நான் என்ற ஆணவம் அதர்மமாக விஸ்வரூபமெடுத்தாலும்-ஒருநாள் தர்மத்தின் காலடியில் விழும்.
பக்கங்கள்
▼
28 டிசம்பர் 2016
கனடாவில் இடம்பெற்ற விபத்தில் இரு தமிழர்கள் மரணம்!
26 டிசம்பர் 2016
சுனாமி நினைவுத்தூபி திறந்து வைக்கப்பட்டது!
மூதாளர்களை அவமானப்படுத்திய நத்தார் பரிசு!
25 டிசம்பர் 2016
சர்வதேச விசாரணையின் முக்கியத்துவத்தை உணர்த்தியுள்ள ரவிராஜ் கொலை வழக்கு!
தமிழ் மக்களுக்கு எதிரான இனப்படுகொலை மற்றும் போர் குற்றங்களை விசாரிப்பதற்கு சர்வதேச விசாரணையே தேவை என்பதை ரவிராஜ் படுகொலை வழக்கின் தீர்ப்பு உணர்த்தியுள்ளதாக வட மாகாணசபை உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் தெரிவித்துள்ளார்.
இலங்கையின் நீதித்துறையில் இருந்து தமிழ் மக்களுக்கு எந்தவொரு நீதியும் கிடைக்காது என்ற செய்தி இதன் மூலம் மீண்டும் மீண்டும் அழுத்தம் திருத்தமாக கூறப்பட்டுள்ளது. நல்லாட்சி அரசாங்கம் அமைக்கப்பட்டதன் நிறைவை மிக உற்சமாக கொண்டாடவுள்ள நிலையில் சிங்கள பௌத்த பேரினவாதம் தெளிவான செய்தியை கூறியிருக்கிறது. ரவிராஜின் படுகொலை மூலம் ஈழத் தமிழர்களுக்கும் குடும்பத்தினருக்கும் இழைக்கப்பட்ட அநீதிக்கான தீர்வு வழங்கப்படாத நிலைமை ஏற்பட்டுள்ளது. இந்த கொலை தொடர்பில் எந்தவொரு குற்றவாளிகளையும் கண்டறிய தவறிய அரசாங்கம், அனைத்து சந்தேகநபர்களையும் தற்போது விடுவித்துள்ளதாக சுட்டிக்காட்டியுள்ளார்.24 டிசம்பர் 2016
மனிதம் மரணித்து விட்டதா?தையிட்டியில் மூதாளர்களின் அவல நிலை!
தையிட்டியை பிறப்பிடமாகக் கொண்ட மூதாளர்களான தம்பதியர் இருவர் தனித்து விடப்பட்ட நிலையில் தெல்லிப்பளையில் நோயோடும் பசியோடும் கடந்த சில வருடங்களாக போராடியே வாழ்ந்து வந்த அவலம் கண்களை குளமாக்கியது.இரண்டு வாரங்களாக பக்கவாதத்தினால் பாதிக்கப்பட்ட மூதாளரான பெண்மணி மாற்றுடை இன்றி இயற்கை கடன்கள் அனைத்தையும் கழித்தவாறு தரையில் முடங்கி கிடக்க,காது கேளாத,நடக்கவே தள்ளாடும் கணவன் செய்வதறியாது குப்பி விளக்குடன் காலம் கழித்த அவலம் நெஞ்சத்தை பிழிந்தது.ஆனாலும் இன்னும் மனிதத்தை நேசிக்கும் தெல்லிப்பளை பிரதேச உத்தியோகத்தர்கள் சிலர் மிக கரிசனை கொண்டு எம் சுகாதார துறையை தொடர்பு கொள்ள நாமும் சைவ மகா சபையினரும் இணைந்து அத்தாயாரை தெல்லிப்பளையில் சேர்த்து பின் மேலதிக சிகிச்சைக்கு யாழ்,போதனா வைத்தியசாலையில் அனுமதித்தோம்.அகதி அரசி எனும் படைப்புக்காய் முதலமைச்சர் விருது வென்றவரும்
மனைவியின் துயர் கண்டு இயாலாமையோடு போராடிக் கொண்டிருந்த அந்த பெரியவருமான இராசதுரை ஐயாவை சைவ மகா சபை அலுவலகத்தில் தங்க வைத்தோம்.
