கடந்த 2008 யூன் மாதம் (18.06.2008) சர்வதேச பயங்கரவாதத் தடைச்சட்டத்தின் கீழ் விடுதலைப் புலிகள் இயக்கத்திற்கு நிதி சேகரித்து வழங்கியது என்ற குற்றச்சாட்டின் அடிப்படையில் கைது செய்யப்பட்டு பின் 2010 ம் ஆண்டு வழக்குத் தொடரப்பட்டு 2011 இல் நாப்போலி நீதிமன்றத்தால் இவர்கள் குற்றமற்றவர்கள் எனவும் மேலும் தமிழீழ விடுதலைப் புலிகள் 25 ஆண்டுகளுக்கு மேலாக தமிழ் மக்களின் விடுதலைக்காகவும் தமது போராட்டத்தின் மூலம் மருத்துவம்,நீதிமன்றம், கல்வி, பொருண்மியம், சீரான இராணுவக் கட்டமைப்பு ஆகியவை உள்ளடங்கிய ஒரு நிழல் அரசை நிறுவி இருந்தது என்பது தமது ஆய்வில் தெரிய வந்துள்ளமையால் இவ் இயக்கம் ஜெனீவா சாசனங்களிற்குட்பட்ட ஒரு விடுதலை அமைப்பாகவே பார்க்கப்பட வேண்டியதெனவும் இவ்வியக்கத்தை பயங்கரவாத இயக்கமாக பார்க்க முடியாதெனவும் , அந்த வகையில் இத்தாலி தமிழ்த் தேசிய செயற்பாட்டாளர்கள் மீது சாட்டப்பட்ட குற்றம் அற்தமற்றது எனவும் மேலும் விடுதலைப் புலிகள் இயக்கம் போர்க்குற்றங்கள் புரிந்திரிப்பின் அவற்றிக்கான விசாரணையை சர்வதேச மனித உரிமை மீறல்களுக்கான நீதி மன்றமே விசாரிக்க தகுதியானதென குறிப்பிட்டு 23-06-2011 நீதிபதி தீர்ப்பு வழங்கினார்.
அந்தவகையில் அவரது தீர்ப்பு தவறானது எனக்கூறி அரச தரப்பினர் மேல் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தனர். அதற்கான வழக்கு விசாரணை 27-02-2014 மேல் முறையீட்டு நீதிமன்றில் ஒன்பது நீதிபதிகள் முன்னிலையில் விசாரணைக்கு எடுக்கப்பட்டது. சில மணி நேர இரு தரப்பு விவாதங்களின் பின்னர் முதல் கட்ட நீதிபதியின் தீர்ப்பை தாமும் உறுதிப்படுத்துவதாக கூறி குற்றம் சாட்டப்பட்ட அனைவரும் குற்றமற்றவர்கள் என தீர்ப்பளித்தனர்.
நான் என்ற ஆணவம் அதர்மமாக விஸ்வரூபமெடுத்தாலும்-ஒருநாள் தர்மத்தின் காலடியில் விழும்.
28 பிப்ரவரி 2014
சிறீலங்கா மீது எரிச்சல் காட்டியது அமெரிக்கா!
