நல்லுார் ஆலய சுற்றாடலில் மாலை வேளைகளில் வெளியிடங்களில் இருந்து வரும் விபச்சாரிகளினால் பக்தா்கள் பெரும் சஞ்சலப்படுவதாகத் தெரியவருகின்றது.
கடந்த மூன்று நாட்களாக இவா்களின் தொல்லை அதிகரித்துள்ளதாக பக்தா்கள் சிலா் தெரிவித்துள்ளனா். முகப் பூச்சுக்கள் மற்றும் உதட்டுச் சாயங்கள் ஆகியவற்றுடன் கலா் கலரான ஆடைகளுடன் தனித்தனியே வரும் இவா்கள் ஆண்கள் அதிகம் உள்ள பகுதிகளில் நின்று அவா்களுடன் வலியவே கதைக்க முற்படுவதாகவும் தெரியவருகின்றது.
கைத் தொலைபேசிகளை வைத்திருக்கும் இவா்கள் வித்தியாசமான முறையில் ஆண்களுடன் தொடா்பு கொள்கின்றார்கள்.
கடந்த சப்பறத் திருவிழா அன்று நல்லுார்ப் பகுதியின் சைக்கிள் பாதுகாப்பு நிலையத்திற்கு அருகில் நின்ற ஒரு யுவதி தனது தொலைபேசிக்கு அழைப்பு எடுப்பதில் பிரச்சனை எனத் தெரிவி்த்து கோவிலுக்கு போவதற்காக சென்ற இளைஞனை அழைத்து தனது தொலைபேசிக்கு அழைப்பு எடுக்க சொல்லி அவன் அழைப்பு எடுத்து பரிசோதனை செய்த பின் நன்றி சொல்லி அனுப்பிவிட்டு அவனது இலக்கத்திற்கு இரவு வேளை தொடா்பு எடுத்துள்ளதாகத் தெரியவருகின்றது.
தான் வவுனியாவைச் சோ்ந்தவள் என்றும் தற்போது தான் பேரூந்தைத் தவறவிட்டு நிற்பதாகவும் தனக்கு இடம் ஒன்று தங்குவதற்கு தேவை எனவும் குறித்த இளைஞனுக்கு யுவதி தொலைபேசியில் தொல்லை கொடுத்துள்ளதாகவும் தெரியவருகின்றது.
இதே வேளை இவா்களில் சிலா் பொலிசாரின் ஆதரவுடன் செயற்படுவதாகவும் நேற்று இரவு நல்லுார் முத்திரைச் சந்திப் பூங்காவுக்குள் இவ்வாறான ஒரு பெண்ணையும் ஆட்டோச் சாரதி ஒருவரையும் சிலா் பிடித்த போது அப் பகுதிக்கு வந்த சீருடையில் இல்லாத பொலிசார் குறித்த பெண்ணை மீட்டுச் சென்றுள்ளனா். அந்த ஆட்டோச் சாரதியைக் கொண்டே ஆட்டோவில் ஏற்றிச் சென்றதாகத் தெரியவருகின்றது.
குறித்த பொலிசார் சீருடையில் இல்லாத காரணத்தால் பொலிசாரது இலக்கங்கள் இல்லாததால் பொலிசார் செய்யும் இவ்வாறான செயல்களை அடையாளப்படத்த முடியவில்லை என பொதுமக்கள் கவலை தெரிவிக்கின்றனா்.
நான் என்ற ஆணவம் அதர்மமாக விஸ்வரூபமெடுத்தாலும்-ஒருநாள் தர்மத்தின் காலடியில் விழும்.
26 ஆகஸ்ட் 2014
25 ஆகஸ்ட் 2014
மன்னாரில் தூக்கிட்ட நிலையில் சடலம் மீட்பு!
நன்றி:மலரும். கொம்
24 ஆகஸ்ட் 2014
மோசமான மனிதர்கள் வரிசையில் ராஜபக்சே, கோத்தபாய,பசில்!
வரலாற்றுக் காலம் தொட்டு தற்போதைய காலம் வரையிலான காலகட்டத்தில் மிகவும் மோசமான மனிதர்கள் பட்டியலில் ராஜபக்சே சகோதரர்கள் இடம் பிடித்துள்ளனர். இந்த மோசமான மனிதர்கள் பட்டியலில் முதலிடத்தைப் பிடித்துள்ளார் ரஷ்யாவின் ஸ்டாலின். 2வது இடத்தில் ஹிட்லர் இருக்கிறார். ரேங்கர் என்ற இணையதளம் இதுதொடர்பான ஒரு கருத்துக் கணிப்பை நடத்தி வருகிறது. அதில் பலரும் ஆன்லைன் மூலம் வாக்கெடுப்பில் கலந்து கொண்டு வாக்களித்து வருகின்றனர். தற்போதைய நிலவரப்படி இதில் ஸ்டாலின் முதலிடத்திலும், ராஜபக்சே 13வது இடத்திலும் உள்ளனர்.வரலாற்றிலேய மிகவும் மோசமான, அதி மோசமான, பயங்கரமான, சர்வாதிகரமான மனிதர்களை இதில் பட்டியலிட்டுள்ளதாக இந்த இணையதளண் கூறுகிறது.இந்தப் பட்டியலில் மக்களைக் கொன்று குவித்த சர்வாதிகாரிகள், மன நல பாதிப்பால் தொடர் கொலைகளைச் செய்தவர்கள், மதத் தலைவர்கள், கொடூரமான அரசியல்வாதிகள், பிரபலங்கள், நடிகர்கள் என பலரும் இணைக்கப்பட்டுள்ளனர்.இதில் யார் வேண்டுமானாலும் யாரை வேண்டுமானாலும் பரிந்துரைக்கலாம். வாக்களிக்கலாம். உலகின் மிகவும் மோசமான மனிதராக, முதலிடத்தைப் பிடிக்கும் நபர் அறிவிக்கப்படுவார்.ரஷ்யாவின் மறைந்த தலைவர் ஜோசப் ஸ்டாலின் இதில் முதலிடத்தைப் பிடித்துள்ளார்.2வது இடத்தில் ஜெர்மனியின் மறைந்த சர்வாதிகாரி அடால்ப் ஹிட்லர் இடம் பெற்றுள்ளார். லட்சக்கணக்கான யூதர்களைக் கொன்று குவித்தவர் ஹிட்லர்.அதேபோல சர்வாதிகாரி போபல்பாட் தற்போது 3வது இடத்தில் இருக்கிறார். இடி அமீன் 4வது இடத்தில் இருக்கிறார்.அல் கொய்தா நிறுவனர் ஒசாமா பின்லேடன் 5வது இடத்திலும், சீனத்து மா சே துங் 6வது இடத்திலும் உள்ளனர்.வட கொரியாவின் கிம் ஜோங் இல் 7வது இடத்தில் இருக்கிறார். ஹெய்ன்ரிச் ஹிம்ளர் 8வது இடைத்தைப் பிடித்துள்ளார்.அமெரிக்காவில் பிடிக்கப்பட்டு தூக்கிலிட்டுக் கொல்லப்பட்ட ஈராக் தலைவர் சதாம் உசேன் 9வது இடத்தைப் பிடித்துள்ளார்.10வது இடத்தில் இத்தாலி சர்வாதிகாரி பெனிட்டோ முசோலினி இருக்கிறார்.ராஜபக்சேவின் தம்பி கோத்தபயாவுக்கு இந்தப் பட்டியலில் 25வது இடம் கிடைத்துள்ளது.சோனியா காந்தியையும் இந்தப் பட்டியலில் சேர்த்துள்ளது ஆச்சரியம் தருகிறது,அவர் 29வது இடத்தில் இருக்கிறார்."கலைஞர் கருணாநிதி" - இந்தப் பெயர் 31வது இடத்தில் இடம் பெற்று மேலும் ஆச்சரியப்படுத்துகிறது.நம்ம சுப்பிரமணியம் சாமிக்கும் கூட இங்கு இடம் கிடைத்துள்ளது. இவருக்குக் கிடைத்துள்ள இடம் 34 ஆகும்.ராஜபக்சேவின் இன்னொரு தம்பியான பசில் ராஜபக்சே 48வது இடத்தில் இருக்கிறார். பல ஆயிரம் கோடி சொத்துக்களை இவர் குவித்துள்ளதாக அதில் குறிப்பு உள்ளது.ராஜபக்சேவை இந்த இணையதளத்தில் கழுவிக் கழுவி ஊற்றியுள்ளனர். மிகவும் மோசமான மனிதராக திகழும் ராஜபக்சேவை பட்டியலில் முதலிடத்தில் வைக்க வேண்டும் என்று பலரும் விரும்புவதாகவும் இணையதளம் கூறியுள்ளது.
நீதியே இல்லாத நாட்டில் நீங்கள் நீதி அமைச்சராக இருக்கும்போது..?
