
நான் என்ற ஆணவம் அதர்மமாக விஸ்வரூபமெடுத்தாலும்-ஒருநாள் தர்மத்தின் காலடியில் விழும்.
31 மே 2013
மர்ம மரணச்செய்தியால் மனம் வருந்தும் ஊடகங்கள்!

லண்டனில் இருந்து வற்றாப்பளை வந்தவர் கைது!
28 மே 2013
த.தே.கூ வென்றால் நாட்டின் தேசிய பாதுகாப்பிற்கு பாதிப்பு!
இந்தியாவின் தேவைகளுக்காக இலங்கையில் 13ஆவது திருத்தச் சட்டத்தை அமுல்படுத்த முடியாது என பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
அத்துடன் இந்தியாவின் தேவைகளுக்காக இலங்கையில் எதற்காக 13ம் திருத்தச் சட்டத்தை அமுல்படுத்த வேண்டுமென கேள்வி எழுப்பியுள்ளதுடன், இலங்கையில் இந்தியாவின் மாதிரியைக் கொண்டுள்ள 13ம் திருத்தச் சட்டத்தை அமுல்படுத்துவது பொருத்தமானதல்ல எனவும் பாதுகாப்புச் செயலாளர் குறிப்பிட்டுள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
தமிழீழ விடுதலைப் புலி ஆதரவு கட்சியான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு எதிர்வரும் வடமாகாணசபைத் தேர்தலில் வெற்றியீட்டினால், காணி மற்றும் காவல்துறை அதிகாரங்களைக் கோரக் கூடும்.
இதன் மூலம் நாட்டின் தேசிய பாதுகாப்பிற்கும் ஒருமைப்பாட்டுக்கும் பாதிப்பு ஏற்படும். எனினும் நாட்டில் 13ம் திருத்தச் சட்டத்திற்கு மக்கள் ஆதரவளிக்கவில்லை.
இந்தியா அல்லது வேறும் நாடொன்று கோபித்துக் கொள்ளும் என்பதற்காக நாட்டுக்கு நன்மை செய்யாமலிருக்க முடியாது. இந்தியாவின் தேவைகளுக்காக 13ம் திருத்தச் சட்டத்தை அமுல்படுத்த நாம் தயாரில்லை எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
இலுப்பக்கடவை சாட்டி யாருக்குச் சொந்தம்?
நன்றி:குளோபல் தமிழ் செய்தி
25 மே 2013
கருணா கேட்டாராம் அரசு நிராகரித்ததாம்!
![]() |
கருணா |
கோத்தபாயவுக்கு அதிகாரம் கிடையாது!
![]() |
வாசுதேவ நாணயக்கார |
24 மே 2013
திருமலை நகரசபையுடன் அமெரிக்கா உடன்பாடு!
சிறிலங்கா அரசாங்கத்தின் அனுமதியைப் பெறாமல், திருகோணமலையில் அமெரிக்கன் நிலையத்தை அமைப்பதற்கு திருகோணமலை நகரசபையுடன் அமெரிக்கத் தூதரகம் புரிந்துணர்வு உடன்பாடு செய்து கொண்ட விவகாரம், சிறிலங்கா அரசுக்கு விசனத்தை ஏற்படுத்தியுள்ளது.
திருகோணமலை நகரசபையுடன் இணைந்து பொது தகவல் மற்றும் செயற்பாட்டு நிலையத்தை அமைப்பதற்கு கொழும்பிலுள்ள அமெரிக்கத் தூதரகம் புரிந்துணர்வு உடன்பாட்டை செய்து கொண்டுள்ளது.
இந்த உடன்பாட்டில் கொழும்பிலுள்ள அமெரிக்கத் தூதரக கலாசார, கல்வி, ஊடக விவகாரங்களுக்கான பணிப்பாளர் கிறிஸ்ரொபர் டீலும், திருகோணமலை நகரசபை முதல்வர் கே. செல்வராசாவும் கையெழுத்திட்டனர்.
கொழும்பிலுள்ள அமெரிக்கத் தூதரக பொதுசன விவகார பிரிவுக்கும் திருகோணமலை நகரசபைக்கும் இடையிலான இந்த உடன்பாடு நேற்றுமுன்தினம் திருகோணமலை பொது நூலகத்தில் வைத்து கையெழுத்திடப்பட்டுள்ளது.
இது குறித்து சிறிலங்கா வெளிவிவகார அமைச்சுக்கு அறிவிக்கப்படவோ அல்லது, அதன் அனுமதி பெறப்படவோ இல்லை.
அனைத்துலக நடைமுறைகளுக்கு அமைய, கொழும்பிலுள்ள வெளிநாட்டுத் தூதரகங்கள் உள்ளூர் அதிகாரிகளுடன் ஏதாவது இணக்கப்பாட்டை ஏற்படுத்த முன்னர், அது குறித்து சிறிலங்கா வெளிவிவகார அமைச்சுக்குத் தெரியப்படுத்தவோ அல்லது அதன் அனுமதியைப் பெறவோ வேண்டும் என்று சிறிலங்கா அதிகாரிகள் கூறியுள்ளனர்.எனினும் எந்த அனுமதியும் பெறப்படாமல் கொழும்பிலுள்ள அமெரிக்கத் தூதரகம் திருகோணமலை நகரசபையுடன் செய்து கொண்டுள்ள புரிந்துணர்வு உடன்பாடு சிறிலங்கா அரசுக்கு விசனத்தை ஏற்படுத்தியுள்ளது.திருகோணமலை நகரசபை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நிர்வாகத்தின் கீழ் இருந்து வருகின்றது.அமெரிக்கன் கோணர் எனப்படும் பொது தகவல் மற்றும் செயற்பாட்டு நிலையங்களை அமெரிக்கா ஏற்கனவே யாழ்ப்பாணத்தலும் கண்டியிலும் நிறுவியிருப்பது குறிப்பிடத்தக்கது.
