நான் என்ற ஆணவம் அதர்மமாக விஸ்வரூபமெடுத்தாலும்-ஒருநாள் தர்மத்தின் காலடியில் விழும்.
பக்கங்கள்
▼
28 ஜூன் 2018
சுழிபுரம் சிறுமி படுகொலை!நீதி கோரி மக்கள் போராட்டம்!
24 ஜூன் 2018
கனடாவில் அபிசா யோகரெத்தினம் பெற்றுள்ள கெளரவம்!
14 ஜூன் 2018
புலிகள் குற்றவியல் அமைப்பு இல்லை என சுவிஸ் நீதிமன்று தீர்ப்பு!
தமிழீழ விடுதலைப்புலிகள் குற்றவியல் அமைப்பில்லை என சுசிற்சர்லாந்து நடுவண் அரசின் குற்றவியல் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
இன்று வியாழக்கிழமை முற்பகல் 11.00 மணியளவில் பெலின்சோனாவில் அமைந்துள்ள சுவிற்சர்லாந்து நடுவன் அரசின் குற்றவியல் நீதிமன்றமே தமிழீழ விடுதலைப் புலிகள் ஒரு குற்றவியல் அமைப்பு இல்லை எனத் தீர்பளித்தது.
குற்றம் சுமத்தப்பட்டோர்கள் அனைவரும் குற்றவியல் அமைப்பு, கட்டாய நிதி சேகரிப்பு, மிரட்டிப் பணம் பறிப்பு எனும் குற்றங்களில் இருந்து விடுவிக்கப்பட்டனர்.
சுவிஸ் உலகத் தமிழர் ஒருங்கிணைப்புக் குழுவைச் சேர்ந்த திரு.யோகேஸ், திரு.கவிதாஸ், திரு.சிவலோகநாதன், திரு.குமார் ஆகியோர் மீது சுமத்தப்பட்ட அனைத்துக் குற்றங்களும் தள்ளுபடி செய்யப்பட்டு, வழக்கிலிருந்து விடுவிக்கபட்டதுடன் அர்களுக்கு இழப்பீடு வழங்கவும் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
அத்துடன் சுவிஸ் உலகத் தமிழர் ஒருங்கிணைப்புக் குழுவின் முக்கிய பொறுப்புகளில் இருந்த மூவரான திரு.குலம், திரு.அப்துல்லா, திரு.மாம்பழம் ஆகியோர் மீது வங்கி மோசடி தொடர்பில் அறிந்திருந்து உதவியதற்காகத் தண்டனைப் பணம் செலுத்தவும், இரண்டு ஆண்டுகளுக்கு ஒத்தி வைக்கப்படும் தடுப்பும் வழங்கப்பட்டது.
அரச தரப்பு வழக்கறிஞர் திருமதி நோத்தோ இலங்கையிலும், சுவிசிலும் விடுதலைப்புலிகள் ஒரு குற்றவியல் அமைப்பு என்பதற்கு தேடி அளித்த சான்றுகள் அனைத்தையும் சுசிற்சர்லாந்து நடுவண் அரசின் குற்றவியல் நீதிமன்றம் நிராகரித்தது.
சுவிஸ் நடுவன் அரசின் குற்றவியல் நீதிமன்றம் இலங்கையிலும் அதற்கு அப்பால் எந்த நாட்டிலும் விடுதலைப் புலிகள் அமைப்பு எவ்வேளையிலும் குற்றவியல் அமைப்பாக செயற்பட்டதற்கோ அல்லது குற்றவியல் செயலை ஊக்குவித்ததற்கோ எவ்வித சான்றுகளும் இல்லை எனத் தெளிவாக விளக்கத்தையும் அளித்துள்ளது.ஞானசார தேரருக்கு ஆறு மாதச் சிறை!
பொதுபல சேனா என்ற அமைப்பின் பொதுச் செயலாளர், கலகொடஅத்தே ஞானசார தேரருக்கு, ஆறு மாத கால கடூழிய சிறைத் தண்டனை விதித்து ஹோமாகம நீதவான் நீதிமன்றம் இன்று, வியாழக்கிழமை, தீர்ப்பளித்தது.இரண்டு குற்றச்சாட்டுக்களுக்கு தலா ஆறு மாதம் வீதம் ஒரே நேரத்தில், இந்தத் தண்டனையை கழிக்க வேண்டும் என நீதவான் உத்தரவிட்டுள்ளார்.