நீதியே இல்லாத நாட்டில் நீங்கள் நீதியமைச்சராக இருக்க முடியும் என்றால், கடல்வளம் இல்லாத நாட்டில் ஏன் நான் கடல்சார் அமைச்சராக இருக்க
முடியாது? என்று நீதியமைச்சர் ரவூப் ஹக்கீமிடம், சுவிட்சர்லாந்து அமைச்சர் ஒருவர் கேள்வி எழுப்பிய சுவாரசியமான சம்பவம் குறித்த தகவலை நாடாளுமன்றில் வெளியிட்டார் ஜெ.ஸ்ரீரங்கா எம்.பி. நாடாளுமன்றில் ஒத்திவைப்புவேளை பிரேரணை மீதான விவாதத்தில் உரையாற்றுகையிலேயே அவர் இந்தத் தகவலை வெளியிட்டார். அதாவது, கடல்சார் ஒப்பந்த மொன்றில் கைச்சாத்திடுவதற்காக சுவிட்சர்லாந்து அமைச்சர் ஒருவர் கொழும்பு வந்துள்ளார். அவருடன் நீதியமைச்சர் ஹக்கீமே உடன்படிக்கையில் கைச்சாத்திட்டுள்ளார். இதன்போது, குறித்த அமைச்சரிடம் எமது நீதிஅமைச்சர் கேள்வியொன்றை எழுப்பியுள்ளார். "சுவிட்சர்லாந்தில் கடல் வளம் இல்லை. எனவே, எதற்காக கடல்சார்உடன்படிக்கையில் கைச்சாத்திடுகின்றீர்கள்" என்பதே அந்தக் கேள்வியாகும். இதற்கு பதில் வழங்கிய சுவிட்சர்லாந்து அமைச்சர், "நீதியே இல்லாத நாட்டில் நீங்கள் நீதியமைச்சராக இருக்க முடியும் என்றால், கடல்வளம் இல்லாத நாட்டில் ஏன் நான் கடல்சார் அமைச்சராக இருக்கு முடியாது?'' என்று கேள்வி எழுப்பியுள்ளார் என்று ரங்கா எம்.பி. குறிப்பிட்டார். அதேவேளை, சபை ஒத்திவைப்பு வேளை பிரேரணை மீதான விவாதத்தில் உரையாற்றிய ரங்கா எம்.பி., "இலத்திரனியல்அடையாள அட்டைக்கு தனிப்பட்ட விவரங்கள் கோரப் பட்டுள்ளன. இவ்வாறு தனிப்பட்ட விவரங்கள் கோரப்படுவது தமிழர்களுக்கு புதுமையான விடயமல்ல. முன்னர் வடக்கு, கிழக்கில் இருந்த நடைமுறை இன்று தெற்குவரை வியாபித்துள்ளது. நாட்டில் தகவல் அறியும் சட்டம் இல்லை. தரவுகளை பாதுகாப்பது சம்பந்தமான சட்ட ஏற்பாடும் இல்லை. இந்நிலையில் எவ்வாறு தனிப்பட்ட தரவுகளை பாதுகாக்க முடியும். தகவல்கள் கசியுமானால் பாதிக்கப்பட்ட தரப்பினர் எவ்வாறு சட்டத்தின் நிவாரணத்தைப் பெறுவது? எனவே, சட்டத்துக்கு புறம்பான வகையில் இலத்திரனியல் அட்டைக்குரிய விண்ணப்பங்களை விநியோகிப்பவர்களை கைதுசெய்ய வேண்டும்" என்றார்.

22 ஆகஸ்ட் 2014
சமீரா ரெட்டியை தமிழ் திரையுலகம் புறக்கணிக்க கோரிக்கை!
ராஜபக்சே மகன் நாமலுடன் ஆட்டம் போட்ட நடிகை சமீரா ரெட்டியைப் தமிழ் சினிமாக்காரர்கள் புறக்கணிக்க வேண்டும் என்று கோரிக்கை எழுந்துள்ளது. ஈழத்தில் ஒன்றரை லட்சம் தமிழர்களை சிங்கள ராணுவம் கொன்று குவித்தது. இதனால் இலங்கைக்கு நடிகர், நடிகைகள் யாரும் செல்லக் கூடாது என தமிழ் திரையுலக கூட்டமைப்பு ஏற்கனவே தடை விதித்துள்ளது.இந்த தடையை மீறி இலங்கை சென்ற நடிகை அசினை, நடிகர் சங்கம் கண்டித்தது. இன்று வரை அவரால் மீண்டும் தமிழ் சினிமாவில் கால் வைக்கவே முடியாத நிலை உள்ளது. இந்நிலையில், இலங்கை அதிபர் ராஜபக்சே மகன் நாமல் ராஜபக்சேவுடன் நடிகை சமீரா ரெட்டி கட்டிப் பிடித்தபடி மிக நெருக்கமாக இருக்கும் படம் தற்போது இணையதளத்தில் வெளியாகி, பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ராஜபக்சே மகனுடன் நெருக்கமாக இருக்கும் சமீரா ரெட்டியை கண்டித்து, இந்து மக்கள் கட்சி வெளியிட்டுள்ள அறிக்கையில், "ஈழத்தமிழர்களை கொன்று குவித்த இலங்கை அதிபர் ராஜபக்சேவை உலகமே கண்டிக்கிறது. இந்த நிலையில், அவரது மகன் நாமலுடன் சமீரா ரெட்டி நெருக்கமாக இருக்கும் படங்கள் வெளியாகி, தமிழர்களின் வெந்த புண்ணில் வேல் பாய்ச்சியுள்ளது. சமீரா ரெட்டியை தமிழ் திரையுலகம் புறக்கணிக்க வேண்டும்," என்று கூறியுள்ளார். இன்னொரு முன்னணி நடிகையான கங்கனா ரணவத்தும் (தாம் தூம் பட நாயகி) இலங்கைக்குப் போய் ராஜபக்சே மாளிகையில் விருந்துண்டு, ஆட்டம் போட்டுவிட்டு வந்தவர்தான் என்பது குறிப்பிடத்தக்கது.
21 ஆகஸ்ட் 2014
முன்னாள் ஈ.பி.டி.பி உறுப்பினர் மீது தாக்குதல்!
முற்போக்கு தேசிய தமிழ் கட்சியின் செயலாளர் விஜயகாந்த் இன்று வியாழக்கிழமை மாலை 6.45 மணியளவில் நல்லூர் செட்டித்தெரு வீதியில் வைத்து இனந்தெரியாதவர்களால் தாக்கப்பட்டார். காயங்களுக்கு உள்ளான இவர் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளார். நல்லூர் ஆலயத்திற்கு சென்று விட்டு வீடு திரும்பிக்கொண்டு இருக்கும் போதே இந்த தாக்குதல் சம்பவம் இடம்பெற்றுள்ளது. பொது மக்கள் பலரும் பார்த்திருக்க இவர் தாக்கப்பட்டுள்ளார். இவரை தாக்கியவர்கள் பற்றிய விவரங்கள் எவையும் தெரியவரவில்லை. யாழ்ப்பாணத்தில் உள்ள சிறீலங்கா பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டுள்ளார்கள் என கூறப்படுகிறது.
20 ஆகஸ்ட் 2014
மாணவர் போராட்டத்தால் பணிகிறது புலிப்பார்வைக்குழு!
கோமாளியின் பேச்சை நாம் கேட்கும் அவசியம் இல்லை!
சுப்பிரமணியம் சுவாமி இந்திய அரசியலின் கோமாளி. அவர் சொல்வதை கேட்கவேண்டிய அவசியம் எமக்கில்லை. - இவ்வாறு தெரிவித்திருக்கிறார் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினரும்,பேச்சாளருமான சுரேஸ் பிரேமச்சந்திரன். தமிழ் தேசிய கூட்டமைப்பின் இந்திய விஜயம் தொடர்பாக சுவாமி தெரிவித்துள்ள கருத்துக்கள் குறித்து பதிலளிக்கையிலேயே அவர் இதனைத் தெரிவித்துள்ளார். அவர் மேலும் தெரிவித்துள்ளவை வருமாறு:- தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு என்ன செய்யவேண்டும், இலங்கை அரசு என்ன செய்யவேண்டும் என்பதை சுப்பிரமணிய சுவாமி தீர்மானிக்க முடியாது. அவர் ஒரு வெளியாள். அவர் இந்திய அரசியலில் ஒரு கோமாளி. இதனால் அவர் சொல்வதையெல்லாம் முக்கியமாகக் கருத வேண்டிய அவசியமில்லை. தமிழ்த் தேசிய கூட்டமைப்பு பிரதிநிதிகள் குழு 21ஆம் திகதி புதுடில்லி பயணமாகிறது, புதிய அரசாங்கம் பதவி ஏற்ற பின்னர் இடம்பெறவுள்ள இந்த சந்திப்புகளின் போது பல முக்கிய விடயங்கள் குறித்து கலந்துரையாடப்படலாம். இந்திய பிரதமரையும், வெளிவிவகார அமைச்சரையும் சந்திக்க நாம் எண்ணியுள்ளோம். இந்திய அரசாங்கம் 13 ஆவது திருத்தம் குறித்து உறுதியாகவுள்ளதால் அதனை நடைமுறைப்படுத்த இந்தியாவின் உதவியை கோருவோம் என்றார்.
19 ஆகஸ்ட் 2014
அத்தானுடன் தலைமறைவான மைத்துனி,தீவகத்தில் நடந்த அசிங்கம்!
கடந்த மாதம் சுவிஸ் நாட்டில் இருந்து குடும்பமாக யாழ்ப்பாணத்திற்கு வந்த நபா் ஒருவா் தனது மனைவியி்ன் தங்கையுடன் தலைமறைவானார். தீவகப் பகுதியில் இடம்பெற்ற இச்சம்பத்தில் மனைவி தற்போது தனது கணவனையும் தங்கையையும் தேடி வருவதாகத் தெரியவருகின்று.
தலைமறைவான நபருக்கு வயது 38 என்றும் மனைவியின் தங்கைக்கு 20 வயது எனவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. மனைவியின் தங்கையுடன் கணவா் வெளிநாட்டில் இருக்கையில் தொடா்ந்து ஸ்கைப்பில் கதைத்து வருவதும் அவளுக்கு பல தடவைகள் தனிப்பட்ட முறையில் பணம் அனுப்பியமையும் தனக்கு தெரிந்திருந்தாலும் தனது கணவா் இந்த நோக்கத்திற்காகத் தான் இவ்வாறு செய்தார் எனத் தெரியவில்லை என மனைவி அழுதபடி உள்ளதாக தெரயவருகின்றது.