பொறுப்புக்கூறல் மற்றும் நல்லிணக்கம் தொடர்பான அடிப்படைக் கோரிக்கைகளுக்கு சிறிலங்கா அரசாங்கம் இன்னும் பதிலளிக்காத நிலையில், சிறிலங்காவில் நாம் அதைச் செய்வோம் என்று அழுத்தம் திருத்தமாகத் தெரிவித்துள்ளார் அமெரிக்க இராஜாங்கச் செயலர் ஜோன் கெரி. வொசிங்டனில், நேற்று உலக நாடுகளின் மனித
உரிமைகள் நடைமுறைகள்- 2013 என்ற அறிக்கையை வெளியிட்டு வைத்து, உரையாற்றிய போதே அமெரிக்க இராஜாங்கச்செயலர் ஜோன் கெரி, இவ்வாறு தெரிவித்துள்ளார். “பொறுப்புக்கூறல் மற்றும் நல்லிணக்கம் தொடர்பான அடிப்படைக் கோரிக்கைகளுக்கு சிறிலங்கா அரசாங்கம் இன்னும் பதிலளிக்காத நிலையில், சிறிலங்காவில் நாம் அதைச் செய்வோம். துரதிஸ்டவசமாக, சிவில் சமூக செயற்பாட்டாளர்கள், ஊடகவியலாளர்கள், மதசிறுபான்மையினர் மீதான தாக்குதல்கள் இன்னமும் அங்கு தொடர்கின்றன. இந்த நிலைகள் பற்றிய எமது கவலைகளே, ஐ.நா மனிதஉரிமைகள் பேரவையின் வரும் மார்ச் அமர்வில் இன்னொரு தீர்மானத்தைக் கொண்டு வருவதற்கு வழிவகுத்துள்ளது. நாம் அதைச் செய்வோம், ஏனென்றால், மனிதஉரிமைகளையும், மனித கௌரவத்தையும் மறுக்கின்ற நாடுகள், எமது நலன்களுக்கும், மனித நலன்களுக்கும் சவாலாக இருக்கும் என்பது எமக்குத் தெரியும். “ என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
உரிமைகள் நடைமுறைகள்- 2013 என்ற அறிக்கையை வெளியிட்டு வைத்து, உரையாற்றிய போதே அமெரிக்க இராஜாங்கச்செயலர் ஜோன் கெரி, இவ்வாறு தெரிவித்துள்ளார். “பொறுப்புக்கூறல் மற்றும் நல்லிணக்கம் தொடர்பான அடிப்படைக் கோரிக்கைகளுக்கு சிறிலங்கா அரசாங்கம் இன்னும் பதிலளிக்காத நிலையில், சிறிலங்காவில் நாம் அதைச் செய்வோம். துரதிஸ்டவசமாக, சிவில் சமூக செயற்பாட்டாளர்கள், ஊடகவியலாளர்கள், மதசிறுபான்மையினர் மீதான தாக்குதல்கள் இன்னமும் அங்கு தொடர்கின்றன. இந்த நிலைகள் பற்றிய எமது கவலைகளே, ஐ.நா மனிதஉரிமைகள் பேரவையின் வரும் மார்ச் அமர்வில் இன்னொரு தீர்மானத்தைக் கொண்டு வருவதற்கு வழிவகுத்துள்ளது. நாம் அதைச் செய்வோம், ஏனென்றால், மனிதஉரிமைகளையும், மனித கௌரவத்தையும் மறுக்கின்ற நாடுகள், எமது நலன்களுக்கும், மனித நலன்களுக்கும் சவாலாக இருக்கும் என்பது எமக்குத் தெரியும். “ என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
27 பிப்ரவரி 2014
கோபிதாஸிற்கு அஞ்சலி செலுத்த அனைவரும் அணிதிரள்க!

26 பிப்ரவரி 2014
கோபிதாஸின் சடலம் யாழ்ப்பாணம் எடுத்து செல்லப்பட்டுள்ளது!
இலங்கையின் மகசீன் சிறையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த நிலையில் படுகொலையான தமிழ் அரசியல் கைதி விசுவலிங்கம் கோபிதாஸ்-43 இன் சடலம் யாழ்ப்பாணம் எடுத்துசெல்லப்பட்டுள்ளது. வடமராட்சியின் மந்திகையினை சொந்த இடமாக கொண்ட அவர் விடுதலைப்புலிகளிற்கு நிதி உதவி வழங்கியதாக குற்றஞ்சாட்டப்பட்டு இலங்கை சென்றிருந்த நிலையில் 2007 ம் ஆண்டின் மார்ச் மாதம் கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தினில் வைத்து கைதாகியிருந்தார்.
இவரது மரணத்தினையடுத்து அவரது மனைவி மற்றும் இரண்டு குழந்தைகள் பிரிட்டனிலிருந்து இலங்கை சென்றுள்ளனர் .இந்நிலையில் அவரது சடலம் பொறுப்பேற்கப்பட்டு யாழ்ப்பாணம் எடுத்துசெல்லப்பட்டுள்ளது. அவரது மரணத்தினில் மர்மம் இருப்பதாகவும் உரிய விசாரணைகள் மேற்கொள்ளப்படவேண்டுமெனவும் குடும்பத்தவர்கள் கோரியுள்ளனர். எனினும் அவர் மாரடைப்பினால் மரணமடைந்ததாக சட்டவைத்திய அதிகாரியின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தற்போது அவரது சொந்த ஊரினில் மக்கள் அஞ்சலிக்கு வைக்கப்பட்டுள்ள பூதவுடலிற்கு மக்கள் திரண்டு வந்து அஞ்சலி செலுத்திவருகின்றனர். இறுதி கிரியைகள் எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை நடைபெறவுள்ளது.
