மகப்பேற்றின்போது கர்ப்பிணியொருவரை பலாத்காரம் செய்ததாக கூறப்படும் அரசாங்க வைத்தியருக்கு எதிராக கொழும்பு மேல் நீதிமன்றத்தில் வழக்குத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
மூன்று குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் அவருக்கு எதிராக நேற்று வழக்குத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
ஸ்ரீ ஜயவர்த்தனபுர வைத்தியசாலையில் மகப்பேற்று சமயத்தின்போது கர்ப்பிணியை வல்லுறவுக்குட்படுத்தியதாக சந்தேகநபரான வைத்தியர் ஜயசாந்த பரணமன்ன என்பவர் மீதே சட்டமா அதிபர் குற்றஞ்சாட்டியுள்ளார்.
சந்தேநபர் 2009 ஆம் ஆண்டு செப்டெம்பர் மாதம் 02 ஆம் திகதி மகப்பேற்று அறையில் வைத்தே இந்த குற்றத்தை புரிந்துள்ளதாக அவருக்கு எதிராக வழக்குத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
சந்தேக நபரான வைத்தியர், நீதவான் தேவிகா தென்னக்கோனினால் 5 இலட்சம் ரூபா ரொக்க பிணை மற்றும் இரண்டு சரீரப்பிணைகள் அடிப்படையில் விடுவிக்கப்பட்டார்.
சட்டமா அதிபர் திணைக்களத்தின் சார்பில் அரச சட்டத்தரணியான ஹிமாஸி பெரேரா ஆஜராகியிருந்ததுடன் சந்தேக நபரின் சார்பில் சட்டத்தரணி இனோகா பெரேரா ஆஜராகியிருந்தார்.
இந்த வழக்கு விசாரணை ஓகஸ்ட் மாதம் 26 ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.
நான் என்ற ஆணவம் அதர்மமாக விஸ்வரூபமெடுத்தாலும்-ஒருநாள் தர்மத்தின் காலடியில் விழும்.
30 ஏப்ரல் 2013
"நாசமாய் போவீர்கள்"படைகளுக்கு மண் அள்ளி தூற்றிய அம்மா!
"நான் சத்தியமாய் சொல்கிறேன், எங்கள் காணியைப் பிடித்து வைச்சிருக்கிற நீங்கள் எல்லாம் நாசமாய் போவீர்கள். வயிறெரிந்து சொல்கிறேன்'' என்று கூறி மண் அள்ளி வீசித் தூற்றினார் வயதான தாய் ஒருவர்.
வலி. வடக்கு மக்களின் காணிகளைச் சுவீகரிப்பதற்கு எதிரான போராட்டத்தில் கலந்துகொண்ட அவர், இறுதியில் உணர்ச்சிவசப்பட்டுக் கொந்தளித்தார்.
மக்கள் ஊர்வலம் செல்லாத வகையில் பொலிஸார் அவர்களைத் தெல்லிப்பழை பொலிஸ் நிலையம் முன்பாக தடுப்பிட்டு மறித்தனர். அப்போதே தனது கட்டுப்பாட்டை இழந்த அந்தத் தாயார் உணர்ச்சிவசப்பட்டார்.
"நான் இது வரை பல வீடுகள் மாறிப் போய்விட்டேன். என் வீட்டை நீங்கள் பிடித்து வைத்திருக்கிறீர்கள். நான் வீடிருந்தும் அகதியாய் திரிகிறேன்'' என்று அவர் அழுதார்.
29 ஏப்ரல் 2013
பாதுகாப்பு வலயத்தினுள் உட்புக முனைந்த மக்கள்!

28 ஏப்ரல் 2013
நவீன கருவிகள் மூலம் ஒட்டுக்கேட்க போகுதாம் புலனாய்வுப்பிரிவு!
தொலைபேசிகளை ஒட்டுக்கேட்பதற்கான நவீன கருவிகளை சிறிலங்காவின் தேசிய புலனாய்வுப் பிரிவு கொள்வனவு செய்துள்ளதாக கொழும்பு ஆங்கில வாரஇதழ் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.
இந்தக் கருவிகளின் மூலம் கைத்தொலைபேசி மற்றும் தரைவழித் தொலைபேசி உரையாடல்களை ஒட்டுக் கேட்க முடியும்.
கடந்த ஆண்டு கொள்வனவு செய்யப்பட்டுள்ள இந்தக் கருவிகளின் மூலம், எந்தவொரு தொலைத்தொடர்பு நிறுவனத்தினதும் ஒத்துழைப்பு இல்லாமலேயே தொலைபேசி உரையாடல்களை ஒட்டுக் கேட்க முடியும்.
எனினும், இந்த முறையின் மூலம் தொலைபேசிகளை ஒடடுக் கேட்பது சட்டவிரோதமானது என்றும் இதற்கு எதிராக நீதிமன்றம் செல்ல முடியும் எனவும் சிறிலங்கா சட்டவாளர் சங்கம் தெரிவித்துள்ளது.
தொலைபேசி ஒட்டுக் கேட்கப்படுவது நாட்டின் தொலைத்தொடர்பு ஒழுங்குமுறைச் சட்டத்துக்கும், தனிநபர் உரிமைக்கும் முரணானது.
பாதுகாப்புக் காரணங்களுக்காக தொலைபேசிகளை ஒட்டுக்கேட்க வேண்டுமென்றால் அதற்கு நீதிமன்ற உத்தரவு பெறப்பட வேண்டும் என்று சிறிலங்கா சட்டவாளர் சங்கத்தின் பொதுச்செயலர் சஞ்சய கமகே தெரிவித்துள்ளார்.
கேப்பாபுலவிலும் 526 ஏக்கர் காணி பறிப்பு!

27 ஏப்ரல் 2013
திருமணம் செய்வதாக கூறி பல லட்சம் ரூபா மோசடி-யாழில் சம்பவம்
யாழ்ப்பாணம் மூன்றாம் குறுக்குத்தெருவைச் சேர்ந்த பெண்ணொருவரை திருமணம் செய்வதாகக் கூறி 12 இலட்சத்து 65 ஆயிரம் ரூபா பணமோசடி செய்த நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக யாழ். பொலிஸ் நிலைய சிரேஸ்ட பொலிஸ் அத்
தியட்சகர் மொஹமட் ஜெப்ரி தெரிவித்தார். யாழ். பொலிஸ் நிலையத்தில் இடம்பெற்ற வாராந்த ஊடகவியலாளர் சந்திப்பிலேயே மேற்கண்டவாறு அவர் தெரிவித்தார். இச்சம்பவம் தொடர்பாக அவர் மேலும் கூறுகையில் கடந்த 22 ஆம் திகதி இடம்பெற்ற இச்சம்பவம் தொடர்பாக பாதிக்கப்பட்ட தரப்பினரால் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டதையடுத்து யாழ். பிறவுண் வீதியில் உள்ள நீராவியடி பிள்ளையார் கோவிலடியைச் சேர்ந்த சந்தேக நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார் என்று அவர் தெரிவித்தார். மேலும் ஆதிகோவிலடியைச் சேர்ந்த நபர் ஒருவருக்கு 03 இலட்சத்து 30 ஆயிரம் ரூபா காசோலை மோசடி செய்யப்பட்டுள்ளதாகவும் முறைபாடு கிடைக்கப் பெற்றுள்ளதாகவும் சந்தேக நபர் தலைமறைவாகி உள்ளதாகவும் தொடர்ந்து விசாரணை இடம்பெற்று வருவதாகவும் அவர் தெரிவித்தார்.

26 ஏப்ரல் 2013
உயர் பாதுகாப்பு வலயம் குறித்து விசாரிக்க யாழ். சென்ற அமெரிக்கக் குழு!
ஐந்தாயிரம் ஏக்கர் காணியை கையகப்படுத்த படைகள் முயற்சி!
கி.சே. பிரிவு 19 வாழும் குடும்பங்கள் 6,350
மொத்த சனத்தொகை 22,543
காணிகள் அற்று 180 குடும்பம் வரை
இராணுவ முகாம்கள் - 31 வரை
படையினர் எண்ணிக்கை - 4,500 பேர்.
25 ஏப்ரல் 2013
புலிகளின் காலத்தில் தமிழர்களின் உயிருக்கு உத்தரவாதம் இருந்தது-சிறீதரன்
தமிழீழ விடுதலைப்புலிகள் இருந்த காலத்தில் தமிழர்களின் உயிருக்கு உத்தரவாதம் இருந்தது. இன்று எங்கள் வீட்டினுள் வந்து எங்களை எழுப்பிக் கலைக்கக் கூடிய நிலைமையே காணப்படுகின்றது. நாங்கள் போராடுவதன் மூலமே எங்கள் நிலத்துக்குச் செல்ல முடியும்.
இவ்வாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் யாழ்.மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன் தெரிவித்தார்.