23 மே 2013
பிரபாகரன் தனிச்சிறப்புக் கொண்டவர்-மன்னார் ஆயர்
![]() |
தேசியத் தலைவர் |
"இனவாதிகளின் கருத்துகளுக்குச் செவிசாய்க்காமல் வடக்கில் மாகாணசபைத் தேர்தலை அரசு உடனடியாக நடத்தியே ஆகவேண்டும். அங்கு வாழும் தமிழ் மக்களுக்கு சகல உரிமை களையும் வழங்கவேண்டும். அதேவேளை, வடக்கு, கிழக்கில் இராணுவ ஆக்கிரமிப்புக்கு அரசு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும்' என்றும் அவர் குறிப்பிட்டார். பொதுபலசேனாவின் தலைமை அலுவலகத்தில் நேற்றுமுன்தினம் நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் கலந்துகொண்டு உரையாற்றிய அந்த அமைப்பின் பொதுச் செயலாளர் கல கொட அத்தே ஞானசார தேரர், "நாட்டில் மீண்டும் பிரிவினை வாத சக்திகள் தலைதூக்குகின்றன. அடுத்த பிரபாகரனாக மன்னார் ஆயர் இராயப்பு ஜோசப் செயற்படுகின்றார். ஆகவே, சிங்கள மக்கள் வீதியில் இறங்கி 13ஆவது திருத்தச் சட்டத்திற்கு எதிராகப் போராடவேண்டும். மாகாணசபைத் தேர்தல் என்பது தனி ஈழத்திற்கான முதற்படியாகும். எனவே, இந்தத் தேர்தலை அரசு நடத்தக்கூடாது'' என்று தெரிவித்திருந்தார். இதற்குப் பதிலளிக்கும் வகையிலேயே மன்னார் ஆயர் மேற்கண்டவாறு கருத்தைத் தெரிவித்துள்ளார். இது தொடர்பில் அவர் நேற்று உதயனிடம் தெரிவித்தவை வருமாறு: "முகவரி எதுவும் இல்லாத பொதுபலசேனா என்னைப் பிரபாகரனுடன் ஒப்பிட்டுக் கூறி யுள்ளது. பிரபாகரன் தனிச்சிறப்புக் கொண்டவர். நான் அவருக்கு ஒப்பானவர் அல்லர். நான் சமயவாதி; அரசியல்வாதி அல்லது ஆயுதப் போராளி அல்ல. சமாதானத்தை விரும்புபவன். ஒருபோதும் நான் தனி ஈழத்தைக் கோரவில்லை. தமிழ் மக்கள் ஏனைய மக்களைப் போல சம உரிமையுடன் வாழ வேண்டும் என்பதே எனது விருப்பம். இந்நிலையில், இனவாத அமைப்பான பொதுபலசேனா என் மீது வீண்பழி சுமத்துகின்றது. பச்சைப் பொய்களைக் கூறி தமிழ், முஸ்லிம், சிங்கள மக்களின் ஒற்றுமையைக் குழப்புவதற்கும், நாட்டுக்குத் தீமை செய்யவுமே பொதுபலசேனா என்ற இந்த இனவாத அமைப்பு முளைத்துள்ளது. இந்த அமைப்பு ஊடகங்கள் மூலமாகத் தனக்கு முகவரி தேட முற்படுகின்றது. எனவே, இதை நாட்டு மக்கள் முளையிலேயே கிள்ளியெறியவேண்டும். தமிழர்களும் இந்த நாட்டின் சொந்தக்காரர்கள். இந்த நாடு பல்லின மக்களைக் கொண்டது; கலாசாரத்தைக் கொண்டது. எனவே, முதலில் நாட்டின் வரலாற்றைப் படித்துவிட்டு பொதுபலசேனா அரசியலில் இறங்கவேண்டும். நாட்டின் அரசமைப்பை இல்லாதொழிக்குமாறு கூறுவதற்கு பொதுபலசேனா என்ற இந்த அமைப்புக்கு எந்த அருகதையும் கிடையாது. எனவே, இனவாதிகளின் கருத்துகளுக்குச் செவிசாய்க்காமல் வடக்கில் மாகாணசபைத் தேர்தலை அரசு உடனடியாக நடத்தியே ஆகவேண்டும். அங்கு வாழும் தமிழ் மக்களுக்கு சகல உரிமைகளையும் வழங்கவேண்டும். அதேவேளை, தமிழர்கள் பரந்து வாழும் வடக்கு, கிழக்கில் இராணுவ ஆக்கிரமிப்புக்கு அரசு முற்றுப்புள்ளி வைக்கவேண்டும்'' என்றார்.
22 மே 2013
மன்னார் ஆயர் இரண்டாவது பிரபாகரன் என்கிறது இனவாத பொதுபல சேனா!

21 மே 2013
நாடாளுமன்றம் செல்வது போன்று 4 ஆம் மாடிக்கும் செல்லும் நிலை!
![]() |
பா.அரியநேந்திரன் |
20 மே 2013
சட்டத்தரணிகளை மிரட்டுகிறது படைத்தரப்பு!
படையினரிடம் சரணடைந்த பின் காணாமற் போனவர்கள் தொடர்பில் வவுனியா மேல் நீதிமன்றில் தாக்கல் செய்யப்பட்ட ஆட்கொணர்வு மனுவை திரும்பப் பெறுமாறு மனுதாரர்கள் இனந்தெரியாத நபர்களால் அச்சுறுத்தப்பட்டு வருகின்றனர் என்று காணாமற் போனோரை தேடிக் கண்டறியும் குழுவினர் குற்றஞ்சாட்டியுள்ளனர்.
போரின் இறுதிக் கட்டத்தில் அரச படையினரின் அறிவித்தலுக்கு அமைய தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பைச் சேர்ந்த ஆயிரக் கணக்கான முன்னாள் போராளிகள் 2009 ஆம் ஆண்டு மே 18 ஆம் திகதி இராணுவத்தினரிடம் சரணடைந்திருந்தனர்.
இதன் பின்னர் சரணடைந்தவர்கள் அவர்களது உறவினர்களின் கண்ணெதிரே படையினரால் பஸ்களில் ஏற்றிச் செல்லப்பட்டனர். எனினும் அதன் பின்னர் அவர்களது நிலை என்னவென்று தெரியா நிலையில் அவர்களது உறவினர்கள் உள்ளனர். இந்த நிலையில் சரணடைந்து காணாமல் போனவர்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளவர்களில் ஐந்து பேர் தொடர்பில் அவர்களின் உறவினர்கள் ஆட்கொணர்வு மனுக்களை கடந்த மார்ச் மாதம் 20 ஆம் திகதி வவுனியா மேல் நீதிமன்றத்தில் தாக்கல் செய்தனர்.
இதனையடுத்து, முல்லைத்தீவில் உள்ள 58 ஆம் படைப்பிரிவின் தலைமை அதிகாரியையும், இராணுவ தளபதியையும் இன்று திங்கட்கிழமை நீதிமன்றத்தில் முன்னிலையாகி இது தொடர்பில் சாட்சியமளிக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.
இந்த நிலையில் வழக்கைத் திரும்பப் பெறுமாறு அதனைத் தாக்கல் செய்தவர்களுக்கு, தொலைபேசியூடாகவும், நேரிலும் சீருடையினர் அச்சுறுத்தல் விடுத்து வருகின்றனர்.
இதன் காரணமாக அவர்கள் வழக்கை தொடர்ந்து நடத்துவது குறித்து அச்சம் அடைந்துள்ளனர். ஆயினும் குறித்த வழக்கில், வழக்கை தாக்கல் செய்தவர்களை தமது அமைப்பினர் பாதுகாப்பாக அழைத்து வந்து நீதிமன்றில் இன்று முற்படுத்துவர் என்று காணாமல் போனோரை தேடிக் கண்டறியும் குழு தெரிவித்துள்ளது.
19 மே 2013
விடுதலைப் போராட்டம் தொடரும்-மாவை எம்.பி. சூளுரை
18 மே 2013
முள்ளிவாய்க்கால் நினைவுத்தூபி விசமிகளால் இடித்தழிப்பு!
வவுனியா தமனக்குளத்தில் அமைக்கப்பட்டிருந்த முள்ளிவாய்க்கால் நினைவுத்தூபி விசமிகளால் இடித்தழிக்கப்பட்டுள்ளது.
2009 ஆம் ஆண்டு இறுதிக்கட்ட யுத்தத்தில் படுகொலை செய்யப்பட்ட உறவுகள் நினைவாக ஓராண்டு பூர்த்தியை முன்னிட்டு கடந்த 2010 ஆம் ஆண்டு மனித உரிமை செயற்பாட்டாளர்கள் மற்றும் பொதுமக்களும் இணைந்து முள்ளிவாய்க்கால் நினைவுத்தூபி வவுனியாவில் அமைக்கப்பட்டது.
இந்தநிலையில் முள்ளிவாய்க்காலில் உறவுகள் படுகொலை செய்யப்பட்டு இன்று 4 ஆம் ஆண்டு நினைவு நாளாகும். இதற்கான நினைவேந்தல் நிகழ்வுகள் இன்று காலை 10 மணியளவில் தமிழ் தேசிய மக்கள் முன்னணியினரால் குறித்த நினைவுதூபியில் நினைவேந்தல் நிகழ்வு ஏற்பாடாகியிருந்த நிலையிலேயே நேற்று இரவு விசமிகளால் இடித்தழிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
தமிழர் தாயகத்தில் இன்று துயர் பகிர்வு!
16 மே 2013
விளைவுகளை எதிர்கொள்ள வேண்டி வரும் – சிறிலங்காவுக்கு எச்சரிக்கை
14 மே 2013
சவால் விடுகிறார் சிறிலங்கா படைகளின் வன்னித்தளபதி!
