நான் என்ற ஆணவம் அதர்மமாக விஸ்வரூபமெடுத்தாலும்-ஒருநாள் தர்மத்தின் காலடியில் விழும்.
பக்கங்கள்
▼
30 அக்டோபர் 2016
பிரபாகரன் படை என்ற பெயரில் எச்சரிக்கை!
25 அக்டோபர் 2016
கர்த்தாலால் வெறிச்சோடியது வடபகுதி!
நன்றி:பிபிசி தமிழோசை
22 அக்டோபர் 2016
செலவுகளை ஏற்கிறோம் மன்னியுங்கள் என்றனராம் பொலிஸார்!
19 அக்டோபர் 2016
கருணாவின் உத்தரவில் பாலச்சந்திரன் கொல்லப்பட்டாராம்!
இலங்கையின் இறுதி யுத்தம் கொடூரமாக நடந்து ஒரு முடிவை நோக்கிப் போன நேரம். அதாவது மே 16,17,18 இந்த மூன்று நாட்கள் தான் உக்கிரமாக நடந்தது. பல ஆயிரம் அப்பாவி தமிழர்கள் கொடூரமாகக் கொல்லப்பட்டனர். சரண் அடைய இருந்த போராளித் தலைவர்கள் நயவஞ்சகமாக படுகொலை செய்யப்பட்டனர். அப்போது தேசியத்தலைவர் பிரபாகரனின் மூத்த புதல்வர் சார்லஸ் பயங்கர சித்திரவதை அனுபவித்து சுட்டுக் கொல்லப்பட்டார். அதே நாளில் தான் பாலகன் பாலச்சந்திரனும் பிடி பட்டுள்ளார். அவரை தங்கள் ராணுவ முகாமில் உட்காரவைத்து பிஸ்கட் கொடுத்து தண்ணீரும் கொடுத்தவர் கலிங்கே ரத்னே என்கிற 57வது பட்டாலியன் அதிகாரி.
இரக்க சுபாவம் உள்ளவர். குறிப்பாக தலைவர் பிரபாகரன் மீது நல்ல மதிப்பை வைத்திருப்பவர். அவருக்கு பாலச்சந்திறனைப் பார்த்ததும் வியப்பு. மாபெரும் இயக்கத்தின் தலைவரின் மகனா இவர் என்று. உடனடியாக பிஸ்கட், தண்ணீர் கொடுத்து உபசரித்துள்ளார். அந்த பாலகனை கொலை செய்யப்போகிறோம் என்று அவர் நினைத்துக் கூட பார்க்கவில்லை..! ராணுவத்தலைமைக்கு செய்தி போய்ச்சேர, முக்கிய அதிகாரிகளும் அவர்களுடன் துரோகி கருணாவும் உடன் வந்திருக்கிறார்..! அந்த பாலகனை என்ன செய்வது என்று ஆலோசனைகள் நடந்திருக்கிறது.
அப்போது கருணா இவனை விட்டு வைத்தால், நாளை இவனே புலிகளின் தலைவன்…!!அப்பாவை விட அதிக தீரத்துடன் உங்களை எதிர்ப்பான்..உங்களால் தாக்கு பிடிக்க முடியாது ..உடனடியாக சுட்டுக் கொல்லுங்கள் என்று கூறிஇருக்கிறார். கலிங்கேரத்னே கலங்கிப் போயுள்ளார். அதன் பின் மூன்று வீரர்கள், சுற்றி நின்று அந்த இளம் பாலகனை சுட்டு வீழ்த்தியுள்ளார்கள்.! இவ்வாறு தனது வலைத்தளத்தில் கூறி கலங்யுள்ளார் அந்த மனிதம் நிறைந்த அதிகாரி..!இவ்வாறு செய்தியொன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
16 அக்டோபர் 2016
புளியங்கூடலில் மதில் ஏறிப்பாய்ந்த காளை மாடு!
இன்று16.10.2016 ஞாயிற்று கிழமை மாலை புளியங்கூடல் பகுதியில் காளை மாடு ஒன்று மதில் ஏறி குதித்துள்ளது. அப்பகுதி கிராம அலுவலரும், கிராமத்தின் இளைஞர்களும் குறித்த காளை மாட்டை மடக்கி பிடிப்பதற்கு பெரும் பாடுபட்டுள்ளனர்.பாய்ச்சல் என்றால் அப்பிடி ஒரு பாய்ச்சல். வேலி என்ன மதிலை கூட விட்டு வைக்காமல் குறித்த காளை மாடு எகிறி குதித்து ஓடியுள்ளது.
அப்போது ஒரு பெரியவர்'இந்த மாட்டை யாழ்ப்பாணத்திலிருந்து தேசிய மட்ட உயரம் பாய்தல் போட்டிக்கு தப்பாமல் அனுப்பி வைக்கலாம். நிச்சயம் தங்கப் பதக்கத்தோடு திரும்பி வரும்' என்று ஆருடம் சொன்னார்.எனவும் ஊடகங்கள் கருத்து வெளியிட்டுள்ளன.இந்த வீரமிகு மாடடைப் பற்றி மக்கள் வியப்போடு பேசி வருவதுடன் அதன் சாகசக் காட்சியை முகநூல்களிலும் பதிவிட்டு வருகின்றனர்.
12 அக்டோபர் 2016
தேசியத் தலைவரது புகைப்பட சுவரொட்டி தொடர்பில் பெண் கைது!
02 அக்டோபர் 2016
சிங்களவர்களை வெளியேறுமாறு அச்சுறுத்தியதாக போராளி கைது!
வவுனியா- கொக்குவெளி படைவீரர் குடியிருப்புத் திட்டத்தில் குடியேற்றப்பட்டுள்ள சிங்கள குடும்பங்களை அச்சுறுத்தினார் என்ற குற்றச்சாட்டில் சின்னவன் என அழைக்கப்படும் முன்னாள் போராளி கைது செய்யப்பட்டுள்ளார். கடந்த வியாழக்கிழமை இரவு வவுனியா கொக்குவெளி படைவீரர் குடியிருப்புத் திட்டத்திற்குள் புகுந்த சின்னவன் என அழைக்கப்படும் முன்னாள் விடுதலைப் புலிகள் இயக்க உறுப்பினரும், அவரது சகாக்களும் ஆயுதங்களைக் காட்டி தம்மை உடனடியாக வெளியேறுமாறு அச்சுறுத்தியதாகத் தெரிவித்து 30 சிங்கள குடும்பங்கள் ஏ 9 வீதியை வழிமறித்து போராட்டத்தில் ஈடுபட்டிருந்தனர்.இதனையடுத்து அங்கு சென்ற வவுனியா பொலிசார் கொக்குவெளி படைவீரர் குடியிருப்புத் திட்ட சிங்கள குடும்பங்களுக்கு பாதுகாப்பு உத்தரவாதத்தை வழங்கியிருந்ததுடன், குற்றம்சாட்டப்பட்டவர்களை கைதுசெய்வதாகவும் உறுதியளித்திருந்தனர். இதற்கமையவே இன்று இன்று சின்னவன் என்ற முன்னாள் போராளியும், அவரது நண்பர் ஒருவரும் வவுனியா பொலிசாரால் கைதுசெய்யப்பட்டு வவுனியா நீதவான் முன்னிலையில் நிறுத்தப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.