யாழ்.மாவட்ட செயலகத்தின் முன்பாக வலி.வடக்கு மக்கள் நடத்திய போராட்டத்தின் முடிவில் கருத்து வெளியிடும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
பாஸ்கரா: அதன் பின்னர் உரையாற்றிய ஜனநாயக மக்கள் முன்னனியின் ஊடகச் செயலாளர் பாஸ்கரா, இந்த அரசு வடக்கில் மட்டுமல்ல தமிழர்கள் வாழும் கிழக்கிலும், மலையகத்திலும் காணிகளைச் சுவீகரித்து வருகின்றது என்றார்.
விக்கிரமபாகு: தொடர்ந்நு உரையாற்றிய நவசமசமாஜக் கட்சியின் தலைவர் கலாநிதி விக்கிரமபாகு கருணாரட்ண, தமிழ் மக்களின் சொத்துக்களை இந்த அரசு கபளீகரம் செய்கின்றது. இந்த அரசு தமிழ் மக்களை விடுவிப்பது என்ற பெயரில் இன அழிப்புப் போரை நடத்தியது. இங்கு, இராணுவ சிங்கள ஆளுநர் ஆட்சி செய்து கொண் டிருக்கின்றார். அப்படியாயின் எப்படி சிவில் நிர்வாகம் இங்கே நடக்கும் என்றார்.
பாக்கியசோதி: இதன் பின்னர் உரையாற்றிய மாற்றுக் கொள்கைகளுக்கான நிலையத்தின் பணிப்பாளர் பாக்கியசோதி சரவணமுத்து, இலங்கையில் போர் முடிவுக்கு வந்தாலும் முரண்பாடுகள் இன்னும் முடிவுக்கு வரவில்லை என்றார்.
கஜேந்திரன்: தொடர்ந்து உரையாற்றிய தமிழ்தேசிய மக்கள் முன்னணியின் பொதுச் செயலாளர் செல்வராஜா கஜேந்திரன், இங்கு நடக்கின்ற காணி சுவீகரிப்பைத் தடுத்து நிறுத்தவும் இன அழிப்பைத் தடுக்கவும் இடைக்கால நிர்வாகமே தீர்வு என்றார்.
ஐங்கரநேசன்: இதன் பின்னர் உரையாற்றிய சூழலியலாளர் பொ.ஐங்கரநேசன் இப்போது துப்பாக்கிச் சத்தங்கள்தான் கேட்கவில்லையே தவிர எங்கள் குரல் வளைகள் இன்னமும் நெருக்கப்பட்டுக் கொண்டிருக்கின்றன என்றார். சிவாஜிலிங்கம்: தொடர்ந்து உரையாற்றிய தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் க.சிவாஜிலிங்கம், எதிர்வரும் 29 ஆம் திகதி தெல்லிப்பழை பிரதேசசெயலகத்துக்கு முன்பாக நடத்தப்படும் போராட்டம், 1961 ஆம் ஆண்டில் வடக்கு கிழக்கில் மாவட்ட செயலகங்களை முடக்கி நடத்தப்பட்ட போராட்டங்களைப் போன்று அமைய வேண்டும் என்றார்.

24 ஏப்ரல் 2013
எட்டு மாதங்கள் கடந்தும் பேசாமல் இருக்கிறார் டக்ளஸ்!
![]() |
டக்ளஸ் தேவானந்தா |
இனியும் பயந்து பிரயோசனமில்லை-சிறீதரன்

23 ஏப்ரல் 2013
உயரதிகாரிகளால் பெண் உத்தியோகத்தர்கள் மீது பாலியல் துன்புறுத்தல்!
கிளிநொச்சி பூநகரி பிரதேச செயகத்தில் கடமையாற்றும் ஒரு சில உயரதிகாரிகளினால்
அங்கு கடமையாற்றும் பெண் உத்தியோகத்தர்கள் மீது பாலியல் ரீதியான துன்புறுத்தல்கள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக தெரிவிக்கப்படுகிறது. இது தொடர்பில் பாதிக்கப்பட்டுள்ள பெண்களில் ஒருவர் சக உத்தியோகத்தர்களிடம் முறையிட்ட நிலையில் இது குறித்து அறிந்துகொண்ட பிரதேச செயலர் குறித்த பெண் உத்தியோகத்தரையும் பாலியல் துன்புறுத்தல்களை மேற்கொண்ட பிரதேச செயலகத்தின் ஒரு உயரதிகாரியினையும் அழைத்து விசாரணை செய்து இருவரையும் சமாதானப்படுத்தி அனுப்பியதாகவும் தெரிவிக்கப்படுகிறது. இருப்பினும் நிர்வாக பிரிவில் உயரதிகாரியாக கடமையாற்றும் அவர் தொடர்ந்தும் சம்மந்தப்பட்ட பெண் உத்தியோகத்தர் மற்றும் அவரோடு நெருங்கிய ஊழியர்களையும் பழிவாங்கும் வகையில் அலுவலகத்தில் கடமை ரீதியில் துன்புறுத்தல்களை மேற்கொண்டு வருகின்றார் எனவும் இதனால் தங்களால் தொடர்ந்தும் இயல்பான மன நிலையில் பணிகளை மேற்கொள்ள முடியாமல் உள்ளதாகவும் குறிப்பிடுகின்றனர் இந்த உயரதிகாரியின் பாலியல் ரீதியான துன்புறுத்தல்களுக்கு பல பெண்கள் உள்ளாக்கப்பட்டிருப்பதாகவும் ஆனால் அவர்கள் இந்த விடயங்களை பல்வேறு காரணங்களை கருதி வெளியில் தெரிவிக்காமல் இருப்பதாகவும் குறிப்பிடும் சில உத்தியோகத்தர்கள் அண்மையில் பாலியல் ரீதியான துன்புறுத்தலை மேற்கொள்ளும் நோக்கில் அலுவலகத்தில் வைத்து ஒரு பெண் உத்தியோகத்தரின் கையை பிடித்து இழுத்த போது அப்பெண் உத்தியோகத்தர் கடும் எதிர்ப்பினை வெளியிட்டு வெளியேறிய நிலையில் குறித்த உயரதிகாரியின் பாலியல் ரீதியான துன்புறுத்தல் நடவடிக்கைகள் வெளியில் தெரியவந்துள்ளது. எனவே மேற்படி அதிகாரியின் இவ்வாறான கீழ்தரமான செயற்பாடுகளுக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்குமாறு மாவட்ட மட்ட உயரதிகாரிகளிடம் பூநகரி பிரதேச செயலகத்தின் பல ஊழியர்களை வேண்டுகோள் விடுத்துள்ளனா.; இதேவேளை குறித்த உயரதிகாரியின் செயற்பாடுகளால் பாதிக்கப்பட்டுள்ள சில பெண்கள் தாங்கள் இரகசியமாக எவரிடமும் முறையிட தயாராக உள்ளதாகவும் தெரிவிக்கின்றனர்.

வலி.வடக்கு நில அபகரிப்பிற்கு எதிரான நடவடிக்கைகள் தொடர்பில் இன்று அவசர கலந்துரையாடல்!
வலி. வடக்கில் தமிழ் மக்களின் 6400 ஏக்கர் நிலப்பரப்பை இராணுவத்தினர் சுவீகரிப்பு செய்வதாக சுவரொட்டிகள் மூலம் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், அது தொடர்பிலான அடுத்த கட்ட நடவடிக்கைகள் தொடர்பில் மக்களுடன் ஆராயப்படவுள்ளது.
இச்சந்திப்பு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வசமுள்ள வலி.வடக்கு பிரதேச சபையில் இன்று காலை 10 மணிக்கு நடைபெறவுள்ளது.
இதன்போது நில அபகரிப்பிற்கு எதிராக மேற்கொள்ளப்பட வேண்டிய அடுத்த கட்ட நடவடிக்கைகள் தொடர்பில் ஆராயப்படவுள்ளது.
இச்சந்திப்பில் வலி.வடக்கு பகுதி மக்கள் அனைவரையும் தவறாது கலந்து கொள்ளுமாறு வலி வடக்கு பிரதேச சபை மற்றும் மீள்குடியேற்ற சபை என்பன அறிவித்துள்ளன.
மேலும் மக்களின் விருப்பத்திற்கு ஏற்ப அடுத்த கட்ட நடவடிக்கைகள் தொடர்பில் ஆராயப்படவுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.
22 ஏப்ரல் 2013
கொட்டடியில் இளைஞர்கள் மீது தாக்குதல்!
யாழ்ப்பாணம், கொட்டடி கோணாத்தோட்டம் பகுதியில் வைத்து இளைஞர்கள் இருவர் மீது ஞாயிற்றுக்கிழமை இனந்தெரியாதோர் தாக்குதல் நடத்தியுள்ளனர்.
முச்சக்கர வண்டியில் சென்றுக்கொண்டிருந்த மூன்று இளைஞர்களில் இருவர் மீதே இவ்வாறு தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
சுமார் 15 பேர் கொண்ட குழுவினரே இந்த இளைஞர்கள் இருவர் மீதும் தாக்குதல் நடத்தியுள்ளதாக ஆரம்பக்கட்ட விசாரணைகளில் இருந்து தெரியவருகின்றது.