காணாமல் போன ஊடகவியலாளர் பிரகீத் எக்நெலியகொடவின் மனைவி சந்தியா எக்நெலியகொடவிற்கு அவதூறாக பேசி, அச்சுறுத்தல் விடுத்ததாக இந்த பௌத்த பிக்கு மீது குற்றஞ்சாட்டப்பட்டிருந்தது.
2016ஆம் ஆண்டு ஜனவரி 25ஆம் திகதி, ஹோமாகம நீதிமன்ற வளாகத்தில் வைத்தே இந்த அச்சுறுத்தல் விடுக்கப்பட்டதாக தேரருக்கு எதிராக வழக்குத் தொடரப்பட்டிருந்தது. இந்த வழக்கை விசாரித்த நீதவான், வழக்கின் தீர்ப்பை இன்று அறிவித்தார்.குற்றவியல் சட்டம் 386 மற்றும் 486 என்ற பிரிவுகளின் கீழ் துன்புறுத்தியமை, அச்சுறுத்தியமை ஆகிய குற்றச்சாட்டுக்களுக்கு இந்தத் தண்டனையை விதிப்பதாக நீதவான் அறிவித்தார். ஒரு குற்றத்திற்கு ரூபாய் 1,500 வீதம் இரண்டு குற்றச்சாட்டுக்களுக்கு ரூபாய் 3,000 அபராதம் விதிக்கப்பட்டது.
சந்தியா எக்நெலியகொடவிற்கு 50,000 ரூபாய் இழப்பீடு வழங்குமாறும் நீதவான் இதன்போது உத்தரவிட்டார். இந்த நட்ட ஈட்டை வழங்காவிடின், அதனை அபராதமாக செலுத்த வேண்டும் என நீதவான் தனது தீர்ப்பில் குறிப்பிட்டார். இந்த அபராதத்தை செலுத்த தவறும் பட்சத்தில் 3 மாத கால சிறைத்தண்டனையை அனுபவிக்க நேரிடும் எனவும் நீதவான் குறிப்பிட்டார்.
நீதவான் தீர்ப்பை வாசித்த பின்னர், குற்றவாளிக்கூண்டில் நின்ற ஞானசார தேரர், தனது கருத்தைத் தெரிவிக்க சந்தர்ப்பமளிக்குமாறு கூறியதுடன் ''நீதித்துறை மட்டுமே இருக்க வேண்டும்'' என்று கேட்டுக்கொண்டார்.இதற்கு வாய்ப்பளிக்க முடியாது எனக் கூறிய நீதவான், தேவையெனில், தீர்ப்புக்கு எதிராக மேன்முறையீட்டு மனுவொன்றைத் தாக்கல் செய்யுமாறு கூறினார்.
இதன்பின்னர், ஞானசார தேரரை சிறைச்சாலை பேருந்தில் ஏற்ற அழைத்துவந்தபோது அங்கு பொதுபல சேனா அமைப்பின் உறுப்பினர்கள் உள்ளிட்ட தேரர் பலர் கூடியிருந்ததுடன், அங்கு சற்று பதற்றமும் ஏற்பட்டது.
பொது பலசேனா என்ற அமைப்பும், அதன் பொதுச் செயலாளர் ஞானசார தேரரும் இலங்கையில் சர்ச்சைக்குரிய தரப்பாகவே கடந்த காலம் முதல் பார்க்கப்பட்டு வருகின்றனமை குறிப்பிடத்தக்கது.நன்றி!பிபிசி தமிழ்
12 ஜூன் 2018
பாவப்பட்ட பணத்தை தவராசாவின் வீட்டின் முன் எறிந்த மாணவர்கள்!
இராணுவ அதிகாரியை தோளில் சுமந்தது தமிழரின் அடிமைப்புத்தி!
விஸ்வமடு பகுதியில் இராணுவ அதிகாரி கேணல் பந்து இரத்னபிரியவிற்கு கண்ணீர் மல்க முன்னாள் போராளிகள் உள்ளிட்ட பொது மக்கள் பிரியாவிடை கொடுத்திருப்பது எமது மக்களின் சபலபுத்தியைத் தான் காட்டுகின்றது என வடக்கு மாகாணசபை உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் தெரிவித்துள்ளார்.