25 பிப்ரவரி 2014
டக்ளஸ்,கருணா,பிள்ளையான் போர்க்குற்றவாளிகள்!
சிறிலங்காவில் அமைச்சர்களாக இருக்கும் மூத்தத் துணை ஆயுதக்குழு தலைவர்களான டக்ளஸ் தேவானந்தா, கருணா என்ற விநாயகமூர்த்தி முரளிதரன் மற்றும் முன்னாள் கிழக்கு மாகாண முதலமைச்சருமான பிள்ளையான் ஆகியோர் மீது போர்க்குற்றங்கள் மற்றும் மோசமான மீறல்கள் குற்றச்சாட்டுக்கள் உள்ள போதிலும், அவர்கள் மீது எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என நவநீதம்பிள்ளையின் அறிக்கையில் புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது.துணை ஆயுதக்குழுக்கள் பெருமளவில் கலைக்கப்பட்டுள்ள போதிலும், ஆயுத மோதல்களின் போது இடம்பெற்ற மோசமான குற்றங்கள் தொடர்பான அதிகளவு குற்றச்சாட்டுக்களுடன் தொடர்புடையவர்களான டக்ளஸ், கருணா மற்றும் பிள்ளையானுக்கு எதிராக இதுவரையில் எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. விடுதலைப் புலிகள் அமைப்பின் முன்னாள் தளபதிகளான கருணாவும், பிள்ளையானும் பின்னர் அதிலிருந்து பிரிந்து தனிக்குழுவாக செயற்பட்டதாகவும், இவர்கள் போர்க் குற்றங்களில் ஒன்றான சிறார்களை படையில் சேர்க்கும் நடவடிக்கைக்கு பொறுப்பாக இருந்ததாக நல்லிணக்க ஆணைக்குழுவின் அறிக்கையிலும், சிறுவர்கள், ஆயுத மோதல்கள் தொடர்பான ஐநா பொதுச் செயலாளரின் அறிக்கையிலும் குறிப்பிடப்பட்டுள்ளதாக நவநீதம்பிள்ளை தமது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
24 பிப்ரவரி 2014
இந்தியத் தடையை மீறி இணையத்தில் போர் தவிர்ப்பு வலயம் காணொலி!

இங்கே அழுத்துங்கள் -
http://nofirezone.org/watch
23 பிப்ரவரி 2014
நோ பயர் சோன் தடைக்கு இலங்கை உறவே காரணம்!

கமே உள்ளதாகவும் நோ பயர் சோன் இயக்குநர் தெரிவித்தார். இலங்கையின் நற்பெயருக்கு களங்கம் விளைவிக்கும் முயற்சியில் கலம் மெக்ரே ஈடுபட்டுவருவதாகவும் அவரது படங்களுக்கு விடுதலைப் புலிகளின் ஆதரவாளர்கள் பண உதவி அளிப்பதாகவும் இலங்கை அரசாங்கம் தொடர்ச்சியாக குற்றம்சாட்டி வருகிறது. ஆனால், அந்தக் குற்றச்சாட்டுக்களை மறுத்து கெலம் மெக்ரே தமிழோசையிடம் கருத்துத் தெரிவித்தார்.
22 பிப்ரவரி 2014
ஜெத்மலானி மருத்துவமனையில் அனுமதி!
மூத்த வழக்குரைஞர் ராம்ஜெத்மலானி, தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
சென்னையில் ஒரு நட்சத்திர ஹோட்டலில் தங்கியிருந்த ராம்ஜெத்மலானி, அவரது அறையில் கால் தவறி விழுந்ததாகவும், இதனால் அவருக்கு மயக்கம் ஏற்பட்ட உடனடியாக சென்னை ஆயிரம் விளக்கு பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் அனுமதிக்கப்பட்டதாகவும் தெரிகிறது.
அவருக்கு மருத்துவர்கள் சிகிச்சை அளித்ததாகவும், தற்போது அவரது உடல்நிலை சீராக உள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
நால்வரில் ஒருவர் மனநோயாளி!
