
நான் என்ற ஆணவம் அதர்மமாக விஸ்வரூபமெடுத்தாலும்-ஒருநாள் தர்மத்தின் காலடியில் விழும்.
11 ஜனவரி 2015
சுமந்திரனும் அமைச்சரானார்!

10 ஜனவரி 2015
மரக்கறி விற்கிறார் மகிந்த-கலகல போட்டோ!
தேர்தலில் தோல்வியடைந்துள்ள மகிந்தரின் வருங்கால நிலை இப்படி தான் இருக்கப்போகிறது என்று சித்தரிக்கப்படும் படம் ஒன்று பேஸ் புக்கில் சக்கை போடு போடுகிறது. என்ன தான் தேர்தலில் தோற்றாலும் மகிந்தவிடம் கோடி கோடியாக பணம் உள்ளது என்று சிலர் கூறுவார்கள். அவர் அதனை வைத்துக்கொண்டு இருப்பார் என்றும் சொல்லுவார்கள். ஆனால் தற்போது கிடைக்கும் சில தகவல்கள் அடிப்படையில் சரத் பொன்சேகாவையே பாதுகாப்பு செயலாளராக மைத்திரி நியமிக்க உள்ளார் என்று கூறப்படுகிறது. இதனை சுயாதீனமாக உறுதிசெய்ய முடியவில்லை. 2010 தேர்தலில் சரத் பொன்சேகா தேர்தலில் தோல்வியடைந்த பின்னர் அவரை கைதுசெய்து நொங்கெடுத்தார் மகிந்தர்.
இதனை சரத் பொன்சேகா அவ்வளவு எழிதில் மறந்துவிடுவார என்ன ? …எனவே மெல்ல மெல்ல பழிவாங்கல் ஆரம்பிக்க உள்ளது. தேர்தலில் வென்றவுடன் மகிந்தரை பழிவாங்க ஆரம்பித்தால். வெற்றிக் கழிப்பில் இவ்வாறு ஆடுகிறார்கள் என்று சிங்களவர்கள் கூறுவார்கள். எனவே மெல்ல மெல்லமாக, சில நடவடிக்கைகள் தொடங்கும். இதேவேளை இலங்கையில் இனி எவரும் போய், எனது கணவரை கோட்டபாய தான் கடத்தினார் என்று பொலிஸ் நிலையத்தில் சொல்லலாம். தற்போது கோட்டபாய சாதாரண ஒரு மனிதர். அவர் மீது பொலிஸ் நடவடிக்கை எடுத்துதான் ஆகவேண்டும். இவர்கள் கொட்டம் எல்லாம் 9ம் திகதியோடு அடங்கி ஒடுங்கிப் போய்விட்டது அல்லவா. வட கிழக்கு தமிழர்கள் மற்றும் முஸ்லீம் சகோதரர்கள் கொடுத்த நல்ல பாடம் இதுவாக தான் இருக்க முடியும்.
2010 ம் ஆண்டில் கூட மகிந்தருக்கு எதிராக சரத் பொன்சேகா போட்டியிட்டார். அந்தவேளையும் தமிழ் தேசிய கூட்டமைப்பு சரத் பொன்சேகாவுக்கு தமிழர்களை வாக்குப் போடச் சொன்னது. ஆனாலும் எவரும் அவருக்கு போடவில்லை. அனால் இம் முறை தமிழர்கள் மகிந்தருக்கு எதிராக காத்திரமான ஒரு முடிவை எடுத்திருக்கிறார்கள். ஆட்சி மாற்றம் வேண்டும். குடும்ப அரசியல் முடிவுக்கு கொண்டுவரவேண்டும் என்பதில் அவர்கள் உறுதியாக நின்றுள்ளார்கள். எனவே மக்கள் தெளிவாக இருக்கிறார்கள்.
09 ஜனவரி 2015
கே.ஸ்ரீபவன் முன்னிலையில் மைத்திரி சத்தியப்பிரமாணம் எடுப்பார்!

06 ஜனவரி 2015
கோத்தாவுடன் ஓடத் தயாராகும் கருணா… பிள்ளையான்!

01 ஜனவரி 2015
எட்டாம் திகதியின் பின் எதிர்க்கட்சியில் மகிந்த?

இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)