13 மே 2013
அதிகாலை வீசிய மினி புயல்!
புலம்பெயர் தமிழர் வாக்களிக்க அனுமதியோம்!

12 மே 2013
தேசியத் தலைவரின் பாடசாலை நண்பர் குற்றத்தை ஒப்புக்கொண்டாராம்!
அயர்லாந்துக் குடியுரிமை பெற்ற தமிழீழ தேசியத் தலைவர் மேதகு வேலுப்பிள்ளை பிரபாகரன் அவர்களின் பாடசாலைத் தோழர் எனக்கூறப்படுபவர் தீவிரவாதச் செயற்பாடுகளில் தான் ஈடுபட்டதை நேற்று சிறிலங்கா நீதிமன்றத்தில் ஒப்புக்கொண்டுள்ளார்.
வல்வெட்டித்துறையைச் சேர்ந்த ஞானசுந்தரம் ஜெயசுந்தரம் என்ற, தேசியத் தலைவர் வே.பிரபாகரனின் பாடசாலைத் தோழர், 2007ம் ஆண்டு செப்ரெம்பர் மாதம் விடுதலைப் புலிகளுக்கு உதவினார் என்ற சந்தேகத்தின் பேரில் கொழும்பில் வைத்துக் கைது செய்யப்பட்டார்.
இவர், விடுதலைப் புலிகளுக்கு நிதி சேகரிப்பதில் முக்கியமானவராக விளங்கினார் என்றும், விடுதலைப் புலிகளின் அனைத்துலக புலனாய்வுப் பிரிவில் செயற்பட்டார் என்றும், குற்றம்சாட்டப்பட்டிருந்தது.
இவர் சிங்கப்பூர், மலேசியாவில் இருந்து இராணுவ தளபாடங்களைக் கொண்டு செல்வதற்காக கப்பல் ஒன்றை வாங்கியதாக நீதிமன்றத்தில் பகிரங்கமாக ஒப்புக்கொண்டுள்ளார்.
தனது குற்றத்தை ஒப்புக்கொண்ட இவர், தன்னைப் புனர்வாழ்வுக்கு அனுப்புமாறும், சமூகத்தில் நல்ல குடிமகனாக தன்னால் இணைந்து கொள்ள முடியும் என்றும் கூறியுள்ளார்.
2007இல் சிறிலங்கா குற்றப்புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்ட ஞானசுந்தரம் ஜெயசுந்தரம், பயங்கரவாதத் தடைச்சட்டத்தின் கீழ் கடந்த 6 ஆண்டுகளாக தடுத்து வைக்கப்பட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
இலங்கையில் அரசியல் சூழ்நிலை ஆபத்தானது!
![]() |
ஹிருனிகா |
11 மே 2013
த.தே.கூட்டமைப்பை பதிவு செய்வது தொடர்பில் முடிவில்லை!
தமிழ்த் தேசிய கூட்டமைப்பை பதிவு செய்வதில் மன்னாரில் நடைபெற்ற முக்கிய கூட்டத்தில் முடிவெதுவும் எட்டப்படவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ்த் தேசிய கூட்டமைப்பில் இணைந்துள்ள ஐந்து அரசியல் கட்சிகளின் தலைவர்கள், முக்கியஸ்தர்கள் இடையே, மன்னார் ஆயர் தலைமையில் நடைபெற்ற முக்கிய கூட்டம் சுமார் இரண்டு மணித்தியாலங்கள் நடைபெற்றது.
இக் கூட்டத்தில் தமிழ்த் தேசிய
கூட்டமைப்பை பதிவு செய்வது தொடர்பில் தமிழரசுக் கட்சியின் தலைவர் ஆர்.சம்பந்தன், மற்றும் மாவை சேனாதிராஜா, எம்.ஏ.சுமந்திரன் ஆகியோர் விளக்கமளித்தனர். இதேபோன்று, ஈ.பி.ஆர்.எல்.எவ், டெலோ, தமிழர் விடுதலைக் கூட்டணி, புளொட் ஆகிய கட்சிகளின் தலைவர்கள் தமது நிலைப்பாட்டை எடுத்துக் கூறினர். இருப்பினும், தமிழ்த்தேசிய கூட்டமைப்பை பதிவு செய்வதில் எந்தவிதமான முடிவுகளும் இந்தக் கூட்டத்தில் எடுக்கப்படவில்லை என சுரேஸ் பிரேமச்சந்திரன் கூறினார். இதேவேளை, பதிவு செய்வது தொடர்பிலும், தமிழ்த்தேசிய கூட்டமைப்பில் இணைந்துள்ள கட்சிகள் ஒரு புரிந்துணர்வு அடிப்படையில் செயற்படுவதற்குத் தமிழரசுக் கட்சியினர் சில விட்டுக்கொடுப்புக்களைச் செய்வதற்கு முன்வந்துள்ளதாக, அந்தக் கட்சிக்கும் டெலோ அமைப்புக்கும் இடையில் நேற்று நடைபெற்ற கூட்டத்தின் முடிவுகள் குறித்து தெரிவித்த டெலோ அமைப்பின் தலைவர் செல்வம் அடைக்கலநாதன் கூறினார். தமிழ்த்தேசிய கூட்டமைப்புக்கும் மன்னார் ஆயர் தலைமையிலான குழுவினருக்கும் இடையில் நடைபெற்ற சந்திப்பையடுத்து, வடமாகாணத்தின் பல மாவட்டங்களையும் சேர்ந்த சிவில் அமைப்புக்களின் பிரதிநிதிகளுக்கும் இடையில், தமிழ் மக்களின் அரசியல் செயற்பாடுகளை என்ன வகையில் எதிர்காலத்தில் முன்னெடுத்துச் செல்வது என்பது பற்றிய நீண்ட கலந்துரையாடலும் நடைபெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.
கூட்டமைப்பை பதிவு செய்வது தொடர்பில் தமிழரசுக் கட்சியின் தலைவர் ஆர்.சம்பந்தன், மற்றும் மாவை சேனாதிராஜா, எம்.ஏ.சுமந்திரன் ஆகியோர் விளக்கமளித்தனர். இதேபோன்று, ஈ.பி.ஆர்.எல்.எவ், டெலோ, தமிழர் விடுதலைக் கூட்டணி, புளொட் ஆகிய கட்சிகளின் தலைவர்கள் தமது நிலைப்பாட்டை எடுத்துக் கூறினர். இருப்பினும், தமிழ்த்தேசிய கூட்டமைப்பை பதிவு செய்வதில் எந்தவிதமான முடிவுகளும் இந்தக் கூட்டத்தில் எடுக்கப்படவில்லை என சுரேஸ் பிரேமச்சந்திரன் கூறினார். இதேவேளை, பதிவு செய்வது தொடர்பிலும், தமிழ்த்தேசிய கூட்டமைப்பில் இணைந்துள்ள கட்சிகள் ஒரு புரிந்துணர்வு அடிப்படையில் செயற்படுவதற்குத் தமிழரசுக் கட்சியினர் சில விட்டுக்கொடுப்புக்களைச் செய்வதற்கு முன்வந்துள்ளதாக, அந்தக் கட்சிக்கும் டெலோ அமைப்புக்கும் இடையில் நேற்று நடைபெற்ற கூட்டத்தின் முடிவுகள் குறித்து தெரிவித்த டெலோ அமைப்பின் தலைவர் செல்வம் அடைக்கலநாதன் கூறினார். தமிழ்த்தேசிய கூட்டமைப்புக்கும் மன்னார் ஆயர் தலைமையிலான குழுவினருக்கும் இடையில் நடைபெற்ற சந்திப்பையடுத்து, வடமாகாணத்தின் பல மாவட்டங்களையும் சேர்ந்த சிவில் அமைப்புக்களின் பிரதிநிதிகளுக்கும் இடையில், தமிழ் மக்களின் அரசியல் செயற்பாடுகளை என்ன வகையில் எதிர்காலத்தில் முன்னெடுத்துச் செல்வது என்பது பற்றிய நீண்ட கலந்துரையாடலும் நடைபெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.