சம்பவத்தில் மீனாட்சி அம்பாள் பகுமியை சேர்ந்த 24 வயதான எஸ்.நியூட்டன் மற்றும் சிவஞானம் வினோத் ஆகிய இருவருமே காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். சம்பவம் தொடர்பில் யாழ்.பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
21 ஏப்ரல் 2013
லண்டனில் மீண்டும்'போர் தவிர்ப்பு வலயம்'
சிறிலங்கா படையினர் மேற்கொண்ட போர்க்குற்றம் மற்றும் மனித உரிமை மீறல்கள் தொடர்பிலான ஆவணப்படம் இலண்டனில் வெளியிடப்படவுள்ளது.
சனல் 4 தொலைக்காட்சி தயாரித்துள்ள 'போர் தவிர்ப்பு வலயம்' என்ற ஆவணப்படத்தின் முன்னோட்டக்காட்சி மீண்டும் லண்டனில் திரையிடப்படவுள்ளது.
இந்நடவடிக்கையால் சிறிலங்கா அரசு பெரும் அதிர்ச்சி அடைந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
விடுதலைப் புலிகளுக்கு எதிரான போரின் இறுதி 138 நாட்களில் இடம்பெற்ற சம்பவங்களை அடிப்படையாக வைத்து, போர் தவிர்ப்பு வலயம் ஆவணப்படத்தை கல்லும் மக்ரே தயாரித்துள்ளார்.
இந்த ஆவணப்படத்தின் ஒரு பகுதி, கடந்த மார்ச் மாதம் ஐ.நா மனிதஉரிமைகள் பேரவையிலும், புதுடெல்லியிலும் வெளியிடப்பட்டு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
சிறிலங்காவுக்கு எதிராக அமெரிக்கா கொண்டு வந்த தீர்மானத்துக்கு அதிகளவு நாடுகள் ஆதரவு அளிப்பதற்கு இந்த ஆவணப்படம் ஒரு காரணியாக இருந்தது.
இந்தநிலையில், இந்த ஆவணப்படத்தின் முன்னோட்டக்காட்சி வரும் செவ்வாய்க்கிழமை இரவு 7 மணியளவில் லண்டனில் உள்ள புரொன்ட்லைன் கிளப்பில் திரையிடப்படவுள்ளது.
இலண்டனில் கொமன்வெல்த் அமைச்சரவை நடவடிக்கைக் குழுவின் முக்கிய கூட்டம் நடக்கவுள்ள நிலையிலேயே இந்த ஆவணப்படம் திரையிடப்படவுள்ளது சிறப்பம்சமாகும்.
இது கொமன்வெல்த் மாநாட்டை சிறிலங்காவில் இருந்து இடமாற்றம் செய்வது குறித்து சிறிலங்கா அரசுக்கு நெருக்கடியைக் கொடுப்பதாக இருக்கும் என்று அரசியல் அவதானிகள் தெரிவித்துள்ளனர்.
இரகசியமாக நடைபெறும் வடமாகாண எல்லை நிர்ணயம்!
வடக்குமாகாணசபைத் தேர்தல் தொகுதிவாரி முறைமையில் நடைபெறவுள்ளதாக எதிர்பார்க்கப்படும் நிலையில்,யாழ்.மாவட்ட எல்லை நிர்ணயச் செயற்பாடுகள் இரகசியமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
இந்தச் செயற்பாடுகள் தொடர்பில் உள்ளூர் ஊடகங்களில் எதுவித
விளம்பரங்களும் செய்யப்படாமல் அரச ஊடகங்களில் மாத்திரமே விளம்பரங்கள் பிரசுரிக்கப்பட்டுள்ளன. அதேவேளை மாவட்ட எல்லை மீள் நிர்ணயக் குழுவுக்கும் சட்டத்துக்கு முரணான வகையில் அரசியல் நியமனங்கள் செய்யப்பட்டுள்ளன. 2012 ஆம் ஆண்டு 22 ஆம் இலக்க,உள்ளூர் அதிகாரசபைகள் தேர்தல்கள் திருத்தச் சட்டத்தினூடாக மாவட்ட மட்டத்தில் மாவட்ட எல்லைகள் மீள் நிர்ணயம் செய்யப்பட்டு வருகின்றன. உள்ளூராட்சி சபைத் தேர்தல்கள் வட்டார முறைமையைக் கொண்டே நடத்தப்பட்டு வருகின்றன. இதற்காக ஒவ்வொரு மாவட்டத்திலும் எல்லை மீள் நிர்ணயக் குழு அமைக்கப்படுகின்றது.இதன் தவிசாளராக மாவட்ட அரச அதிபர் செயற்படுவதுடன் அவருக்குக் கீழே 5 பேர் பதவி வழியாக உள்ளூராட்சி அமைச்சினால் நியமிக்கப்பட வேண்டும். ஆனால் யாழ்.மாவட்டத்தில் சட்டத்துக்கு முரணான வகையில் 6 பேர் அமைச்சர் அதாவுல்லாவினால் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். தேர்தல்கள் திணைக்களத்தின் சார்பில் எஸ்.அச்சுதனும்,மாவட்டம் அமைந்துள்ள மாகாண சபையின் உள்ளூராட்சி அமைச்சின் பிரதிநிதியாக க.வரதீஸ்வரனும்,நில அளவையாளர் தலைமையதிபதித் திணைக்களத்தின் சார்பில் ஐ.ஈஸ்வரமூர்த்தியும்,தொகை மதிப்புப் புள்ளி விவரத் திணைக்களத்தின் சார்பில் எஸ்.உதயகுமாரனும் நியமிக்கப்பட்டுள்ளனர். இதனைவிட அமைச்சரால் பெயர் குறித்து நியமிக்கப்பட்ட பகிரங்க அலுவலராக ஒருவரை நியமிக்க முடியும்.ஆனால் யாழ்.மாவட்டக் குழுவில் இருவர் நியமிக்கப்பட்டுள்ளனர். யாழ்.மாவட்ட மேலதிக அரச அதிபர் திருமதி ரூபினி வரதலிங்கமும்,சமுர்த்தி உதவி ஆணையாளர் எஸ்.மகேஸ்வரனும் இதற்கு நியமிக்கப்பட்டுள்ளனர். இந்த விடயம் தொடர்பில் குழுவின் தவிசாளர் என்ற வகையில் மாவட்ட செயலரிடம் கேட்டபோது,இந்த நியமனங்கள் அமைச்சர் அதாவுல்லாவினால் நேரடியாக வழங்கப்பட்டன.யார் யார் பதவி வழியாக நியமனம் பெற்றனர் என்பது தொடர்பில் எதுவும் தெரியாது என்றார். இதே போன்றே கிளிநொச்சி மாவட்டத்திலும் மாவட்ட எல்லை மீள் நிர்ணயக் குழுவில் சட்டத்துக்கு முரணான வகையில் அரசியல் நியமனங்கள் செய்யப்பட்டுள்ளன.எனத் தெரிவிக்கப்பட்டது.

20 ஏப்ரல் 2013
நெடுந்தீவில் கைதுசெய்யப்பட்ட இந்திய மீனவர்களின் விளக்கமறியல் நீடிப்பு!
நெடுந்தீவு கடற்பரப்பில் வைத்து கைதுசெய்யப்பட்ட 26 இந்திய மீனவர்களையும் எதிர்வரும் 26 ஆம் திகதிவரை விளக்கமறியல் வைக்குமாறு ஊர்காவற்றுறை நீதவான் நீதிமன்ற நீதிபதி மகேந்திரரசா உத்தரவிட்டுள்ளார்.
கடந்த 6ஆம் திகதி நெடுந்தீவு கடற்பரப்பிற்குள் அத்துமீறி நுழைந்த இந்திய மீனவர்கள் 26 பேரை கரையோர பாதுகாப்பு படையினர் மற்றும் கடற்படையினர் கைதுசெய்து நீரியல் வளத்துறை மற்றும் கடற்றொழில் திணைக்களத்திடம் ஒப்படைத்தனர்.
அவர்கள் 26 பேரையும் நீரியல் வளத்துறை மற்றும் கடற்றொழில் திணைக்களம் ஊர்காவற்றுறை நீதிவான் நீதிமன்ற பதில் நீதிவானின் வாசஸ்தலத்தில் ஆஜர்ப்படுத்தி இரண்டு தடவைகள் விளக்கமறியல் நீடிக்கப்பட்டிருந்தது.
நீதிமன்றத்தின் உத்தரவின் பிரகாரம் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த 26 இந்திய மீனவர்களும் நேற்று 19ஆம் திகதி மீண்டும் ஊர்காவற்றுறை நீதிமன்றில் ஆஜர்ப்படுத்தப்பட்டனர்.
