இலங்கையில் தமிழர்களை இரண்டாந்தர குடிமக்களாக பாவித்து ஒட்டு மொத்த தமிழர்களையும் மனிதாபிமானமற்ற முறையில் கொடூரமாக கொன்று குவித்து இனப்படுகொலை நடத்தியது, சர்வதேச போர் விதிகளை மீறி தடை செய்யப்பட்ட ரசாயன ஆயுதங்களை அப்பாவி மக்கள் மீது பயன்படுத்தியது, போர் விதிகளுக்கு மாறாக பள்ளி, மருத்துவமனைகள், வழிபாட்டு தளங்கள், அரசால் பாதுகாக்கப்பட்ட பகுதிகள் என்று அறிவிக்கப்பட்ட பகுதிகளில் கொத்துக் குண்டுகளை வீசி குழந்தைகள், பெண்கள், முதியவர்கள், பொதுமக்களை கொன்றதுடன், தமிழ் பெண்களை பாலியல் வன்கொடுமை செய்த இலங்கை ஜனாதிபதியை சுதந்திரமான பன்னாட்டு விசாரணை செய்ய வேண்டும் என்று உலகம் முழுவதும் கோரிக்கை போராட்டங்கள் நடந்து வருகிறது.
இந்த கோரிக்கையை வலியுறுத்தியும், வலுசேர்க்கும் வகையிலும் மன்னார்குடியில் திராவிடர் விடுதலைக் கழகம் சார்பில் மக்கள் நீதிமன்றம் அமைத்து ஜனாதிபதி ராஜபக்ஷவை குற்றவாளிக் கூண்டில் நிறுத்தி நீதியரசர் ஆர்.ஜி.ரத்னகுமார் முன் விசாரணை நடை பெற்றது.
இந்த மக்கள் நீதிமன்றத்தில் தமிழர்கள் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் உதயகுமார், ஈழப் பகுதிகளை பாதுகாக்கிறேன் என்ற பெயரில் அப்பாவி மக்கள் மீது கொடிய விஷமுள்ள ரசாயன குண்டுகளை வீசி கதற கதற கொன்றுள்ளார். எஞ்சிய பெண்களை அவரது ராணுவம் பாலியல் வன்கொடுமை செய்துள்ளது.
இவர்களது கொடூரம் தாங்காமல் இறந்த பெண்களையும் விட்டு வைக்காமல் பிணத்தின் மீதும் பாலியல் இச்சைகளை தீர்த்துக் கொண்டு அவற்றை படங்களாகவும் எடுத்து வெளியிட்டுள்ளனர். என் தமிழின பெண்களை பெண் போராளிகளை உடைகளை கலைந்து தெருவில் ஓட விட்டு சிங்கள காடையர்கள் கைகொட்டி சிரித்து ரசித்துள்ளனர்.
அப்பாவி சிறுவர்களை கொடூரமாக கொன்ற சம்பவம் இப்போது உலகம் எங்கும் புகைப்படங்களாக வெளிச்சத்திற்கு வந்துள்ளது. ஆகவே இந்த இன அழிப்பு செய்த கொடூரனை இந்த மக்கள் நீதிமன்றம் தண்டிக்க வேண்டும். இந்த மக்கள் நீதிமன்றத்தின் தீர்ப்பை உலக மக்களே எதிர்நோக்கி இருக்கிறார்கள் என்று வாதிட்டார்.
ராஜபக்ஷவுக்காக ஆஜரான வழக்கறிஞர் செந்தமிழ்செல்வன் மற்றும் இந்திய அரசுக்காக ஆஜரான உயர்நீதிமன்ற வழக்கறிஞர் ராஜ்மோகனும்,
தமிழர்கள் சார்பில் வாதிட்ட வழக்கறிஞரின் வாதங்கள் அத்தனையும் தவறானது. நீதியரசர் அவர்கள் இறுதி தீர்ப்பு சொல்லும் முன்பு நடந்த உண்மைகளை இந்திய அரசிடம் கேட்டு தெரிந்து கொண்டு அதன் பிறகு தீர்ப்பினை சொல்ல வேண்டும். இந்திய அரசு இலங்கையில் குற்றமே நடக்கவில்லை என்று உலக நாடுகளுக்கு எல்லாம் சொல்கிறது என்று வாதிட்டனர்.
இரு தரப்பு வாதங்களையும் கேட்ட மக்கள் நீதிமன்ற நீதியரசர் ரத்னகுமார், ராஜபக்ஷ நடத்திய இருப்பது இன அழிப்பிற்கான கொடூர கொலைகள் தான் என்பது ஆதரங்களும், சாட்களின் அடிப்படையில் நிரூபனம் ஆகிறது.
பெண்களை வன்புணர்ச்சி செய்து படம் எடுத்ததும் குற்றம், சின்னக் குழந்தைகளை கொன்றது குற்றம், பாதுகாப்பு வளையம் என்று சொல்லி பொதுமக்களை ஒரே இடத்தில் குவியச் சொல்லி அந்த இடத்தில் ரசாயன குண்டுகளை கொட்டி ஒட்டு மொத்தமாக பொதுமக்களை அழித்தது பெருங்குற்றம்.
தடயங்களை அழிக்க முயன்று தோற்றும் உள்ள இனப் படுகொலை செய்த ராஜகப்ஷவுக்கு இப்போதே பொதுமக்கள் முன்பே தூக்கு தண்டனையை நிறைவேற்ற வேண்டும். இந்த கொடூர கொலைகளுக்கு துணை போன உலக நாடுகளுக்கு என்ற தண்டனை கொடுப்பது என்பது பற்றி மற்றொரு நாளில் இந்த மக்கள் நீதிமன்றம் கூடி முடிவெடுக்கும் என்று வரலாற்று தீர்ப்பினைச் சொல்லி முடித்தார்.
நீதியரசரின் இந்த தீர்ப்பின் படி பொதுமக்கள் முன்னிலையில் தூக்கு தண்டனை நிறைவேற்றப்பட்டது. தூக்கு தண்டனையை காளிதாஸ் மற்றும் பலர் மன நிம்மதியுடன் நிறைவேற்றினார்கள்.
நான் என்ற ஆணவம் அதர்மமாக விஸ்வரூபமெடுத்தாலும்-ஒருநாள் தர்மத்தின் காலடியில் விழும்.
31 மார்ச் 2013
இந்திய உதவியுடன் சிங்களக் குடியேற்றம்-சிங்களத் தளபதி
30 மார்ச் 2013
பொங்கலுக்கு சென்ற மக்களை விரட்டியடித்த படையினர்!
29 மார்ச் 2013
தீவகத்தை விட்டு படிப்படியாக மக்கள் வெளியேறுகின்றனர்!

கிளிநொச்சியில் இரு இளம்பெண்கள் காணாமல் போயுள்ளனர்!
28 மார்ச் 2013
நாவற்குழிக்குச் சொந்தம் கொண்டாடும் சிங்களவர்கள்!
கூட்டமைப்பின் தீவக அமைப்பாளரின் ஒருங்கமைப்பில் விபச்சார விடுதி முற்றுகை!

27 மார்ச் 2013
இன பேதத்தை தூண்டும் இலங்கைத் தூதரை கைது செய்-வைகோ
இந்தியாவுக்கு உள்ளே இனபேதத்தைத் தூண்டும் சிங்களத் தூதர் பிரசாத் கரியவாசத்தை,உடனே கைது செய்து சிறையில் அடைக்க வேண்டும்! என்று பிரதமர் மன்மோகன் சிங்கிற்கு மதிமுக பொதுச்செயலாளர் வைகோ கடிதம் எழுதியுள்ளார். இலங்கையில் உள்ள 75 சதவிகித சிங்களவர்கள் வட இந்தியாவைச் சேர்ந்தவர்கள் என்று இந்தியாவிற்கான இலங்கைத்தூதர் பிரசாத் காரியவாஸம் பொய்யான பிரச்சாரம் செய்து வருகிறார். தனி ஈழம் கோரி தமிழ்நாட்டில் மாணவர்கள் போராடி வருவதற்கு ஆதரவாக வட மாநிலங்களிலும் மாணவர்கள் போரடி வருகின்றனர். இதனை முறியடிக்கும் விதமாகவும், இந்தியாவிற்குள் இன பேதத்தை தூண்டும் விதமாகவும் பிரசாத் கரியவாஸம் விஷமப் பிரச்சாரம் செய்து வருகிறார். இதனைத் தடுத்து நிறுத்தக் கோரியும், இலங்கைத் தூதரை கைது செய்யவேண்டும் என்றும் பிரதமர் மன்மோகன் சிங்கிற்கு கடிதம் எழுதியுள்ளார். வைகோ எழுதியுள்ள கடிதத்தில் கூறியுள்ளதாவது: இந்தியாவுக்கான இலங்கைத்தூதர் பிரசாத் கரியவாசம், தொடர்ந்து அத்துமீறிச் செயல்பட்டு வருகிறார். எல்லாவற்றுக்கும் மேலாக, இப்போது, இந்தியாவுக்கு உள்ளே, தமிழர்களுக்கு எதிராக, இனபேதத்தைத் தூண்டும் வகையில், ஒரு கடிதத்தை எழுதி, மின் அஞ்சல் வழியாக, இந்திய ஊடகங்களுக்கு அனுப்பி உள்ளார். சிங்களர்கள், வட இந்தியர்களின் வழித்தோன்றல்கள்; எனவே, வட இந்திய மக்கள், பயங்கரவாதிகளான தமிழர்களை ஒடுக்கிய சிங்களர்களைத்தான் ஆதரிக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டு உள்ளார். அவரது இந்தச் செயல், வரம்பு மீறியது. அண்மையில், இத்தாலியத் தூதருக்கு எதிராக உச்சநீதிமன்றம் நடவடிக்கை மேற்கொண்டது போல, இந்தியத் தண்டனைச் சட்டத்தின் பிரிவு 124 (ஏ) ன்படி, பிரசாத் கரியவாசத்தை உடனே கைது செய்து சிறையில் அடைக்க வேண்டும் என்று வைகோ கேட்டுக் கொண்டு உள்ளார்.
அசாத் சாலியை கைது செய்ய பொலிசார் தீவிரம்!
26 மார்ச் 2013
அமெரிக்கா தடைகளை விதிக்க முடியாது – கொக்கரிக்கிறார் கோத்தா
25 மார்ச் 2013
கள்ளனுக்கு நீதிபதி பதவியா- மன்னார் ஆயர்
தமிழகம் எங்கும் வீசுகிறது தமிழீழ ஆதரவு அலை!