மே 18 சர்வதேச இனப்படுகொலை நாள்!
![]() |
முள்ளிவாய்க்கால் |
விடுதலைப் போராட்டத்தை நசுக்கும் செயற்பாடுகளில் இறங்கியுள்ள இந்திய அரசு!
இந்தியாவிலிருந்து ஊடகவியலாளர்கள் என்ற போர்வையில் இலங்கையின் வடபகுதிக்கு இந்தியப் புலனாய்வாளர்கள் அனுப்படுகின்ற விடயங்கள் தற்போது அம்பலத்திற்கு வந்துள்ளன.
யுத்தம் முடிவுக்கு வந்த நிலையில் இலங்கை வரும் இவர்கள் தமிழ் மக்களின் பிரதிநிதிகளைச் சந்தித்து இந்திய அரசிற்கான ஆதரவை பெற்றுக்கொள்ள முயற்சிகின்றனர்.
சர்வதேச அரசியலை நோக்கி நகரும் விடுதலைப் போராட்டத்தை சிதைக்கும் இந்திய அரசின் ஒரு இரகசிய நடவடிக்கையாகவே இந்நடவடிக்கை முன்னெடுக்கப்படுகின்றதாக தெரிவிக்கப்படுகின்றது.
தம்மை ஊடகவியலாளர்கள் மற்றும் இந்திய பல்கலைக்கழகங்களின் ஆய்வாளர்கள் என்று அடையாளப்படுத்தும் இவர்கள், விடுதலைப் போராட்டத்தை கொச்சைப் படுத்தும் செயற்பாடுகளை மேற்கொண்டு வருகின்றனர்.
தமிழர்களது விடுதலைப் போராட்டத்தை 1987 ஆம் ஆண்டு காலப் பகுதி முதல் இன்றுவரை அழிக்கும் செயற்பாடுகளையே இந்தியா தொடர்ந்தும் முன்னெடுத்து வருவதாக புத்தி ஜீவிகள் சிலர் கருத்து தெரிவிக்கின்றனர்.
10 மே 2013
கனடாவில் வன்னி வீதி!
தை மாதத்தை தமிழர் மரபுரிமை மாதமாக அங்கீகரித்ததன் முலம் தமிழ் மக்களுக்கு உரிய கௌரவத்தை வழங்கிய மார்க்கம் நகரசபை மீண்டும் ஒரு தடவை உலகத்தமிழர்களின் கவனத்தை ஈர்க்கும் வண்ணம், தனது நிர்வாகத்தின் கீழ் வரும் முக்கிய வீதி ஒன்றுக்கு “வன்னி வீதி” என்று பெயர் சூட்டுவதற்கு தீர்மானித்துள்ளது.
மார்க்கம் நகரசபையின் 7ம் வட்டார அங்கத்தவரான திரு,லோகன் கணபதியின் சிபார்சினை ஏற்று சபை அங்கத்தவர்கள் அனைவரதும் ஏகோபித்த ஆதரவோடு வன்னி வீதி என பெயர் சூட்டும் அவரது முயற்சிக்கு பலன் கிட்டியுள்ளது.
மார்க்கம் நகர சபையின் தமிழ் பேசும் அங்கத்தவராகத் திகழும் திரு லோகன் கணபதி அவர்கள் தொடர்ச்சியான சிறந்த சேவையின் பலனாக தமிழ் மக்கள் மட்டுமல்ல வேற்று இன மக்களும் அவரைப் பாராட்டுகின்றார்கள். அத்துடன் மார்க்கம் மாநகரசபையின் நகரபிதா திரு ஸ்கெப்பட்டி அவர்களின் நட்புக்கும் மரியாதைக்கும் உரியவராகவும் திரு லோகன் கணபதி இருப்பதும் தமிழ் மக்கள் பெருமைப்பட வேண்டிய ஒரு விடயமாகும்.மேற்படி வன்னி வீதி என்று பெயர் சூட்டப்படும் இந்த வீதியில்தான் மிகவிரைவில் மார்க்கம் நகரசபையின் மிகப்பெரிய சனசமூக நிலையம் மற்றும் நூலகம், பூங்கா போன்றவை அமைந்துள்ள பொழுது போக்கு வளாகம் அமையவுள்ளது என்பதும்.
மேற்படி வன்னி வீதியானது காலகிரமத்தில் மார்க்கம் நகரத்தில் மட்டுமல்ல கனடா முழுவதிலும் புகழ்பெற்ற ஒரு வீதியாகத் திகழ்ந்து ஈழத்தமிழர்களின் விடுதலைக் களமாக விளங்கிய அந்த வீர மிகு பிரதேசத்தை மேற்குலக நாடுகளுக்கு பறைசாற்றும் ஒரு சாதனமாக அமையும் என்று மார்க்கம் நகரில் வாழும் முன்னாள் யாழ்ப்பாண கல்லூரியொன்றின் அதிபர் கூறியுள்ளார்.
அசாத் சாலி சற்று முன்னர் விடுதலை!
![]() |
அசாத் சாலி |
இளம் வர்த்தகர் நஞ்சருந்தி சாவு!
யாழ்.நகரில் இளம் வர்த்தகர் ஒருவர் நஞ்சருந்தி நேற்று வியாழக்கிழமை உயிரை மாய்த்துக் கொண்டார். இந்தச் சம்பவம் நல்லூர் சங்கிலியன் வீதி, பகுதியில் இடம்பெற்றுள்ளது.
யாழ். நகர் கஸ்தூரியார் வீதியில் வர்த்தகத்தை மேற்கொள்ளும் வர்த்தகரான சந்தானம் சசிக்குமார் (வயது23) என்பவரே பலரிடம் கடன் பெற்று அதனை மீளச் செலுத்த முடியாமல் அவதிப்பட்டுள்ளார்.
அதனால் ஏற்பட்ட உளத் தாக்கத்தினாலேயே அவர் நஞ்சை உட்கொண்டு சாவைத் தழுவினார் என்று தெரிய வந்தது என்று யாழ். போதனா வைத்தியசாலையின் மரண விசாரணை அதிகாரி என்.பிரேம்குமார் தெரிவித்தார்.
உயிரிழந்தவரின் சடலம் யாழ். போதனா வைத்திய சாலையில் வைக்கப்பட்டு மரண விசாரணைகளின் பின்னர் உறவினர்களிடம் கையளிக்கப்பட்டது.
09 மே 2013
சிறுவன் உயிரையும் பறித்தான் யமன்!
விடுமுறைக்காக சுவிஸ் நாட்டில் இருந்து இலங்கை வந்த தமிழ்ச் சகோதரர்கள் இருவர் விபத்தில் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
தமது விடுமுறையை முடித்துக் கொண்டு மீண்டும் திரும்பிச் செல்ல இருந்தனர். கொழும்பு வெள்ளவத்தைப் பகுதியில் மஞ்சள் கோட்டில் வீதியை கடக்கும் வேளையில் கார் ஒன்று மோதியே விபத்துக்குள்ளாகினர்.
ஏற்கனவே சகோதரி மற்றும் உறவினரான பெண் ஒருவரும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர். இவர்களுடன் காயமடைந்து கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த ஜவீனின் மகன் ஜனன் ( 13 வயது) நேற்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளான்.
சுவிஸில் இருந்து இலங்கைக்கு சென்ற ஜவீன் ஜெயந்திமாலா தம்பதிகளின் மகள் ஜனனி (16 வயது) , ஜவீனின் சகோதரியின் மகள் பாலசூரியன் வாரணி (29 வயது) ஆகிய இருவரும் படுகாயம் அடைந்து வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர்.