இலங்கையில் நான்கு பேரில் ஒருவர் மன நோயினால் பீடிக்கப்பட்டுள்ளதாக சட்ட உளவியல் மருத்துவர் ரீ.எஸ்.எஸ்.மெண்டிஸ் தெரிவித்துள்ளார். நாட்டில் 25 வீதமானவர்கள் ஏதேனும் ஓர் உளவியல் நோயினால் பாதிக்கப்பட்டுள்ளனர். இலங்கையில் உளவியல் சிகிச்சை வழங்கக் கூடிய தகைமையுடைய 60 மருத்துவர்களே கடமையாற்றுகின்றனர். இதனால் நாளுக்கு நாள் இடம்பெற்று வரும் குற்றச் செயல்கள் மற்றும் சமூக விரோத செயற்பாடுகளை தடுக்க முடியவில்லை. குற்றச் செயல்கள் தொடர்பில் விசாரணை நடாத்த நாடு முழுவதிலும் 25 சட்ட வைத்திய அதிகாரிகளே கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்னர். இது எந்த வகையிலும் போதுமானதல்ல என தெரிவித்துள்ளார். கடந்த காலங்களில் இடம்பெற்ற யுத்தம் காரணமாக வட மாகாணத்திலேயே மனஉழைச்சலுக்கு உள்ளானவர்கள் காணப்படுவது குறிப்பிடத்தக்கது.
21 பிப்ரவரி 2014
இராணுவத்தில் இணையுமாறு படையினர் நிர்ப்பந்தம்!

20 பிப்ரவரி 2014
இனப்படுகொலையின் புதிய ஆதாரம் வெளியாகிறது!
சேனல் 4 ன் சிறீலங்காவின் இனப்படுகொலை ஆதாரங்கள் அடங்கிய புதிய காணொளி வரும் பிப் 22 சனிக்கிழமை அன்று மாலை 4 மணி அளவில் தமிழ் இளைஞர்கள் மற்றும் மாணவர்கள் கூட்டமைப்பின் சார்பில் சென்னையில் வெளியிட இருக்கிறோம்.
இந்த நிகழ்வில் கல்லம் மெக்ரே அவர்கள் 45 நிமிடங்கள் இணையம் மூலம் நேரடியாக நம்முடைய கேள்விகளுக்கு பதில் அளிக்கும் நிகழ்வும் நடைபெற இருக்கிறது.
முதலில் பதிவு செய்யும் 250 நபர்களுக்கு மட்டுமே அனுமதி…
உங்கள் இருக்குயை பதிவு செய்ய tamilyouthsandstudents@gmail.com என்ற முகவரிக்கு மின்னஞ்சல் அனுப்பவும்.என தெரிவிக்கப்பட்டுள்ளது.
19 பிப்ரவரி 2014
கொலை வெறியில் காங்கிரஸ்!
![]() |
ராஜீவ்-ஜே.ஆர். |
18 பிப்ரவரி 2014
இனிப்பு வழங்கி கொண்டாட்டம்!
![]() |
ஈழத்தில் இந்திய அராஜகம்! |
17 பிப்ரவரி 2014
காதல் தகராற்றில் மாணவன் வெட்டிக்கொலை!

16 பிப்ரவரி 2014
இலங்கைக்கு ஆதரவளிக்கும் நாடுகளிற்காக காணொளி!

15 பிப்ரவரி 2014
வன்னியில் பெண்கள் மீது சிங்களம் புரிந்த கொடூரம்!

14 பிப்ரவரி 2014
கண் விழியுங்கள் இந்துக்களே” : வவுனியாவில் துண்டுப்பிரசுரம்!
சிவசேனா என்ற பெயரில் கண்விழியுங்கள் இந்துக்களே, இந்து சமயம் அழிந்தால் அழியட்டும் என்ற எண்ணம் கொண்ட இந்து சமயத்தவரா நீங்கள்?ஆம் என்றால் இதை தொடர்ந்து வாசிக்காதீர்கள் என்ற தலைப்புடன் வவுனியா முழுவதும் துண்டு பிரசுரங்கள் போடப்பட்டிருந்தன.