இந்த வழக்கை விசாரித்த யாழ் ஊர்காவற்
றுறை நீதவான் நீதிமன்ற நீதிபதி மகேந்திராசா குறித்த மீனவர்களை எதிர்வரும் 26 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்டுள்ளதாக நீரியல் வளத்துறை மற்றும் கடற்றொழில் திணைக்களத்தின் யாழ் மாவட்ட கடற்தொழில் பரிசோதகர் பாலசுப்பிரமணியம் ரமேஸ்கண்ணா தெரிவித்துள்ளார்.

19 ஏப்ரல் 2013
புங்குடுதீவை சேர்ந்த இளம் தாய் தவறான மருந்தால் மரணம்!
செங்கலடி தம்பதிகள் படுகொலை!கல்விப்பணிப்பாளர் கருத்து!
![]() |
கொடூர மாணவி |
18 ஏப்ரல் 2013
பாடசாலை மாணவனை காணவில்லை!
யாழ்ப்பாணம், பருத்தித்துறை, புலோலிப் பகுதியில் 19 வயதுடைய மாணவன் ஒருவன் சித்தரைப் புத்தாண்டு தினத்தன்று காணாமற்போயுள்ளதாக பெற்றோரால் பருத்தித்துறைப் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
பருத்தித்துறை வேலாயுதம் மகா வித்தியாலயத்தில் கல்விப் பொதுத் தராதர உயர் தரத்தில் கல்வி கற்கும் 19 வயதுடைய குலசிங்கம் சசிதரன் என்ற மாணவனே காணாமல் போயுள்ளார்.
புதுவருட தினத்தன்று மூன்று மணியளவில் வீட்டில் இருந்து மைதானத்திற்கு விளையாடுவதற்காக சென்ற மாணவன் இதுவரை வீடு திரும்பவில்லை என்று பெற்றோரால் பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
இதுதொடர்பில் பெற்றோர் மைதானத்திற்கு சென்று நண்பர்களிடம் வினவியபோது, கையடக்கத் தொலைபேசிக்கு அழைப்பொன்று வந்த நிலையில் விளையாட்டை இடையில் கைவிட்டு சென்றதாக தெரிவித்தனர்.
இதன்பின்னர் கையடக்கத் தொலைபேசிக்கு அழைப்பை ஏற்படுத்த முயற்சித்தபோதும் அது நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
இச்சம்பவம் தொடர்பில் பருத்தித்துறைப் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
புனித பிலிப் நேரியர் திருச்சொரூபத்தை உடைத்தெறிந்த முஸ்லீம்கள்!
மாந்தை மேற்கு உதவி அரசாங்க அதிபர் பிரிவுக்கு உட்பட்ட அடம்பன் கண்ணாட்டி கிராமத்தில் உள்ள புனித பிலிப் நேரியர் தேவாலயத்திற்கு முன்பாக கண்ணாடிப் பேழையினுள் வைக்கப்பட்டிருந்த புனித பிலிப் நேரியர் திருச்சொரூபம் முஸ்லீம்களால்
சேதமாக்கப்பட்டுள்ளது.
புனித பிலிப் நேரியர் தேவாலயத்திற்கு முன்பாக பல வருடங்களாக கண்ணாடிப் பேழையினுள் வைக்கப்பட்டிருந்த புனித பிலிப் நேரியர் திருச்சொரூபம் யுத்தம் மற்றும் இடப்பெயர்வுகளுக்கு மத்தியிலும் எந்தவித சேதமும் இன்றி இருந்ததாகவும் அடம்பன் பங்குத்தந்தை லக்கோன்ஸ் பிகிராடோ அடிகளார் தெரிவித்தார் என செய்திகள் தெரிவிக்கின்றன.
சேதமாக்கப்பட்டுள்ளது.
இந்த இடத்திற்கு நேற்றுமுன்தினம் புதன்கிழமை இரவு 11 மணியளவில் வந்த நபர்கள் கண்ணாடிப் பேழையினுள் வைக்கப்பட்டிருந்த புனித பிலிப் நேரியர் திருச்சொரூபத்தை தூக்கி எடுத்து சுமார் 50 மீற்றர் தூரத்திற்கு கொண்டு சென்று நடு வீதியில் போட்டு உடைத்து சேதமாக்கியுள்ளதாக அடம்பன் பங்குத்தந்தை லக்கோன்ஸ் பிகிராடோ அடிகளார் தெரிவித்தார்.
இந்த திருச்சொரூபம் சேதமாக்கப்பட்டமை தொடர்பில் விடத்தல்தீவு பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளதாகவும் அடம்பன் பங்குத்தந்தை கூறினார்.
இந்த நிலையில், குறித்த வீதியில் திரண்ட மக்கள் வீதியை மறித்து போக்குவரத்தை தடைசெய்தனர். பின் குறித்த இடத்திற்கு வந்த உரிய அதிகாரிகள் மக்களுடன் கலந்துரையாடினர்.

17 ஏப்ரல் 2013
கைதாகிய சிறுமிகளின் அறிக்கை நீதிமன்றத்தில் சமர்பிக்கப்படும்!
யாழ். கைதடி பகுதியில் உள்ள சிறுவர் இல்லத்திலிருந்து காணாமல் போன சிறுமிகளில் கைது செய்யப்பட்ட ஏழு சிறுமிகள் தொடர்பிலான வைத்திய அறிக்கை நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும் என வைத்தியசாலையின் பிரதி பணிப்பாளர் செ. ஸ்ரீபவானந்தராஜா தெரிவித்தார்.
அந்த ஏழு சிறுமிகளும் வைத்திய பரிசோதனைக்காக யாழ். போதனா வைத்தியசாலையில் தற்போது அனுமதிக்கப்பட்டுள்ளனர் என்றும் அவர் சொன்னார்.
அந்த சிறுமிகள் தொடர்பிலான வைத்திய அறிக்கை சட்ட வைத்திய அதிகாரியினால் சமர்ப்பிக்கப்படவில்லை என்றும் அவர் கூறினார்.
வைத்திய பரிசோதனை அறிக்கை நீதிமன்றிற்கு சமர்ப்பிக்கும் வரை சிறுமிகள் பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உள்ளாக்கப்பட்டுள்ளார்களா? இல்லையா? என்பது பற்றிய கருத்துக்கள் வெளியிட முடியாதென்றும் அவர் மேலும் கூறினார்.
அறிக்கை சமர்ப்பிக்குமாறு அரசாங்க அதிபர் பணிப்பு
இதேவேளை, கைது செய்யப்பட்ட சிறுமிகள் தொடர்பான அறிக்கையை சமர்ப்பிக்குமாறு யாழ். மாவட்ட சிறுவர், அபிவிருத்தி குழு உத்தியோகத்தர்களுக்கு யாழ். மாவட்ட அரசாங்க அதிபர் சுந்தரம் அருமைநாயகம் பணித்துள்ளார்.
இச்சிறுவர்களின் மீது துஷ்பிரயோகம் மேற்கொள்ளப்பட்டதாக கூறப்படுகின்றது. அவ்வாறு துஷ்பிரயோகம் மேற்கொள்ளப்பட்டிருந்தால் துஷ்பிரயோகத்திற்கு உள்ளானவர்கள் தொடர்பிலான அறிக்கையையும் சமர்ப்பிக்குமாறு பணித்துள்ளார்.
இவ்வாறு சிறுவர் இல்லங்களில் தங்கியிருக்கும் சிறுவர்களுக்கு சிறுவர், பெண்கள் அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் சிறந்த பாதுகாப்பு வழங்க வேண்டும், துஷ்பிரயோகம் மேற்கொள்பவர்கள் மீதான சட்ட நடவடிக்கை எடுக்கவேண்டும்.
அத்துடன், இச்சிறுவர் இல்லத்தில் தங்கியிருந்த சிறுவர்கள் மீதானதும், அதிகாரிகள் மீதும் உரிய விசாரணைகளை துரிதப்படுத்துமாறும் பொலிஸாரிடம் யாழ். அரச அதிபர் கேட்டுக் கொண்டுள்ளார்.
யாழ்,குடாநாட்டில் தங்கத்தின் விலை சரிவு!
சர்வதேச சந்தைகளில் தங்க பிஸ்கட்டுக்களின் வருகை குறைவடைந்துள்ளதால் குடாநாட்டில் கடந்த 2 மாத காலப்பகுதிக்குள் மட்டும் 10 ஆயிரம் ரூபாவுக்கு மேலாக தங்கத்தின் விலை வீழ்ச்சியடைந்துள்ளதாக நகை வர்த்தகர்கள் தெரிவித்துள்ளனர்.
இது குறித்து வர்த்த கர்கள் மேலும் தெரிவித் ததாவது:
தங்க பிஸ்கட்டுக்களை கொள்வனவு செய்யும் விலைக்கு தங்கத்தின் கரட் பெறுமதிக்கு ஏற்ப விலைகள் நிர்ணயிக்கப்படும் நிலையில் தங்க பிஸ்கட்டுக்கள் சர்வதேச சந்தைகளில் முடக்கப்பட்டுள்ளன.