இவ்வளவில் எம்மை இயக்கி மன நிறைவைத் தந்த பிட்டுக்கு மண் சுமந்த பெருமானின் கருணையை பணிகின்றோம்
அன்பின் உறவுகளே
உங்கள் வீட்டின் அருகிலும் இவ்வாறான மூத்தோர் அநாதரவற்று இருக்கலாம்.
எம்மால் முடிந்தளவு உதவுங்கள் குறைந்த பட்சம் அவசர அம்புலன்ஸ் இலக்கமான 021 2225555 / 6666 ற்கு அழைத்து வைத்தியசாலையில் சேர்க்கவாவது உதவுங்கள்.நன்றி:நந்தகுமார் பரா(முகநூல்)
23 டிசம்பர் 2016
ஜெர்மன் தாக்குதல்தாரி இத்தாலியில் சுட்டுக்கொலை!
20 டிசம்பர் 2016
ஜெர்மனியில் நடந்த தாக்குதல்!பதிலடி எப்போது?
நன்றி:பிபிசி தமிழ்
19 டிசம்பர் 2016
நாரந்தனை சம்பவத்திற்கும் ஈ.பி.டி.பி.க்கும் தொடர்பில்லையாம்!
நாரந்தனை சம்பவத்திற்கும் ஈ.பி.டி.பிக்கும் சம்மந்தம் இல்லை என அந்தக் கட்சியின் செயலாளர் நாயகம், டக்ளஸ் தேவானந்தா கூறியுள்ளார். ஈ.பி.டி.பி அலுவலகத்தில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கருத்து தெரிவிக்கையிலேயே மேற்கண்டவாறு கூறியுள்ளார்.
இந்த வழக்கு தொடர்பாக பல கருத்துக்கள் இருக்கின்றன. ஆனால் வழக்கு தொடர்பாக மேன்முறையீடு செய்யப்பட்டுள்ளதால், அந்த விடயம் தொடர்பில் நான் அதிகம் பேச நினைக்கவில்லை. இருந்தும் இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட இருவர் வெளிநாட்டில் வாழ்கின்றனர். அவர்கள் கட்சியின் ஆதரவாக செயற்படுகின்றனர். இதே போல் ஒருவர் விடுவிக்கப்பட்டுள்ளார். மேலும், சிறையில் உள்ளவர் கட்சியின் ஆதரவாளரே தவிர அவர் கட்சி உறுப்பினர் அல்ல. அவர் வேறு கட்சி சார்ந்தவர். இந்த வழக்கில் குற்றஞ்சாட்டபட்டவர்கள் மக்கள் மத்தியில் செல்வாக்குள்ளவர்களாவர். ஒட்டுமொத்தமாக இந்த வழக்கில் ஈ.பி.டி.பிக்கு தொடர்பு இல்லை எனவும் நாடாளுமன்ற உறுப்பினர் டக்ளஸ் தேவானந்தா குறிப்பிட்டுள்ளார்.
2001ஆம் ஆண்டு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பிரசார அணியினரை வழிமறித்து தாக்கியதில் கூட்டமைப்பு ஆதரவாளர்கள் இருவர் படுகொலை செய்யப்பட்டு, 18 பேர் காயமடைந்தனர். இந்த வழக்கில் ஈபிடிபி உறுப்பினர்கள் மூவருக்கு இரட்டை மரணதண்டனை விதிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.14 டிசம்பர் 2016
ஹேக்கர்களிடம் அப்பல்லோ கம்ப்யூட்டர்கள்!
07 டிசம்பர் 2016
ஜெயலலிதாவின் ஆலோசகர் துக்ளக் ஆசிரியர் சோ காலமானார்!
05 டிசம்பர் 2016
முதல்வர் ஜெயலலிதா காலமானதாக அறிவிப்பு!
