
நான் என்ற ஆணவம் அதர்மமாக விஸ்வரூபமெடுத்தாலும்-ஒருநாள் தர்மத்தின் காலடியில் விழும்.
22 பிப்ரவரி 2015
நாரந்தனையில் கைகள் கட்டப்பட்ட நிலையில் இளம் பெண்ணின் உடலம்!

18 பிப்ரவரி 2015
'போரும் சமாதானமும்' நூல் அனுமதியின்றி மறுபிரசுரம்! - அடேல் பாலசிங்கம் அறிக்கை

இவ்வண்ணம்,
திருமதி அடேல் பாலசிங்கம்
16 பிப்ரவரி 2015
புலிகளின் சொத்துக்கள் எவையும் என்னிடம் இல்லை-கே.பி.
புலிகளின் நிதியோ,கப்பல்களோ அல்லது வேறு சொத்துக்களோ கைது செய்யப்பட்டபோது என்னிடம் இருக்கவில்லை. 2002 ஆம் ஆண்டில் இருந்து புலிகள் அமைப்புடனான தொடர்புகளுடன் இருந்து நான் ஒதுங்கியே வாழ்ந்து வந்தேன் என கே.பி என அழைக்கப்படும் குமரன் பத்மநாதன் தெரிவித்துள்ளார்.
பாதுகாப்புப் பிரிவைச் சேர்ந்த 40 பேரின் கடும் கண்காணிப்பின் கீழ் புனர்வாழ்வுக்கு ஒப்பான நிலையிலேயே கிளிநொச்சியில் தான் தங்கியுள்ளதாகவும் அவர் கூறினார்.
ஆட்சி மாற்றத்தின் பின்னர் கே.பியைக் கைது செய்து புனர்வாழ்வு அளிக்க வேண்டும். அவரிடம் இருக்கும் புலிகளின் சொத்துக்களை அரசுடமையாக்க வேண்டும் எனப் பல்வேறு தரப்புகள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றன.
இந்நிலையில், கிளிநொச்சி செஞ்சோலைச் சிறுவர் இல்லத்தில் இருக்கும் கே.பியை தமிழ் பத்திரிகை ஒன்று தொடர்பு கொண்டு இது குறித்து கேட்ட போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
மலேசியாவில் வைத்து நான் கைது செய்யப்பட்டு 24 மணிநேர விசாரணைகளின் பின்னர் எயார் லங்கா விமானம் மூலம் இலங்கைக்கு அனுப்பப்பட்டு இலங்கை அதிகாரிகளிடம் என்னை ஒப்படைத்தார்கள். அன்று முதல் பாதுகாப்புத் தரப்பினரின் தீவிர கண்காணிப்பின் கீழேயே வைக்கப்பட்டுள்ளேன் எனவும் அவர் கூறியுள்ளார்.
உங்கள் கட்டுப்பாட்டில் இருந்த விடுதலைப் புலிகளுக்குச் சொந்தமான கப்பல்கள் அரசு வசமானதாகக் கூறப்படுவது பற்றி என்ன கூறுகிறீர்கள் எனக் கேட்டபோது, நான் வழங்கிய தகவல்களின் பிரகாரம் எனது பொறுப்பில் இருந்த கப்பல்கள் இலங்கையால் கைப்பற்றப்பட்டதகாக் கூறப்படும் தகவல்களிலும் உண்மை இல்லை. அது பொறுப்பில்லாமல் சந்தேகத்தின் அடிப்படையில் வெளியிடப்பட்ட தகவல்கள் எனவும் அவர் குறிப்பிட்டார்;.
கைதான அல்லது சரணடைந்த விடுதலைப் புலிகள் அமைப்பைச் சேர்ந்த பலர் புனர்வாழ்வுக்ககு உட்படுத்தப்பட்டபோதும், நீங்கள் அவ்வாறான நடவடிக்கைக்கு உட்படுத்தப்படவில்லை எனக் கூறப்படும் குற்றச்சாட்டுக்கள் குறித்து என்ன சொல்கிறீர்கள் எனக் கேட்ட போது இந்தக் கேள்வியை முன்னைய அரசிடம்தான் நீங்கள் கேட்க வேண்டும் என கே.பி.தெரிவித்தார்.
நான் தற்போதும் கடும் பாதுகாப்புகளுக்கு மத்தியில் தீவிரமாகக் கண்காணிக்கப்பட்டே வருகின்றேன். எனது குடும்ப உறுப்பினர்களைக் கூட சுதந்திரமாக சந்தித்துப் பேச முடியாத நிலையே உள்ளது எனவும் அவர் சுட்டிக்காட்டினார்கள்.
உங்களிடம் பல பெயர்களில் பல நாடுகளின் கடவுச் சீட்டுக்கள் இருந்ததகாவும் கூறப்படுகிறதே அவை இலங்கை அரசிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதா? எனக் கேட்டபோது, எனக்கு கடவுச்சீட்டே இல்லை என அவர் பதிலளித்துள்ளார்.
12 பிப்ரவரி 2015
தீவகத்தில் மூடிய கிணறுகளில் உடல்கள்?