ஏப்ரல் 2ஆம் திகதி திரையுலகம் சார்பில் நடத்தப்படவுள்ள இலங்கை அரசுக்கு எதிரான உண்ணா விரதப் போராட்டத் தில் தமிழ் சினிமா வின் உச்ச நட்சத் திரங்களான கமல், ரஜனி ஆகியோரும் தங்கள் படப்பிடிப்பை நிறுத்திவிட்டு கலந்து கொள்ளவுள்ளனர்.
தமிழீழத் தனியரசுக்கான வாக்கெடுப்பு நடத்தப்படும் வரை தமது போராட்டம் ஓயாது என தமிழக மாணவர்கள் அறிவித்துள்ளனர். இந்த நிலையில், ஈழத் தமிழருக்கு ஆதரவாக இலங்கை அரசைக் கண்டித்து தென்னிந்தியத் திரையுலகமும் கொதித் தெழுந்துள்ளது.
தமிழக மாணவர்கள் தொடர்ந்து முன்னெடுக்கும் ஈழத் தமிழருக்கான போராட்டத்தை ஆதரித்து தமிழக இயக்குநர் சங்கத்தினர், சின்னத்திரையினர் களத்தில் குதித்துள்ள நிலையில், இலங்கை அர_க்கு எதிராக தென்னிந்திய நடிகர் \ங்கமும் அடுத்த மாதம் (ஏப்ரல்) 2 ஆம் திகதி உண்ணாவிரதப் போராட்டத்தில் குதிக்கவுள்ளது.
இலங்கை இறுதிக்கட்டப் போரில் விடுதலைப்புலிகளின் இளைய மகன் பாலச்சந்திரன் உயிரோடு பிடிக்கப்பட்டு பின்னர் சுட்டுப் படுகொலை செய்யப்பட்ட ஒளிப்படங்கள் வெளியாகி உலகத்தையே அதிர்ச்சிக்குள்ளாக்கியது. இதையடுத்து தமிழக மாணவர்கள் தமிழருக்கு தனி ஈழம் வேண்டும் என பொங்கியெழுந்து குமுறி வெடித்தனர்.
சென்னை மாணவர்கள் ஆரம்பித்து வைத்த இந்தப் போராட்டம் இன்று தமிழகத்தையும் தாண்டி புலம்பெயர் தேசமெங்கி காட்டுத் தீ போல் பரவியுள்ளது. நேற்றும் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் மாணவர்களின் அகிம்சை ரீதியான போராட்டங்கள் தொடர்ந்தன.
மாணவர்களின் போராட்டம் கைவிடப்பட்டு இன்று பல்கலைக்கழக விடுதிகள் திறக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டபோதும் அதனை மாணவர் தரப்பு மறுத்துள்ளது.
ஈழத் தமிழர்களை கொன்றுகுவித்த இலங்கை அரசு மீதான போர்க்குற்ற விசாரணைக்கு சர்வதேசம் உறுதிமொழி வழங்கும்வரை தமது போராட்டம் ஓயாது என்று மாணவர்கள் அறிவித்துள்ளனர்.
இதேவேளை, இலங்கையில் நடைபெற்ற மனித உரிமை மீறல்கள், போர்க்குற்றங்கள் தொடர்பில் பல்வேறு நாடுகளும் கடும் கண்டனம் தெரிவித்துள்ளன. அடுத்த கட்டமாக, மனித உரிமை மீறல்களில் ஈடுபட்ட இலங்கைக்கு எதிராக கடந்த வியாழக்கிழமை ஐ.நா. மனித உரிமைப் பேரவைக் கூட்டத்தில், அமெரிக்கா கொண்டு வந்த தீர்மானம் இந்தியா உள்ளிட்ட பெருவாரியான நாடுகளின் ஆதரவுடன் நிறைவேறியது.
இதையடுத்து, இலங்கையின் அட்டூழியங்களுக்கு எதிராகத் தமிழ்த் திரையுலகமும் கொதித்தெழுந்திருக்கிறது. தமிழர்களை கொன்று குவித்த இலங்கை அரசைக் கண்டித்து தமிழ்நாடு திரைப்பட இயக்குநர்கள் \ங்கத்தின் சார்பில் சென்னை வள்ளுவர்கோட்டம் அருகே கடந்த செவ்வாய்க்கிழமை உண்ணாவிரதப் போராட்டம் நடைபெற்றது.
அதில், தென்னிந்திய திரைப்பட தொழிலாளர்கள் சம்மேளனம் (பெப்சி), சின்னத்திரை கூட்டமைப்பு ஆகிய அமைப்புகளைச் சேர்ந்த தொழில்நுட்ப கலைஞர்கள் மற்றும் தொழிலாளர்கள் கலந்து கொண்டார்கள்.
இதைத்தொடர்ந்து, இலங்கை அரசுக்கு எதிராக தென்னிந்திய நடிகர் சங்கத்தின் சார்பில் அடுத்த மாதம் (ஏப்ரல்) 2 ஆம் திகதி உண்ணாவிரத போராட்டம் நடைபெறுகிறது. சென்னை தியாகராயநகர் அபிபுல்லா வீதியில் உள்ள நடிகர் சங்க வளாகத்தில், 2 ஆம் திகதி காலை 9 மணி தொடங்கி மாலை 6 மணிவரை இந்த உண்ணாவிரதப் போராட்டம் நடைபெற இருக்கிறது.
இதில், ரஜினிகாந்த், கமல்ஹாசன் உட்பட அனைத்து நடிகர் நடிகைகளும் பங்கேற்கிறார்கள். உண்ணாவிரதத்தையொட்டி, அன்றைய தினம் படப்பிடிப்புகள் அனைத்தும் இரத்துச் செய்யப்படுகின்றன. வெளியூர்களில் நடைபெறும் படப்பிடிப்புகளையும் இரத்துச் செய்துவிட்டு, சென்னையில் நடைபெறும் உண்ணாவிரதத்தில் கலந்துகொள்ளும்படி நடிகர்நடிகைகளை நடிகர் சங்கம் கேட்டுக்கொண்டுள்ளது.
24 மார்ச் 2013
மகிந்த சொன்ன இரகசியத்தால் தலையில் அடித்து கதறிய கருணா!
அண்மையில் மட்டக்களப்புக்கு சென்ற மகிந்த ராசபக்ச கல்லடி பாலத்தை திறந்து வைத்து விட்டு அங்கு நடைபெற்ற கூட்டத்தில் கலந்து கொண்டார். அந்த கூட்டத்தில் மகிந்த சொன்ன ஒரு விடயத்தை கேட்டு கருணா தலையில் அடித்து கதறியதாக அருகில் இருந்தவர்கள் கூறுகின்றனர்.
இருவரும் ஜெனிவா தீர்மானம் குறித்தும் சர்வதேச போர்க்குற்ற விசாரணை குறித்தும் பேசிக்கொண்டிருந்தனர். இலங்கையில் நடைபெற்ற போர்க்குற்றங்களை விசாரிப்பதற்கு சர்வதேச நீதிபதிகள் கொண்ட குழுவை நியமிப்பது தொடர்பாக ஐ.நா.சபை ஆராய்ந்து வருவதாக சர்வதேச நீதிமன்ற குழுவில் இருக்கும் இலங்கையின் முன்னைநாள் நீதியரசர் நிகால் ஜெயசிங்க அண்மையில் மகிந்தவை சந்தித்து தெரிவித்திருந்தார்.
பெரும்பாலும் சர்வதேச விசாரணையை சந்திக்க வேண்டி வரும். அதில் உம்மையும் பிரதானமாக விசாரிப்பார்கள் என மகிந்த கருணாவிடம் கூறிய போது கருணா தலையில் அடித்து கதறியதாக கூறப்படுகிறது
இந்த தகவலை அருகில் இருந்த நம்பகமான நபர் ஒருவர் தினக்கதிருக்கு தெரிவித்தார்.
நன்றி:தினக்கதிர்
நன்றி:தினக்கதிர்
களமுனையில் நின்ற ஊடகவியலாளரே படங்களை விற்றுள்ளார்;அரசாங்கம் தகவல்
23 மார்ச் 2013
மீண்டும் ஒரு இசைப்பிரியாவா? உடனே காப்பாற்ற முடியுமா?
நன்றி:அதிர்வு
வாகரையில் மனிதப் புதைகுழி!