இரு குழந்தைகளின் தந்தையான குறித்த நபா் தற்போது மனைவியி்ன் தங்கையுடன் கொழும்புப் பகுதியில் தங்கியுள்ளதாகவும் அவருக்கு தொலைபேசியில் மனைவி எடுக்கும் போது மனைவியின் தங்கையே கதைத்து வருவதாகவும் தாங்கள் திருமணம் முடிக்கவுள்ளதாகவும் தன்னை அவரிடம் இருந்து பிரிக்க வேண்டாம் என மனைவியின் தங்கை கேட்டுள்ளதாகவும் மனைவியின் உறவினா்கள் தெரிவித்துள்ளனா் என செய்தியொன்று தெரிவிக்கின்றது.
கத்தி,புலிப்பார்வையை எதிர்த்து 65அமைப்புக்கள் ஓரணியில்!
சர்ச்சைக்குரிய கத்தி மற்றும் புலிப்பார்வை ஆகிய திரைப்படங்களை ஏன் எதிர்க்கிறோம் என்பதற்கான கூட்டு விளக்க அறிக்கையை 65 அமைப்புகளின் பிரதிநிதிகள் கையெழுத்திட்டு வெளியிட்டுள்ளனர். சென்னையில் இன்று தமிழர் வாழ்வுரிமைக்கான கூட்டமைப்பின் ஏற்பாட்டில் அரசியல் கட்சிகள், தமிழர் அமைப்புகள், மாணவர் அமைப்புகளின் நிர்வாகிகள் மற்றும் மனித உரிமை செயற்பாட்டாளர்கள் 65 பேர் பங்கேற்ற ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இக் கூட்டத்தின் முடிவில் "கத்தி, புலிப்பார்வை திரைப்படத்தை எதிர்ப்பது ஏன்?" என்ற தலைப்பில் வெளியிடப்பட்ட கூட்டறிக்கை:
புலிப் பார்வை
அன்று வியட்நாம் போரின் கொடூரத்தை உலககுக்கு எடுத்துச் சொன்னது ஒரு சிறுமியின் படம்.. அதேபோல் தமிழீழ விடுதலைப் போரின் உச்ச கொடூரத்தை சர்வதேச சமூகம் முன்வைத்தது தமிழீழ தேசியத் தலைவர் மேதகு பிரபாகரனின் இளைய மகன் பச்சிளம் பாலகன் பாலச்சந்திரன் குறித்த புகைப்படங்கள்..சிங்கள வல்லூறுகளிடம் உயிருடன் சிக்கி நெஞ்சப் பரப்பெங்கும் வஞ்சகத்தார் துப்பாக்கி குண்டுகளால் துளைத்த அந்தப் பிஞ்சுவின் புகைப்பட காட்சிகள் கண்டு கதறியழுது கண்ணீர் விடாத இதயம் எதுவும் இல்லை... தற்போது பாலச்சந்திரனின் வாழ்க்கை வரலாற்றைச் சொல்வதாக கூறும் வகையில் புலிப் பார்வை என்ற திரைப்படம் வெளியாக இருக்கிறது. இதன் காட்சிகளைப் பார்க்கும் மனசாட்சி உள்ள எந்த மனிதருமே இப்படி ஒரு அப்பட்டமான இனத்துரோக சிந்தனையுடன் கூடிய படம் தமிழகத்தில் இருந்து வெளியாகிறதே? என்று கொந்தளிக்கத்தான் செய்வார்கள்.
ஏனெனில்
இந்த படத்தின் காட்சிகள் அனைத்திலுமே பாலகன் பாலச்சந்திரன் 'சிறார் போராளியாக' சித்தரிக்கப்படுகிறார்... இது உண்மைக்கு மாறானது. - அத்தனை காட்சிகளிலுமே துப்பாக்கியுடனும் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்க சீருடையுடனுமே பாலச்சந்திரன் 'பாத்திரம்' வலம் வருகிறது.. உச்சகட்ட கொடூரமாக தமிழீழ தேசியத் தலைவர் மேதகு பிரபாகரன், பாலச்சந்திரனுக்கும் சிறார்களுக்கும் ஆயுத பயிற்சி கொடுப்பதாக காட்சிகள் வருகின்றன. இவை அனைத்துமே சிங்களத்தின் பொய்யுரைக்கு வலுச்சேர்க்கவே பயன்படும். தமிழீழத் தேசியத் தலைவர் பிரபாகரனின் மகன் பாலச்சந்திரன் தொடர்பான உண்மை புகைப்படம் எதனிலும் அவர் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கச் சீருடையுடன் ஆயுதப் போராளியாக இருந்ததே கிடையாது. தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கம் ஆளுமை செலுத்திய காலத்தில் பாலகன் பாலச்சந்திரன், அங்கு கல்வி கற்றுக் கொண்டிருந்தார். அது தொடர்பான செய்திகளும் படங்களும் உலகத்தின் பார்வைக்கும் வந்திருக்கின்றன. ஆனால் போர்முனையில் பாலகன் பாலச்சந்திரன் பலியானதாக காட்டி அந்தப் படுகொலையை நியாயப்படுத்தத் துடிக்கிறது 'புலிப் பார்வை' திரைப்படம். இது சிங்களப் பேரினவாதத்தின் பொய்யுரைக்கு வலு சேர்க்கிற திரைப்படம். பாலகன் பாலச்சந்திரன் போன்ற பிஞ்சுக் குழந்தைகளையும் அப்பாவி பொதுமக்களையும் ஈவிரக்கமின்றி சிங்களப் பேரினவாதம் படுகொலை செய்ததை நியாயப்படுத்துகிற இனவெறியின் உச்சகுரலே 'புலிப் பார்வை' திரைப்பட,ம். இனக்கொலை புரிந்த குற்றச்சாட்டின் பேரில் சிங்களப் பேரினவாத அரசு பன்னாட்டுப் புலனாய்வுக்கு உள்ளாகியிருக்கும் நேரத்தில் சிங்களத்தைக் காப்பாற்றும் முயற்சியாக இத்திரைப்படம் வந்துள்ளது. இதை நாங்கள் வன்மையாகக் கண்டிக்கிறோம். கத்தி
இயக்குநர் ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் நடிகர் விஜய் நடிக்கும் கத்தி திரைப்படம் குறித்து பல்வேறு சர்ச்சைகள் கடந்த ஒரு மாத காலமாக ஓடிக் கொண்டிருக்கிறன. தமிழீழ பிரச்சனையில் ஒட்டுமொத்தம தமிழகமே ஒன்று திரண்ட நிலையில், இலங்கை பேரினவாத அரசு மீது பொருளாதார தடை விதிக்க வலியுறுத்தி தமிழ்நாட்டு சட்டமன்றத்தில் ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. ஆனால் சிங்களப் பேரினவாதமும் அதன் தலைமைத்துவத்தில் இருக்கிற போர்க்குற்றவாளியான ராஜபக்சேவும் ஒட்டுமொத்த தமிழினத்தின் கொந்தளிப்பை கொச்சைப்படுத்த, திசை திருப்ப, மழுங்கடிக்க கையில் எடுத்த உத்திதான் தமிழ்நாட்டு சட்டமன்ற தீர்மானத்தை தோற்கடிக்கும் வகையில் தமிழ்த் திரை உலகத்துக்குள் பணத்தை பாய்ச்சுவது என்பது. தமிழ்த் திரை உலகத்தில் ஐங்கரன் கருணாவை அனைவரும் அறிவர். ஆனால் அவருடன் மெல்ல மெல்ல லைக்கா என்ற நிறுவனம் இணைந்து கோடம்பாகத்தில் கால்பதித்தது. அத்துடன் இயக்குநர் முருகதாஸ் இயக்கத்தில் நடிகர் விஜய் நடிக்கும் திரைப்படத்தை தயாரிக்கிறது லைக்கா நிறுவனம். இந்த தகவல்கள் வெளியானது முதலே லைக்கா நிறுவனத்துக்கும் ராஜபக்சே குடும்பத்துக்குமான உறவுகள் என்ன என்பது குறித்து நீண்ட பட்டியல்கள் வெளிவந்து கொண்டிருக்கின்றன. லைக்கா நிறுவனமே இந்தியாவில் இல்லை என்று சொன்னபோது சென்னையிலே அதன் அலுவலகம் இருப்பதும் சுட்டிக்காட்டப்பட்டிருக்கிறது. இதற்கெல்லாம் மேலாக லைக்காவின் சுபாஸ்கரன் அல்லிராஜா ஒரு ஈழத் தமிழர் என்று சப்பை கட்டு கட்டப்படுகிறது. ஆமாம் சுபாஸ்கரன் அல்லிராஜா ஒரு ஈழத் தமிழர்தான். சந்தேகம் இல்லையே... ஆனால் முள்ளிவாய்க்காலில் கொத்து கொத்தாக உறவுகள் படுகொலை செய்யப்பட்ட போது நம் இனத்தின் மீது நச்சுகுண்டுகளை வீசிய அதே சிங்கள ராணுவத்தின் ஹெலிகாப்டரில் போய் இறங்கும் அளவுக்கு ராஜபக்சே கும்பலிடம் செல்வாக்கு கொண்ட இன்னொரு டக்ளஸும் கருணாவும்தான் இந்த சுபாஸ்கரன் என்பது உலகத் தமிழினம் நன்கறியும். முருகதாஸ், விஜய் என்ற தமிழர்கள் செய்யும் இனத்துரோகத்தை இனமானம் உள்ள எந்த ஒரு தமிழனும் ஏற்க முடியாது. உலகத்தையே உலுக்கிய இனப்படுகொலையை நிகழ்த்திய போர்க்குற்றவாளிகளின் கரங்களில் படிந்திருப்பது நம் தொப்புள்கொடி உறவுகளின் ரத்தம் என்பதை மறந்துவிட முடியாது.. ஒரு மனிதனாக இந்த நூற்றாண்டின் மிகப் பெரிய மனிதப் பேரவலத்தை நிகழ்த்திய மிக மோசமாக மனித உரிமைகளை காலில்போட்டு மிதித்த போர்க்குற்றவாளியான ராஜபக்சேவுடன் யார் கரம் குலுக்கினாலும் மன்னிக்கவும் முடியாது. இப்படி புலிப் பார்வை, கத்தி போன்ற திரைப்படங்கள் தமிழினத்தின் உளவியல் சிந்தனை மீது நடத்தப்படுகிற போரின் வெளிப்பாடே! சிறீலங்காவை புறக்கணிப்போம், அதன் மீது பொருளாதார தடைவிதிப்போம்! என்ற முழக்கம் தமிழகத்திலும் உலகெங்கிலும் எழுந்து வரும் நிலையில் தமிழகத்துக்குள்ளேயே சிங்களம் தலை நுழைத்து தொழில், வணிகம் செய்கிற முயற்சியை தமிழர்கள் ஒருபோதும் அனுமதிக்கக் கூடாது. சிங்களத்தின் உளவியல் போரை வெல்ல தமிழர்களாய் ஓரணியில் ஒன்று திரள்வோம்! தமிழீழ விடுதலையை மீட்டெடுப்போம்! இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

18 ஆகஸ்ட் 2014
சீமானிடம் சில கேள்விகள்!