இத்துண்டு பிரசரத்தில் இந்துக்கள் யாரும் மற்ற மதத்தினரை இந்து மதத்திற்கு மாற்ற முயற்சிப்பது இல்லை ,இந்துக்கள் மற்ற மதத்தவரின் பழக்கவழக்கங்களை தரகுறைவாக பேசுவதும் இல்லை , இந்துக்கள் பிற மத கடவுளர்களை தீய சக்திகளாக (சாத்தான்களாக) சித்தரிப்பதில்லை ,உலகின் பழமையான மதமாக இருந்தாலும் பெரும்பான்மையான மதமாக இல்லாத்தற்கு காரணம் நாம் படையெடுத்து சென்ற போதும் கட்டாய மதமாற்றம் செய்யாதது இருந்தும் எம்மை படையெடுத்து வந்த அந்நியர்கள் எம்மை கட்டாய மதமாற்றம் செய்தனர்.
இன்றும்கூட எம்மை கொஞ்சம் கொஞ்சமாக அழித்து வருகின்றனர் இந்துமதம் எமக்கு தந்த சுதந்திரத்தை வேற்று மதத்தவர்கள் ஏன் எம்மவர்கள் கூட கொஞ்சம் கொஞ்சமாக வேட்டையாடி வருகின்றார்கள் இதே நிலை தொடர்ந்தால். எதிர்காலத்தில் நாம் அனைவரும் கழுத்தில் சிலுவையுடனும் தலையில் குல்லாவுடன் தான் திரிவோம்.
நாம் ஒன்றும் மற்ற மதத்தவர் போன்று மூளைச்சலவை செய்து மதம் மாற்றும் கொள்கையுடைய ஈனப்பிறவிகளல்ல எமக்கு வெளிநாட்டிலிருந்து மத அழிப்பிற்கென பண உதவியோ பொருளுதவியோ கிடைப்பதில்லை காதல் எனும் வலை விரித்து திருமணமெனும் ஆயுதத்தால் எம்மவரை மதம் மாற்றும் காமுகர்களும் நாமில்லை
இனியும் நாமிதை சுட்டி காட்டாதிருந்தால் நாம் கடவுளுக்கு செய்யும் துரோகமாகும் என குறிப்பிடப்பட்டுள்ளது.
12 பிப்ரவரி 2014
ஜெனீவாவில் அனந்தி எழிலன்!

நன்றி:குளோபல் செய்திகள்
11 பிப்ரவரி 2014
வடக்கு முதல்வரின் உரையால் மகிந்தவிற்கு கொதி,வலி!
வடக்கு முதலமைச்சர் க.வி.விக்னேஸ்வரன் வரணி மகாவித்தியாலயத்தில் நிகழ்த்திய உரை தொடர்பில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவினால் விசாரணைக்கு உத்தரவிடப் பட்டுள்ளதாக நம்பகரமாகத் தெரியவருகின்றது.
'கர்மவினை எவரையும் விட்டு வைக்காது. நாம் முன்னர் செய்த கருமங்களுக்கே இப்பொழுது பலனை அனுபவிக்கின்றோம்.சர்வாதிகாரிகளாக இருந்த எகிப்தின் முபாரக், ஈராக்கின் சதாம் ஹுசைன்,பாகிஸ்தானின் முஷாரப் ஆகியோர் இருந்த நிலை என்ன என்பதையும் இறுதியில் அவர்களுக்கு என்ன நடந்தது என்பதையும் உணர்ந்து கொள்ள வேண்டும்' என்று முதலமைச்சர் தனது உரையில் தெரிவித்திருந்தார்.
ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவை மறைமுகமாகச் சாடியே, வடக்கு முதல்வர் இவ்வாறு தெரிவித்திருப்பதாக ஜனாதிபதிக்குச் சம்பந்தப்பட்ட தரப்பினர் போட்டுக் கொடுத்துள்ள தாகவும் ,இதனடிப்படையில் இது தொடர்பில் முழுமையான விசாரணை நடத்தி அறிக்கை சமர்ப்பிக்குமாறு அவர் உத்தரவிட்டுள்ளதாகவும் நம்பகரமாக அறியமுடிகின்றது.
09 பிப்ரவரி 2014
வைகோவின் கோரிக்கையை ஏற்றுக்கொண்டார் மோடி!

08 பிப்ரவரி 2014
பூசா முகாமுக்குள் சோதனை நடத்தினார் அமெரிக்கப் பிரதிநிதி!