இது தொடர்பில் வெள்ளவத்தைப் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.இக்கோர விபத்தை ஏற்படுத்திய வாகனத்தை ஓட்டி வந்த சாரதி மதுபோதையில் இருந்துள்ளார் என விசாரணைகளின் மூலம் தெரியவந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
08 மே 2013
யாழில் டக்ளஸ் – கே.பி பிரச்சார மோதல்!
![]() |
குமரன் பத்மநாதன் |
விமர்சனம் செய்யத் தொடங்கியுள்ளனர்.
மாட்டிக்கொண்டான் ஆட்டுக்கள்வன்!
07 மே 2013
புளியங்கூடல் இந்தன் முத்துவிநாயகர் நாளை தேர்!

தமிழீழ தேசியத்தலைவர் பகவத் கீதையை அடிப்படையாக கொண்டே போரிட்டார்!
இலங்கை வரலாற்றில் எந்தவொரு போரும் இனவாதத்தை அடிப்படையாகக் கொண்டு நடைபெறவில்லையென ஸ்ரீ ஜயவர்த்தனபுர பல்கலைக்கழக வரலாறு மற்றும் தொல்லியல்துறை பீட பேராசிரியர் ரி.ஜீ.குலதுங்க தெரிவித்துள்ளார்.
காலியில் நடைபெற்ற தொல்பொருளியல் நிகழ்வொன்றில் கலந்துகொண்டு உரையாற்றிய பேராசிரியர் குலதுங்க, "பிரபாகரன் போரில் ஈடுபட்டது பகவத் கீதையை அடிப்படையாகக் கொண்டுதான்'' என்று குறிப்பிட்டார்.
அவர் மேலும் தெரிவித்ததாவது:
வரலாற்றை எடுத்துக்கொண்டால், நடந்த போர் நிச்சயமாக இனவாதத்தை அடிப்படையாகக் கொண்டதாக இருந்திருக்காது. அது மதத்தை அடிப்படையாகக் கொண்டதாகவே இருந்திருக்கிறது.
துட்டகைமுனுவின் போர் கூட இனவாதத்தின் அடிப்படையில்தான் நடத்தப்பட்டதாக கடந்த பல காலங்களில் கூறப்பட்டன. ஆனால் எந்தவொரு நூலிலும், ஆவணத்திலும் எல்லாளனுக்கும், துட்டகைமுனுவுக்கும் இடையிலான போர் இனவாதத்தின் அடிப்படையில் நடந்ததென்று குறிப்பிடப்படவில்லை.
எல்லாள மன்னனைப் பற்றி மகாவம்சத்தில் 23 விதந்துரைகள் இருக்கின்றன. அதில் முதலாவது மற்றும் இறுதி விதந்துரைகளைத் தவிர ஏனைய எல்லாவற்றிலும் அவரைப்பற்றி நன்றாகத்தான் சொல்லப்பட்டுள்ளது.
நமது நாட்டைப் பொறுத்தவரை கலாசாரம்கூட இந்தியக் கலாசாரத்தையே அடியொற்றி வந்திருக்கிறது. எமது நாட்டில் போரில் ஈடுபட்ட பிரபாகரன் கூட இந்திய நூலான பகவத்கீதையின் பல விடயங்களை அடியொற்றித்தான் அதில் குதித்தார் என்றும் குறிப்பிட்டுள்ளார் பேராசிரியர் குலதுங்க.
06 மே 2013
அசாத் சாலி மீண்டும் வைத்தியசாலையில்!
தடுப்புக்காவலிருக்கும் கொழும்பு மாநகர சபை முன்னாள் பிரதி மேயர் அஸாத் சாலி மீண்டும் உடல் நிலை பாதிப்பு காரணமாக வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
அவர் ஏற்கனவே கடந்த வௌ்ளிக்கிழமை உடநல நிலை குறைவுகாரணமாக கொழும்பு தேசிய வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைகளுக்கு பின்னர் நேற்றைய தினம் வைத்திய சாலையிலிருந்து வெளியேறியிருந்தார்.
எனினும் மீண்டும் இன்று பிற்பகல் 4 மணியளவில் கொழும்பு தேசிய வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
மண்கும்பான் பகுதியில் இளைஞன் மீது தாக்குதல்!
யாழ். மண்கும்பான் பகுதியில் வைத்து இளைஞர் ஒருவர் மீது மேற்கொண்ட தாக்குதலில் அந்த இளைஞன் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
மோட்டார் சைக்கிளில் பயணித்துக்கொண்டிருந்த போதே பின்தொடர்ந்து வந்த இனந்தெரியாதோர் அவரது தலையில் கோடரியால் தாக்குதல் நடத்திவிட்டு தப்பிச்சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
சம்பவத்தில் படுகாயமடைந்த 24 வயதான வேனுகாந்தன் என்ற இளைஞன் யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
05 மே 2013
தமிழீழ விடுதலைப் புலிகள் 37-வது அகவையில்!

01. இராணுவம் (தரைப் படை -பல்வேறு படை அணிகள்) இம்ரான் பாண்டியன் படையணி, ஜெயந்தன் படையணி, சார்ள்ஸ் அந்தோனி சிறப்புப் படையணி, கிட்டு பீரங்கிப் படையணி, ராதா வான்காப்புப் படையணி, குட்டிஸ்ரீ மோட்டார் படையணி, சிறப்பு உந்துகணை செலுத்திப் படையணி, விக்டர் கவச எதிர்ப்புப் படையணி, சோதியா படையணி, மாலதி படையணி, அன்பரசி படையணி, ஈருடப் படையணி, குறிபார்த்து சுடும் படையணி, சிறுத்தைப் படையணி, எல்லைப்படை, துணைப்படை, பொன்னம்மான் மிதிவெடிப் பிரிவு, ஆயுதக் களஞ்சிய சேர்க்கை, பாதுகாத்தல் பிரிவு.
02. கடற்புலிகள் நீரடி நீச்சல் பிரிவு கடல் வேவு அணி சார்லஸ் சிறப்புக் கடற்புலிகள் அணி அங்கயற்கண்ணி ஆழ்கடல் நீச்சல் அணி (பெண்கள்) நிரோஜன் ஆழ்கடல் நீச்சல் அணி கடல் சிறுத்தைகள் சிறப்பு அணி
03. வான்படை 04. கரும்புலிகள் 05. அரசியற்துறை அரசியல்துறை – பரப்புரைப் பிரிவு.
06. புலனாய்வுத்துறை 07.
07.வேவுப்பிரிவு 08.
08.ஒளிப்பதிவுப் பிரிவு 09.
09.மருத்துவப் பிரிவு லெப். கேர்ணல் திலீபன் சிறப்பு மருத்துவப் பிரிவு 10. 10.கணணிப் பிரிவு 11.
11.மாணவர் அமைப்பு 12.
12.தமிழீழ வைப்பகம் 13.
13.தமிழர் புனர்வாழ்வுக் கழகம் 14.
14.அனைத்துலகச் செயலகம் 15.
15.சுங்கவரித் துறை 16.
16.தமிழீழ பொருண்மிய மேம்பாட்டுக் கழகம் 17.
17.தமிழீழப் படைத்துறைப் பயிற்சிப் பள்ளி 18.
18.அரசறிவியற் கல்லூரி 19.
19.தமிழீழக் காவற்துறை காவல்துறை – குற்றத் தடுப்புப் பிரிவு காவல்துறை – குற்ற புலனாய்வுப் பிரிவு 20.
20.வன வளத்துறை 21.
21.தமிழீழ நிதித்துறை 22.
22.விடுதலைப்புலிகள் கலை, பண்பாட்டுக் கழகம் 23.
23.தமிழீழ சட்டக்கல்லூரி, தமிழீழ நீதித்துறை, நீதிமன்றுகள் 24.
24.தமிழீழக் கல்வி மேம்பாட்டுப் பேரவை 25.