22 மார்ச் 2013
முகநூலில் அவதூறு பரப்பியவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை-அருள்
முகநூலில் தனக்கும் தனது குடும்பத்திற்கும் எதிராக அவதூறு பரப்பி தங்கள் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் விடுத்து வந்தவர்களுக்கு எதிராக சட்டநடவடிக்கை மேற்கொண்டுள்ளதாக அருள் என அழைக்கப்படும் திருஞானம் அருள்செல்வன் தெரிவித்துள்ளார்.அது தொடர்பான நகலையும் எமக்கு அனுப்பி வைத்துள்ளார்.அவர் குறிப்பிட்டுள்ள விடயங்களை இங்கு அப்படியே தருகின்றோம்.இணையங்களில் எழுதும் சிலர் பொழுது போக்குக்கு எதை வேண்டுமானாலும் எழுதலாம் என நினைக்கிறார்கள்.அவர்கள் சட்டம் பற்றி தெரிந்து கொள்வதில்லை.ஒருவர் புகைப்படத்தை அவர் அனுமதி இன்றி இணையத்தில் விடுவது சட்டப்படி குற்றம்,அந்த படத்தில் உள்ளவர் தொடர்பில் தவறான கருத்துக்களை வெளியிடுவதும் தண்டனைக்குரிய குற்றம்.ஆனால் இந்த சட்ட திட்டங்களை எல்லாம் மீறி புளியங்கூடல் குழுமம் என்ற பெயரில் இயங்கும் முகநூலில் எமக்கெதிராக மாபெரும் சதி அரங்கேற்றப்பட்டது.ஆகவே எமக்கு இவர்களால் ஏற்படுத்தப்பட்ட களங்கத்தை போக்க சட்டம் ஒன்றே சிறந்த வழி எனப்பட்டது.எனவேதான் சட்டவாளர்களை நாடும் நிலைக்கு தள்ளப்பட்டேன்,எனக்கு புளியங்கூடல் முகநூல் மூடபடுவதில் எந்த இலாபமும் இல்லை,ஆனால் அதை இயக்கி வந்த அதன் ஸ்தாபகர் எமக்கெதிரான இந்த பெரும் அவதூறான பரப்புரைக்கு துணை போயுள்ளார் என்பதே எனக்குள்ள மிகப்பெரும் ஆதங்கமாகும்.அதனால் தான் வழக்கு தாக்கல் செய்ய வேண்டிய நிலை எனக்கு ஏற்பட்டது.புளியங்கூடல் குழுமத்தின் ஸ்தாபகர் யார் என்று தெரியாமலேயே தான் வழக்கை தொடர்ந்தேன்,பின்னர் பொலிசாரால் புளியங்கூடல் குழும ஸ்தாபகர் அடையாளம் காணப்பட்டார்.அதன் பின்னர் எனது சகோதரருடன் தொடர்புகொண்டு விடயத்தை தெரிவித்தபோதுதான் தெரியவந்தது எனது பாடசாலை நண்பனின் சகோதரர்தான் புளியங்கூடல் குழும ஸ்தாபகர் என்பது.எனக்கு இவர்கள் தண்டிக்கப்பட வேண்டும் என்ற விருப்பம் இருந்ததில்லை ஆனாலும் சட்ட ரீதியில் அணுகும் போது தவறை உணர்ந்து செயற்படுவார்கள் தண்டனை வரை செல்லாமல் தவிர்த்துக் கொள்வோம் என்று எண்ணி இருந்தேன்,இதற்கிடையில் குழும ஸ்தாபகர் இந்த முகநூலை இனியும் கொண்டு செல்ல எனக்கு விருப்பம் இல்லை யாராவது இதை பொறுப்பேற்று நடத்துங்கள் என்று அறிவித்தல் விடுத்ததாக அறிந்தேன்,இவர் மீது வழக்கு பதிவு செய்யபட்டு இருக்கும்போது இவர் இதை வேறு யாரிடமும் கொடுத்தால் சிக்கலுக்குள் தள்ளப்படுவார் என்ற ஒரு நல்ல எண்ணத்தில் தான் இவருடன் தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு எனது மனைவி இறக்கும் முன்பும் சரி இறந்த பின்பும் சரி என் வாழ்க்கையை பற்றி எவருடனும் பேசிக்கொள்ளாத நான் முதல் முறையாக இவரிடம் பேசினேன்,அவரும் தனது தவறையும் ஆபத்தையும் உணர்ந்து,உடனடியாகவே தனது புளியங்கூடல் குழுமத்தை மூடிவிடுவதாக தெரிவித்தார்.நான் அதை மறுத்தேன் சட்டப்படி என்ன செய்ய வேண்டுமோ அதை செய்யுங்கள்,நான் பேசியதற்காக எதையும் செய்ய வேண்டாம் என கூறி,சட்டவாளர் மூலம் உங்களுக்கான எச்சரிக்கை அறிவித்தலும்,உங்கள் மீது தொடுக்கப்பட்டுள்ள வழக்குகள் தொடர்பாகவும் அறிந்து கொள்ளுங்கள் அத்துடன் சட்டவாளர் என்ன சொல்கிறாரோ அதை செய்யுங்கள் என்று தெரிவித்தேன்.அத்துடன் நான் உங்கள் மேல் தொடுத்திருக்கும் வழக்கை வாபஸ் வாங்க தயாராக இருக்கிறேன்,நீங்கள் சட்டவாளரிடம் மன்னிப்பு கடிதம் ஒன்றை கொடுங்கள் நானும் வழக்கை வாபஸ் வாங்குவதற்கான கடிதத்தை கொடுக்கிறேன்,காவல்துறைக்கு வழக்கை நீக்க இது அவசியம் என்று கூறி இருந்தேன்,இதன் பின்னர் புளியங்கூடல் குழும ஸ்தாபகரின் சகோதரர் (எனது பாடசாலை நண்பர்)என்னுடன் தொடர்புகொள்ள முயன்றார், நான் எனது தொழில்சார் விடையமாக வெளிநாடு சென்றிருந்ததால் திரும்பியாவுடன் அவருடன் தொடர்புகொண்டேன்,அவர் தனது சகோதரர் மீதான வழக்குகள் பற்றி எதுவும் என்னுடன் பேசவில்லை.ஆனால் பின்னர் குழும ஸ்தாபகர் என்னுடன் தொடர்பு கொண்டார்,நீங்கள் உங்கள் முகநூல் பக்கத்தை தொடர்ந்து நடத்த விரும்புகிறீர்களா?என அவரிடம் வினவினேன்,அதற்கு அவர் இதை ஏற்கனவே மூடி விட முயன்றேன் ,சில நண்பர்களின் வேண்டுகோளுக்கு இணங்கத்தான் நடத்தி வருகிறேன் என்று சொனார்,எனக்கு உங்கள் குழுமத்தை மூடிவிட வேண்டும் என்பதெல்லாம் இலக்கு இல்லை,உங்கள் குழுமத்தில் வெளிவந்த உண்மைக்கு புறம்பான எமது குடும்பத்திற்கெதிரான அவதூறான கருத்துக்களுக்கு பகிரங்க மன்னிப்புக்கோரி அறிக்கை விடும்படியும் அவரிடம் கேட்டிருந்தேன்.உங்கள் கையில்தான் அடுத்த கட்ட நடவடிக்கை என்ன என்பது தங்கியிருக்கிறது என்பதையும் சுட்டிக்காட்டினேன்.ஆனால் அவர் என்னுடன் பேசியது சம்பந்தமாக புளியங்கூடல் குழுமத்தில் ஒரு அறிவித்தலை வெளியிட்டு விட்டு ஒரு சில நிமிடங்களில் அந்த அறிவித்தலை நீக்கி விட்டு,ஸ்தாபகரின் சகோதரர் நான் தான் இனி இதற்கு பொறுப்பு என்னுடன் அருள் தொடர்பு கொள்ளலாம் என அறிக்கை விட்டதாக அறிந்தேன்.இவர்களது இந்த செய்கையானது எனக்கு மிகுந்த அதிர்ச்சியை உண்டுபண்ணியது.உண்மைக்கு புறம்பாக அவர்கள் ஏன் நடந்து கொள்கிறார்கள் என்பதை என்னால் புரிந்து கொள்ள முடியவில்லை!என்னுடன் தொடர்பில் இருக்கும் அவர்கள் நினைத்திருந்தால் ஒரு சுமூகமான நிலைப்பாட்டிற்கு வந்திருக்கலாம் என்பதே உண்மை.புளியங்கூடல் குழும ஸ்தாபகர் மீது நான்கு குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளது,இதில் 180 நாள் சிறை தண்டனையுடன் அபராதமும் அத்துடன் நான்கு வருடங்களுக்கு அவரின் நடவடிக்கைகளில் கண்காணிப்பும் உள்ளன,
swiss art:259 art:180 art:174 art:173 ஆகிய சட்டக் கோவைகளின்படி இவர் மீது இவ்வழக்குகள் தொடுக்கப்பட்டுள்ளன,நான் முதலில் கூறியது போல எனக்கு இந்த முகநூலை மூடுவதில் எந்த லாபமும் இல்லை அது என் இலக்கும் கிடையாது,எமது ஊருக்கு நன்மை அளிக்கும் எதையும் நான் அழிக்க விரும்பவில்லை,ஆனால் உண்மையில் இந்த குழுமமானது எமது ஊருக்கு களங்கத்தையே ஏற்படுத்தி இருக்கிறது.குற்றம் செய்தவர்கள் யாராக இருந்தாலும் தண்டிக்க படவேண்டும் என்பதே எனது நோக்கம்.அவதூறுக்கருத்துக்களை வெளியிட்டவர்களது IP காவல்துறையினரால் கண்டு பிடிக்கப்பட்டுள்ளது,மேலும் சில விபரங்களை திரட்டுவதற்காக புளியங்கூடல் குழும பதிவில் உள்ள blackbook ஐ காவல்துறையினர் நாடி உள்ளனர் facebookநிறுவனம் இந்த விபரங்களை கையளித்ததும் குற்றவாளிகள் அம்பலப்படுத்தப் படுவார்கள்.தவறான செய்தியை வெளியிட்ட நிறுவனகள் மீதும் மான நஷ்ட வழக்குகள் தொடரப்படுள்ளன,அவர்கள் மூலம் தவறான செய்தியை கொடுத்தவர்களை வெளி உலகத்துக்கு எடுத்து வருவதே என் நோக்கம்,ஊர் பெயரை சொல்லிக்கொண்டு சில விஷமிகள் செயற்பட்டிருக்கிறார்கள்,ஆனால் உண்மையான எம் ஊர்க்காரர் இப்படி அநாகரிகமான செயற்பாடுகளில் இறங்க மாட்டார்கள் என்பது எனது நம்பிக்கை.ஒரு குடும்பத்தின் வேதனையை இந்த ஈனப்பிறவிகள் எப்படியெல்லாம் இரசித்திருக்கிறார்கள் என்பதை நினைக்கும் போது,இவர்கள் அதற்கான தண்டனையை அனுபவிப்பதில் தப்பில்லை என்றே எனக்கு தோன்றுகிறது.எங்களுக்கு ஏற்பட்டிருக்கும் இந்த துயர் நிலை வேறெந்தக் குடும்பத்திற்கும் இனி ஏற்படக்கூடாது என்பதே என் பெரு விருப்பு.
இந்தியாவின் நடவடிக்கை அதிருப்தி என்கிறார் கோத்தபாய!
இந்தியாவின் நடவடிக்கை ஏமாற்றம் அளிக்கும் வகையில் அமைந்துள்ளதாக பாதுகாப்புச் செயலாளர் கோதபாய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவை அமர்வுகளில் இந்தியா வெளியிட்ட அறிக்கை மற்றும் நடவடிக்கைகள் பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார்.யுத்தக் குற்றச் செயல்கள் தொடர்பில் எழுப்பப்பட்ட கேள்விகள் ஏமாற்றமளிக்கும் வகையில் அமைந்துள்ளதாகக் குறிப்பட்டுள்ளார்.
சர்வதேச மனிதாபிமான நிறுவனங்களின் ஒத்துழைப்புடன் இலங்கை அரசாங்கம் குற்றச் செயல்களுக்கு தண்டனை விதித்தல் தொடர்பிலான அறிக்கைகைய தயாரித்திருந்ததாகத் தெரிவித்துள்ளார்.சர்வதேச மனிதாபிமான நிறுவனங்கள் இலங்கையின் நடவடிக்கையை வரவேற்றுள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார்.உள்நாட்டு அரசியல் அழுத்தம் காரணமாக மத்திய அரசாங்கம் சில தீர்மானங்களை எடுத்துள்ளமையை புரிந்து கொள்ள முடிவதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
குற்றச்சாட்டுக்களுக்கு பதிலளிக்க போதியளவு ஆதாரங்கள் காணப்படுவதாகவும் அதனை இந்தியா ஏற்றுக் கொள்ளும் என்ற நம்பிக்கை இருப்பதாகவும் பாதுகாப்புச் செயலாளர் தெரிவித்துள்ளார்.
21 மார்ச் 2013
காக்கிகளின் நக்கல்:போராடும் மாணவர்கள் கொந்தளிப்பு!