அண்மையில் இலங்கைக்கு விஜயம் மேற்கொண்ட, போர்க்குற்ற விவகாரங்களைக் கவனிக்கும் அமெரிக்காவின் சிறப்பு தூதுவரான ஸ்டீபன் ஜே ராப், பூசாவில் உள்ள இராணுவ முகாம் ஒன்றுக்குள் திடீரென உள்நுழைந்து சோதனை நடத்திய தகவல் தற்போது வெளியாகியுள்ளது. கடந்த மாதம் முதல் வாரத்தில் இலங்கை வந்திருந்த ஸ்டீபன் ராப் தலைமையிலான அமெரிக்க குழுவினர், காலியில் உள்ள பூசா தடுப்பு முகாமில் தடுத்து வைக்கப்பட்டுள்ள விடுதலைப் புலிகள் இயக்க உறுப்பினர்களை பார்வையிடுவதற்காக சென்றிருந்தனர்.இதன்போது, பூசா தடுப்பு முகாமுடன் இணைந்திருந்த இராணுவ முகாம் ஒன்றுக்குள் அவர்கள் திடீரென உள்நுழைந்து தேடுதல் நடத்தும் பாணியில் பார்வையிட்டுள்ளனர்.
போரின் இறுதிக்கட்டத்தில் படையினரிடம் சரணடைந்த விடுதலைப் புலிகளின் உயர்மட்டத் தலைவர்கள் பலர், இன்னமும் எங்குள்ளனர் என்று தெரியாதுள்ளது. இவர்கள் இரகசிய தடுப்பு முகாம்களில் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக, தகவல்கள் வெளியாகியிருந்தன.இந்தநிலையில், பூசா தடுப்பு முகாமுக்கு அருகில் இருந்த படையினரின் முகாமும், அத்தகைய இரகசியத் தடுப்பு முகாமாக பயன்படுத்தப்படலாம் என்ற சந்தேகத்தின் பேரிலேயே ஸ்டீபன் ராப் குழுவினர் அதற்குள் நுழைந்து பார்வையிட்டதாகத் தெரிகிறது.
பூசா தடுப்பு முகாமுடன் இணைந்த இராணுவ முகாமுக்குள், ஸ்டீபன் ராப் தலைமையிலான குழுவினர் அத்துமீறி நுழைந்ததாக, இலங்கை அரசாங்க வட்டாரங்கள் குற்றம்சாட்டியுள்ளன.அது தடுப்பு முகாமின் பாதுகாப்புக்கான முகாம் என்பதை அமெரிக்க அதிகாரி தெரிந்து கொண்டிருக்க வேண்டும் என்றும், அமெரிக்காவினது இந்த அணுகுமுறையை இலங்கை அரசாங்கத்தினால் புரிந்து கொள்ள முடியவில்லை என்றும் அரசாங்க வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
07 பிப்ரவரி 2014
இலங்கைக்கு எதிராக பிரான்சும் களத்தில்!
அமெரிக்காவினால் ஐ நா மனித உரிமைகள் பேரவையில் இலங்கைக்கு எதிராக கொண்டு வரப்படவுள்ள தீர்மானத்துக்கு பிரெஞ்சு மொழி பேசும் நாடுகளின் ஆதரவைத் திரட்டும் பொறுப்பு பிரான்சிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. பிரித்தானியா மற்றும் அமெரிக்கா ஆகிய நாடுகள் கேட்டுக்கொண்டதற்கு அமைய பிரான்ஸ் இந்த முயற்சியில் இறங்கியுள்ளது.
இதே வேளை பொதுநலவாய அமைப்பில் அங்கம் வகிக்கும் நாடுகளின் ஆதரவைத் திரட்டும் முயற்சியில் பிரித்தானியா ஈடுபட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
06 பிப்ரவரி 2014
ஜெனீவா பிரதிநிதிகளுடன் நிஷா பேச்சு!
இலங்கை மனித உரிமை நிலைமைகள் குறித்து மத்திய மற்றும் தென் ஆசிய பிராந்தியத்திற்கான அமெரிக்க துணை ராஜாங்கச் செயலாளர் நிஷா பிஷ்வால், ஜெனீவா பிரதிநிதிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார்.