10 பிப்ரவரி 2015
முன்னாள் அரசியற்துறைப் பொறுப்பாளர் டொமினிக் காலமானார்!

08 பிப்ரவரி 2015
தீவகத்தில் கால் வைத்தால் அழிப்போம்!விந்தனுக்கு மிரட்டல்.
05 பிப்ரவரி 2015
அனந்திக்கு விசாரணையென்றால் சம்பந்தருக்கு என்ன?குருபரன்
1972 ஆம் ஆண்டு ‘சிலோன்’ குடியரசாகி ‘சிறீலங்கா’வாக மாற்றப்பட்ட அரசியலமைப்புச் செயன்முறையில் தமிழர்கள் ஒதுக்கப்பட்டதைத் தொடர்ந்து நடைபெற்று வரும் அனைத்து சுதந்திர தினக் கொண்டாட்டங்களை தமிழரசுக் கட்சியும், அது அங்கமாகவிருந்த தமிழர் விடுதலைக் கூட்டணி மற்றும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஆகியன புறக்கணித்துள்ளன.
சிறீலங்காவின் அரச கட்டமைப்பு தமிழர்களை உள்ளடக்கவில்லை என்ற காரணத்தினாலேயே இந்த முடிவு 40 வருடங்களுக்கு மேல் தொடர்ச்சியாகப் பின்பற்றப்பட்டு வந்தது. இது விடுதலைப் புலிகள் இயக்கம் எடுத்த முடிவல்ல. தமிழரசுக் கட்சியின் தலைவர் சா. ஜே. வே செல்வநாயகம் எடுத்த முடிவு.
இம்முடிவு ஒரு நாட்டிற்குள் தீர்வு காண்பதற்காண நிலைப்பாட்டுக்கு முரணானதென்று கொள்ளப்படுவதற்கும் இல்லை. எனின் இவ் 40 வருட கால கால முடிவை இன்று மாற்றுவதற்கு திருவாளர். சம்பந்தன் சொல்லும் நியாயம் என்னவென கேள்வி எழுப்பியுள்ளார் முன்னணி சிவில் சமூக செயற்பாட்டாளரும் சட்டத்தரணியுமான குமாரவடிவேல் குருபரன்.
நேற்றைய தினம் அமெரிக்க இராஜாங்க துணைச் செயலாளர் நிஷா பிஸ்வாலை சந்தித்த போது தமிழர் தொடபான விடயங்களில் அரசாங்கம் மந்த கதியில் செயற்படுவதாக தமிழ் தேசியக்கூட்டமைப்பு குற்றம் சாட்டியதாக ஏஎவ்பி இணையத்தளம் செய்தி வெளியிட்டுள்ளது.
சுதந்திர தினக் கொண்டாட்டங்களின் போது ஒரு சில அரசியல் கைதிகளின் விடுதலையையாவது எதிர்பார்ப்பதாக தெரிவித்ததாக அந்த செய்தி தெரிவிக்கின்றது. இது கூட நடைபெறாத நிலையில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்றக் குழுத் தலைவர் எக்காரணத்துக்காக இவ்வளவு பெரிய தடம் மாறும் முடிவை மேற்கொண்டார்?
தமிழரசுக் கட்சியின் சனாதிபதி தேர்தல் தொடர்பிலான முடிவொன்றை மீறியமைக்காக அனந்தி சசிதரனுக்கு எதிராக விசாரணை நடத்தப்படுகின்றது. 40 வருட முடிவை மீறியோருக்கெதிராக யார் நடவடிக்கை எடுப்பதெனவும் அவர் கேள்வியை முன்வைத்துள்ளார்.
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)