சேலம் பழைய பேருந்து நிலையம் எதிரேயே உள்ளது சேலம் மத்திய தபால் நிலையம் .இங்கே குவிந்த இந்திய மாணவர் சங்கத்தின் மாணவர்கள் ரோட்டிலேயே அமர்ந்தனர்.
அரசு கலை கல்லூரி மாணவர் பகத்சிங் தலைமையில் திரண்ட மாணவர்கள் 'எங்கள் ரத்தம் தமிழ் ரத்தம் ஈழ ரத்தம் எங்கள் சொந்தம்' 'ராஜபக்சேவை போர் குற்றவாளியாக அறிவி' என முழங்கினர்...அருகேயே இருந்த சேலம் டவுன் காவல்நிலைய உடனடியாக அங்கே குவிந்தனர்.
'வயசு பசங்க காலேஜ கட் அடிச்சமா,சினிமா,பார்டின்னு போனமான்னு இல்லாம இங்க வந்து போராடிகிட்டு என்ன பசங்க நீங்க' என சில காக்கிகள் அசால்ட்டாக பேச கொந்தளித்துவிட்டனர் மாணவர்கள்.
ஆய்வாளர் சூரியமூர்த்தி போராடிய மாணவர்களை பார்த்து 'அனுமதி வாங்காம செய்றீங்க இது அபன்ஸ்' என்க 'நாங்க முறைப்படி அனுமதி கேட்டோம் நீங்க தரல அதான் நாங்களா போராட உட்கார்ந்துட்டோம். எங்கள் ரத்த உறவுகள் அங்கே துடித்து கொண்டு இருக்கிறார்கள் இந்த முறையும் அவர்களை கைவிட்டால் எங்கள் மனசாட்சியே எங்களை அணுஅணுவாய் கொன்றுவிடும் எனவே நாங்கள் ஓயமாட்டோம்' என எழுச்சியாக பேச,
அந்த சாலையை கடந்தவர்கள் நின்று மாணவர்களுக்கு ஆதரவாக 'ஏம்பா இந்த வேகாத வெயில்ல அவங்க போராடுறத பார்த்து நாமெல்லாம் சந்தோசபடனும் அதவிட்டுட்டு இப்படி இழுத்துட்டு போக கூடாது' என காவல்துரையிடமே துணிச்சலாக பேசினர்.
ஒரு பெரியவர் 'ஏப்பா உடனே பத்ரிக்கைகாரங்கள கூப்பிடுங்க இந்த பசங்கள ஏதாவது பண்ணிட போறாங்க நம்மளால முடில அந்த பசங்களாவது செய்யட்டும் ஆனா பத்ரமா இருந்தா தான் எதையும் செய்ய முடியும்' என்றார் அன்போடு....
மாணவர்கள் போராட்டம் அனைத்துதரப்பட்ட மக்களின் ஆதரவோடு வீரியமாக பரவி செல்கிறது .
மகன் இல்லாமையினால் பெற்றோர், சகோதரிகள் கோப்பாய் பொலிஸாரால் கைது!
மகனை ஒப்படைக்கும் படி கூறி வீட்டுக்கு வந்த பொலிஸார் தேடி வந்த நபர் இல்லாத நிலையில் தந்தை, தாய் மற்றும் சகோதரிகளையும் கைது செய்து சென்ற சம்பவம் ஒன்று இடம் பெற்றுள்ளது.
நேற்று முன்தினம் நள்ளிரவு புன்னாலைக்கட்டுவன் பலாலி வீதியிலேயே இந்தச் சம்பவம் இடம்பெற்றது. இது குறித்து மேலும் தெரியவருவதாவது,
பொறியியலாளர் ஒருவரின் வீட்டிற்கு கோப்பாய் பொலிஸ் நிலையத்தில் இருந்து வந்ததாக கூறி இரவு வந்தவர்கள் மகன் எங்கே என்று கேட்டுள்ளார்கள். தனது மகன் கொழும்பு சென்றுள்ளதாக தெரிவித்ததைத் தொடர்ந்து தாங்கள் அவரைக் கைது செய்ய வந்துள்ளதாக தெரிவித்தனர். அதனையடுத்து வீட்டில் பொலிஸாரை காவல் வைத்து விட்டு பொறுப்பதிகாரியாக வந்தவர் திரும்பிச் சென்றுள்ளார்
மீண்டும் நள்ளிரவு வீடடுக்கு வந்த பொலிஸார் அவரது தந்தையான எஸ்.விநாயகமூர்த்தி வயது(62) கைது செய்யப்பட்டு பொலிஸ் நிலையத்திற்கு கொண்டு செல்லப்பட்டார்
மீண்டும் நேற்றுக் காலை வீட்டிற்க்கு வந்த பொலிஸார் தாயையும் சகோதரிகள் இருவரையும் பொலிஸ் நிலையம் கொண்டு சென்றுள்ளார்கள்.
இவர் எதற்காக தேடப்படுகின்றார், அவரது குடும்பத்தினரது கைது தொடர்பில் காரணம் எதுவும் கூறப்படவில்லை. அத்துடன் சம்பவம் தொடர்பில் வெளியில் யாருக்கும் கூறக்கூடாது என்றும் அயலவர்களுக்கு கூறியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இவர்கள் விடுதலை செய்யப்படவில்லை என்பதுடன் கோப்பாய் பொலிஸ் நிலையத்திற்கு தொடர்பு கொண்ட போதும் தகவல் எதுவும் அறியமுடியவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.மேலதிக தகவல் எதனையும் அறியமுடியவில்லை.
இலங்கை யுத்தம் தொடர்பில் இந்திய உச்ச நீதிமன்றில் மனுத்தாக்கல்!
20 மார்ச் 2013
நடிகர் நடிகைகளும் களமிறங்குகின்றனர்!
19 மார்ச் 2013
மயங்கிய நிலையிலும் தமிழீழம் கேட்டபடி மாணவர் உதடுகள்!
பொது வாக்கெடுப்பு நடத்த வேண்டும், ராஜபக்சேவை போர் குற்றவாளியாக அறிவிக்க வேண்டும், தனி ஈழம் வேண்டும் போன்ற கோரிக்கைகளை உள்ளடக்கி சேலத்தில் மத்திய சட்ட கல்லூரி மாணவர்கள் தொடர்ந்து உண்ணாவிரதம் இருந்து வருகின்றனர்.
சட்ட கல்லூரி வளாகத்திலேயே நடந்த இந்த உண்ணாவிரதம் இன்று 7வது நாளை எட்டியது. இதில் காலை 11.30 மணியளவில் இரண்டு மாணவர்கள் அந்த இடத்திலேயே சுருண்டு மயங்கி விழுந்தனர்.
ஆம்புலென்ஸ் வந்து அவர்களை மருத்துவமனைக்கு ஏற்றி சென்றது. அந்த நேரத்திலும் தனி ஈழம் வேண்டும் என அவர்களின் உதடுகள் உச்சரித்தபடியே இருந்தது.
இதே போல பெரியார் பல்கலைகழக வாசலிலேயே பல்கலைகழக மாணவர்கள் தொடர்ந்து உண்ணாவிரதம் இருந்து வருகின்றனர்.
செய்தியும் படங்களும் நக்கீரன்.
செய்தியும் படங்களும் நக்கீரன்.
அமெரிக்கப் பிரேரணை தமிழர்களுக்கு ஏமாற்றம்!
கிராம பொதுமக்கள் உண்ணாவிரதம்!
கடலூர் மாவட்டம் சிதம்பரம் தாலுகா, பரங்கிபேட்டை ஒன்றியம் வில்யநல்லூர் ஊராட்சியில் பொதுமக்கள் அனைவரும் இன்று (19.03.2013) ஒரு நாள் அடையாள உண்ணாவிரதம் மேற்கொள்கின்றனர்.
ராஜபக்சேவை போர்க்குற்றவாளியாக அறிவிக்க வேண்டும். தனி ஈழத்தை அங்கீகரிக்க வேண்டும். தமிழக மீனவர்களை சிங்கள இனவெறியர்கள் தாக்கி வருவதை தடுக்க வேண்டும். தொடர்ந்து ஈழ மக்களுக்காக போராடி வரும் மாணவர்களுக்கு ஆதரவு தருவதாக தெரிவித்து இந்த ஒரு நாள் உண்ணாவிரதம் மேற்கொள்வதாக பொதுமக்கள் தெரிவித்துள்ளனர்.
18 மார்ச் 2013
யாழில் வெள்ளை தேள்!இந்தியப்படை கொண்டுவந்ததா?
இலங்கையின் யாழ்ப்பாணம் மற்றும் அதனைச் சுற்றிய பகுதிகளில் உயிரைக் கொல்லும் 'வெள்ளை தேள்கள்' எண்ணிக்கை அதிகரித்து இருக்கிறது. யாழ்ப்பாணத்துக்கு இந்திய அமைதிப் படை சென்ற காலத்தில்தான் இந்தியாவில் இருந்து இந்த வெள்ளை தேள்களும் கொண்டுவந்துவிடப்பட்டிருக்கலாம் என்று சந்தேகம் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. யாழ்ப்பாணத்தில் எப்போதும் இல்லாத வகையில் வெள்ளை நிறத்திலான மிகவும் கொடிய விஷத்தைக் கொண்ட தேள்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இந்த தேளினால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கையும் அதிகரித்திருப்பதால் இது எப்படி திடீரென வந்தது என்ற கேள்வி எழுந்திருக்கிறது. இந்தியாவின் மகாராஷ்டிரா மாநிலத்தில்தான் அதிகமாக காணப்படக் கூடிய இந்த வெள்ளை தேள்களின் படையெடுப்பு குறித்து பல்வேறு கருத்துகள் வெளியாகி இருக்கின்றன. இலங்கையின் பேராதனைப் பல்கலைக் கழகப் பேராசிரியர் குலரத்ன கருத்து தெரிவிக்கையில், இந்திய அமைதி காக்கும் படையினர் இவற்றை கொண்டு வந்திருக்கலாம் எனக் கூறியிருப்பது சர்ச்சையை உருவாக்கியிருக்கிறது. மேலும் 1991-ஆம் ஆண்டு தான் முதல் முறையாக வெள்ளை தேள் கொட்டிய சம்பவம் யாழ்ப்பாணத்தில் பதிவானது என்பதையும் அவர் சுட்டிக்காட்டியிருக்கிறார். இந்திய அமைதிப் படையினர் 'உயிரி ஆயுதமாக' வெள்ளைத் தேளை பயன்படுத்தினரா? என்ற சர்ச்சைக்கு இது விதை போட்டிருக்கிறது.
சென்னையில் இன்று ஆளுநர் மாளிகை முற்றுகை!
17 மார்ச் 2013
தமிழக மாணவர்களின் நீதிக்கான போராட்டத்திற்கு கனேடியத் தமிழர்களின் வாழ்த்தும் ஆதரவும்
வாழ்க தமிழ்!