வணக்கம்.
"லட்சம் பிரச்சினையோட போராடிகிட்டிருக்கேன், நீ வந்துட்ட கத்தி சுத்தின்னு." என்று சினத்தோடு நீங்கள் சீறிக் கொண்டிருக்கும் இந்த நிலையிலும் தவிர்க்க இயலாத சூழலில் சில கேள்விகளை "கோடானுகோடி தம்பி"களில் ஒருவரனாய் எழுப்ப வேண்டி இருக்கிறது.. "நீ யார் என்னை கேள்வி கேட்கிற.. நான் மட்டும்தான் கிடைத்தேனா?" என்று இதற்கும் நீங்கள் சீறிவிட வேண்டாம்...ஏனெனில் நிகழ்வுகள் உங்களைச் சுற்றியதானது.. உங்களுடன் தொடர்புடையது மட்டுமே என்பதால் இக்கேள்விகள்..
தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத் தலைவர் பிரபாகரனின் இளைய மகன் பாலச்சந்திரனை புலிச் சீருடையிலும் கையில் துப்பாக்கியுமாக புலிப்பார்வை திரைப்படம் சித்தரிப்பதை நீங்கள் அப்படியே முற்று முழுதாக ஏற்கிறீர்களா?
புலிப்பார்வை படமானது பாலச்சந்திரன் உள்ளிட்ட சிறுவர்களுக்கும் ஆயுத பயிற்சி கொடுத்து பிரபாகரன் 'சிறார் போராளி'களை உருவாக்கினார் என்கிறது.. இதைத்தான் சிங்கள பேரினவாதமும் காலம் காலமாக சொல்கிறது.. சிங்களத்தின் கூற்றை அப்பட்டமாக வழிமொழிகிறது புலிப்பார்வை.. இதை நீங்களும் சரி வழிமொழிகிறீர்களா?
வெற்றுடம்பில் சிங்களத் தோட்டாக்களுடன் பாலகன் பாலச்சந்திரன் வீழ்த்தப்பட்டு கிடப்பதுதான் தமிழர் மனங்களில் ஆழப்பதிந்து கிடக்கும் சித்திரம்.. இந்த சித்திரத்தை அகற்றிவிட்டு புலிச்சீருடை பாலச்சந்திரனை திணிப்பது தமிழர் மனங்களின் மீதான சிங்கள உளவியல் யுத்தம் என்பதை நீங்கள் மறுக்கிறீர்களா?
புலிப்பார்வை இசைவெளியிட்டு விழாவில் மாணவர்கள் மீது தாக்குதல் நடத்தியதை நீங்கள் மேடையில் கண்டிக்காமல் மவுனமாக இருந்தது ஏனோ?. - புலிப்பார்வை திரை இசை வெளியீட்டு விழாவில் முழக்கங்களை மாணவர்கள் எழுப்பியது தவறு என்கிறீர்களா?
ஆனால் நாம் தமிழர் மாணவர் பாசறையானது, மாணவர்களைத் தாக்கியது ஒரு குறிப்பிட்ட கட்சியினர்தான்; அதை வன்மையாக கண்டிக்கிறோம்" என்கிறது.. அப்படியானால் உங்கள் நிலைப்பாடு வேறு.. உங்களது மாணவர் பாசறை அமைப்பின் நிலைப்பாடு வேறா?
இலங்கை மீது பொருளாதாரத் தடை விதிக்க வேண்டும் என்று தமிழ்நாட்டு அரசு தடை விதித்த பின்னரும் இலங்கையில் கல்வி நிறுவனங்களை ஒரு தமிழக குழுமம் நடத்துகிறது.. அதற்கு தமிழகம் எதிர்ப்பு தெரிவிக்கிறது.. ஆனால் அந்த குழுமத்தின் தலைவரை நீங்கள் புகழ்கிறீர்களே.. அவரது திரைப்படத் தயாரிப்பான புலிப்பார்வையை ஆதரிக்கிறீர்களே அப்படியானால் இலங்கை மீது பொருளாதார தடை விதிக்கக் கோரி தமிழக அரசின் தீர்மானம் தவறு என்கிறீர்களா?
கத்தி திரைப்படத்தை தயாரிக்கும் லைக்கா நிறுவனம் ராஜபக்சேவின் உறவினர்களுடன் தொடர்புடையது என்று ஒட்டுமொத்த தமிழகமே கூறுகிற போது எனக்குத் தெரியவே தெரியாது என்று மழுப்புகிறீர்களே.. உங்கள் மீதான நம்பகத்தன்மைக்கு நீங்களே கண்ணிவெடி வைத்துக் கொள்கிறீர்கள் என்பது புரியவே இல்லையா?
விஜய்யும், முருகதாஸும் தமிழ்ப்பிள்ளைகள்.. அவர்களது திரைப்படத்தில் தவறு இருந்தால்தான் குரல் கொடுப்பேன் என்கிறீர்களே,, அப்படியானால் தமிழ்ப் பிள்ளைகளான டக்ளஸும் கருணாவும் திரைப்பட நிறுவனத்தை உருவாக்கி அந்த நிறுவனத்துக்காக ஒரு திரைப்படத்தில் விஜய் நடிக்க முருகதாஸ் இயக்கினால் அதிலும் "கருத்துப் பிழை"யை மட்டும்தான் பார்த்து அண்ணன் நீங்கள் எதிர்ப்பீர்களோ?
லட்சம் பிரச்சனைகளோடு போராடிக் கொண்டிருக்கும் போது கத்தி, சுத்தி என்று வந்துவிட்டதாக பதவிகளுக்கு வந்துவிடாத நீங்களே சலித்துக் கொள்ளும் போது, அரசியல் மற்றும் அரசு பதவிகளில் ஆண்டாண்டுகாலமாக இருப்பவர்களுக்கு கோடானுகோடி பிரச்சனைகள் இருக்கும் போது அவர்கள் எப்படி கத்தி சுத்தி அல்லது நீங்கள் சொல்கிற ஈழம் போன்ற பிரச்சனைகளுக்கு போராட முன்வருவார்கள்?
அவர்களை மட்டும் நீங்கள் குறைசொல்லி கொந்தளிப்பது சரி அல்லதானே?இத்தனை கேள்விகளை உங்கள் முன் ஏன் வைக்கிறோம் எனில் தமிழகத்தில் இருக்கிற அத்தனை பேரும் துரோகிகள், சந்தர்ப்பவாதிகள்..அதனால்தான் தமிழ்ப் பிள்ளைகள் நாங்கள் கட்சி துவங்க வேண்டியதாயிற்று என்று பொதுமேடைகளில் பேசிக் கொண்டிருக்கிறீர்கள் நீங்கள்.. ஒருவேளை உங்களுக்கு முந்தையவர்களுக்கு சற்றும் சளைத்தவரில்லை என்பதைப் போல நீங்களும் இருக்கிறீர்களோ என்ற ஐயத்தின் மீது எழுந்த கேள்விகள்தான் இவை.. வேறு ஒன்றும் இல்லை..
இப்படிக்கு
உங்களில் ஒருவன்..

இலங்கை இனப்படுகொலை தொடர்பில் ஐ..நா.விசாரிக்கவேண்டும்!

17 ஆகஸ்ட் 2014
பருத்தித்துறையில் மோதிக்கொண்ட விடுகாலிகள்!
16 ஆகஸ்ட் 2014
படையில் இணைந்த தமிழ் பெண் மர்மமரணம்!
முல்லைத்தீவு, ஒட்டுசுட்டான் பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட செல்வபுரம் கிராமத்திலிருந்து இராணுவத்தில் இணந்து கொண்ட பெண் ஒருவர்
நேற்றைய தினம் மர்மமான முறையில் உயிரிழந்த சம்பவம் பெரும் பரப்பை உருவாக்கியிருக்கின்றது. மேற்படி கிராமத்திலிருந்து கடந்த வைகாசி மாதம் 22ம் திகதி பிரசாத் அஜந்தா என்ற பெண் இராணுவத்தில் இணைந்துள்ளார். இவருக்கு 6 வயதில் ஒரு மகளும் உள்ளார். இந்நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்னர் இராணுவ பயிற்சியில் ஈடுபட்டிருந்தபோது, குறித்த பெண்ணுக்கு உடல் சுகயீனம் உண்டானதாக தெரிவித்திருக்கும் இராணுவத்தினர், பின்னர் இவரை யாழ். போதனா வைத்தியசாலையில் சிகிச்சைகளுக்காக அனுமதித்திருந்ததாகவும், அங்கே சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாகவும் தெரிவித்திருக்கின்றனர். குறித்த பெண்ணின் சடலம் ஒட்டுசுட்டான்- செல்வபுரம் கிராமத்திலுள்ள அவருடைய கணவர் மற்றும் பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டு பின்னர் இராணுவ மரியாதைகளுடன் செல்வபுரம் கிராமத்திற்கு அருகிலுள்ள செல்வபுரம் மயானத்தில் அடக்கம் செய்யப்பட்டுள்ளது. கடந்த வருடத்தின் நிறைவிலும், இவ்வருடத்தில் ஆரம்பத்திலும் இராணுவத்தில் பல பெண்கள் இணைத்துக் கொள்ளப்பட்டிருந்த நிலையில், அவர்களுக்கு பயிற்சியின்போது கடுமையான தாக்குதல்கள் நடத்தப் படுவதாகவும், பாலியல் ரீதியான துன்புறுத்தல்கள், உண்டாக்கப்படுவதாகவும் சுட்டிக்காட்டப்பட்டிருக்கின்றது. இந்நிலையில் குறித்த பெண்ணின் மரணம் சம்பவித்துள்ளதுடன், உயிரிழந்த பெண்ணின் சடலம் அவசர அவசரமாக தகனம் செய்யப்பட்டும் உள்ளது. குறித்த சம்பவம் பெரும் சர்ச்சையினையும் உருவாக்கியுள்ளது.