இதனால் இருக்கக்கூடிய தங்க பிஸ்கட்டுக்களை தரம்பிரித்து நகைகள் செய்யப்படுவதால் நகைகளின் பெறுமதி வீழ்ச்சி கண்டுள்ளது. கொழும்பு செட்டியார் தெரு நகைக் கடைகளில் விற்பனை செய்யப்படும் நகைப் பெறுமதிக்கு ஏற்ப குடாநாட்டு நகைக்கடைகளிலும் அதே விலையில் நகைகள் விற்பனை செய்யப்படுகின்றன.
அதேபோல் இந்தியாவிலும் நகையின் பெறுமதிக்கேற்ப விலைகள் தற்போது வீழ்ச்சி கண்டு வரும் நிலையில் நகைகளின் விலைகள் குறை வடைந்துள்ளதா என்ற கேள்வி மக்கள் மத்தியில் தோன்றலாம்.
ஆனால் குடாநாட்டைப் பொறுத்தவரையில் நகை விலைகளில் பெரிதாக மாற்றத்தைக் கொண்டு வர முடியாது. எனினும் கடந்த 2 மாத காலப் பகுதிக்குள் நகைகள் விற்பனை செய்யப்பட்ட பெறுமதியில் இருந்து தற்போது 10 ஆயிரம் ரூபாவுக்கு மேலாக விலை வீழ்ச்சியடைந்துள்ளது.
இந்த வீழ்ச்சி நகைக்கடை உரிமையாளர்களை பொருளாதார நெருக்கடிக்குள் தள்ளியுள்ளது. ஏனெனில் தங்க பிஸ்கட்டுக்களைக் கொள்வனவு செய்யும் போது இருந்த விலையும் தற்போதைய விலையும் மாறுபாடு உடையதாகக் காணப்படுவதால் இந்த நெருக்கடி ஏற்பட்டுள்ளது.
நகைகளின் பெறுமதி இன்று சந்தையில் என்ன என்பதைக் கூற முடியாது அது நாளுக்கு நாள் மாறுபடும் என்றனர்.
16 ஏப்ரல் 2013
நயினை அம்மன் ஆலயத்தினுள் மேலாடை கழற்றாமல் நுழைந்த போலிஸ் அதிகாரி!
சிவில் உடையில் ஆலயத்திற்கு சென்ற பொலிஸ் அதிகாரியொருவர் மேலாடையை கழற்றாமல் கோவிலுக்குள் நுழைந்தது மட்டுமன்றி தான் பாதுகாப்பு அதிகாரியென்றும் மேலாடையை கழற்றமாட்டேன் என்றும் அடம்பிடித்துள்ளார்.
நயினாதீவு நாகபூசனி அம்மன் ஆலயத்தில் இன்று நடைபெற்ற பூஜையிலேயே குறித்த பொலிஸ் அதிகாரி மேலாடையை கழற்றாமல் கலந்துக்கொண்டுள்ளார்.
குறித்த கோவிலுக்கு பூஜைக்கு செல்கின்ற ஆண்கள் மேலாடையை கழற்றிவிட்டே ஆலயத்திற்குள் நுழைய வேண்டும்.
எனினும், குறித்த அதிகாரி அவ்வாறு செய்யவில்லை. அவரின் நடவடிக்கை தொடர்பில் ஆலயத்தில் இருந்த ஏனைய பக்தர்கள் அவருக்கு எடுத்துரைத்த போதிலும் குறித்த அதிகாரி அவர்களின் பேச்சை கணக்கில் எடுக்கவில்லை,
குறித்த அதிகாரியின் நடவடிக்கை தொடர்பில் அங்கிருந்த பூசகர் ஒருவரின் கவனத்திற்கு கொண்டு வந்தபோதிலும் பாதுகாப்பு தரப்பினருடன் முரண்பட்டுக்கொள்ள விரும்பவில்லை என்பதனால் பூஜைகள் மற்றும் வழிபாடுகள் தொடர்பில் அவருக்கு தெளிவுப்படுத்த தாம் விரும்பவில்லை என்று அங்கிருந்த பூசகர்களில் ஒருவர் தெரிவித்துள்ளார்.
எனினும், ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ இந்த கோவிலுக்கு வந்திருந்த போது பூஜை வழிபாடுகள் மற்றும் சம்பிரதாயங்களை கடைப்பிடித்தார் என்பதனை குறித்த அதிகாரிக்கு தான் தெளிவுப்படுத்தியதாக அந்த பூசகர் தெரிவித்துள்ளார்.
அந்த அதிகாரியின் இந்த செயற்பாடுகள் தொடர்பில் ஆலயத்திற்கு வந்திருந்த பக்தர்கள் முணுமுணுத்துக்கொண்டனர்.
பாலச்சந்திரனுக்கு சிலை வைக்க அனுமதி கோரி மனு!
இடைக்கால நிர்வாக யோசனையாளர்களை தெரிந்து கொண்டதாம் சிங்கள புலனாய்வுப்பிரிவு!
இனப்பிரச்சினைக்கு தீர்வாக விடுதலைப்புலிகள் முன்வைத்த இடைக்கால நிர்வாக யோசனைக்கு உதவுமாறு இந்திய அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்த 12 பேர் யார் என்ற தகவல்கள் இராணுவப் புலனாய்வு பிரிவுக்கு கிடைத்துள்ளதாக திவயின தெரிவித்துள்ளது.
மன்னார் ஆயர் ராயப்பு ஜோசப், கஜேந்திரகுமார் பொன்னம்பலம், எஸ்.நரேந்திரன், எஸ். சிவதாசன், செல்வம் அடைக்கலநாதன், சுரேஷ் பிரேமச்சந்திரன், பி. சரவணபவன், வினோத் கனகரத்தினம், கே. குருச்சரன், பேராசிரியர் சம்பந்தன், பேராசிரியர் பலாசுந்தரம்பிள்ளை, சாந்தி அபிமானசிங்கம் ஆகியோரே இந்தியாவிடம் இந்த கோரிக்கையை விடுத்துள்ளனர்.
இலங்கை சென்ற இந்திய நாடாளுமன்ற குழுவினரை சந்திக்க புளொட், டெலோ, ரி.எம்.வி.பி கட்சிகளின் பிரதிநதிகளுக்கு சந்தர்ப்பம் பெற்றுக்கொடுக்கப்படவில்லை எனவும் திவயின கூறியுள்ளது.
15 ஏப்ரல் 2013
மண்டைதீவில் இளம் குடும்பஸ்தர் மீது கடற்படை தாக்குதல்!
யாழ். மண்டைதீவு பகுதியில் கடற்படையினரால் கடத்திச் செல்லப்பட்ட இளம் குடும்பஸ்தர் ஒருவர் படைமுகாமில் வைத்து மோசமாக தாக்கப்பட்டுள்ளார்.
எனினும் ரோந்து சென்ற படையினரை தாக்கியதாக பின்னர் பொலிஸாரிடம் கையளிக்கப்பட்டுள்ள 29 வயதுடைய ஜெ.காண்டீபன் எனும் குறித்த பொதுமகன் தற்போது படுகாயமடைந்த நிலையில் யாழ்.போதனா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இச்சம்பவம் குறித்து தெரியவருவதாவது:
கடந்த சனிக்கிழமை இரவு குறித்த பொதுமகனது வீட்டிற்குள்ளே அடாத்தாக புகுந்த கடற்படை சிப்பாய் ஒருவர் வீட்டில் தனித்திருந்த பெண்களை பாலியல் ரீதியாக துனபுறுத்தியுள்ளார்.
அவ்வேளை தொழில் முடிந்து வீடு திரும்பியிருந்த ஜெ.காண்டீபன் எனப்படும் குறித்த குடும்ப தலைவர் அச்சிப்பாயை அடித்து விரட்டியுள்ளார்.
தப்பியோடிய குறித்த சிப்பாய் பின்னர் தனது சகபாடிகளுடன் சென்று காண்டீபனை முகாமிற்கு கடத்தி சென்று தாக்குதல் நடத்தியுள்ளார்.
பின்னர் ரோந்து சென்ற கடற்படையினரை தாக்கியதாக கூறி அவரை மண்டைதீவு பொலிஸாரிடம் கையளித்துமுள்ளனர்.
இந்நிலையில் காயங்களுக்கு சிகிச்சை பெறவென யாழ். போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள காண்டீபன் பத்திரிகையாளர்களிடம் இந்த விடயத்தை தெரியப்படுத்தியுள்ளார்.
தீவகப் பகுதிகளிலும் அதே போன்று குடாக்கடலை அண்டிய பகுதிகளிலும் இரவு வேளைகளில் தொழிலுக்காக
ஆண்கள் கடலுக்கு சென்றுவிடும் நிலையில் தனித்திருக்கும் பெண்களை இலக்கு வைத்து இவ்வாறான பாலியல் துஸ்பிரயோகங்கள் கடற்படையினால் அரங்கேற்றப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கதாகும்.