வெல்க மாணவர் போராட்டம்!
16 மார்ச் 2013
புத்தபிக்குகள் மீது தமிழகத்தில் சரமாரி தாக்குதல்!
15 மார்ச் 2013
சசீந்தினியின் மரணமும் அதனால் எழுந்துள்ள குழப்பங்களும்!
புளியங்கூடலை சேர்ந்த திருநாவுக்கரசு தம்பதிகளின் மகள் சசீந்தினி அதே ஊரைச்சேர்ந்த திருஞானம் தம்பதிகளின் மகனான அருள்செல்வனை 2005ம் ஆண்டில் திருமணம் செய்துகொண்டார்.அருள்செல்வன் சுவிசில் வாழ்ந்து வருகின்றார்,சசீந்தினி தனது கணவரின் பெற்றோருடன் தமிழகத்தில் வாழ்ந்து வந்தார்.இந்நிலையில் கடந்தமாதம்(02.02.2013)சசீந்தினி மரணமடைந்தார்.
இந்த மரணத்தில் சந்தேகம் இருப்பதாக இணையங்களில் வெளி வந்த செய்தி புளியங்கூடல் மக்களிடையே சலசலப்பை உண்டு பண்ணியிருந்தது.இதை தொடர்ந்து முகநூல் ஊடாகவும் வாதப்பிரதி வாதங்கள் எழுந்ததினால் குழப்பம் அதிகரித்தது.இத்தகைய சூழ் நிலையில் இதற்கு பொறுப்புக்கூற வேண்டியவர் சசீந்தினியின் கணவர் அருள்செல்வனே என்பதால் புளியங்கூடல்.கொம் சார்பில் அவருடன் தொடர்புகளை ஏற்படுத்தினோம்.
இன்று உங்களுக்கு எதிராகவும் உங்கள் குடும்பத்தினருக்கு எதிராகவும் முன்வைக்கப்படும் கருத்துகள் குறித்து சொல்லமுடியுமா என கேட்டோம்.
சசீந்தினியின் பிரிவால் நான் மிகவும் மனமுடைந்து போயுள்ளேன்,இத்தகைய துயரமான சூழலில் மீண்டும் மீண்டும் வெந்த புண்ணில் வேல் பாச்சுவதுபோல் எம்மை சிலர் நோகடித்துக் கொண்டிருக்கிறார்கள்.அவர்கள் உண்மையிலேயே சசீந்தினியின் மேல் உள்ள பாசத்தால் பேசுவதுபோல் தெரியவில்லை,எம்மீதுள்ள நற்பெயருக்கு களங்கம் விளைவிப்பதே அவர்களின் நோக்கம் என்பது தெளிவாக புரிகிறது,சசீந்தினி எனது மனைவி,ஆகவே என்னை களங்கப்படுத்துவதும் சசீந்தினியை களங்கப் படுத்துவதும் ஒன்றெனவே நான் கருதுகிறேன்.எனது பெற்றோர் சசீந்தினியை கொடுமைப்படுத்தியதாக மனச்சாட்சியே இல்லாமல் அப்பட்டமான பொய்யை சொல்கிறார்கள்.சசீந்தினி இருக்கும்வரை அவர்களுக்கு நாங்கள் எல்லோரும் நல்லவர்களாக இருந்தோம்,இப்போ கெட்டவர்களாகி விட்டோம் என்றார் கடும் கோபத்துடன்.மேலும் தொடர்ந்து விபரித்தார் அவர்.
நானும் சசியும் இந்தியாவில் வாழ்வதென்றே தீர்மானித்திருந்தோம் அதனடிப்படையில் தான் நாம் வீட்டையும் சொந்தமாக வாங்கினோம்,சசீந்தினிக்கு குழந்தைகள் என்றால் கொள்ளைப்பிரியம்,அவர் புளியங்கூடலுக்கு சென்று வந்த பின்னர்தான் அந்த ஆசை மேலும் அதிகரித்தது.அவர் ஊரிலே உறவினர் ஒருவரின் குழந்தையை தூக்கியபோது நீ குழந்தையை தூக்கக்கூடாது என அவர்களால் தடுக்கப்பட்டிருக்கிறார்,மிகவும் மனம் உடைந்து போன சசி இதை எனக்கு சொல்லி அழுதார்,நானும் பிள்ளை ஒன்றை பெற்றெடுக்க வேண்டும் என ஆதங்கப்பட்டார்,எங்களால் பிள்ளையை பெற்றெடுக்க முடியாவிட்டால் ஒரு குழந்தையை தத்தெடுப்போம் என நான் கூறியபோதும் சசி அதை ஏற்கவில்லை.இதன் பின் நானும் சசியும் தமிழகத்தில் உள்ள சிறந்த மருத்துவர் ஒருவரை அணுகினோம்,அவர் எம் இருவரையும் பரிசோதித்து விட்டு எம்மிருவருக்கும் எந்தக் குறைபாடும் இல்லை என்றார்.பரிசோதனைக்குழாய் மூலம் குழந்தையை பெற்றெடுக்கலாம் என்றும் ஆலோசனை வழங்கினார்.அதன் பின் முழுக்க முழுக்க சசியின் விருப்பத்திற்கு இணங்கியே நானும் ஒப்புக்கொண்டேன்,ஆனால் இப்போ நாம் வலுக்கட்டாயமாக சசிக்கு இப்படி செய்தோம் என்று இணையங்களில் எழுதுவது எத்தகைய அநாகரிக செயற்பாடு என்பதை நீங்களே புரிந்திருப்பீர்கள் என்றார் அருள்.இன்று முக நூலில் எமது குடும்பத்தை ஒதுக்கி வைக்க வேண்டும் என்று எழுதுபவர்கள் உண்மையிலேயே மக்களால் ஒதுக்கப்பட்ட ஒரு சிலர்தான்.மற்றும் ஒருவர் எமது தந்தையுடன் ஊரில் சிறு பிரச்சனைப்பட்டவர்,இவர்கள் எல்லாம் பழைய பகையை தீர்த்துக்கொள்ள சசீந்தினியின் மரணத்தை கையிலெடுத்திருக்கிறார்கள் என்றும் அருள் குமுறினார்.இருந்தபோதும் எனது மாமனாரில் இருக்கும் மரியாதை துளி கூடக்குறையவில்லை என்றும்,அவருடன் எமது குடும்பத்தார் தொடர்பு கொள்ள முயன்றபோதும் அவரிடம் தொலைபேசி கொடுக்கப்படுவதில்லை என்றும் அவர் தெரிவித்தார்.சசியின் உடலை அவர்களிடம் கொடுப்பதில்லை என்றே முதலில் முடிவு செய்திருந்தேன்,பின்னர் ஒரு தந்தையின் ஸ்தானத்தில் இருந்து யோசித்தபோது பெற்றவர்களின் வலி எனக்கு புரிந்தது,முழுக்க முழுக்க திருநா மாமாவிற்காகவே சசியின் உடலை ஒப்படைக்க இணங்கினேன் என்றும் அருள் சொன்னார்.இந்தியா வந்திருந்த சசியின் சகோதரி எனது தாயாரை கட்டி அழுதபோது எப்படியெல்லாம் சசியை அழகா பார்த்தீங்களே மாமி,இப்ப இப்படி எல்லோரையும் விட்டிற்று போய்ற்றாளே என்று சொல்லி அழுது விட்டு இப்போ கதையை மாற்றி விட்டதாவும் அவர் கலங்கினார்.நான் குற்றவாளி என்றால் எனக்கெதிராக அவர்கள் வழக்கு தாக்கல் செய்யட்டும்,நான் எந்த நீதிமன்றத்திலும் ஆஜராக தயாராக இருக்கிறேன்.பொய் சொல்லி வாழ்வதோ அல்லது அடுத்தவருக்கு துரோகம் செய்து வாழ்வதோ எனது பழக்கம் கிடையாது.நான் ஒரு நல்ல தாய் தந்தைக்கு பிள்ளையாக பிறந்தவன்,இன்று எனக்கு அபகீர்த்தியை ஏற்படுத்தினால் கூட பொறுத்துக்கொள்ளலாம் ஆனால் என்னை பெற்ற ஒரே காரணத்திற்காக அவர்கள் துன்பப்படுவதுதான் சகிக்க முடியவில்லை.நான் வெள்ளைக்காரியை திருமணம் செய்துள்ளதாக கூறுபவர்கள் அதை நிரூபிக்கட்டும்,நான் சுவிசில் திருமணம் செய்யவில்லை என்பதற்கான சான்றிதழை இங்கே எடுத்து வைத்திருக்கிறேன்.என் மீதும் என் குடும்பத்தார் மீதும் அபாண்டமாக குற்றம் சுமத்துவோர் மீது எத்தகைய நடவடிக்கைகளை மேற்கொள்ளலாம் என்பது தொடர்பில் சட்டவாளர்களுடன் கூடி ஆலோசனை நடத்தி வருகிறேன் என்றும் அவர் மேலும் குறிப்பிட்டார்.எங்கள் தொலைபேசி இலக்கங்களை பகிரங்கப்படுத்தி கேள்வி கேட்க சொல்பவர்கள் ஏன் தமது தொலைபேசி இலக்கங்களை வெளியிடுவதில்லை?உண்மையை அறிந்து கொள்ள விரும்பும் நீங்கள் இரு பகுதியினரையும் அல்லவா விசாரிக்க வேண்டும் என்று கேள்விக் கணையையும் தொடுத்தார் அருள்.அவரது கேள்வியில் நியாயம் இருப்பதாகவே பட்டது.
பாலச்சந்திரன் ஆவி…. உங்களை மன்னிக்காதுடா பாவி: டி.ராஜேந்தர்
சிறிலங்கா பொறுப்புடன் நடந்துகொள்ள வேண்டும் என்கிறது அமெரிக்கா!
14 மார்ச் 2013
தமிழக கல்லூரி மாணவர்களின் போராட்டம் குறித்து நாம் தமிழர் கட்சி அறிக்கை!
செந்தமிழன் சீமான்
தலைமை ஒருங்கிணைப்பாளர்
நாம் தமிழர் கட்சி.
