல்வேறு வெற்றிகரத் தாக்குதல்களில் பங்கேற்றவர். பல வெற்றித்தாக்குதல்களுக்கு தலைமை தாங்கியவர்.தாயகத்தில் ஆக்கிரமிப்புப் படையாக வந்த இந்தியப்படைக்கு சிம்மசொப்பனமாக செயற்பட்டவர்.
இவரது நினைவுகளை சுமந்து அவரது வீர வரலாறுகளோடு வெளியீடுப் பிரிவு, அனைத்துலகத் தொடர்பகம் , தமிழீழ விடுதலை புலிகளால் வெளியீடப்பட்ட நூல் "சமர்க்கள நாயகன்" அதனை தமிழகத்தில் இராவணன் பதிப்பம் தற்போது வெளியீட்டு வருகிறது.
இதன் முதல் நூல் வெளியீட்டு விழா புதுச்சேரியில் பெரியார் திடலில் 13.12.2014 சனிக்கிழமை மாலை 6.00 மணியளவில் நடைபெற்றது.
அதன் தொடர்ச்சியாக அணைத்து மாணவர்கள் இளைஞர்கள் இயக்கங்கள் இணைந்து நடத்தும் பிரிகேடியர் பால்ராஜ் சமர்க்கள நாயகன் நூல் அறிமுக விழா 19.04.2015 ஞாயிற்றுக்கிழமை லயோலா கல்லூரி, பி.எட்.அரங்கத்தில் மதியம் 2 மணியளவில் நடை பெற உள்ளது.
இவ் விழாவிற்கு அனைத்து தமிழ் உறவுகளையும் வருமாறு அழைக்கின்றனர்.
தொடர்புக்கு: 9600031771, 9884495527, 9940121655.
16 ஏப்ரல் 2015
தேசியத்தலைவரின் இருப்பிடத்தை நெருங்கிய இந்தியப்படைக்கு ஏமாற்றம்!

09 ஏப்ரல் 2015
தம்பாட்டியில் நண்டு பதனிடும் தொழிற்சாலை!

07 ஏப்ரல் 2015
புளியங்கூடல் தெற்கு அருள்மிகு வீரபத்திரர் ஆலய மகா கும்பாபிஷேகம்!
புளியங்கூடல் தெற்கில் அமைந்துள்ள அருள்மிகு வீரபத்திரர் ஆலய ஆவர்த்தன பிரதிஷ்டா மகா கும்பாபிஷேகம் எதிர்வரும்(10.04.2015)வெள்ளிக்கிழமை நடைபெற உள்ளது.(08.04.2015)புதன்கிழமை குருமாரம்பமும்,(09.04.2015)வியாழக்கிழமை எண்ணெய்க்காப்பு சாத்துதலும் இடம்பெற்று அதனைத்தொடர்ந்து (10.04.2015)வெள்ளிக்கிழமை அருள்மிகு வீரபத்திரர் ஆலய ஆவர்த்தன பிரதிஷ்டா மகா கும்பாபிஷேகம் வெகு சிறப்பாக ஆரம்பமாகி நடைபெற உள்ளது.வீரபத்திரர் அடியார்கள் சிறப்பு பூஜைகளில் கலந்து கொண்டு இறையருளை பெற்றுய்யும் வண்ணம் கேட்டுக்கொள்ளப்படுகின்றனர்.மேலதிக விபரங்களுக்கு ஆலய நிர்வாகத்தினரை தொடர்பு கொள்ளவும்.
06 ஏப்ரல் 2015
நள்ளிரவு வீட்டுக்குள் புகுந்த சிப்பாய்! - துரத்திய மக்கள்!
முல்லைத்தீவு, உடையார்கட்டு பகுதியில் நேற்று முன்தினம் நள்ளிரவு வீடு ஒன்றுக்குள் புகுந்த படைச் சிப்பாயை அப்பகுதி மக்கள் விரட்டியடித்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. உடையார்கட்டு தேராவில் பகுதியில் நேற்றுமன்தினம் நள்ளிரவு 12மணியளவில் படைச்சிப்பாய் ஒருவர் இப்பகுதியில் உள்ள வீட்டிற்குள் நுழைந்துள்ளார்.
சிப்பாய் வீட்டுக்குள் நுழைவதை வீட்டிலிருந்தவர்கள் பார்த்துவிட்டு கூச்சலிட்டதையடுத்து அயலவர்கள் அப்பகுதியில் கூடி படைச்சிப்பாயை துரத்தியுள்ளனர். இந்நிலையில் படைச்சிப்பாய் அருகிலுள்ள படைமுகாமிற்குள் தப்பிச் சென்றுள்ளார். குறித்த படைச்சிப்பாய் ஓடி வருவதைப் பார்த்து படைமுகாமில் காவலில் நின்ற சிப்பாய் முகாமின் பிரதான வாயிலை திறந்து சிப்பாயை உள்ளே விட்டுள்ளார். இதனையடுத்து மக்கள் முகாமிற்குள் செல்ல முடியாத நிலையில் திரும்பியுள்ளனர்.
எனினும் புதுக்குடியிருப்பு பொலிஸாருக்கு விடயத்தை தெரியப்படுத்தியதையடுத்து, பொலிஸார் அப்பகுதிக்குச் சென்று விசாரணைகள் நடத்தியுள்ளதுடன், குறித்த வீட்டு உரிமையாளரை நேற்றுக் காலை பொலிஸ் நிலையத்திற்கு வருமாறும் அழைத்தனர். நேற்றுக்காலை குறித்த வீட்டாருக்கு அழைப்பினை எடுத்த பொலிஸார் விசாரணைக்கு வரவேண்டாம். படையினருடன் பேசி தீர்த்துக் கொள்ளுங்கள் என கூறியுள்ளனர்.
இதனையடுத்து குறித்த வீட்டுக்கு சென்ற படையினர், சிப்பாய் வீட்டுக்குள் வந்தது உண்மைதான் ஆனால் அந்த சிப்பாய் யார் என்பது தெரியவில்லை. வாயிலில் காவலுக்கு நின்ற சிப்பாயும் உண்மையை சொல்ல மறுக்கின்றான். எனவே சமாதானமாக போங்கள் என கேட்டுள்ளனர். ஆனால் சமாதானத்திற்கு மக்கள் முழுமையான மறுப்பினை தெரிவித்துள்ளனர்.
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)