பிரித்தானியாவிற்கான விஜயத்தை முடித்துக்கொண்ட பிஷ்வால் தற்போது ஜெனீவாவில் உள்ள ராஜதந்திரிகளுடன் இலங்கை நிலைமைகள் குறித்து பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றார். எதிர்வரும் ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவை அமர்வுகளில் இலங்கை குறித்த தீர்மானம் நிறைவேற்றுவது குறித்து இந்த சந்திப்பில் கவனம் செலுத்தப்பட்டுள்ளது,
ஜெனீவாவில் கடமையாற்றி வரும் தூதுவர்கள் மற்றும் ராஜதந்திரிகளுடன் இந்த சந்திப்பு நடத்தப்பட்டுள்ளது. இலங்கை நிலைமைகள் குறித்து ராஜதந்திரிகளுடன் நடத்திய சந்திப்பு வெற்றிகரமாக அமைந்தது என பிஷ்வால் சர்வதேச ஊடகங்களுக்கு தெரிவித்துள்ளார்.
05 பிப்ரவரி 2014
சிங்கக்கொடி ஏற்றியவருக்கு அடி,உதை!
சிறீலங்காவின் 66ஆவது சுதந்திர தினத்தைக் கொண்டாடும் முகமாக தனது சுயதொழில் நிலையத்தில் தேசியக் கொடியினை ஏற்றிய சுயதொழில் நிலையத்தின் உரிமையாளரான அராலி தெற்கை சேர்ந்த 56 வயதான தம்பிப்பிள்ளை மகேந்திரராசா மீது இனந்தெரியாத நபர்கள் தாக்குதல் மேற்கொண்டுள்ளதாகவும் இதனால் படுகாயமடைந்த உரிமையாளர் யாழ். போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் வட்டுக்கோட்டை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி எஸ்.பி.சத்துருசிங்க தெரிவித்தார். குறித்த நபர் வீட்டில் இருந்தபோது வந்த இனந்தெரியாத நபர்கள் “ஏன் தேசியக் கொடியை ஏற்றினாய்”, “நீ ஆமி, பொலிஸுடன் சேர்ந்தால் பெரிய கொம்பனா?” என கேட்டு தன்னை அடித்ததாக குறித்தநபர் முறைப்பாட்டில் குறிப்பிடப்பட்டுள்ளதாக பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தெரிவித்தார். இந்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை தாம் மேற்கொண்டு வருவதாகவும் பொறுப்பதிகாரி மேலும் தெரிவித்தார்.
04 பிப்ரவரி 2014
இன்று வடக்கில் கறுப்புக் கொடிகள்!

03 பிப்ரவரி 2014
கமலேந்திரன் நீக்கம் என்கிறது ஈபிடிபி!
![]() |
கொலையுண்ட ரெக்சியன் |
பாற்காரன் குறும்பட உத்தியோகபூர்வ இணைய வெளியீடு.
கடந்த மாதம் யாழ் ராஜா திரையரங்கை நிறைத்த வெளியீடான நெடுந்தீவு முகிலனின் 6ஆவது குறும்படமான பாற்காரன் இன்று உத்தியோகபூர்வமாக படக்குழுவினரால் இணையதள வாசகர்களுக்காக வெளியிடப்படுகின்றது.