தமிழக முதல்வர் ஜெயலலிதாவுக்கு (வயது 68) மாரடைப்பு ஏற்பட்ட நிலையில் அளிக்கப்பட்ட தீவிர சிகிச்சை பலனின்றி சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் காலமானார். முதல்வர் ஜெயலலிதா காலமானார் என்ற செய்தியை அப்பல்லோ மருத்துவமனை அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளது. முதல்வர் ஜெயலலிதா மறைவு செய்தியைக் கேட்டு தமிழகமே பெரும் அதிர்ச்சியிலும் துயரத்திலும் உறைந்துபோயுள்ளது. முதல்வர் ஜெயலலிதா செப்டம்பர் 22-ந் தேதியன்று உடல்நலக் குறைவால் சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். கடந்த 2 மாதங்களாக அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.நீர்ச் சத்து குறைபாடு உள்ளிட்ட காரணங்களால் ஜெயலலிதா அனுமதிக்கப்பட்டதாக முதலில் கூறப்பட்டது. பின்னர் நுரையீரல் தொற்று பாதிப்பு உள்ளது என அப்பல்லோ மருத்துவமனை கூறியது. இதனால் லண்டன் மற்றும் சிங்கப்பூர் மருத்துவர்கள் வரவழைக்கப்பட்டு ஜெயலலிதாவுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. இதனிடையே முதல்வர் ஜெயலலிதாவின் உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டுவிட்டதாக அப்பல்லோ மருத்துவமனை தலைவர் பிரதாப் ரெட்டி தொடர்ந்து கூறிவந்தார்.அத்துடன அப்பல்லோ போய்விட்டு வந்த அதிமுக தலைவர்களும், ஜெயலலிதா நன்றாக குணமடைந்துவிட்டார்; வீடு திரும்புகிறார் என கூறி வந்தனர். இந்த நிலையில் ஞாயிற்றுக்கிழமை மாலை திடீரென ஜெயலலிதாவுக்கு மாரடைப்பு ஏற்பட்டது. இதனால் ஒட்டுமொத்த தமிழகமே அதிர்ந்தது. இதன் பின்னர் ஜெயலலிதாவுக்கு ரத்தநாள அடைப்பைப் போக்கும் ஆஞ்ஜியோ சிகிச்சை அளிக்கப்பட்டு மருத்துவர்கள் தொடர் கண்காணிப்பில் இருந்து வந்தார். ஆனால் திங்கள்கிழமை பிற்பகல் முதல் ஜெயலலிதாவின் உடல்நிலை கவலைக்கிடமாக இருப்பதாக அப்பல்லோ மருத்துவமனை அதிகாரப்பூர்வமாக தெரிவித்தது. ஜெயலலிதாவுக்கு சிகிச்சை அளித்த லண்டன் மருத்துவரும் ஜெயலலிதாவின் உடல்நிலை மிக மிக மோசமாகிவிட்டது எனவும் கூறியிருந்தார். பின்னர் மாலை 5.30 மணியளவில் ஜெயலலிதா காலமாகிவிட்டார் என்ற செய்தி காட்டுத்தீயாக பரவியது. அதிமுக தலைமை அலுவலகத்திலேயே கூட அக்கட்சியின் கொடி அரைக்கம்பத்தில் பறக்கவிடப்பட்டது.பின்னர் மாலை 5.45 மணியளவில் ஜெயலலிதாவுக்கு சிகிச்சை தொடருவதாக அப்பல்லோ மருத்துவமனை அதிகாரப்பூர்வமாக அறிவித்தது. தொடர்ந்து ஜெயலலிதாவின் உயிரைக் காப்பாற்ற மருத்துவர்கள் கடுமையாக போராடினர். ஆனால் சிகிச்சை பலனளிக்காமல் முதல்வர் ஜெயலலிதாவின் உயிர் இன்று நள்ளிரவு 11.30 மணிக்கு பிரிந்தது. அப்பல்லோ மருத்துவமனை இதை உறுதி செய்து அறிக்கையும் வெளியிட்டுள்ளது. முதல்வர் ஜெயலலிதா நம்மைவிட்டு பிரிந்துவிட்டாரே என்ற சோகம் ஒட்டுமொத்த தமிழகத்தையே பெரும் அதிர்ச்சிக்கும் சோகத்துக்கும் உள்ளாக்கியுள்ளது. ஏழைகளின் காவலராக விளங்கிய எங்கள் தலைவியை நாங்கள் இழந்துவிட்டோமே என கண்ணீரும் கம்பலையுமாக அதிமுகவின் அப்பல்லோ மருத்துவமனைகளில் கட்டுக்கடங்காத வகையில் கூடியுள்ளனர். தமிழகம் முழுவதும் அசம்பாவிதங்கள் எதுவும் நடைபெறாமல் இருக்க பாதுகாப்புகள் பலப்படுத்தப்பட்டுள்ளன.