15 ஆகஸ்ட் 2014
நாடு திருந்தவேண்டுமானால் புலி வரவேண்டும்!
யாழ்ப்பாணம், கரவெட்டி, வதிரி ஆண்டாள் வளவுப் பகுதி வீடொன்றில் தனித்திருந்த பெண்ணை, உள்ளாடையுடன் சென்று கட்டிப்பிடித்த இரண்டு பிள்ளைகளின் தந்தையான குடும்பஸ்தர் ஒருவரை கைது செய்துள்ளதாக நெல்லியடி பொலிஸார் தெரிவித்தனர் என கூறப்படுகிறது.நேற்று வியாழக்கிழமை (14) மாலை இந்த சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
மேற்படி பகுதியில், திருமணமான பெண்ணொருவர், அவரது கணவர் வெளிநாட்டில் வசித்து வருகின்ற நிலையில் தனிமையில் வசித்து வருகின்றார். மேற்படி பெண்ணின் வீட்டிற்கு ஓரிரு வீடுகள் தள்ளி வசிக்கும் இரண்டு பிள்ளைகளின் தந்தையான 34 வயது குடும்பஸ்தர், வியாழக்கிழமை (14) மதியம் பெண்ணின் வீட்டிற்கு உள்ளாடையுடன் சென்று மேற்படி பெண்ணைக் கட்டிப்பிடித்துள்ளார்.
இதனால், குறித்த பெண் கூக்குரலிடவே, சந்தேகநபர் தப்பித்து ஓடியுள்ளார். இதனையடுத்து, அப்பெண் நெல்லியடி பொலிஸ் நிலையத்தில் வியாழக்கிழமை (14) மாலை முறைப்பாடு பதிவு செய்தார்.
இந்த முறைப்பாட்டின் பிரகாரம் சந்தேகநபர் கைது செய்யப்பட்டார் என சிறீலங்கா பொலிஸார் குறிப்பிட்டனர் என செய்திகள் தெரிவிக்கின்றன.
14 ஆகஸ்ட் 2014
யாழில்,சாதாரணமாகிவிட்ட கொலைகள்!
தனது கணவரைக் கொன்றதாக கருதப்படும் நபரைப் பழிவாங்குவதற்காக, அவரது தம்பியை கூலிப்படை மூலம் கொலை செய்ததாக வயோதிபப் பெண் ஒருவரையும் கூலிப்படையினராகச் செயற்பட்ட இரு இளைஞர்களையும் மானிப்பாய் பொலிஸார் நேற்றுமுன்தினம் கைது செய்துள்ளனர். சின்னத்தம்பி பாக்கியம் (வயது 63), மற்றும் கூலிப்படையைச் சேர்ந்தவர்கள் எனக் கருதப்படும் பெரியதம்பி நிசாந்த் (வயது 21), ஜெகநாதன் ஜெகதீபன் (வயது 26) ஆகியோரே கைது செய்யப்பட்டவர்களாவர். இந்தச் சம்பவம் குறித்து மேலும் அறிய வருவதாவது:
கடந்த ஜூலை மாதம் 11 ஆம் திகதி யாழ்ப்பாணம் கல்லுண்டாய் வெளியில் நாகராசா பார்த்தீபன் (வயது -30) என்ற இளம் குடும்பஸ்தர் கழுத்து வெட்டப்பட்ட நிலையில் சடலமாக மீட்கப்பட்டார். தென்மராட்சி மந்துவில் பகுதியைச் சேர்ந்த இந்த நபரின் மரணம் தொடர்பில் விசாரணைகளை ஆரம்பித்த மானிப்பாய் பொலிஸார் ஜூலை 14 ஆம் திகதி இருவரைக் கைது செய்தனர். அவர்களிடம் தொடர்ந்து நடத்திய விசாரணையில் பிரதான சந்தேக நபரான பெண்ணையும் கொலைக்கு உடந்தையாக இருந்தனர் எனக் கருதப்படும் இரு இளைஞர்களையும் பொலிஸார் நீதிமன்றின் அனுமதியுடன் கண்காணித்து வந்தனர்.
இந்நிலையில் குறித்த சந்தேகநபர்கள் நேற்றுமுன்தினம் ஆனைக்கோட்டையில் உள்ள பெண்ணின் வீட்டுக்கு சென்றபோது அவர்களைப் பொலிஸார் கைது செய்தனர். அவர்களிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் போது குறித்த பெண்ணின் கணவரை கொலையானவரின் அண்ணன் தகராறு ஒன்றின் போது அடித்துக் கொன்றார் எனக் கூறப்படுகின்றது. இந்தச் சம்பவம் கடந்த 2010 ஆம் ஆண்டு தென்மராட்சி மந்துவில் பகுதியில் இடம்பெற்றது. இது தொடர்பான வழக்கு நீதிமன்றில் நடந்து கொண்டிருக்கின்றது.
இந்நிலையில் கொலை செய்தவர் எனக் கூறப்படுபவரின் குடும்பத்தாரைப் பழிவாங்குவதற்காகவே அவரின் தம்பியை குறித்த பெண் கூலிப் படையை வைத்துக் கொலை செய்ததாக என சொல்லப்படுகின்றது. இதற்காக குறித்த பெண் கூலிப்படைக்கு 5 லட்சம் ரூபாவை வழங்கினார் என்றும் அவர்கள் கொலையான நபரை 'நைஸா'கப் பேசி கல்லுண்டாய் வெளிக்கு அழைத்துச் சென்று வெட்டிக் கொன்றனர் என்றும் விசாரணைகளில் தெரியவந்ததாகப் பொலிஸார் கூறினர். கைதான சந்தேகநபர்கள் மல்லாகம் நீதிவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டு எதிர்வரும் 27 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.
13 ஆகஸ்ட் 2014
புலிக்குட்டிகளைக் காப்பாற்றினாா் ஐங்கரநேசன்!
இலங்கை தென்பகுதி காடுகளில் காணப்படும் அரியவகை புள்ளி இன சிறுத்தைக்குட்டிகள் இரண்டு வடக்குமாகாண விவசாய மற்றும் சுற்றுச்சூழல் அமைச்சரால் மீட்கப்பட்டு இலங்கை வன இலாகா அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன. இது தொடர்பில் வடக்குமாகாண விவசாய மற்றும் சுற்றுச்சூழல் அமைச்சர் பொ.ஐங்கரநேசன் கருத்துத் தெரிவிக்கையில், முல்லைத்தீவு மாவட்டம் புதுக்குடியிருப்பை அண்மித்த பகுதியில் சிறுத்தைக்குட்டிகள் இரண்டு விற்பனைக்காக வைக்கப்பட்டிருப்பதாக எமக்கு தகவல் கிடைத்தது.
உடனடியாக அதனை பார்வையிடுவதற்காக அங்கு சென்றபோது, சிறுத்தைக்குட்டிகளை வைத்திருந்தவர்கள் தாம் எம்மால் கைது செய்யப்படலாம் என்று அஞ்சிய நிலையில் அவற்றினை கைவிட்டுவிட்டு தப்பிச் சென்றுவிட்டனர். இரண்டு சிறுத்தைக்குட்டிகளையும் மீட்ட நாம், இது தொடர்பில் அனுராதபுரம் மற்றும் கொழும்பில் உள்ள வன இலாக திணைக்களத்தினரிடம் அறிவித்திருந்தோம்.
இந்நிலையில் அனுராதபுரத்திலிருந்து இன்று யாழ்ப்பாணம் வந்த கால்நடை வைத்திய அதிகாரி சந்தனஜெயசிங்க தலைமையிலான குழுவினரிடம் இரண்டு குட்டிகளையும் கையளித்தோம். நாம் கையளித்த சிறுத்தைக் குட்டிகளை குறிப்பிட்ட காலத்திற்கு சிறப்புக் கண்காணிப்பில் வைத்திருந்த பின்னர் அவை வாழக்கூடிய இயற்கையான சூழலில் அவற்றினை விட்டுவிடுவதாக தமக்கு குறித்த குழுவினர் வாக்குறுதி வழங்கியதாகவும் தெரிவித்தார்.
ஊர்காவற்றுறையில் ஆயுத வேட்டையில் சிறீலங்கா படைகள்!
ஊர்காவற்றுறையில் மெலிஞ்சிமுனை ஐயனார் ஆலயப் பகுதியில் தரைப்படையினரும் கடற்படையினரும் இணைந்து தேடுதல் நடவடிக்கை ஒன்றை மேற்கொண்டுள்ளனர் என தெரிய வருகிறது.ஐயனார் கோயிலுக்கு அருகில் ஆயுதங்கள் புதைத்து வைக்கப்பட்டிருக்கின்றன என்று நேற்றுக் கிடைத்த ரகசியத் தகவலையடுத்து அப்பகுதிக்கு சிறீலங்காவின் தரைப்படை பாதுகாப்பு வழங்கியிருந்தது. இந்த நிலையில் இன்று காலை தொடக்கம் கடற்படையினரும்,தரைப்படையினரும் இணைந்து ஆயுதங்களை மீட்பதற்காக தேடுதல் நடவடிக்கையை மேற்கொண்டு வருகின்றனர் என அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
12 ஆகஸ்ட் 2014
"வறுமை" என கூறி சிங்களப் படைகளுடன் இணைய முடியாது!