யாழின் தற்போதைய பால்மா பிரச்சனையை மையக்கருவாக கொண்டு, வீண்விரையமாகும் விடயங்களுக்கு குறியீடாக பசுப்பாலினை உள்வாங்கி எல்லோர் மனங்களிலும் ஆணியடித்ததுபோல் இடம்பிடித்த பாற்காரன் குறும்படம் இணைய நண்பர்களுக்காக இன்று வெளியிடப்படுகின்றது
இந்தப்படத்தின் கதாநாயகனாக பேராசிரியர் சிவச்சந்திரனின் மகன் பாரதி தனது பாத்திரத்தை நிறைவாக வெளிப்படுத்தி இருக்கின்றார், படத்தின் உயிர்நாடியாக படத்தின் ஒளிப்பதிவாளர் சுரேன் யாழ்ப்பாணத்தின் அழகை மிக தத்துரூபமாக காண்பித்துள்ளார், படத்தினை மீண்டும் மீண்டும் பார்கும் வகையில் அற்புதனின் இசை அமைந்துள்ளது, ஏனைய நடிகர்களும் தமது திறமைகளை நன்கு வெளிப்படுத்தியுள்ளனர், கதையையும் கருவையும் நெடுந்தீவு முகிலன் நன்று தேர்ந்தெடுத்துள்ளார், இப்படைப்பை தயாரித்த கேதீசை பாராட்டவேண்டும்
ஈழத்தில் இருந்து நவீன திரைநுணுக்கங்களுடன் வெளிவந்த குறும்படமான பாற்காரன் இணைய வாசகர்களையும் நன்கு திருப்திப்திபடுத்தும் என்பது ஆணித்தரமான உண்மை,
பாற்காரன் குறும்படம் பால் பிரச்சனையை மட்டும் அல்லாமல் எமது ஈழ்ப்பிரச்சனையையும் நாசூக்காக தொட்டுச்செல்கின்றது, ஈழத்தில் இருந்துவரும் படைப்புகள் பாற்காரன் போன்று சமூக அக்கறையும் மனித
விழிப்புணர்வுடனும் வெளிவருவது எம் ஈழப்படைப்புகளை வெளிஉலகிற்கு கொண்டு செல்லும் என்பதில் ஐயமில்லை,
நன்றி:தினக்கதிர்
நன்றி:தினக்கதிர்
02 பிப்ரவரி 2014
நாரந்தனை விபத்தில் தமிழ் பொலிஸ்காரர் மரணம்!
யாழ்.ஊர்காவற்துறை பொலிஸ் நிலையத்திலிருந்து யாழ்ப்பாணம் நோக்கிச் சென்று கொண்டிருந்த தமிழ் பொலிஸ் அதிகாரி ஒருவர் விபத்தில் உயிரிழந்தார். அளவெட்டியைச் சேர்ந்த 24 வயதுடைய குகராஜ் பிரசன்னா என்ற பொலிஸ் அதிகாரி ஊர்காவற்துறையிலிருந்து யாழ்ப்பாணம் நோக்கிச் சென்று கொண்டிருந்த போது நாரந்தனை வடக்குப் பகுதியில் அவர் சென்ற மோட்டார் சைக்கிள் வேகக்கட்டுப்பாட்டை இழந்து மின்கம்பத்துடன் மோதியது. இதனால் சம்பவ இடத்திலேயே அவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
01 பிப்ரவரி 2014
இலங்கை சர்வாதிகார நாடு-மங்கள சமரவீர
இலங்கை ஜனநாயக நாடு அல்ல சர்வாதிகார நாடு என ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் மங்கள சமரவீர தெரிவித்துள்ளார்.
இலங்கை சர்வாதிகாரத்தை நோக்கி பயணித்து விட்டது.பெயரளவில் மாத்திரமே இலங்கை ஜனநாயக நாடு. இந்தோனேசியாவின் சுகார்டோ, எகிப்தின் முபாரக் ஆகியோரின் ஆட்சியில் காணப்பட்ட சகல சர்வாதிகார அடையாளங்களும் இலங்கையில் தற்போது காணப்படுகிறது.
மாதம் தோறும் தேர்தல் நடத்துவதால் ஒரு நாடு ஜனநாயக நாடாகி விடாது. 20 ஆம் நூற்றாண்டின் இறுதியிலும் 21 ஆம் நூற்றாண்டின் ஆரம்பத்திலும் காணப்படும் நவீன சர்வாதிகாரத்தின் அடையாளமாகவே தேர்தல் காணப்படுகிறது என அவர் சுட்டிக்காட்டியதுடன்,
முபாரக் எகிப்தில் தொடர்ந்தும் தேர்தல்களை நடத்தினார். சிம்பாவே ஜனாதிபதி றொபர்ட் முகாபே தொடர்ந்தும் தேர்தலை நடத்தியே தெரிவு செய்யப்படுகிறார்.
ஊடக சுதந்திரம், மனித உரிமைகள், சட்டத்தின் ஆட்சி மற்றும் சுதந்திரமான தீர்மானங்களை எடுக்க நாடாளுமன்றத்திற்கு இருக்கும் இயலுமை ஆகியவற்றை ஆராய்ந்து பார்த்தால் இலங்கை ஜனநாயக நாடு அல்ல, சர்வாதிகார நாடு என்பது புலனாகும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)