நாள்: 14-03-2013
அறிக்கை:
உலக வரலாற்றில் இதுவரை சர்வதேச சமூகம் கண்டிராத இனப்படுகொலையை கடந்த 2009ம் ஆண்டில் சிங்கள பேரினவாத அரசு திட்டமிட்டு எம் தாய் நிலமான தமிழீழ மண்ணில் இழைத்து உள்ளது. பாதுகாப்பு வளையம் என்று இலங்கை அரசினால் அறிவிக்கப்பட்ட பகுதிகளில் உயிரை பாதுகாக்க ஓடிவந்த எம்மக்களை சிங்கள அரசு கொன்றொழித்தது. திட்டமிட்ட இனப்படுகொலையை சர்வதேச சமூகம் கடந்த மூன்று ஆண்டுகளாக மெளனமாக இருந்து அங்கீகரித்து வருகிறது என்பது தான் சோதனையான உண்மை. சென்ற நவம்பர் 2012 ஆம் மாதம் ஐ.நா. பெருமன்றத்தில் அமெரிக்கா தாக்கல் செய்த தீர்மானத்தில் இந்தியா இறுதி நேரத்தில் வலியுறுத்தி செய்த திருத்தங்களால் அத்தீர்மானமே வலுவற்று போனது. தற்போதும் அமெரிக்கா தாக்கல் செய்து இருக்கின்ற இலங்கைக்கு எதிரான தீர்மானம் உண்மையில் இலங்கை அரசை தண்டிக்கும் வகையில் இல்லை என்பது ஒருபுறம் இருக்க, இனப்படுகொலைக்கு எதிராக சுதந்திரமான சர்வதேச விசாரனையை நடத்துவதற்கு உகந்த தீர்மானமாக இல்லை என்பது அப்பட்டமான உண்மை. ஒரு இனம் திட்டமிட்டு அழிக்கப்பட்டதை உணர்ந்து சர்வதேச சமூகம் ஈழப்பிரச்சனையை அணுகி இருக்க வேண்டும். ஆனால் அமெரிக்கா தற்போது தாக்கல் செய்துள்ள தீர்மானத்தினால் இனப்படுகொலையை திட்டமிட்டு செய்த சிங்கள பேரினவாத அரசினை தண்டிக்க இயலாது. இந்நிலையில் டெசோ போன்ற அமைப்புகள் வலுவில்லாத,சிங்கள பேரினவாத அரசிற்கு எவ்விதமான நிர்பந்தங்களையும் அளிக்காத அமெரிக்கா தீர்மானத்தை இந்தியா ஆதரிக்க வேண்டும் என்று போராட்டம் நடத்துவது தமிழ் இனத்திற்கு செய்யப்படும் மற்றொரு துரோகம் என்றே நான் கருதுகிறேன். சுதந்திரமான பொது வாக்கெடுப்பு ஒன்றினை நடத்தி முழு இறையாண்மை கொண்ட சுதந்திர தனித்தமிழீழ நாட்டினை சர்வதேச சமூகம் அமைத்து தரவேண்டும் என்பதுதான் உலகெங்கும் பரந்து வாழும் தமிழ்த் தேசிய இனத்தின் அடிப்படை கோரிக்கையாக இருக்கிறது. தொடக்கம் முதலாகவே ஈழத்தமிழருக்கும், தமிழ்த்தேசிய இனத்திற்கும் இந்தியாவின் நிலைப்பாடு தமிழர்களுக்கு முற்றிலும் எதிராகவே இருக்கிறது. தெற்காசிய பகுதியில் வலிமையான நாடாக, 7 கோடிக்கும் தமிழர்கள் வாழும் நாடாக விளங்கும் இந்திய நாட்டின் நிலைப்பாடு ஈழப்பிரச்சனையில் மிக முக்கியமானது. எனவே தான் தமிழகத்தின் கல்லூரி மாணவர்கள் இந்திய பெருந்தேசத்திற்கு தங்களது உணர்வுகளை உண்ணாநிலை அறப்போர் மூலமாக வெளிப்படுத்தி கடுமையான அழுத்தங்களை ஏற்படுத்தி வருகின்றனர். இலங்கையில் நடந்த இனப்படுகொலைக்கு எதிரான சர்வதேச விசாரணையை எவ்வித நிர்பந்தங்கள் இல்லாமல் சுதந்திரமாக நடத்துவதற்கு உகந்த திருத்தங்களை அமெரிக்கா தாக்கல் செய்திருக்கின்ற தீர்மானத்தில் ஏற்படுத்தாமல் தற்போதைய வடிவத்திலேயே அமெரிக்கா தாக்கல் செய்யப்படும் பட்சத்தில் அது சிங்கள பேரினவாத அரசிற்கு உதவியாகவே இருக்கும். இச்சூழ்நிலையை உணர்ந்து தான் தமிழக கல்லூரி மாணவர்கள் எழுச்சியாக திரண்டு தமிழீழத்திற்கு ஆதரவாக, இனப்படுகொலைக்கு எதிராக ஒருமித்த கருத்துடன் போராட்டி வருகின்றார்கள். தமிழக கல்லூரி மாணவர்கள் முன் வைத்திருக்கின்ற கோரிக்கைகள் இச்சுழலில் மிக அவசியமானது மட்டுமல்ல, வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்ததாகவே நான் கருதுகிறேன். போராட்டக் களத்தில் நிற்கும் என் மாணவத் தம்பிகளே..தங்கைகளே.. மாணவ சக்தி மகத்தானது என்பதைதான் வரலாறு அழுத்தமாக போதிக்கிறது. வெடித்தெழுந்த புரட்சிகளின் தொடக்கம் துளிர்த்த தோட்டங்களாக கல்லூரியின் வகுப்பறைகள் தான் விளங்குகின்றன. போராட்ட வடிவங்கள் மாறலாம், போராட்டம் மாறாது என்கிற உன்னத மொழிக்கேற்ப ஈழ விடுதலைக்காக தன் வயிற்றில் பசி என்னும் நெருப்பினை சுமந்து, தமிழீழம் ஒன்றே தீர்வு என்கிற தெளிவாக முழக்கத்தோடு , மரணத்திற்கு அஞ்சாமல் போராடும் உங்களின் தீரமிக்க போராட்டம் சர்வதேசத்தையே தமிழகம் பக்கம் திருப்பி உள்ளது. அறவழியில் நின்று ஒருமித்த குரலில் நீங்கள் விடுக்கிற விடுதலைக்கான அறைகூவல், இனப்படுகொலைக்கு எதிரான முழக்கம் போன்றவை ஈழ விடுதலைப்பயணத்தில் மைல் கற்களாக விளங்கும் என்பதில் சந்தேகமில்லை. இலக்கு ஒன்றுதான் இனத்தின் விடுதலை என்பதை உணர்ந்து தன்னலம் துறந்து இனநலன் காக்க போராட்டக்களத்தில் துணிந்து நிற்கிற சட்டக்கல்லூரி, பொறியியல், மருத்துவம், கலை அறிவியல் கல்லூரி உள்ளீட்ட அனைத்துக் கல்லூரி மாணவர்கள் ஆகிய உங்கள் அனைவருக்கும் எனது புரட்சிவாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன். உங்களது போராட்டம் வெல்லட்டும். நமது மற்றொரு தாய் நிலமான தமிழீழத்திற்கு விடுதலையின் ஒளி கிடைக்கட்டும். மேலும் தமிழக மாணவர்களோடு போராட்டக் களத்தில் திரண்டிருக்கும் மதிப்பிற்குரிய வழக்கறிஞர்கள் உள்ளீட்ட அனைத்து ஆதரவு சக்திகளுக்கும் என் நன்றி கலந்த பாராட்டுதல்களையும், வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொள்கிறேன். தன்னெழுச்சியாக அரசியல் சார்பில்லாமல் போராடும் தமிழக கல்லூரி மாணவர்களை மாநில அரசு எந்த வடிவத்திலும் ஒடுக்க கூடாது என்றும் எவ்விதமான நிர்பந்தங்களுக்கும் தமிழக கல்லூரி மாணவர்களை தமிழக அரசு உள்ளாக்கக் கூடாது என்றும் நாம் தமிழர் கட்சி வலியுறுத்துகிறது. மேலும் அறவழியில் போராடிவரும் தமிழக மாணவர்களின் போராட்டத்தை நாம் தமிழர் கட்சி முழுமையாக ஆதரிப்பதோடு மட்டுமல்லாமல் களத்திலும் முழுமையாக துணை நிற்கும் என்றும் உறுதியாக தெரிவித்து கொள்கின்றோம்.
நாம் தமிழர்.
செந்தமிழன் சீமான்
தலைமை ஒருங்கிணைப்பாளர்
நாம் தமிழர் கட்சி.
தலைமை ஒருங்கிணைப்பாளர்
நாம் தமிழர் கட்சி.