சிங்களப் படையில் இணைந்த பெண்களுக்காக குரல் கொடுக்கும் நீங்கள் வறுமையை காட்டி அதனை நியாயப்படுத்தும் நீங்கள் , காரைநகரில் அண்மையில் சிறிலங்காப் படைகளால் சீரழிக்கப்பட்ட பள்ளிச் சிறுமிகளுக்காக குரலெழுப்புவீர்களா?
தமிழர்கள் ஏழைகள் அல்ல,ஏழைகள் ஆக்கப்பட்டிருக்கிறோம் எங்கள் வளமும் வாழ்வும் சிங்களப் படைகளாலும் அரசாலும் அழிக்கப்பட்டிருக்கிறது.
தமிழர்களின் வறுமை நிலைக்கு காரணமான சிங்களப் படைகளளுடன் சேர்வதை "வறுமை" என்ற ஒற்றைச் சொல்லில் அடக்கி நியாயப்படுத்த முடியாது.
தமிழ் பெண்களை தங்கள் படைகளுடன் இணைத்துக் கொள்வது மாத்திரமல்ல தமிழர்களின் பண்பாடுகளை சீரழிக்கும் நோக்குடன் பௌத்த பேரினவாத சக்திகள் காடையர் படைகளைப் பயன்படுத்துகிறது என்பதை ஒவ்வொரு தமிழ் மகனும் உணர்ந்து கொள்ள வேண்டும்.
அவர்களின் வறுமை போக்க நீங்கள் என செய்தீர்கள்?? வறுமை வாட்டிய கொடுமை தான் அவர்களின் இம் முடிவுகள்... யார் வந்தீர்கள் வறுமை துடைக்க?என்று பேசுபவர்கள் பேசுகிறீர்களே தவிர என்ன செய்தீர்கள் நீங்கள்?
புலம்பெயர் தமிழர்கள் ஒருபகுதியினர் உதவிகள் வழங்குகின்றனர் எல்லோரும் செயலாற்ற வேண்டும்.
11 ஆகஸ்ட் 2014
போர்க்குற்றவாளி நடத்தி வைத்த மரணச்சடங்கு!
சிறீலங்கா படையில் இணைந்த தமிழ்யுவதியின் சகோதரனின் இறுதிக் கிரிகைகள் போர்க்குற்றவாளிகளால் நடத்தப்பட்டுள்ளது.முல்லைத்தீவில் படையில் பணியாற்றிய தமிழ்யுவதியின் ஒரு வயதான சகோதரனின் இறுதிச் சடங்கு முல்லைத்தீவு கட்டளைத் தளபதி மேஜா் ஜெனரல் ஜெகத் டயஷினால் நடத்தி வைக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.குறித்த தமிழ் படையினளின் இறுதிச் சகோதரன் கடும் சுகவீனம் காரணமாக யாழ் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு நேற்று முந்தினம் உயிரிழந்தான்.
இந்த மரணச்சடங்கு முல்லைத்தீவு படைத் தளபதியின் பொறுப்பில் அவா்களது முழுச் செலவிலும் நடைபெற்றது என குறிப்பிடப்படுகிறது.
அத்துடன் இன அழிப்பாளன் ஜெகத் டயஷினால் குறித்த குடும்பத்தினருக்கு உதவிப் பொருட்களும் வழங்கப்பட்டனவாம்.
கிளி,அரச அதிபர் படையணிவகுப்பை பார்வையிட்டார்!
சிங்களப்படையில் இணைத்துக்கொள்ளப்பட்ட 26 தமிழ் பெண்களும் தமது பயிற்சிகளை நிறைவு செய்து வெளியேறுவதாக கூறி ஒரு வைபவம் கிளிநொச்சி சிங்களக் கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் சுசந்த ரணசிங்க தலைமையில் நடைபெற்றது. இந்தநிகழ்வில் பிரதம அதிதியாக கலந்துகொண்ட சிறீலங்காவின் கிளிநொச்சி அரச அதிபர் திருமதி ரூபவதி கேதீஸ்வரன் படைப்பெண்கள் அணியின் (தமிழ் பெண்கள்) அணிவகுப்பு மரியாதையை பார்வையிட்டுள்ளதாக செய்திகள் வெளி வந்துள்ளன.
10 ஆகஸ்ட் 2014
மூன்று தமிழர்களின் பெயரை நீக்கியது சிறீலங்கா!
பயங்கரவாதச் செயற்பாடுகளுக்கு நிதியளிப்போர் என்று சிறிலங்கா அரசாங்கம் வெளியிட்ட பட்டியலில் இருந்து மூன்று பேரின் பெயர்கள் நீக்கப்பட்டுள்ளன.
பயங்கரவாதச் செயற்பாடுகளுக்கு நிதியளிப்போர் என்று, பெரும்பாலும் புலம்பெயர் தமிழர்களை உள்ளடக்கிய 424 பேரின் பட்டியல் ஒன்றை சிறிலங்கா அரசாங்கம், கடந்த மார்ச் 20ம் நாள் வர்த்தமானியில் வெளியிட்டிருந்தது.
இந்தப் பட்டியலில், இருந்து, துரை எனப்படும் கருணாநிதி துரைரத்தினம், சுதர்சன் கைலாயநாதன், தனுஸ்கோடி பிறேமினி ஆகியோரின் பெயர்கள் நீக்கப்பட்டுள்ளன.
சிறிலங்கா பாதுகாப்புச் செயலர் கோத்தாபய ராஜபக்ச கடந்த புதன்கிழமை வெளியிட்டுள்ள வர்த்தமானி அறிவித்தலிலேயே இவர்கள், மூவரும் பயங்கரவாதத்துக்கு நிதியளிப்போர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
இவர்களில் துரைரத்தினம் பிரான்சில் வசிக்கிறார். கைலாயநாதன் இந்தியாவிலும், தனுஸ்கோடி பிறேமினி சிறிலங்காவிலும் வசிக்கின்றனர்.
சிறிலங்கா அரசாங்கம் வெளியிட்ட பயங்கரவாதத்துக்கு நிதியளிப்போர் பட்டியலில் இடம்பெற்றிருப்போர், தமது பெயர்களை நீக்கக் கோரி தகுதி வாய்ந்த அதிகாரிக்கு விண்ணப்பிக்க முடியும் என்றும், அதுகுறித்து ஆராயப்பட்டு முடிவெடுக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது.
இதனடிப்படையிலேயே, இந்த மூவரினதும் பெயர்களும் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டுள்ளன.என்று குறிப்பிடப்படுகிறது.
09 ஆகஸ்ட் 2014
விஜய் அரசியலுக்கு வரவேண்டும்-சீமான்
தம்பி விஜய் அரசியலுக்கு வரவேண்டும்... தமிழகத்தை தமிழன் ஆள வேண்டும் என்று கூறியுள்ளார் இயக்குநர் சீமான். அரசியலில் ஆர்வமில்லை என்று கூறிக் கொண்டே, மறுபக்கம் தனது அரசியல் நுழைவுக்கான அடிப்படை வேலைகளைச் செய்து வருகிறார் நடிகர் விஜய்.மதுரையில் வரும் ஆகஸ்ட் 15-ம் தேதி தனக்குத் தானே அடுத்த சூப்பர் ஸ்டார் பட்டம் சூட்டிக் கொள்ள விஜய் ஏற்பாடு செய்துள்ள விழாவில் சிறப்பு விருந்தினராக நாம் தமிழர் கட்சியின் சீமானை அழைத்துள்ளார். அவரும் விழாவில் கலந்து கொள்ளப் போவதாக தகவல் வெளியாகியுள்ளது.ராஜபக்சே கூட்டாளி லைகா நிறுவனம் தயாரிப்பில் விஜய் நடித்துள்ள கத்தி படத்துக்கு தன் முழு ஆதரவைத் தெரிவித்துள்ள சீமான், அடுத்து விஜய்யை அரசியலுக்கு அழைத்து பேட்டியும் அளித்துள்ளார்.அதில், "தமிழகத்தை ஒரு தமிழன் ஆள வேண்டும். அதற்கு மக்களிடம் அறிமுகமாகியிருக்கும் தம்பி விஜய் போன்ற இளைய தலைமுறையினர் அரசியலுக்கு வரவேண்டும். அதனால்தான் அவரை எங்களோடு இணைந்து செயல்பட அழைத்தேன். அவரும் இது பற்றி ஆலோசிப்பதாகச் சொல்லியிருக்கிறார்.இனமானத்தை விட வருமானத்தைத்தானே சினிமா புள்ளிகள் பலரும் முக்கியமாகக் கருதுகிறார்கள். தம்பி விஜய் இதிலிருந்து மாறுபட்டவராக இருப்பார் என எதிர்பார்க்கிறோம். ஆனாலும், அவர் என்ன முடிவெடுப்பார் என எனக்குத் தெரியாது,'' என்று கூறியுள்ளார் சீமான்.
08 ஆகஸ்ட் 2014
லைகாவின் அடுத்த பட இயக்குனர் சீமான்!