25.காந்தரூபன் அறிவுச்சோலை (ஆதரவற்ற ஆண் குழந்தைகள்)
26. செந்தளிர் இல்லம் (5 வயதுக்குட்பட்ட ஆதரவற்ற குழந்தைகள்)
27. செஞ்சோலைச் சிறார் இல்லம் (ஆதரவற்ற பெண் குழந்தைகள்)
28. வெற்றிமனை (வலுவிழந்தோர்)
29. அன்பு இல்லம் (முதியோர்)
30. பொத்தகசாலை 31.
31.விடுதலைப் புலிகள் செய்தி இதழ் 32.
32.ஈழநாதம் செய்தி இதழ் 33.
33.வெளிச்சம் செய்தி இதழ் 34.
34.ஆவணப்படுத்தல்-பதிப்புத்துறை 35.
35.தமிழீழ தேசியத் தொலைக்காட்சி 36.
36.நிதர்சனம் 37.
37.புலிகளின் குரல் வானொலி 38.
38.மாவீரர் பணிமனை 39.
39.நவம் அறிவுக்கூடம் (பார்வை இழந்த போராளிகளுக்கான)
40. மயூரி இல்லம் (இடுப்பின்கீழ் வலுவிழந்த பெண் போராளிகளுக்கானது)
41. சேரன் வாணிபம் 42.
42.சேரன் சுவையகம் 43.
43.பாண்டியன் உற்பத்திப் பிரிவு 44.
44.பாண்டியன் வாணிபம் 45.
45.பாண்டியன் சுவையூற்று 46.
46.சோழன் தயாரிப்புகள் 47.
47.வழங்கற் பிரிவு 48.
48.சூழல் நல்லாட்சி ஆணையகம் 49.
49.நிர்வாக சேவை 50.
50ஆயுத ஆராய்ச்சி மற்றும் உருவாக்கல் பிரிவு 51.
51.மின்னணுவியல் சிறப்பு உதவிப் பிரிவு 52.
52.திரைப்பட வெளியீட்டுப்பிரிவு, மொழியாக்கப்பிரிவு 53.
53.பெண்கள் மறுவாழ்வு அபிவிருத்தி மையம் 54.
54.தமிழீழ பொறியியல் தொழில்நுட்ப வளர்ச்சித் துறை 55.
55.தமிழீழ விளையாட்டுத்துறை 56.
56.தமிழீழ காலநிலை அறிவுறுத்தல் வாரியம்.
தமிழரின் தாகம் தமிழீழத் தாயகம்
வரணி துயிலும் இல்ல காணி தாரை வார்ப்பு!
கொடிகாமம் வரணி மாவீரர் துயிலும் இல்லம் அமைந்திருந்த காணி 522 ஆவது படைப் பிரிவுக்கு விற்கப்பட்டுள்ளது. தமிழீழ விடுதலைப் புலிகளின் மாவீரர் துயிலும் இல்லம் இருந்த இந்த 7 ஏக்கர் காணி, படையினரின் தேவைக்கானது எனக் கா
ணி சுவீகரிப்புச் சட்டத்தின் கீழ் அறிவிக்கப்பட்டிருந்தது. இந்த 7 ஏக்கர் காணியும் இரண்டு உரிமையாளர்களுக்கு சொந்தமானது. இந்தக்காணியை இராணுவத்தினர் சுவீகரிப்பதற்கு அதன் உரிமையாளர்கள் சம்மதித்துள்ளனர் என பிரதேச செயலக வட்டாரங்கள் தெரிவித்தன. துயிலும் இல்லம் அமைந்திருந்த காணி என்பதால் வேறு யாரும் அதனை வாங்க முன்வரமாட்டார்கள் என்பதால் விற்பதற்குச் சம்மதித்ததாக உரிமையாளர்கள் தெரிவித்துள்ளனராம்.
ணி சுவீகரிப்புச் சட்டத்தின் கீழ் அறிவிக்கப்பட்டிருந்தது. இந்த 7 ஏக்கர் காணியும் இரண்டு உரிமையாளர்களுக்கு சொந்தமானது. இந்தக்காணியை இராணுவத்தினர் சுவீகரிப்பதற்கு அதன் உரிமையாளர்கள் சம்மதித்துள்ளனர் என பிரதேச செயலக வட்டாரங்கள் தெரிவித்தன. துயிலும் இல்லம் அமைந்திருந்த காணி என்பதால் வேறு யாரும் அதனை வாங்க முன்வரமாட்டார்கள் என்பதால் விற்பதற்குச் சம்மதித்ததாக உரிமையாளர்கள் தெரிவித்துள்ளனராம்.
04 மே 2013
இளவாலையில் மனித எலும்புக்கூடு!
யாழ்ப்பாணம், இளவாலை, சீனிப்பந்தல் பிரதேசத்தில் தனியார் காணியொன்றிலிருந்து எலும்புக்கூடொன்று மீட்கப்பட்டுள்ளது. மாலை 4.30 மணியளவில் இந்த எலும்புக்கூடு மீட்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
மலசலகூடம் அமைப்பதற்கான குழியொன்று வெட்டும்போதே இந்த எலும்புக்கூடு கண்டுபிடிக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது. சம்பவம் தொடர்பில் இளவாலை பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர் என தெரிவிக்கப்படுகிறது.
தமிழரின் காணிகளில் சிங்களவர் குடியேற்றம்!
செட்டிகுளம் பிரதேச செயலர் பிரிவுக்குட்பட்ட வீரபுரம் கிராம வீட்டுத் திட்டக் காணிகளில் உலுக்குளத்தில் வசிக்கும் சிங்கள மக்களைக் குடியேற்றுவதற்கான நடவடிக்கைகள் துரிதமாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. இவ்
வாறு நாடாளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் குற்றம்சாட்டியுள்ளார். இது தொடர்பாக அவர் ஊடகங்களுக்கு விடுத்துள்ள அறிக்கையில் மேலும் தெரிவித்துள்ளதாவது: இந்தக் காணிகள் 1995 ஆம் ஆண்டு 400 தமிழ் குடும்பங்களுக்கு அவர்களின் வாழ்வாதாரத் தேவைக்கென தலா ஒரு ஏக்கர் வீதம் காணி அனுமதிப்பத்திரத்துடன் பிரதேச செயலாளரால் வழங்கப்பட்டவையாகும். இந்தக்காணிகளிலேயே உலுக்குளத்தில் வசிக்கும் சிங்கள மக்களைக் குடியேற்றுவதற்கான நடவடிக்கைகள் மிகத் துரிதமாக அரசால் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. இதன் பின்னணியில் காணி அமைச்சு செயற்படுவதோடு இன நல்லிணக்கம் தொடர்பாக மாவட்டங்கள் தோறும் பிரசாரத்தில் ஈடுபட்டுவரும் ஆளும் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் ரஜீவவிஜயசிங்கவும் முழுமூச்சாக உள்ளார். காணி அனுமதிப்பத்திரங்களுடைய தமிழ் மக்களின் காணிகளை அபகரித்து சிங்கள மக்களைகுடியேற்றும் அரசின் இத்தகைய அடாவடித்தனங்களை உடன் நிறுத்த முன்வருமாறு சர்வதேச சமூகம் உட்பட அனைத்துத் தரப்பினரிடமும் அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார். கடந்த 29 ஆம் திகதி செட்டிக்குளம் பிரதேச செயலகத்தில் ஆளும்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் ரஜீவவிஜயசிங்க தலைமையில் கிராம அபிவிருத்திச் சங்கங்கள் மற்றும் பொது அமைப்புக்கள் மத்தியில் இன நல்லிணக்கம் தொடர்பாகவும் அவர்களின் தேவைகள் பற்றியும் அறியும்பொருட்டு கூட்டமொன்று நடத்தப்பட்டது. செட்டிகுளம் பிரதேச செயலர் உட்பட