நாள்: 14-03-2013
அறிக்கை:
உலக வரலாற்றில் இதுவரை சர்வதேச சமூகம் கண்டிராத இனப்படுகொலையை கடந்த 2009ம் ஆண்டில் சிங்கள பேரினவாத அரசு திட்டமிட்டு எம் தாய் நிலமான தமிழீழ மண்ணில் இழைத்து உள்ளது. பாதுகாப்பு வளையம் என்று இலங்கை அரசினால் அறிவிக்கப்பட்ட பகுதிகளில் உயிரை பாதுகாக்க ஓடிவந்த எம்மக்களை சிங்கள அரசு கொன்றொழித்தது. திட்டமிட்ட இனப்படுகொலையை சர்வதேச சமூகம் கடந்த மூன்று ஆண்டுகளாக மெளனமாக இருந்து அங்கீகரித்து வருகிறது என்பது தான் சோதனையான உண்மை. சென்ற நவம்பர் 2012 ஆம் மாதம் ஐ.நா. பெருமன்றத்தில் அமெரிக்கா தாக்கல் செய்த தீர்மானத்தில் இந்தியா இறுதி நேரத்தில் வலியுறுத்தி செய்த திருத்தங்களால் அத்தீர்மானமே வலுவற்று போனது. தற்போதும் அமெரிக்கா தாக்கல் செய்து இருக்கின்ற இலங்கைக்கு எதிரான தீர்மானம் உண்மையில் இலங்கை அரசை தண்டிக்கும் வகையில் இல்லை என்பது ஒருபுறம் இருக்க, இனப்படுகொலைக்கு எதிராக சுதந்திரமான சர்வதேச விசாரனையை நடத்துவதற்கு உகந்த தீர்மானமாக இல்லை என்பது அப்பட்டமான உண்மை. ஒரு இனம் திட்டமிட்டு அழிக்கப்பட்டதை உணர்ந்து சர்வதேச சமூகம் ஈழப்பிரச்சனையை அணுகி இருக்க வேண்டும். ஆனால் அமெரிக்கா தற்போது தாக்கல் செய்துள்ள தீர்மானத்தினால் இனப்படுகொலையை திட்டமிட்டு செய்த சிங்கள பேரினவாத அரசினை தண்டிக்க இயலாது. இந்நிலையில் டெசோ போன்ற அமைப்புகள் வலுவில்லாத,சிங்கள பேரினவாத அரசிற்கு எவ்விதமான நிர்பந்தங்களையும் அளிக்காத அமெரிக்கா தீர்மானத்தை இந்தியா ஆதரிக்க வேண்டும் என்று போராட்டம் நடத்துவது தமிழ் இனத்திற்கு செய்யப்படும் மற்றொரு துரோகம் என்றே நான் கருதுகிறேன். சுதந்திரமான பொது வாக்கெடுப்பு ஒன்றினை நடத்தி முழு இறையாண்மை கொண்ட சுதந்திர தனித்தமிழீழ நாட்டினை சர்வதேச சமூகம் அமைத்து தரவேண்டும் என்பதுதான் உலகெங்கும் பரந்து வாழும் தமிழ்த் தேசிய இனத்தின் அடிப்படை கோரிக்கையாக இருக்கிறது. தொடக்கம் முதலாகவே ஈழத்தமிழருக்கும், தமிழ்த்தேசிய இனத்திற்கும் இந்தியாவின் நிலைப்பாடு தமிழர்களுக்கு முற்றிலும் எதிராகவே இருக்கிறது. தெற்காசிய பகுதியில் வலிமையான நாடாக, 7 கோடிக்கும் தமிழர்கள் வாழும் நாடாக விளங்கும் இந்திய நாட்டின் நிலைப்பாடு ஈழப்பிரச்சனையில் மிக முக்கியமானது. எனவே தான் தமிழகத்தின் கல்லூரி மாணவர்கள் இந்திய பெருந்தேசத்திற்கு தங்களது உணர்வுகளை உண்ணாநிலை அறப்போர் மூலமாக வெளிப்படுத்தி கடுமையான அழுத்தங்களை ஏற்படுத்தி வருகின்றனர். இலங்கையில் நடந்த இனப்படுகொலைக்கு எதிரான சர்வதேச விசாரணையை எவ்வித நிர்பந்தங்கள் இல்லாமல் சுதந்திரமாக நடத்துவதற்கு உகந்த திருத்தங்களை அமெரிக்கா தாக்கல் செய்திருக்கின்ற தீர்மானத்தில் ஏற்படுத்தாமல் தற்போதைய வடிவத்திலேயே அமெரிக்கா தாக்கல் செய்யப்படும் பட்சத்தில் அது சிங்கள பேரினவாத அரசிற்கு உதவியாகவே இருக்கும். இச்சூழ்நிலையை உணர்ந்து தான் தமிழக கல்லூரி மாணவர்கள் எழுச்சியாக திரண்டு தமிழீழத்திற்கு ஆதரவாக, இனப்படுகொலைக்கு எதிராக ஒருமித்த கருத்துடன் போராட்டி வருகின்றார்கள். தமிழக கல்லூரி மாணவர்கள் முன் வைத்திருக்கின்ற கோரிக்கைகள் இச்சுழலில் மிக அவசியமானது மட்டுமல்ல, வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்ததாகவே நான் கருதுகிறேன். போராட்டக் களத்தில் நிற்கும் என் மாணவத் தம்பிகளே..தங்கைகளே.. மாணவ சக்தி மகத்தானது என்பதைதான் வரலாறு அழுத்தமாக போதிக்கிறது. வெடித்தெழுந்த புரட்சிகளின் தொடக்கம் துளிர்த்த தோட்டங்களாக கல்லூரியின் வகுப்பறைகள் தான் விளங்குகின்றன. போராட்ட வடிவங்கள் மாறலாம், போராட்டம் மாறாது என்கிற உன்னத மொழிக்கேற்ப ஈழ விடுதலைக்காக தன் வயிற்றில் பசி என்னும் நெருப்பினை சுமந்து, தமிழீழம் ஒன்றே தீர்வு என்கிற தெளிவாக முழக்கத்தோடு , மரணத்திற்கு அஞ்சாமல் போராடும் உங்களின் தீரமிக்க போராட்டம் சர்வதேசத்தையே தமிழகம் பக்கம் திருப்பி உள்ளது. அறவழியில் நின்று ஒருமித்த குரலில் நீங்கள் விடுக்கிற விடுதலைக்கான அறைகூவல், இனப்படுகொலைக்கு எதிரான முழக்கம் போன்றவை ஈழ விடுதலைப்பயணத்தில் மைல் கற்களாக விளங்கும் என்பதில் சந்தேகமில்லை. இலக்கு ஒன்றுதான் இனத்தின் விடுதலை என்பதை உணர்ந்து தன்னலம் துறந்து இனநலன் காக்க போராட்டக்களத்தில் துணிந்து நிற்கிற சட்டக்கல்லூரி, பொறியியல், மருத்துவம், கலை அறிவியல் கல்லூரி உள்ளீட்ட அனைத்துக் கல்லூரி மாணவர்கள் ஆகிய உங்கள் அனைவருக்கும் எனது புரட்சிவாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன். உங்களது போராட்டம் வெல்லட்டும். நமது மற்றொரு தாய் நிலமான தமிழீழத்திற்கு விடுதலையின் ஒளி கிடைக்கட்டும். மேலும் தமிழக மாணவர்களோடு போராட்டக் களத்தில் திரண்டிருக்கும் மதிப்பிற்குரிய வழக்கறிஞர்கள் உள்ளீட்ட அனைத்து ஆதரவு சக்திகளுக்கும் என் நன்றி கலந்த பாராட்டுதல்களையும், வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொள்கிறேன். தன்னெழுச்சியாக அரசியல் சார்பில்லாமல் போராடும் தமிழக கல்லூரி மாணவர்களை மாநில அரசு எந்த வடிவத்திலும் ஒடுக்க கூடாது என்றும் எவ்விதமான நிர்பந்தங்களுக்கும் தமிழக கல்லூரி மாணவர்களை தமிழக அரசு உள்ளாக்கக் கூடாது என்றும் நாம் தமிழர் கட்சி வலியுறுத்துகிறது. மேலும் அறவழியில் போராடிவரும் தமிழக மாணவர்களின் போராட்டத்தை நாம் தமிழர் கட்சி முழுமையாக ஆதரிப்பதோடு மட்டுமல்லாமல் களத்திலும் முழுமையாக துணை நிற்கும் என்றும் உறுதியாக தெரிவித்து கொள்கின்றோம்.
நாம் தமிழர்.
செந்தமிழன் சீமான்
தலைமை ஒருங்கிணைப்பாளர்
நாம் தமிழர் கட்சி.
தமிழினத்திற்கு எதிராக இந்தியாவும் சிறிலங்காவும் கூட்டு ஒப்பந்தம்!
விடுதலைப் புலிகளுக்கு எதிரான போர் உச்சக்கட்டத்தில் இருந்த போது, சிறிலங்காவுடன் ஏற்படுத்தியிருந்த உடன்பாடு ஒன்றை இந்தியா வெளிப்படுத்தியுள்ளது.
பூநகரியை, மேஜர் ஜெனரல் சவீந்திர சில்வா தலைமையிலான சிறிலங்கா இராணுவத்தின் 58வது டிவிசன் கைப்பற்றுவதற்கு சில வாரங்கள் முன்னதாக, இந்த இணக்கப்பாடு ஏற்பட்டுள்ளது.
2008ம் ஆண்டு ஒக்ரோபர் மாதம் சிறிலங்காவுடன் ஏற்படுத்தப்பட்ட இந்த இணக்கப்பாடு, தமிழ்நாட்டுக்கும் சிறிலங்காவின் வடமேற்குப் பகுதிக்கும் இடையிலான விடுதலைப் புலிகளின் வழக்கல் பாதையை துண்டிக்கும் நோக்கத்தைக் கொண்டே ஏற்படுத்தப்பட்டது.
இதனடிப்படையில், சிறிலங்கா அரசாங்கத்தினால் குறிப்பிடப்பட்ட பிரதேசங்களுக்குள், தமது நாட்டு மீன்பிடிப் படகுகளை அனுமதிக்கப் போவதில்லை என்று இந்திய அரசாங்கம் சிறிலங்காவுக்கு உறுதியளித்துள்ளது.
இந்தத் தகவலை இந்தியப் பாதுகாப்பு அமைச்சர் ஏ.கே.அந்தோணி இந்திய நாடாளுமன்றத்தில் வெளியிட்டுள்ளார்.
இந்தியாவுடன் சிறிலங்கா ஏற்படுத்திக் கொண்ட இந்த இணக்கப்பாட்டின் மூலம், விடுதலைப் புலிகளின் கடற்புலிகளின் வழங்கல் நடவடிக்கையை சிறிலங்கா கடற்படை துண்டிப்பது இலகுவாக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
13 மார்ச் 2013
இலங்கைக்கு எதிராக மீண்டும் செய்தி வெளியிட்டது சனல் 4!
இலங்கையில் நடத்தப்பட உள்ள பொதுநலவாய நாடுகளின் தலைவர்கள் கலந்து கொள்ளும் உச்சி மாநாட்டை இரத்துச் செய்யும் நோக்கில், பிரித்தானியாவின் செனல் 4 தொலைக்காட்சி , இலங்கைக்கு எதிராக மற்றுமொரு குறுகிய செய்தி ஒன்றை வெளியிட்டுள்ளது.
இலங்கையில் இடம்பெற்றதாக கூறப்படும் மனித உரிமை மீறல்கள் காரணமாக இப்படியான மாநாடு அங்கு நடத்தப்படக் கூடாது என அந்த செய்தியில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
இந்த மாநாட்டில் பிரித்தானிய மகாராணி எலிசபெத் கலந்துகொள்வது நகைப்புக்குரியது எனவும் அதில் கூறப்பட்டது. இதனை தவிர பிரித்தானியாவின் முன்னாள் அமைச்சர்களான டேவிட் மிலிபேண்ட், மெக்லம் ரிக்கின்ட் ஆகியோரின் கருத்துக்களும் செய்தியில் வெளியிடப்பட்டன.
தனது தவறுகளை மறைக்க இலங்கைக்கு இந்த மாநாடு வாய்ப்பாக அமைந்து விடும் என மிலிபேண்ட் தெரிவித்துள்ளார்.
இலங்கைக்கு எதிராக குற்றம் சுமத்துவோரை நாடு திரும்ப அனுமதிக்கக் கூடாது!
12 மார்ச் 2013
கிளிநொச்சி மக்கள் அச்சத்தில்!
கிளிநொச்சியின் பல்வேறு பகுதிகளிலும் அதிகாலை வேளை படைகளின் சோதனைகளும் பதிவுகளும் இடம்பெற்று வருவதால் பல்வேறு சிரமங்களை எதிர்கொள்வதாகப் பொதுமக்கள் விசனம் வெளி யிட்டுள்ளனர்
கிளிநொச்சி ஏ9 வீதி, கனகபுரம் வீதி, பரந்தன் பூநகரி வீதி, ஏ35 வீதி அகியவற்றில் அதிகாலை 4.30 மணி முதல் காலை 6 மணி வரை வீதிகளில் பயணம் செய்வோர் இடைமறிக்கப்பட்டுச் சோதனை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
அத்துடன் பயணிப்போரில் விவரங்களும் பதிவு செய்யப்படுவதாகத் தெரிவிக்கப்படுகிறது.