விஜய் - ஏஆர் முருகதாஸ் கூட்டணியில் உருவாகியுள்ள கத்தி படத்துக்கு தன் அமோக ஆதரவைத் தெரிவித்துள்ளார் இயக்குநர் சீமான். மேலும் லைகா நிறுவனம் தயாரிக்கும் அடுத்த படத்தை இயக்கவும் அவர் ஒப்பந்தமாகியுள்ளார். தமிழ் சினிமா உலகில் இது பெரிய ஆச்சர்யமான விஷயமாகப் பார்க்கப்பட வில்லை. ஆனால் ஈழத் தமிழ் ஆதரவாளர்கள் மத்தியில் இது பெருத்த அதிர்ச்சியையும் சந்தேகங்களையும் கிளப்பியுள்ளது. கத்திக்கு சீமான் ஆதரவு.. லைகாவுக்கு அடுத்த படம் இயக்குகிறார்! கத்தி படத்துக்கு தனது ஆதரவைத் தெரிவித்துள்ள சீமான், அந்தப் பட நிறுவனத்துக்கும் ராஜபக்சேவுக்கும் தொடர்பில்லை என்று தெரிவித்துள்ளார். இதற்கிடையில், லைகா நிறுவனத்துக்கு அடுத்த படத்தை இயக்கும் வாய்ப்பையும் அவர் பெற்றுள்ளார். இந்தப் படத்தில் சிம்பு நடிக்கிறாராம். இது ஏற்கெனவே விஜய், ஜெயம் ரவி போன்றவர்கள் நடிப்பதாக இருந்த பகலவன் படத்தின் கதை என்பது குறிப்பிடத்தக்கது. லைகாவுக்காக படம் இயக்கும் வாய்ப்பை சீமானுக்குப் பெற்றுத் தந்தவர் ஏ.ஆர்.முருகதாஸ்தான் என்பது கூடுதல் தகவல்!
கெமரூர்ச் ஆட்சியாளருக்கு சாகும் வரை சிறை! ஐ.நா.நீதிமன்றம் விதித்தது!
கம்போடியாவில் இனப்படுகொலை செய்த கெமர்ரூச் ஆட்சியாளர்கள் இருவருக்கு ஆயுள் முழுவதும் சிறை வாசம் அனுபவிக்குமாறு தண்டனை விதித்துத் தீர்ப்பளித்துள்ளது ஐ.நாவின் சர்வதேச விசாரணை நீதிமன்றம். 30 வருடங்களாக நடந்த இந்த வழக்கில் போர்க் குற்றாவளிகளாக இனங்காணப்பட்ட 88 வயதான நௌவான்சியா, 83 வயதான கெஹியூசம்பான் ஆகியோருக்கே நேற்று வியாழக்கிழமை இந்தத் தீர்ப்பு வழங்கப்பட்டது. 1975 -79 கள் வரை கம்போடியாவை பொல்பொட் தலைமையில் இயங்சரே, நௌவான்சியா, கெஹியூசம்பான் ஆகியோர் ஆட்சி செய்தனர். வியட்நாமில் இருந்து பிழைப்புத் தேடி சென்ற மக்கள் இவர்களின் ஆட்சியை எதிர்த்திருந்தனர். தம்மை எதிர்த்துப் போராடிய அந்த மக்களில் 17 இலட்சம் பேரை இந்த ஆட்சியாளர்கள் கொன்று குவித்திருந்தனர் என்று கூறப்பட்டது. மிகப்பெரிய இனப்படுகொலையை செய்த இந்த ஆட்சியாளர்கள் மீது ஐ.நாவின் சர்வதேச நீதிமன்றம் போர்க்குற்ற விசாரணைகளை நடத்தியது. கடந்த 30 வருடங்களாக நடத்தப்பட்ட இந்த விசாரணைக் காலத்தில் தலைமை ஆட்சியாளரான பொல்பொட், இயங்சரே ஆகியோர் மரணமடைந்து விட்டனர். இந்நிலையிலேயே தற்போது உயிருடன் உள்ள நெளவாடியா, கெஹியூ சத்பா ஆகியோருக்கு சாகும் வரை சிறை வாசம் அனுபவிக்க சர்வதேச நீதிமன்றம் நேற்றுத் தீர்ப்பளித்தது.
07 ஆகஸ்ட் 2014
பரீட்சை மண்டபத்தில் சுயநினைவிழந்த மாணவி!
கிளிநொச்சி மத்திய கல்லூரியில் இன்று வியாழக்கிழமை காலை க.பொ.த உயர்தரப் பரீட்சை எழுதிக்கொண்டிருந்த மாணவி ஒருவர் திடீரென மயங்கி வீழ்ந்தார். கிளிநொச்சி மத்திய கல்லூரியில் க.பொ.த. உயர்தரப் பரீட்சையில் கணிதப் பிரிவில் தோற்றும் மாணவியே இவ்வாறு மயங்கி வீழ்ந்தார். பின்னர் இவர் கிளிநொச்சி வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டார். கடந்த 2009 ஆம் ஆண்டு யுத்த வேளையில் இடம்பெற்ற ஷெல் வீச்சினால் இவர் காயமடைந்திருந்தார். அப்போது வெடித்த ஷெல்லின் சன்னம் ஒன்று இவரது தலைப் பகுதியில் இன்னும் இருப்பதாகவும் இதனாலேயே இவருக்கு திடீரென மயக்கம் ஏற்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டது. இன்றும் இதேபோன்று திடீர் மயக்கம் ஏற்பட்டதால் முழுமையாகப் பரீட்சை எழுதமுடியாத பரிதாப நிலை அவருக்கு ஏற்பட்டது என செய்திகள் தெரிவிக்கின்றன.
06 ஆகஸ்ட் 2014
ஐ.நா.வின் விசாரணை தொடங்கியது – தமிழிலும் முறைப்பாடுகளைச் சமர்ப்பிக்கலாம்!
05 ஆகஸ்ட் 2014
தமிழகத்தை கண்டுகொள்ளாது கோத்தாவுடன் பாஜக நல்லுறவு!
நல்லூர் முருகனுக்கு இனி ஹெலி பூ தூவாதாம்!
நல்லூர் கந்தனுக்கு இம்முறை உலங்கு வானூர்தியில் இருந்து மலர் தூவி வழிபாடு செய்யும் முறை நிறுத்தப் பட்டுள்ளது என ஆலயத்தினர் அறிவித்துள்ளனர்.
கடந்த காலங்களில் நல்லூர் கந்தனின் வருடாந்த மகோற்சவத்தின் தேர்திருவிழா அன்று யாழ். மாவட்ட கட்டளைத் தலைமையகத்தின் ஏற்பாட்டில் உலங்கு வானூர்தியில் இருந்து மலர் தூவி வழிபாடு செய்வது வழக்கம்.
எனினும் இவ்வாறான செயற்பாட்டினால் பக்தர்களின் மனங்களில் கவனக்குறைவு ஏற்படும் எனவே அதனை விரும்பாத ஆலயத்தினர் இம்முறையும், எதிர்வரும் காலங்களிலும் உலங்கு வானூர்தியில் இருந்து மலர் தூவி வழிபாடு செய்வதனை நிறுத்திக் கொண்டுள்ளனர்.
அதன்படி யாழ். மாவட்ட கட்டளைத் தளபதி உதயப்பெரேராவுடன் ஆலயத்தினர் பேச்சுக்களை நடாத்தி குறித்த முடிவினை எடுத்திருப்பதாக குறிப்பிடப்படுகிறது.
04 ஆகஸ்ட் 2014
இலங்கை தூதரகத்தை மூடக் கோரி ஆர்ப்பாட்டம்!

03 ஆகஸ்ட் 2014
தனிநாயகம் அடிகளாரின் உருவச்சிலை திறந்து வைக்கப்பட்டது!
யாழ்.மறை மாவட்டமும் யாழ். மாவட்ட தமிழ்ச் சங்கமும் இணைந்து யாழ்ப்பாணத்தில் அமைத்த வண.தனிநாயகம் அடிகளாரின் உருவச்சிலை அவரது நினைவு தினமான நேற்று திறந்து வைக்கப்பட்டது. தமிழ்த் தூது தனிநாயகம் அடிகளார் நூற்றாண்டுக் குழுவின் ஏற்பாட்டில் யாழ்ப்பாணம் பிரதானவீதி, மடத்தடி சந்தியில் குறித்த நினைவுத்தூபி அமைக்கப்பட்டுள்ளது. நிகழ்வில் பிரதம விருந்தினராகக் கலந்துகொண்ட யாழ்.மறை மாவட்ட ஆயர் தோமஸ் சவுந்தரநாயகம் ஆண்டகை தனிநாயகம் அடிகளாரின் நினைவுத் தூபியை திறந்துவைத்தார். இந்த நிகழ்வில் நல்லை ஆதீன முதல்வர் ஶ்ரீலஶ்ரீ சோமசுந்தர பரமாச்சார்ய சுவாமிகள்,டக்ளஸ் தேவானந்தா, தமிழரசுக் கட்சியின் பொதுச்செயலாளரும் யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான மாவை சேனாதிராஜா மற்றும் வடமாகாண சபை உறுப்பினர்கள்,அருட்தந்தையர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
யாழில்,முகநூல் காதல் மரணத்தில் முடிந்தது!
தொலைபேசி அழைப்பு மூலமாக அறிமுகமான முன்பின் அறியாத பெண்ணைக் காதலித்தார் எனக் கூறப்படும் இளைஞர் ஒருவர் அந்தக் காதல் முறிவடைந்ததால் அதிக மருந்து வில்லைகளை விழுங்கி உயிரிழந்துள்ளார்.
இவ்வாறு மரணமானவர் யாழ்ப்பாணம் குருநகரைச் சேர்ந்த றொபின்சன் ரவிராஸ் (வயது 20) என்ற இளைஞரே இவ்வாறு தற்கொலை செய்து கொண்டவராவார்.
தவறான தொலைபேசி அழைப்பு ஒன்றினால் குறித்த இளைஞருக்கு பெண் ஒருவருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது.
தொலைபேசி வாயிலாக அறிமுகம் ஆவதற்கு முன்னரோ அல்லது பின்னரோ இருவரும் சந்திக்காத நிலையில் அந்தப் பெண்ணை குறித்த இளைஞர் காதலித்தார் எனக் கூறப்படுகின்றது.