யாழ். ஊடக அமையத்தில் இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்து கொண்டு, ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும்போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
' நூற்றுக்கணக்கில் மக்கள் திரண்டு இராணுவ அதிகாரியை தோளில் சுமந்து கொண்டு செல்வது தமிழ் மக்களின் அடிமைப்புத்தியைத்தான் மீண்டும் மீண்டும் நினைவுபடுத்துகின்றது. இவர் நல்லவர், அவர் நல்லவர் என சாதாரண கிராம மக்கள் இதை செய்திருந்தால் ஏற்றுக்கொள்ளலாம், ஆனால் முன்னாள் போராளிகள் இதனை செய்திருப்பதை ஏற்றுக்கொள்ள முடியவில்லை.
அதுவும் புலிகளின் தாகம் தமிழீழ தாயகம் என வெடித்துச் சிதறி வீரச்சாவை தழுவிக்கொண்ட ஐம்பதாயிரம் மாவீரர்களுக்கு செய்கின்ற துரோகமாகத்தான் நான் இதை கருதுகின்றேன்.
அவர் ஒரு அதிகாரி, நல்லவராக அல்லது நேர்மையாக நடந்து கொள்ளலாம், ஆனால் நீங்கள் இவ்வாறு செய்வதென்பது ஒட்டுமொத்த இராணுவ பிரசன்னத்தை நியாயப்படுத்துகின்ற பாரிய பிரச்சினைக்கு இட்டுச்செல்லும். ஒரு தனி மனிதன் நல்லவராக இருக்கலாம், தளபதியாக இருக்கலாம், பிராந்திய தளபதியாக இருக்கலாம் அது வேறு விடயம். ஆனால் அதற்காக தமிழ் மக்கள் நூற்றுக்கணக்கில் திரண்டு, விழா எடுத்து, தோளில் சுமந்துகொண்டு செல்வது என்பது எங்களுடைய அடிமை புத்தியைத்தான் காட்டுகின்றது என குறிப்பிட்டுள்ளார்.10 ஜூன் 2018
திருமலை அரசியற்றுறை பொறுப்பாளர் ஐங்கரன் மாரடைப்பால் சாவடைந்துள்ளார்!
தமிழீழ விடுதலைப் புலிகளின் முன்னாள் திருகோணமலை அரசியல் துறை பொறுப்பாளர் திரு ஐங்கரன் அவர்கள் இன்று அதிகாலை மாரடைப்பால் சாவடைந்தார்.
மூதூர் கிழக்கில் பலநூற்றுக்கணக்கானவர்கள் அரச உத்தியோகத்தில் இருப்பதற்கு காரணமானவராகவும் மாவீரர் குடும்பங்களுக்கான வீடமைப்புத் திட்டத்தை நடைமுறைப்படுத்திய முக்கிய கர்த்தாவாகவும் விளங்கிய ஐங்கரன் , தான் நேசித்த மக்களுக்காக சேவை ஆற்றிய ஒருவராவார் .நன்றி:பதிவு
08 ஜூன் 2018
ஒன்ராறியோ சட்டமன்ற தேர்தலில் தமிழர் வெற்றி!
01 ஜூன் 2018
புளியங்கூடல் மகாமாரி அம்பாள் வருடாந்த மகோற்சவம்!
புளியங்கூடல் செருத்தனைப்பதியில் எழுந்தருளி அடியார்களுக்கு அருள் பாலித்துக் கொண்டிருக்கும் ஸ்ரீ இராஜமகாமாரி அம்பாள் ஆலய வருடாந்த மகோற்சவம் எதிர்வரும் வெள்ளிக்கிழமை 08.06.2018 காலை 10:00 மணிக்கு கொடியேற்றத்துடன் ஆரம்பமாகி இனிதே நடைபெறவுள்ளது.21.06.2018 வியாழக்கிழமை 14ம் நாள் வேட்டைத் திருவிழாவும் 23.06.2018 சனிக்கிழமை 16ம் நாள் தேர்த் திருவிழாவும் 24.06.2018 ஞாயிற்றுக்கிழமை 17ம் நாள் தீர்த்தோற்சவமும் இடம்பெற்று 25.06.2018 திங்கட்கிழமை 18ம் நாள் பூங்காவனத் திருவிழாவுடன் அம்பாள் ஆலய இவ்வாண்டின் வருடாந்த திருவிழா நிறைவு பெறவுள்ளது.விழா தொடர்பான அறிக்கை ஆலய அறங்காவலர் சிவஞானச்செல்வம் செந்தூரன் அவர்களால் வெளியிடப்பட்டுள்ளது.