அதிகாரிகள் மற்றும் கூடியிருந்தவர்கள் முன்னிலையில் மேற்படி 400 ஏக்கர் காணி கவனிப்பாரற்றுக் கிடப்பதாகவும் அவற்றை உலுக்குளம் சிங்கள மக்களிடம் கையளிப்பதற்கு நடவடிக்கை எடுக்குமாறும் ரஜீவ விஜயசிங்க தெரிவித்துள்ளார். இந்தக் கூட்டத்தில் சமூகமளித்திருந்த காணிச் சொந்தக்காரர்களான தமிழ் மக்கள் தமது காணிகளைச் சிங்கள மக்கள் அபகரித்து வருவதாக முறையிட்ட போதே அரச நாடாளுமன்ற உறுப்பினர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். இந்தக் காணி அப்போதைய வட கிழக்கு மாகாண அரசினால் காணி அமைச்சின் அனுமதியுடன் செட்டிக்குளம் பிரதேச செயலரால் தமிழ் மக்களுக்கு வழங்கப்பட்டிருந்தன. எது எவ்வாறு இருப்பினும் அரசினால் காணி அனுமதிப்பத்திரத்துடன் வழங்கப்பட்ட காணிகளை மீளப்பறிக்கும் ஏற்பாடுகள் வன்மையாகக் கண்டிக்கப்படவேண்டியவையே. அதிலும் ஓர் இனத்திடமிருந்து அவர்களது சொந்தக் காணிகளைப் பறித்தெடுத்து அங்கு சிங்கள மக்களைக் குடியேற்றும் நடவடிக்கையானது அடிப்படை மனித உரிமை மீறலாகும். இதனால் எவ்வாறு இன நல்லிணக்கத்தைப் பேணவும் மேம்படுத்தவும் முடியும் என அரசு நினைக்கின்றது. காணி உறுதிகள், அனுமதிப் பத்திரங்கள் முதலானவை தமிழர் பகுதிகளில் தேவையற்றன என்று அரசு கருதினால் வடக்கு கிழக்கிலுள்ள மக்களைத் திறந்தவெளிச் சிறைச்சாலைகளில் அடைத்துவிட்டு அரசு தமக்குத் தேவையான காணிகளைச் சுவீகரிப்பது மேலானது எனவும் சிவசக்தி ஆனந்தன் அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
வாறு நாடாளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் குற்றம்சாட்டியுள்ளார். இது தொடர்பாக அவர் ஊடகங்களுக்கு விடுத்துள்ள அறிக்கையில் மேலும் தெரிவித்துள்ளதாவது: இந்தக் காணிகள் 1995 ஆம் ஆண்டு 400 தமிழ் குடும்பங்களுக்கு அவர்களின் வாழ்வாதாரத் தேவைக்கென தலா ஒரு ஏக்கர் வீதம் காணி அனுமதிப்பத்திரத்துடன் பிரதேச செயலாளரால் வழங்கப்பட்டவையாகும். இந்தக்காணிகளிலேயே உலுக்குளத்தில் வசிக்கும் சிங்கள மக்களைக் குடியேற்றுவதற்கான நடவடிக்கைகள் மிகத் துரிதமாக அரசால் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. இதன் பின்னணியில் காணி அமைச்சு செயற்படுவதோடு இன நல்லிணக்கம் தொடர்பாக மாவட்டங்கள் தோறும் பிரசாரத்தில் ஈடுபட்டுவரும் ஆளும் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் ரஜீவவிஜயசிங்கவும் முழுமூச்சாக உள்ளார். காணி அனுமதிப்பத்திரங்களுடைய தமிழ் மக்களின் காணிகளை அபகரித்து சிங்கள மக்களைகுடியேற்றும் அரசின் இத்தகைய அடாவடித்தனங்களை உடன் நிறுத்த முன்வருமாறு சர்வதேச சமூகம் உட்பட அனைத்துத் தரப்பினரிடமும் அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார். கடந்த 29 ஆம் திகதி செட்டிக்குளம் பிரதேச செயலகத்தில் ஆளும்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் ரஜீவவிஜயசிங்க தலைமையில் கிராம அபிவிருத்திச் சங்கங்கள் மற்றும் பொது அமைப்புக்கள் மத்தியில் இன நல்லிணக்கம் தொடர்பாகவும் அவர்களின் தேவைகள் பற்றியும் அறியும்பொருட்டு கூட்டமொன்று நடத்தப்பட்டது. செட்டிகுளம் பிரதேச செயலர் உட்பட அதிகாரிகள் மற்றும் கூடியிருந்தவர்கள் முன்னிலையில் மேற்படி 400 ஏக்கர் காணி கவனிப்பாரற்றுக் கிடப்பதாகவும் அவற்றை உலுக்குளம் சிங்கள மக்களிடம் கையளிப்பதற்கு நடவடிக்கை எடுக்குமாறும் ரஜீவ விஜயசிங்க தெரிவித்துள்ளார். இந்தக் கூட்டத்தில் சமூகமளித்திருந்த காணிச் சொந்தக்காரர்களான தமிழ் மக்கள் தமது காணிகளைச் சிங்கள மக்கள் அபகரித்து வருவதாக முறையிட்ட போதே அரச நாடாளுமன்ற உறுப்பினர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். இந்தக் காணி அப்போதைய வட கிழக்கு மாகாண அரசினால் காணி அமைச்சின் அனுமதியுடன் செட்டிக்குளம் பிரதேச செயலரால் தமிழ் மக்களுக்கு வழங்கப்பட்டிருந்தன. எது எவ்வாறு இருப்பினும் அரசினால் காணி அனுமதிப்பத்திரத்துடன் வழங்கப்பட்ட காணிகளை மீளப்பறிக்கும் ஏற்பாடுகள் வன்மையாகக் கண்டிக்கப்படவேண்டியவையே. அதிலும் ஓர் இனத்திடமிருந்து அவர்களது சொந்தக் காணிகளைப் பறித்தெடுத்து அங்கு சிங்கள மக்களைக் குடியேற்றும் நடவடிக்கையானது அடிப்படை மனித உரிமை மீறலாகும். இதனால் எவ்வாறு இன நல்லிணக்கத்தைப் பேணவும் மேம்படுத்தவும் முடியும் என அரசு நினைக்கின்றது. காணி உறுதிகள், அனுமதிப் பத்திரங்கள் முதலானவை தமிழர் பகுதிகளில் தேவையற்றன என்று அரசு கருதினால் வடக்கு கிழக்கிலுள்ள மக்களைத் திறந்தவெளிச் சிறைச்சாலைகளில் அடைத்துவிட்டு அரசு தமக்குத் தேவையான காணிகளைச் சுவீகரிப்பது மேலானது எனவும் சிவசக்தி ஆனந்தன் அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
03 மே 2013
''என் வாப்பா பயங்கரவாதியல்ல'' - ஆஸாத் சாலியின் மகள்