தொடர்ச்சியாக அந்த இளைஞர் தனது தொலைபேசி மூலமாகவே காதலை வளர்த்து வந்த நிலையில் குறித்த பெண் அந்த இளைஞருடனான உறவை திடீரெனத் துண்டித்தார் எனக் கூறப்படுகின்றது.
இதனால் மனமுடைந்து போன இளைஞர் தற்கொலை செய்ய முயன்றுள்ளார். இதற்கு முன்னர் அவர் தற்கொலைக்கு முயன்றபோதும் உறவினர்கள் அவரைக் காப்பாற்றியதுடன் அவருக்கு அறிவுரைகளும் கூறியுள்ளனர். இந்நிலையில் நேற்றுமுன்தினம் வெள்ளிக்கிழமை இரவு குறித்த இளைஞர் அளவுக்கு அதிகமான மருந்து வில்லைகளை உட்கொண்டுள்ளார்.
அவரது நடவடிக்கையில் மாற்றத்தை அவதானித்த உறவினர்கள் உடனடியாக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அவரை சேர்ப்பித்தனர். எனினும் சிகிச்சை பலனளிக்காத நிலையில் அந்த இளைஞர் நேற்றுக் காலை வைத்தியசாலையிலேயே உயிரிழந்தார் எனக் கூறப்படுகின்றது.
யாழில் இது போன்ற காதல் தற்கொலைகள் தற்பொழுது அதிகரித்த வண்ணம் உள்ளமை குறிப்பிடத்தக்கது.
02 ஆகஸ்ட் 2014
´இறந்தாலும் தமிழீழ கோரிக்கையை கைவிடப்போவதில்லை´நத்வார்ட்சிங்கிடம் தலைவர்!

நேரில் கண்ட சாட்சிகள் ஐ.நாவில் சாட்சியமளிக்க ஏற்பாடு!
இலங்கையில் இடம்பெற்றதாக கூறப்படும் போர் குற்றங்கள் மற்றும் மனித உரிமை மீறல்கள் தொடர்பில் விசாரணை நடத்தும் ஐ.நா மனித உரிமை ஆணைக்குழுவின் சர்வதேச விசாரணைக்குழுவின் முன் நேரில் கண்ட சாட்சியாளர்கள் சிலர் சாட்சியமளிக்க உள்ளதாக தெரியவருகிறது.
போர் குற்றங்கள் மற்றும் மனித உரிமை மீறல்களை நேரில் பார்த்த சாட்சியாளர்களை நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் விசாரணையாளர்கள் முன் நிறுத்த திட்டமிட்டுள்ளதாக சிங்கள பத்திரிகை ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.
இது குறித்து நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் பிரதமர் வி. உருத்திரகுமாரன் விசாரணைக்குழுவிற்கு ஏற்கனவே அறிவித்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதனை தவிர நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் போர் குற்றங்கள் தொடர்பான காணொளிகள் மற்றும் புகைப்படங்களை விசாரணைக்குழுவிடம் வழங்கியுள்ளது.
அதேவேளை விசாரணைக்குழுவின் முன் சாட்சியமளிக்க உள்ள நேரில் பார்த்த சாட்சியாளர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்துமாறும் பிரதமர் உருத்திரகுமாரன் ஐ.நாவிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.
01 ஆகஸ்ட் 2014
கத்தி படத்தை எதிர்த்து கடுமையான வாசகங்களுடன் சுவரொட்டி!
கத்தி படத்துக்கு எதிரான போர்க்குரல் நாளுக்கு நாள் வலுத்து வருகிறது. இன்று அந்தப் படத்தை எதிர்த்து கடுமையான வாசகங்களுடன் சுவரொட்டிகளை வெளியிட்டுள்ளனர் தமிழீழ விடுதலைக்கான மாணவர் கூட்டமைப்பினர். அதுவும் விஜய்யின் மக்கள் இயக்கத்தைச் சேர்ந்தவர்களுக்காகவே இந்த சுவரொட்டி அச்சிடப்பட்டுள்ளது. அந்த சுவரொட்டிகளில் இடம்பெற்றுள்ள வாசகங்கள்:அன்பார்ந்த நடிகர் விஜய்யின் மக்கள் இயக்க நண்பர்களே, ரசிகர்களே... மூன்றரை லட்சம் ஈழத் தமிழ் உறவுகளை திட்டமிட்டு இனப்படுகொலை செய்த சிங்கள இனவெறி இனப்படுகொலைக்காரன்
ராஜபக்சே அரசுக்கு பொருளாதார ரீதியாக உதவிக் கொண்டிருக்கும் லைகா நிறுவனத்துக்கு, நீங்கள் 'கத்தி' திரைப்படம் மூலம் வருமானம் ஈட்டித் தரப் போகிறீர்களா? தொடர்ந்து கொண்டிருக்கும் இனப் படுகொலையில் நீங்களும் பங்கு பெறப் போகிறீர்களா? உயிர் தந்த தாயும் உடன் பிறந்த சகோதரியும் உன் கண்முன்னே கற்பழிக்கப்படுவார்களேயானால், சிங்கள ராணுவத்தால் உன் தந்தையும் சகோதரனும் படுகொலை செய்யப்படுவார்களேயானால், முள்வேலி முகாம்களில் சித்திரவதைக்குட்படுத்தப்படுவது உன் குடும்பமாக இருந்தால்.. நீ என்ன செய்வாயோ.. அதைச் செய்! -இவ்வாறு வாசகங்கள் அச்சிடப்பட்டுள்ளன. கூடவே, தமிழீழ விடுதலைக்கான மாணவர் கூட்டமைப்பின் தொலைபேசி எண்களும் வெளியிடப்பட்டுள்ளன.

காரைநகர் சிறுமிகளுக்காக யேர்மனியில் கவனயீர்ப்பு நிகழ்வு!
காரைநகரில் இரு சிறுமிகள் பாலியல் வன்முறைக்குள்ளானதையும் மற்றும் தமிழர் தாயகத்தில் பெண்கள் , சிறுமிகள் மீது சிங்கள ராணுவத்தால் திட்டமிட்டு மேற்கொள்ளப்படும் பாலியல் வன்முறையை கண்டித்தும் யேர்மனி , தலைநகரில்கவனயீர்ப்பு நிகழ்வு .
காரைநகர் ஊரிப்பகுதியில் கடற்படையினரால் சிறுமிகள் பாலியல் துஸ்பிரயோகம் செய்யப்பட்ட வழக்கு மீண்டும் கடந்த 66 ஆண்டுகளின் வழமையான நீதி அற்ற சிங்கள பேரினவாத அரசின் நடமுறையின் தொடர்ச்சியில் முடக்க நிலையினை நோக்கி செல்ல தொடங்கியுள்ளது.
சிங்கள இன அழிப்பு அரசின் கொடூரப்பிடியில் தவிக்கும் தமிழ் பெண்கள் நிலை கடந்த ஆண்டுகளாக மனிதநேயமற்ற நிலமையில் தொடர்ந்த வண்ணமே இருக்கின்றது .
இது போன்றே 2008.08.14 ஆம் திகதி அதிகாலை ஏனைய பள்ளி மாணவர்கள் உட்பட செஞ்சோலையில் முதலுதவி பயிற்சிக்காகக் காத்திருந்த 53 மாணவிகள் , மொத்தமாக 61 பேர் கொல்லப்பட்ட கொடூரம் மனதை உருக்கக் கூடியதாகும்.எண்ணற்ற கனவுகளுன் பரீட்சைக்காகக் காத்திருந்த இம் இன மொட்டுக்களை கிள்ளி எறிந்து எரித்த சிங்கள இனவெறி அரசு இன அழிப்பு அவர்களுடைய தேசியக் கொள்கையாக இருப்பதை அடையாளம் காட்டியது.
பிஞ்சு வயதில் சிங்கள இனவெறி அரசின் கொடூர தாக்குதலால் பெற்றோரை இழந்து அன்பு பாசம் அரவணைப்பு பாதுகாப்பு அனைத்தையும் பறிகொடுத்து அநாதரவாக தத்தளித்து நின்ற இந்தக் குழந்தைகளுடைய சோகத்தை தேவையை உணர்ந்து அவர்களது துயரைத்துடைத்து தனது பிள்ளைகளாக அவர்களை ஆற்றல் மிக்கவர்களாக வளர்த்தெடுப்தற்காக தேசியத்தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் அவர்களின் சிந்தனையில் உருவாகி செயலில் கண்ட அமைப்பு தான் செஞ்சோலை.
இவ்வாறு சிங்கள இனவாத அரசின் விமானப்படையின் தாக்குதலில் கொல்லப்பட்ட பள்ளி மாணவர்கள் உட்பட செஞ்சோலையில் முதலுதவி பயிற்சிக்காகக் காத்திருந்த 53 மாணவிகளுக்குமான 8ஆம் ஆண்டு நினைவாக காரநகரில் இரு சிறுமிகள் பாலியல் வன்முறைக்குள்ளானதையும் மற்றும் தமிழர் தாயகத்தில் பெண்கள் , சிறுமிகள் மீது சிங்கள ராணுவத்தால் திட்டமிட்டு மேற்கொள்ளப்படும்பாலியல் வன்முறையை கண்டித்தும் யேர்மனி , தலைநகரில் கவனயீர்ப்பு நிகழ்வு .
கவனயீர்ப்பு நிகழ்வு:
14.08.2014 19 மணிக்கு
Brandenburger Tor Pariser Platz
தமிழ் பெண்கள் அமைப்பு – யேர்மனி
கவனயீர்ப்பு நிகழ்வு:
14.08.2014 19 மணிக்கு
Brandenburger Tor Pariser Platz
தமிழ் பெண்கள் அமைப்பு – யேர்மனி
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)