ஆண்கள் கடலுக்கு சென்றுவிடும் நிலையில் தனித்திருக்கும் பெண்களை இலக்கு வைத்து இவ்வாறான பாலியல் துஸ்பிரயோகங்கள் கடற்படையினால் அரங்கேற்றப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கதாகும்.
நெடுந்தீவுக்கான படகுசேவை கட்டுமானம் நடைபெறுமா என்பதில் சந்தேகம்!
நெடுந்தீவு பிரதேச சபை நெடுந்தீவுக் கடல் போக்கு வரத்துக்கு ஈடுபடுத்தும் நோக்குடன் படகு ஒன்றைக் கட்டுவதற்கான நடவடிக்கையை மேற்கொண்டிருந்தது. எனினும் அது இப்போது சாத்தியப்படுமா என்று சந்தேகம் எழுந்துள்ளது என்று தெரிகின்றது.
கொழும்பு டொக்யாட் நிறுவனத்தில் ஏற்கனவே இது தொடர்பாக பிரதேச சபை தனது செயற்பாடுகள் குறித்துத் தெரிவித்திருந்த போதும் சமீபத்தில் இங்கு வந்த டொக்யாட் நிறுவன அதிகாரிகள் படகைக் கட்டுவதற்கு கடற்படை அனுமதிக்க வேண்டும் எனவும் அலுமினியத்தில் படகைக்கட்ட வேண்டும் எனவும் குறிப்பிட்டிருந்தனர்.
அலுமினியத்தில் கட்டப்படும் படகு நெடுந்தீவுத் துறைமுகத்துள் வரக் கூடியதாக இருக்குமா என்ற சந்தேகமும் எழுந்துள்ளது என்று கூறப்படுகின்றது. "நெல்சிப்' திட்டத்தின் நிதி யுதவியுடன் பிரதேச சபை நெடுந்தீவுக்கான படகைக் கட்டத் திட்ட மிட்டிருந்தது.
"நெல்சிப்' திட்டத்தில் இந்தப் படகைக் கட்டுவதற்கு ரூபா இரண்டு கோடி நிதி வழங்கப்படவுள்ளது என்று கூறப்பட்டது.
14 ஏப்ரல் 2013
அவுஸ்திரேலியாவில் 7ஆவது நாளும் தொடர்கிறது உண்ணாவிரதம்!
13 ஏப்ரல் 2013
பிரிட்டனில் இலங்கைத் தமிழர் மரணம் : ஒருவர் கைது
பிரிட்டனில் பெட்ஃபோர்ட் என்னும் இடத்தில் கடை ஒன்றை நடத்தி வந்த
இலங்கைத் தமிழரான வைரமுத்து தியாகராஜா என்பவர் தலையில் காயம் ஏற்பட்ட நிலையில் உயிரிழந்தார். தனது கடைக்கு மேலே உள்ள தனது அடுக்குமாடி வீட்டிலேயே அவர் காயமடைந்து காணப்பட்டார். 56 வயதான அவர் பின்னர் மருத்துவமனையில் மரணமானார். இந்த சம்பவம் தொடர்பில், மஜிஸ்திரேட் முன்பாக ஆஜர் செய்யப்பட்ட திலக் மோகன் ராஜ் (25 வயது) மீது கடுமையான காயங்களை ஏற்படுத்தியதாக குற்றஞ்சாட்டப்பட்டது. அவர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். பிரேதப் பரிசோதனை திங்களன்று நடைபெறும்.
செய்தி:பி.பி.சி.தமிழ்

உதயன் பிரதான அலுவலகத்தில் விசமிகள் அட்டகாசம்!
12 ஏப்ரல் 2013
இராணுவ அறிக்கை அப்பட்டமான பொய்!
இராணுவ நீதிமன்றம் வெளியிட்ட அறிக்கையில் எவ்வித உண்மையும் கிடையாது, இறுதிப்போரில் பல்லாயிரக்கணக்கான தமிழ் மக்களை கொன்று குவித்த சிறிலங்கா இராணுவம் இப்போது பொய் கூறிவருகிறது என தமிழ் தேசியக் கூட்டமைப்பின் சார்பில் அதன் பேச்சாளர் சுரேஷ் பிரேமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.
போர் குற்றங்களில் சிறிலங்கா படையினர் ஈடுபட்டனர் என்பது பகிரங்கமாக எல்லோருக்கும் தெரிந்த விடயம் என்றும் அவர் தெரிவித்தார்.
2009 இல் வன்னியில் இடம்பெற்ற இறுதிப்போரின் இறுதி நாட்களில் பொதுமக்கள் இருந்த பகுதிகளை நோக்கி இலங்கை இராணுவம் குண்டுவீசித் தாக்குதல் நடத்தியது என்ற குற்றச்சாட்டிலிருந்து இராணுவத்தை விடுவித்து இராணுவ நீதிமன்றம் மேலும் ஒரு புதிய அறிக்கையை நேற்றுமுன்தினம் வெளியிட்டுள்ளது.
இறுதிப் போர் சம்பவங்கள் தொடர்பில் இராணுவ நீதிமன்றமானது இராண்டாவது தடவையாக மாபெரும் பொய்களைக்கூறி அறிக்கை வெளியிட்டுள்ளது. இந்த அறிக்கை இராணுவத்தைப் பாதுகாக்கும் நோக்குடனும், உலகத்தை திசைதிருப்பும் நோக்குடனுனேயே வெளியிடப்பட்டுள்ளது.
இராணுவம் நீதிமன்றம் முதலாவது தடவையாக வெளியிட்டுள்ள அறிக்கையில் காணாமல்போனவர்கள் என எவரும் இல்லை எனக் குறிப்பிட்டிருந்தது. ஆனால், ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவினால் நியமிக்கப்பட்ட நல்லிணக்க ஆணைக்குழுவின் அறிக்கையில் சுமார் 3 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் காணாமல்போயுள்ளனர் எனக் கூறப்பட்டுள்ளது.
இது இவ்வாறிருக்க இறுதிப் போரில் 5 ஆயிரம் மக்கள்தான் கொல்லப்பட்டனர் என்று அரச தரப்பு நாடாளுமன்ற உறுப்பினர் ராஜித விஜேயசிங்க தெரிவித்திருந்தார். அதேவேளை, வன்னியில் நடத்தப்பட்ட ஆய்வு நடவடிக்கையின் மூலம் 7 ஆயிரம் மக்கள் மட்டும் பலியாகினர் என்று தெரியவந்துள்ளது எனக் குறிப்பிட்ட பாதுகாப்பு அமைச்சு அவற்றில் விடுதலைப் புலிகளே அதிகம் பலியாகியுள்ளனர் என்று குறிப்பிட்டிருந்தது.
இவ்வாறு இறுதிப் போர் சம்பவங்கள் தொடர்பில் முன்னுக்குப் பின் முரணான தகவல்களை இராணுவ நீதிமன்றமும், அரச நாடாளுமன்ற உறுப்பினரும், பாதுகாப்பு அமைச்சும் ஏற்கனவே வழங்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் இறுதிப் போரின் இறுதி நாட்களில் பொதுமக்கள் மீது இராணுவத்தினர் குண்டுவீசித் தாக்குதல் நடத்தினர் என்ற குற்றச்சாட்டிலிருந்து இராணுவத்தை விடுவித்து இராணுவ நீதிமன்றம் தனது இரண்டாவது அறிக்கையை வெளியிட்டுள்ளது.
இந்த அறிக்கையில் விடுதலைப் புலிகளினாலேயே பொதுமக்கள் கொல்லப்பட்டனர் எனவும், சர்வதேச சமூகமானது விடுதலைப் புலிகளின் யுத்த மீறல்களை தடுத்துநிறுத்தத் தவறிவிட்டது எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
ஆனால், இராணுவ நீதிமன்றத்தின் இந்த அறிக்கையை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினராகிய நாம் அடியோடு நிராகரிக்கின்றோம். அத்துடன் அந்த அறிக்கையில் முன்வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டுக்களில் எவ்வித உண்மையும் இல்லை என்பதையும் கூறிக்கொள்ள விரும்புகின்றோம்.
உலகத்தைத் திசைதிருப்பவே இந்தக் குற்றச்சாட்டுக்களை இராணுவ நீதிமன்றம் சுமத்தியுள்ளது. அத்துடன் போர்க்குற்றங்களில் ஈடுபட்ட இராணுவத்தினரைப் பாதுகாக்கும் நோக்குடன் இந்த அறிக்கை நன்கு திட்டமிட்டு வெளியிடப்பட்டுள்ளது.
இந்த அறிக்கை நேர்மையற்றது; நீதியற்றது; சர்வதேசத்தின் பார்வைக்கு பிரயோசனமற்றது. இது இராணுவத்தின் மற்றுமொரு பொய் முகத்தை எடுத்துக்காட்டுகின்றது.
இறுதிப் போரில் பல்லாயிரக் கணக்கான தமிழ் மக்களைக் கொன்று குவித்த இராணுவம் எந்த மனச்சாட்சியோடு பொய்களைக் கூறுகின்றது? பொய்களைக் கூறி தப்பித்துக்கொள்ள முடியுமா?