விமோசனத்திற்காக என்னுடைய வாப்பா பயங்கரவாத தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டாலும் அவர் ஒரு பயங்கரவாதி அல்ல என, ஆஸாத் சாலியின் மகள் ஆமினா ஆஸாத் சாலி தெரிவித்தார். இதுகுறித்து அவர் மேலும் கூறுகையில், அப்பாவி முஸ்லிம்களுக்கு எதிராக பௌத்த,சிங்கள இனவாதிகள் மேற்கொண்ட செயற்பாடுகளை என்னுடைய வாப்பா எதிர்த்தார். முஸ்லிம்களின் நலனுக்காக பொது பல சேனா உள்ளிட்ட பல இனவாத அமைப்புக்களுடன் அவர் நேரடி வாக்குவாதங்களில் ஈடுபட்டார். பொது பல சேனா முஸ்லிம்களுக்கு எதிராக செயற்படுவதை சுட்டிக்காட்டி என்னுடைய வாப்பா ஜனாதிபதிக்கு கடிதம் எழுதினார். அவர் முஸ்லிம்கள் குறித்து சிந்தித்தார். அவர் முஸ்லிம்கள் குறித்து துணிவாக பேசினார். அவர் ஒருபோதும் இனவாதம் பேசவில்லை. அவரது நோக்கமெல்லாம் முஸ்லிம்களை இனவாத சூழ்ச்சிகளிலிருந்து காப்பாற்றுவதாகவே இருந்தது. முஸ்லிம்கள் ஆயுதம் ஏந்த வேண்டுமென அவர் ஒருபோதும் வலியுறுத்தவில்லை. முஸ்லிம்கள் மீது அடக்குமுறைகள் தொடருமாயின் முஸ்லிம்கள் ஆயுதம் ஏற்றும் சூழ்நிலை தோன்றுமென்றே எச்சரித்தார். இப்படி எச்சரிப்பது பயங்கரவாதமாக மாறிவிடுமா..? இன்று என்னுடைய வாப்பா அநீதியான முறையில் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ளார். அவருக்கு நீதி கிடைக்க வேண்டுமென்பதே அவருடைய மகளான எனது ஒரே எதிர்பார்ப்பு. இன்று வெள்ளிக்கிழமை, 3 ஆம் திகதி இதுகுறித்த பிரார்த்தனை ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. வாப்பா உடனடியாக விடுதலை செய்யப்பட வேண்டுமென வலியுறுத்தி இன்று ஜும்ஆவிற்கு பின்னர் பல சமூகத்தவர்களும் இணைந்து ஆர்ப்பாட்டம் ஏற்பாடு செய்துள்ளதாக அறிகிறேன். எனது வாப்பா எந்த சமூகத்திற்காக குரல் கொடுத்தாரோ அந்த சமூகமான முஸ்லிம்கள் இதில் முன்நிற்பார்கள் என்று நான் நம்புகிறேன். முஸ்லிம் சமூகம் எனது வாப்பாவின் விடுதலையை துரிதப்படுத்துமென எதிர்பார்க்கிறேன். நான் எனது வாப்பாவின் நலத்திற்காகவும், விடுதலைக்காகவும் துஆ செய்கிறேன். அதுபோன்று இலங்கை முஸ்லிம்களும், வெளிநாடுகளிலுள்ள இலங்கை முஸ்லிம்களும் எனது வாப்பாவிற்காக அந்த இறைவனிடம் துஆ கேட்பதுடன், அவரை விடுவிப்பதற்காக மேற்கொள்ளப்படும் முயற்சிகளிலும் முழு அளவில் பங்கேற்பார்கள் என நம்புகிறேன் எனவும் ஆஸாத் சாலியின் மகளான ஆமினா ஆஸாத் சாலி,கூறியதாக தெரிவிக்கப்படுகிறது.
நாவற்குழியில் வீடு கட்டும் சிங்களவர்கள்!
நாவற்குழியில் அத்துமீறிக் குடியேறியுள்ள சிங்கள மக்கள் சட்ட விரோதமாக வீடமைக்கும் நடவடிக்கைகளைக் கடந்த சில நாள்களாக மீண்டும் ஆரம்பித்துள்ளனர் என்று தெரிவிக்கப்படுகிறது.
தேசிய வீடமைப்பு அதிகார சபைக்குச் சொந்தமான, நாவற்குழியில் அமைந்துள்ள காணியில் கடந்த 2010 ஆம் ஆண்டின் பிற்பகுதியில் 78 சிங்களக் குடும்பங்கள் அத்துமீறிக் குடியமர்ந்தன.
ஆரம்பத்தில் இந்தக் குடும்பங்கள் கொட்டில்கள் அமைத்துச் சட்டவிரோதமாகத் தங்கியிருந்தனர். பின்னர் அந்தக் காணிகளுக்குரிய உறுதிகள் வழங்கப்படாமலும் சாவகச்சேரி பிரதேச சபையின் அனுமதி பெறாமலும் நிரந்தர வீடுகள் அமைக்கும் நடவடிக்கைகளை அவர்கள் தொடங்கியிருந்தனர்.
இருப்பினும் கடந்த ஜனவரி மாதம் இந்தப் பணிகளை அவர்கள் இடைநிறுத்தியிருந்தனர். எனினும் தற்போது அவர்கள் நிரந்தர வீடுகள் அமைக்கும் பணிகளை ஆரம்பித்துள்ளனர் என்று தெரிவிக்கப்படுகிறது.
தற்போது இரண்டு குடும்பங்கள் மாத்திரமே தங்கியிருந்து இந்த நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகின்றன.
02 மே 2013
யாழில் ஒரே நேரத்தில் மூன்று கடைகள் உடைப்பு!
யாழ். நகர பகுதியில் உள்ள மின்சார நிலைய வீதியிலுள்ள மூன்று வர்த்தக நிலையங்கள் செவ்வாய்க்கிழமை நள்ளிரவு உடைக்கப்பட்டு திருடப்பட்டுள்ளதாக யாழ்.பொலிஸார் தெரிவித்தனர்.
திருட்டு சம்பவம் தொடர்பாக கடை உரிமையாளர்கள் யாழ். பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்துள்ளனர். இந்த முறைப்பாட்டின் பிரகாரம் சம்பவ இடத்திற்கு சென்ற பொலிஸ் தடயவியல் நிபுணர்கள் விசாரணைகளை மேற்கொண்டனர்.
இந்த விசாரணையின் போது, தொலைபேசி விற்பனை நிலையம், தையல் கடை மற்றும், ஆடையகம் ஆகிய வர்த்தக நிலையங்களுமே உடைக்கப்பட்டுள்ளன. அதில் ஒரு கடையில் மாத்திரம் 7,000 ரூபா பணம் திருடப்பட்டுள்ளது. ஏனைய இரு கடைகளையும் உடைத்த திருடர்கள் பூட்டுக்கள் உடைபடாத சந்தர்ப்பத்தில் கைவிட்டு சென்றுள்ளதாகவும் யாழ். பொலிஸார் கூறினர்.
ஒரே நேரத்தில் உடைக்கப்பட்ட 3 வர்த்தக நிலையங்களும் முஸ்லிம்களுக்கு சொந்தமானது என்பதும் குறிப்பிடத்தக்கது. இது தொடர்பான மேலதிக விசாரணைகளை யாழ். பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
அசாத் சாலி கைது!
01 மே 2013
கொமன்வெல்த்துக்கான நிதியுதவியை நிறுத்துமா கனடா?
நெடுந்தீவு கடலில் கைதான மீனவர்களுக்கு தொடர்ந்தும் விளக்கமறியல்!
நெடுந்தீவு கடற்பரப்பில் வைத்து இலங்கைக் கடற்படையினரால் கைது செய்யப்பட்ட 26 இந்திய மீனவர்களையும் தொடர்ந்தும் விளக்கமறிலில் வைக்குமாறு ஊர்காவற்றுறை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இலங்கைக் கடற்படையினரால் கைது செய்யப்பட்ட 26 இந்திய மீனவர்களையும் நேற்று முன்தினம் ஊர்காவற்றுறை நீதிமன்றில் ஆயர்ப்படுத்தினர். இவர்களை விசாரணை செய்த நீதவான் ஆர். எஸ்.எம். மகேந்திரராஜா எதிர்வரும் 6ஆம் திகதி வரைக்கும் விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்டுள்ளார்.
அத்துடன் கடந்த வாரம் நெடுந்தீவுக் கடற்பரப்பில் மேலும் 4 இந்திய மீனவர்கள் கைது செய்யப்பட்டனர். அவர்களையும் எதிர்வரும் 10 ஆம் திகதி வரைக்கும் விளக்கமறியலில் வைக்குமாறு ஊர்காவற்றுறை நீதிமன்றத்தின் பதில் நீதவான் ஆர். சபேசன் உத்தரவிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)