இதனால் அதிகாலையில் பல்வேறு அதிகாலையில் அவசர தேவைகளுக்குச் செல்வோர் தினமும் பல்வேறு அசௌகரியங்ளை எதிர்கொள்வதுடன் அச்சத்துக் குள்ளாவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
நேற்றுத் திங்கட்கிழமை அதிகாலை பரந்தன் முல்லைத்தீவு ஏ35 வீதியில் சிவபுரம் குடியிருப்புச் சந்திக்கு அண்மித்த பகுதியில் வீதியை வழிமறித்து படையினர் பதிவு நடவடிக்கையில் ஈடுபட்டனர்.
இதன்போது அதிகாலை 4.55 மணியளவில் கடமையின் நிமித்தம் மோட்டார் சைக்கிளில் பயணித்துக் கொண்டிருந்த இளைஞர் ஒருவரை படையினர் வழிமறித்துள்ளனர். அவரிடம் சாரதி அனுமதிப்பத்திரம், தேசிய அடையாள அட்டை ஆகிய இரண்டையும் படையினர் கோரியுள்ளனர்.
குறித்த இளைஞர் சாரதி அனுமதிப் பத்திரத்தைக் காண்பித்ததுடன் தான் மிக அவசரமாக செல்ல வேண்டியிருப்பதாகக் கூறியபோதும் அவரை 20 நிமிடங்கள் வரை தடுத்து வைத்து படையினர் பதிவுகளை மேற்கொண்ட பின்னரே விடுவித்ததாகத் தெரிவிக்கப்பட்டது.
பதிவுகளை மேற்கொள்ளும் படையினர் அவசர தேவைகளுக்காகச் செல்வோருக்கு பாதிப்புக்களை ஏற்படுத்தும் வகையில் நடந்து கொள்வது குறித்து மக்கள் விசனம் தெரிவித்துள்ளனர். படையினரின் இந்த சோதனை நடவடிக்கைகளால் அதிகாலை வேளையில் பயணிப்பதற்குப் பலரும் அச்சப்படுவதாகத் தெரிவிக்கப்படுகிறது
11 மார்ச் 2013
குற்றச்சாட்டுகளை நீர்த்துப் போகவைக்கும் முயற்சி – சாடுகிறது தினமணி ஆசிரியர் தலையங்கம்
10 மார்ச் 2013
முஸ்லிம்களை வெளியேற்றுமாறு துண்டுப்பிரசுரங்கள்!
09 மார்ச் 2013
சசீந்தினியின் மரணம் தொடர்பில் வெளிட்ட செய்திக்கு தமிழ் சீஎன்என் வருத்தம்!
சுவிஸ் செய்தியில் திருத்தம்!என்ற தலைப்பில் கீழ் கண்டவாறு தமிழ் சீ.என்.என் வருத்தம் வெளியிட்டுள்ளது.கடந்த மூன்றாம் திகதிய பதிப்பில் தனது வருத்தத்தை தெரிவித்துள்ளது.
மாசி மாதம் 10 ஆம் திகதி சுவிஸில் வெள்ளைக்காரப் பெண் திருமணத்தால் என்ற தலைப்பில் வந்த செய்திகள் அனைத்தும் உண்மைக்குப் புறம்பானவை என்பதனை தெரிவித்துக் கொள்கின்றோம். சுசீந்தினி இறப்புச் சம்பந்தமான அனைத்து தகவல்களும் பொய்யான தகவலே என்று தெரிவித்துக் கொள்கின்றோம். தவறான தகவலை வெளியிட்டமைக்கு மிகவும் மனம் வருந்துகின்றோம்.என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மாசி மாதம் 10 ஆம் திகதி சுவிஸில் வெள்ளைக்காரப் பெண் திருமணத்தால் என்ற தலைப்பில் வந்த செய்திகள் அனைத்தும் உண்மைக்குப் புறம்பானவை என்பதனை தெரிவித்துக் கொள்கின்றோம். சுசீந்தினி இறப்புச் சம்பந்தமான அனைத்து தகவல்களும் பொய்யான தகவலே என்று தெரிவித்துக் கொள்கின்றோம். தவறான தகவலை வெளியிட்டமைக்கு மிகவும் மனம் வருந்துகின்றோம்.என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
06 மார்ச் 2013
யாழில் திருடர் தொல்லை அதிகரிப்பு!
வெனிசுலா அதிபர் ஹுயுகோ சாவேஸ் மரணம்!
கொழும்பில் இடம்பெற இருந்த போராட்டம் இடைநிறுத்தம்!
காணாமல் போனோர் மற்றும் தடுப்பில் உள்ளவர்களின் உறவினர்கள் பங்கேற்பில் கொழும்பில் இன்று (06) இடம்பெறவிருந்த ஆர்ப்பாட்ட பேரணி கைவிடப்பட்டுள்ளது.
வட கிழக்கில் இருந்தும், நாட்டின் ஏனைய பகுதிகளிலிருந்தும் கடத்தப்பட்டு காணாமல் போனவர்களது மற்றும் விசாரணையின்றி தடுத்து வைக்கப்பட்டிருப்போர்களது குடும்ப உறுப்பினர்கள் இந்த பேரணி ஒன்றுகூடலில் கலந்துகொள்ளவிருந்தனர்.
இவர்கள் யாழ்பபாணம், கிளிநொச்சி, முல்லைத்தீவு மன்னார், வவுனியா ஆகிய மாவட்டங்களில் இருந்து கொழும்பிற்கு வருவதற்கு நேற்று மாலை வவுனியாவில் கூடியவேளை பொலிஸாரும் இராணுவத்தினரும் இவர்களை தடுத்து நிறுத்தி வவுனியா நகரசபை மைதானத்தில் தடுத்து வைத்துள்ளனர்.
இதில் முதியவர்கள், பெண்கள் மற்றும் சிறுவர்கள் அடங்குவதாக ஜனநாயக மக்கள் முன்னணியின் தலைவரும் மக்கள் கண்காணிப்பு குழு ஏற்பாட்டாளருமாகிய மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.
தடுத்து வைக்கப்பட்டுள்ள மக்கள் வவுனியா அரச அதிகாரி அலுவலகத்தில் மகஜர் ஒன்றை கையளிக்க தயாராகி வரும் நிலையில் வவுனியா நகரத்தில் ஆயுதம் ஏந்திய படையினர் மற்றும் நீர்த்தாரை வாகனங்களுடன் பொலிஸார் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.
05 மார்ச் 2013
நவிபிள்ளையுடனான சந்திப்பை மகிந்த சமரசிங்க தவிர்த்தது ஏன்?
ஜெனிவாவுக்கு சென்றிருந்த சிறிலங்கா அதிபரின் மனிதஉரிமைகள் விவகாரங்களுக்கான சிறப்புத் தூதுவரான மகிந்த சமரசிங்க, ஐ.நா மனிதஉரிமைகள் ஆணையாளர் நவநீதம்பிள்ளையின் அழைப்பை புறக்கணித்து அவரைச் சந்திக்காமலேயே கொழும்பு திரும்பியுள்ளார்.
இது ஜெனிவாவில் இராஜதந்திர வட்டாரங்களில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளதாக கொழும்பு ஆங்கில நாளேடு ஒன்று தெரிவித்துள்ளது.
கடந்தவாரம், ஐ.நா மனிதஉரிமைகள் பேரவைக் கூட்டத்தில் உரையாற்றிய போது, சிறிலங்கா அமைச்சர் மகிந்த சமரசிங்க, பக்கச்சார்புடன் செயற்படுவதாகவும், ஐ.நாவின் கடப்பாடுகளை மீறுவதாகவும், ஐ.நா மனிதஉரிமைகள் ஆணையாளர் நவநீதம்பிள்ளையை கடுமையாகத் தாக்கியிருந்தார்.
இதையடுத்தே, அவர் நவநீதம்பிள்ளையை சந்திக்காமல் கொழும்பு திரும்பியுள்ளார்.
நவநீதம்பிள்ளையுடனான சந்திப்பை, மகிநத சமரசிங்க தவிர்த்துக் கொண்டதற்கான காரணம் உடனடியாகத் தெரியவரவில்லை.
நவநீதம்பிள்ளையை தாக்கும் வகையில், மகிந்த சமரசிங்க நிகழ்த்திய உரை பல்வேறு நாடுகளுக்கும் கடும் கோபத்தை ஏற்படுத்தியுள்ளது.
ஜேர்மனி தூதுவர் ஹான்ஸ் சூமேக்கர், அநீதியான விமர்சனங்கள் நவநீதம்பிள்ளை மீது முன்வைக்கப்பட்டதாக குறை கூறியிருந்தார் என்றும் கொழும்பு ஆங்கில நாளேடு சுட்டிக்காட்டியுள்ளது.
கிளிநொச்சியில் வெவ்வேறு விபத்துக்களில் 24பேர் காயம்
கிளிநொச்சியில் இன்று அதிகாலை தொடக்கம் காலை வரையான நேரத்துக்குள் நான்கு வெவ்வேறு விபத்துச் சம்பவங்கள் இடம்பெற்றுள்ளன.இதில் 24 பேர் காயமடைந்து கிளிநொச்சி பொது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இன்று காலை முட்கொம்பன் பகுதியிலிருந்து கிளிநொச்சி நோக்கி வந்த பஸ் புதுமுறிப்பு பகுதியில் தடம்புரண்டது. இதில் 15 பேர் காயமடைந்துள்ளனர்.
இதேவேளை, கிளிநொச்சி மாவட்ட வைத்தியசாலைக்கு அருகில் ஏ – 9 வீதியில் இன்று செவ்வாய்க்கிழமை காலை வான் ஒன்று வீதியை விட்டு விலகிச்சென்று தடம்புரண்டுள்ளது. இதில் சிவில் பாதுகாப்பு படையைச் சேர்ந்த 06 பேர் காயமடைந்துள்ளனர்.
கிளிநொச்சி நகர் பகுதியில் அதிகாலை இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் விபத்தில் இருவர் காயமடைந்தனர்.
உருத்திரபுரம் பகுதியில் இடம்பெற்ற மற்றுமொரு விபத்தில் பாடசாலை அதிபர் ஒருவர் காயமடைந்துள்ளார்.
காயமடைந்தவர்கள் கிளிநொச்சி மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
04 மார்ச் 2013
தீக்குளித்த நாம் தமிழர் கட்சி உறுப்பினர் மரணம்!
கடலூரில் ஒருவர் தீக்குளிப்பு!
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)