எனவே, இராணுவ நீதிமன்றம் இந்த அறிக்கையை குப்பைத் தொட்டியில் போடட்டும். நீதியான சர்வதேச விசாரணையே உண்மையை வெளிக்கொணரும்!
இதேவேளை, இலங்கை அரசு தரப்பினரிடம் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினராகிய நாம் ஒன்றைக் கேட்க விரும்புகின்றோம். அதாவது தங்கள் படைத்தரப்பினர் இறுதி யுத்தத்தில் குற்றமிழைக்கவில்லை என்றால் சர்வதேச விசாரணைக்கு நீங்கள் தயங்குவதேன்?
எனவே, பெரும்பாலான உலக நாடுகள் எதிர்பார்க்கும் சர்வதேச விசாரணையை இறுதிப் போரில் நடந்த சம்பவங்களை வெளிக்கொணரும். அதனூடாகவே நீதியைப் பெற்றுக்கொள்ளலாம். இதை ஐ.நா. உணர்ந்து அடுத்தகட்ட நடவடிக்கையை எடுக்கவேண்டும் என சுரேஷ் பிரேமச்சந்திரன் தெரிவித்தார்.
11 ஏப்ரல் 2013
மாத்தளை மனித புதைகுழி அருகே கோத்தாவின் அடியாட்கள் நடமாட்டம்!
இலங்கையுடன் இணைந்து செயற்பட முடியாது!
மஹிந்த ராஜபக்ஷ பதவியில் நீடிக்கும் வரையில் இலங்கையுடன் இணைந்து செயற்பட முடியாது என க்ளோபல் தமிழ் போரம் அமைப்பு தெரிவித்துள்ளது. யுத்தம் இடம்பெற்ற காலத்தில் உயிரிழந்தவர்கள் தொடர்பான மதிப்பீடுகளுக்கு உதவி வழங்க முடியுமா என கொழும்பு ஊடகமொன்று க்ளோபல் தமிழ் போரம் அமைப்பிடம் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த அந்த அமைப்பின் பேச்சாளர் சுரேன் சுரேந்திரன் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
அரசாங்கம் நியாயமான விசாரணைகளை நடாத்தும் என்பதில் உள்நாட்டு வெளிநாட்டு தமிழ் மக்களுக்கு நம்பிக்கை கிடையாது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
சர்வதேச சுயாதீன விசாரணை நடத்தப்பட்டால் மட்டுமே அதற்கு ஆதரவு அளிக்கப்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
இறுதிக் கட்ட யுத்தத்தின் இறுதி மணித்தியாலங்களில் தமிழீழ விடுதலைப் புலிகள் மீது மேற்கொள்ளப்பட்ட துன்புறுத்தல்களுக்கு ஆளும் கட்சியின் முக்கியஸ்தர்கள் பொறுப்பு சொல்ல வேண்டுமென அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இந்த அரசாங்கம் ஆட்சியில் நீடிக்கும் வரையில் சர்வதேச சுயாதீன விசாரணைகள் நடத்தப்படக் கூடிய சாத்தியமில்லை என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
10 ஏப்ரல் 2013
முல்லையில் மக்கள் போராட்டம்!
09 ஏப்ரல் 2013
போர்க்குற்ற ஆதாரங்களின் பின்னணியில் அதிகாரப் போட்டி? – ஆங்கில ஊடகம் சந்தேகம்

08 ஏப்ரல் 2013
செங்கலடியில் விப்ரா மளிகைக்கடை உரிமையாளரும் அவரது மனைவியும் வெட்டிக்கொலை!
மட்டக்களப்பு, செங்கலடியில் இளம் வர்த்தகரும் அவரது மனைவியும் அவர்களது வீட்டில் வைத்து நள்ளிரவு நேரம் வெட்டி கொலை செய்யப்பட்டுள்ளனர். இச்சம்பவம் இன்று அதிகாலை 12.30 மணியளவில் இடம்பெற்றுள்ளது.
செங்கலடிச் சந்தியிலுள்ள விப்ரா மளிகைக் கடை உரிமையாளரான சிவகுரு ரகு ( 48வயது) மற்றும் அவரது மனைவி சுந்தரமூர்த்தி விப்ரா (41வயது) ஆகியோரே இவ்வாறு வெட்டிக் கொல்லப்பட்டுள்ளனர். செங்கலடி – பதுளை வீதியில் உள்ள இவர்களது வீட்டுக்கு சென்ற இனந்தெரியாத ஆயுதம் தரித்த கும்பல் இருவரையும் கடுமையாக தாக்கியுள்ளதுடன் கத்தியினால் கழுத்துப் பகுதியில் வெட்டியும் உள்ளனர். இவர்கள் இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர்.
ஒரு அறையில் கணவன் மனைவியும் இன்னுமொரு அறையில் இரண்டு பிள்ளைகளும் தூக்கத்தில் இருந்த போதே இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.
மிதிவெடியில் சிக்கி பணியாளர் பலி!
07 ஏப்ரல் 2013
"இளந்திரையன் மனைவி,பிள்ளைகளுக்கு சுவீடன் தஞ்சம்"
லோகினி ரதிமோகன் |
நன்றி:பி.பி.சி.தமிழ்
புலம்பெயர் தமிழர் விபரம் கோரல் திசை திருப்பும் நடவடிக்கை!
யுத்த உயிரிழப்புக்கள் தொடர்பில் கணக்கெடுப்பு நடாத்த வெளிநாட்டு உதவிகள் அவசியமில்லை என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.
முல்லைத்தீவு உள்ளிட்ட யுத்தம் இடம்பெற்ற அரசாங்க அதிபர் காரியாலயங்களில் யுத்த உயிரிழப்புக்கள் தொடர்பான தகவல்களை பெற்றுக்கொள்ள முடியும் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர் சுரேஸ் பிரேமசந்திரன் தெரிவித்துள்ளார்.
யுத்தம் இடம்பெற்ற காலத்தில் உயிரிழந்தவர்கள் பற்றிய தகவல்களை அறிந்து கொள்ள புலம்பெயர் தமிழர்கள் மற்றும் வெளிநாடுகளின் ஒத்துழைப்பு அவசியம் என அரசாங்கம் அறிவித்திருந்தது.
சர்வதேச சமூகத்தையும் நாட்டு மக்களையம் திசை திருப்பும் மற்றுமொரு முயற்சியாகவே அரசாங்கத்தின் இந்த நடவடிக்கையை கருத வேண்டுமென அவர் குறிப்பிட்டுள்ளார்.
யுத்தம் தொடர்பான அரசாங்கத்தின் புள்ளி விபரத் தரவுகள் எந்த வகையிலும் ஏற்றுக்கொள்ளக் கூடியதல்ல என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
யுத்தம் இடம்பெற்ற காலத்தில் 70000 மக்கள் யுத்த வலயத்தில் சிக்கியிருப்பதாக அரசாங்கம் அறிவித்திருந்ததாகவும் , பின்னர் 287000 மக்கள் இடம்பெயர் மக்கள் அரசாங்க முகாம்களில் அடைக்கலம் புகுந்ததாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
உள்நாட்டு தரவுகளைக் கொண்டே சரியான விபரங்களை வெளியிட முடியாத நிலையில் வெளிநாட்டு உதவிகளையும் பெற்றுக்கொண்டால் புள்ளி விபரங்கள் மேலும் குழப்பமாகவே அமையும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
தமிழீழ வரலாறு பாடப்புத்தகங்களில் வேண்டும்-மாணவர்கள் தீர்மானம்
தமிழீழ வீர வரலாற்றைத் தமிழக மாணவர்களின் பாட நூல்களில் சேர்க்க வேண்டும் என்று தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி சட்டக் கல்லூரிகளின் மாணவர்கள் தீர்மானம் நிறைவேற்றியுள்ளனர். தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி அனைத்துச் சட்டக் கல்லூரி மாணவர் கூட்டமைப்பின் கலந்துரையாடல் நேற்று முன்தினம் இடம்பெற்றது. இதில் ஈழத் தமிழர்களுக்கு ஆதரவாக 5 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன.
*இலங்கையில் இறுதிக் கட்டப் போரில் நடந்தது திட்டமிட்ட இனப்படுகொலை. இது குறித்து நம்பத் தகுந்த சர்வதேச விசாரணைகளை மேற்கொண்டு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்குத் தண்டனை வழங்க வேண்டும்.
*ஈழத் தமிழர்களுக்குத் தனித் தமிழீழமே ஒரே தீர்வு. இதனை ஐக்கிய நாடுகள் சபை பொதுவாக்கெடுப்பின் ஊடாக நடைமுறைப்படுத்த வேண்டும்.
*இலங்கை மீது பொருளாதாரத் தடை விதிக்கப்பட வேண்டும். அத்துடன் இலங்கையுடான உறவை இந்தியா கண்டிக்க வேண்டும்.
*இலங்கைக் கடற்படையால் தமிழக மீனவர்கள் தாக்கப்படுவது நிறுத்தப்பட வேண்டும். அத்துடன் கச்சதீவை இலங்கையிடமிருந்து மீட்க வேண்டும்.
*தமிழீழ வரலாற்றை தமிழ்நாட்டு மாணவர்களின் பாடநூல்களில் சேர்க்க வேண்டும் என்ற ஐந்து கோரிக்கைகளும் நிறைவேற்றப்பட்டன.
இந்தக் கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில்
போராட்டங்கள் முன்னெடுக்கப்படும் என்று மாணவர்கள் தெரிவித்தனர்.

06 ஏப்ரல் 2013
நீ பிணமல்ல - எரியூட்டும் தீ!
ஊருக்கு நீ பாலகன்
வீரர்களுக்கு நீ மாவீரன்
கண்ணி வெடிகளை
தாண்டித்தாண்டி தான்
நீ நொண்டி விளையாடினாய்...
கையெறி குண்டுகளைத் தூக்கிவீசி
நீ பந்து விளையாடினாய்....
பதுங்கு குழிகளுக்குள் மறைந்து
கண்ணாமூச்சி விளையாடினாய்...
நீ விளையாடிய விளையாட்டையும்
கொரில்லா பயிற்சியாக
ரசித்தார் உம் தந்தை
உலகத் தமிழ்த் தந்தை...
கையில் கொடுத்த பிஸ்கட்டுகளையும்
நெஞ்சை துளைத்த குண்டுகளையும்
ஒன்றாகவே பார்த்த வீரன்...
வயிற்று பசிக்கு பிஸ்கட்டையும்
மார்பு பசிக்கு குண்டுகளையும்
உண்ட வீரன்... நீ!
பூக்களின் தேசத்தில் போர்க்களம்
புத்தன் கை பிடித்தே
யுத்தம் செய்த ஆரிய அரக்கன்...
புத்தமும் காந்தியமும் கை கோர்த்தே
பாலச்சந்திரனின் 'புன்னகையை'
புதைகுழிக்குள் தள்ளியது
வீரமும் ஈரமும் நிறைந்த இனத்தில்
துரோகமும் ஒன்றாகிப் போன
'விஷத்தின்' விரல் பிடித்தே
எங்கள் பாலகனின் மார்பைத் துளைத்தாய்
கரிகாலன் பெற்றெடுத்த
மாவீரனின் மார்பை 'கரு'(னா)நாகத்தின்
துணைகொண்டு துளைத்தாய்
உன் மார்பில் துளைத்தது
தோட்டாக்கள் அல்ல
தமிழின துரோகத்தின் அடையாளம்...
ஊடுருவிக் கொன்ற துரோகத்தின்
தலையெடுக்கவே தகிக்கின்றது
மானமுள்ள தமிழர்களின் கரங்கள்...
முடங்கி சுரணையற்றுக் கிடக்கும்
தமிழ் மூடர்களை முடுக்கிவிட்டுள்ளது
உன் வீர மரணம்...
நீ பிணமல்ல... சோம்பிக் கிடந்த
தமிழர் இதயங்களை எரியூட்டும் தீ!
நீ மூட்டிய தீயில் கருகிப் போவார்கள்
'கருணை' இல்லா குருடர்கள்
உன் சிதைக்கு மூட்டிய தீ
காற்றோடு காற்றாக
கடல் தாண்டிப் பரவட்டும்...
தமிழ் பேசும் நெஞ்சங்கள் எல்லாம்
சுவாசமாய் மாறட்டும்...
எம் மண்ணோடு கலந்துள்ளது
உன் வீர சாம்பல்...
அங்கே முளைக்கும் பயிரும்
பாலகனும் எங்கள் பாலச்சந்திரனாய் பிறப்பான்...
ஆயிரமாயிரம் புதிய
பாலச்சந்திரன்களாய் பிறப்பான்...
அதுவரையிலும்
உன் சாம்பல் பூசி
துரோகிகளின் தோலுரிக்க
எதிரிகளின் உயிரெடுக்க
உலகமெங்கும் துடித்துக் கொண்டுள்ளது
ஈரமுள்ள வீரமுள்ள நல்லோர் இதயங்கள்...
-சே.த.இளங்கோவன்
நெடுந்தீவு கடற்பரப்பில் இந்திய மீனவர்கள் 26 பேர் கைது!
யாழ்.நெடுந்தீவு கடற்பரப்பில் இந்திய மீனவர்கள் 26 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளதாக யாழ். மாவட்ட நீரியல் வளத்துறை மற்றும் கடற்றொழில் திணைக்கள உதவிப் பணிப்பாளர் என்.கணேசமூர்த்தி தெரிவித்தார்.
நெடுந்தீவு கடற்பரப்பிற்குள் அத்துமீறி நுழைந்த போது கரையோர பாதுகாப்பு படை பிரிவினரும், இலங்கை கடற்படை பிரிவினரும் இணைந்து இவர்களை நேற்றிரவு 8 மணியளவில் கைதுசெய்துள்ளனர்.
கைதுசெய்யப்பட்ட 26 மீனவர்களும் யாழ். மாவட்ட நீரியல் வளத்துறை மற்றும் கடற்றொழில் திணைக்களத்திடம் இலங்கை கடற்படையினரால் இன்று காலை ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.தமிழ்நாடு காரைக்குறிச்சி பகுதியைச் சேர்ந்த 26 மீனவர்கள் 5 ரோலர் படகுகளில் அத்துமீறி நுழைந்த போதே கைதுசெய்யப்பட்டுள்ளதாகவும், இவர்கள் 26 பேரும் யாழ். ஊர்காவற்துறை நீதிமன்ற நீதிபதியின் வாசஸ்தலத்தில் ஆஜர்ப்படுத்தப்படவுள்ளதாக யாழ். மாவட்ட நீரியல் வளத்துறை மற்றும் கடற்றொழில் திணைக்கள உதவிப் பணிப்பாளர் மேலும் கூறினார்.

05 ஏப்ரல் 2013
கூட்டமைப்பின் தீவக அமைப்பாளர் கடத்தப்பட்டு சித்திரவதை!

புலம்பெயர் தமிழரின் விபரத்தை தேடுகிறது சிறீலங்கா!
புலம்பெயர் நாடுகளில் உள்ள தமிழர்களின் தகவல்களை திரட்டுவதில் சிறிலங்கா அரசு தீவிரமாக ஈடுபட்டு வருகிறது.
இறுதிக்கட்ட போரின் போது பலியானவர்கள் எண்ணிகையை கணக்கிடுவதில் சிக்கல் நிலை ஏற்பட்டுள்ளதாக சிறிலங்கா அரசு தெரிவித்துள்ளது.
இதன்படி தமது நாடுகளில் புகலிடம் தேடியவர்கள் பற்றிய தகவல்களைத் தருவதற்கு பல மேற்குலக நாடுகள் தயக்கம் காட்டி வருவதால் போரின்போது எத்தனை பேர் கொல்லப்பட்டனர் என்ற சரியான கணக்கெடுப்பை மேற்கொள்ள முடியாதுள்ளதாக சிறிலங்கா அரசாங்கம் குற்றம்சாட்டியுள்ளது.
2006ம் ஆண்டு முதல் இடம்பெற்ற போரின்போது விடுதலைப் புலிகள் உள்ளிட்ட எத்தனை பேர் இறந்தனர் என்ற கணக்கெடுப்பை மேற்கொள்வதற்கு வெளிநாடுகளின் ஒத்துழைப்பு தேவைப்படுவதாக சிறிலங்கா அரசாங்க வட்டாரங்கள் கூறியுள்ளன.
இது குறித்துக் கருத்து வெளியிட்டுள்ள சிறிலங்கா இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் ருவான் வணிகசூரிய,
முறைப்படியான விசாரணைக்கு, சிறிலங்காவில் இருந்து எத்தனை பேர் புலம்பெயர்ந்தனர் என்ற சரியான கணக்குத் தேவைப்படுகிறது.
2009 இல் போரின் முடிவில் காணாமற்போனவர்களாகவும், மரணமானவர்களாகவும் கருதப்பட்டவர்கள் பலர் இப்போது வெளிநாடுகளில் உள்ளனர்.
விடுதலைப் புலிகள் உள்ளிட்ட இவ்வாறான பலர் நாட்டை விட்டுத் தப்பிச் சென்றுள்ளனர்.
ஆனால் அவர்களின் குடும்பத்தினர் இன்னமும் அவர்களை பொதுமக்களாகவே வலியுறுத்துகின்றனர் என சிறிலங்காவின் இராணுவப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.
04 ஏப்ரல் 2013
தமிழீழம் மலர வேண்டும் என்ற கொள்கை தீ! அது இலக்கை அடையும் வரை ஓயாது!
03 ஏப்ரல் 2013
உதயன் மீதான தாக்குதலுக்கு த.தே.ம.மு.கண்டனம்!
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)