வட மாகாண முதலமைச்சர் விக்னேஸ்வரன் எழுக தமிழ் பேரெழுச்சியில் தெரிவித்திருக்கும் கருத்து நல்லிணக்கத்திற்கு எதிரானது என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினரும் அக்கட்சியின் ஊடகப் பேச்சாளருமான எம். ஏ சுமந்திரன் தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணத்தில் நேற்று வட மாகாண முதலமைச்சர் விக்னேஸ்வரன் தலைமையில் “எழுக தமிழ்” எழுச்சிப் பேரணி நடைபெற்றிருந்தது.
பேரணியின் இறுதியில் முதலமைச்சர் விக்னேஸ்வரன் உரையாற்றியிருந்தார். இது குறித்து கருத்து வெளியிட்டிருக்கும் சுமந்திரன், யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற எதிர்ப்பு ஊர்வலத்துக்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கும் எந்தவித தொடர்பும் இல்லை, நாம் அதில் கலந்துகொள்ளவில்லை. இங்கு வட மாகாண முதலமைச்சர் தெரிவித்துள்ள கருத்து நாட்டின் நல்லிணக்க நடவடிக்கைகளுக்கு எதிரானது. நாட்டில் புதிய அரசியல் யாப்பு உருவாக்க நடவடிக்கைகள் இடம்பெற்று வரும் நிலையில், இது போன்ற நடவடிக்கைகள் தெற்கு மக்களுக்கு தவறான ஒரு கருத்தை கொடுப்பதாகவே அமையும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.நான் என்ற ஆணவம் அதர்மமாக விஸ்வரூபமெடுத்தாலும்-ஒருநாள் தர்மத்தின் காலடியில் விழும்.
பக்கங்கள்
▼
25 செப்டம்பர் 2016
வடக்கு முதல்வரின் உரை நல்லிணக்கத்திற்கு பாதகம் என்கிறார் சுமந்திரன்!
வட மாகாண முதலமைச்சர் விக்னேஸ்வரன் எழுக தமிழ் பேரெழுச்சியில் தெரிவித்திருக்கும் கருத்து நல்லிணக்கத்திற்கு எதிரானது என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினரும் அக்கட்சியின் ஊடகப் பேச்சாளருமான எம். ஏ சுமந்திரன் தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணத்தில் நேற்று வட மாகாண முதலமைச்சர் விக்னேஸ்வரன் தலைமையில் “எழுக தமிழ்” எழுச்சிப் பேரணி நடைபெற்றிருந்தது.
பேரணியின் இறுதியில் முதலமைச்சர் விக்னேஸ்வரன் உரையாற்றியிருந்தார். இது குறித்து கருத்து வெளியிட்டிருக்கும் சுமந்திரன், யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற எதிர்ப்பு ஊர்வலத்துக்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கும் எந்தவித தொடர்பும் இல்லை, நாம் அதில் கலந்துகொள்ளவில்லை. இங்கு வட மாகாண முதலமைச்சர் தெரிவித்துள்ள கருத்து நாட்டின் நல்லிணக்க நடவடிக்கைகளுக்கு எதிரானது. நாட்டில் புதிய அரசியல் யாப்பு உருவாக்க நடவடிக்கைகள் இடம்பெற்று வரும் நிலையில், இது போன்ற நடவடிக்கைகள் தெற்கு மக்களுக்கு தவறான ஒரு கருத்தை கொடுப்பதாகவே அமையும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.24 செப்டம்பர் 2016
யாழில் மிக எழுச்சியுடன் எழுக தமிழ் பேரணி!
20 செப்டம்பர் 2016
நல்லாட்சி அரசின் மூன்று முகத்தை வெளிக்காட்டவே எழுக தமிழ் பேரணி!
17 செப்டம்பர் 2016
அரசியலுக்காகவே முஸ்லீம்கள் மதம் சார்ந்தவர்களாக காட்டிக்கொள்கிறார்கள்!
16 செப்டம்பர் 2016
11 செப்டம்பர் 2016
எமக்கும் கோபம் வரலாம்..நாமும் போட்டுத் தாக்கலாம்..!சீமான் ஆவேசம்
உச்சநீதிமன்ற தீர்ப்பின்படி காவிரி நீர் திறந்துவிடுவதற்கு கர்நாடகத்தினர் எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்தி வருகின்றனர். சில கன்னட வெறியர்கள் அங்குள்ள தமிழரை அடித்து, உதைத்து, மண்டிய வைத்து, கன்னடம் வாழ்க என்று சொல்ல வைத்துள்ளார். இது தமிழர்களிடையே பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில், நாம் தமிழர் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் சென்னை வளசரவாக்கத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர், ‘’நாங்கள் எதைச்செய்தாலும் தமிழக இனவெறியர்கள். தீவிரவாதிகள் என்றெல்லாம் பேசி பழி சுமத்தினீர்கள். காவிரியில் தண்ணீர் கேட்கும்போது எங்கள் பேருந்துகளை பிடித்து வைத்துக்கொள்வது, எங்கள் படங்கள் ஓடின திரையரங்குகளை அடித்து நொறுக்குவது, எங்கள் மக்களுக்கு உயிர் பயத்தைக்காட்சி அச்சுறுத்தலை கொடுப்பது, அடிப்பது, தண்ணீர் எதுக்கு சிறுநீர் தருகிறோம் என்று எழுதி அனுப்புவது என்று கொடுமைகள் நடக்கின்றன. எல்லா பக்கமும் எங்களை அடிக்கிறார்கள்; ஆனால் இந்த நிலத்தில் அது நடக்குதா பாருங்க. எவ்வளவு மாண்புக்க ஜனநாயகவாதிகள் தமிழர்கள் என்பதை புரிந்துகொள்ள வேண்டும்.
ஈழத்தில் லட்சக்கணக்கில் எம் மக்கள் செத்து விழுந்தபோது கூட என் தம்பி முத்துக்குமார், தன் ஆழ் மனதில் எழுந்த ஆத்திரத்தை வெளிக்காட்ட முடியாமல் தன் உடலில் நெருப்பை வைத்துக்கொண்டு செத்தான். ஒரு சிங்களர் கூட இங்கு தாக்கப்படவில்லை. எவ்வளவு நேரம் ஆகிவிடும் நாங்கள் இங்குள்ள கன்னடர்களை விரட்டுவதற்கு. அதைச்செய்யாமல் இருக்கிறோம். தமிழர்கள் ஒன்னேகால் கோடி மக்கள் கர்நாடகாவில் வசிக்கிறார்கள். ஆனால் அவர்களுக்கு என்று தனித்த அரசியல் என்று எதுவுமில்லை. அந்த மண்ணின் மக்கள் என்ன முடிவெடுக்கிறார்களோ அதன்படிதான் வாழ்கிறார்கள். ஆனால் இங்கு எங்களுக்கு அப்படிப்பட்ட அதிகாரம் இல்லை. அடிமைகளாக நாங்கள் இருக்கிறோம். போராடுகிற மக்களை கர்நாடக அரசு ஆதரித்து ஊக்கப்படுத்துகிறது. போலீசார் பாதுகாப்புக்கு நிற்கிறார்கள். நான் கோயம்பேட்டில் கர்நாடக பேருந்தை தடுத்து நிறுத்தினால் நாளைக்கு இந்த அரசு என் மேல் குண்டாசை போட்டு உள்ளே தூக்கிப்போடும். ஆனால் என் பிள்ளைகளை அடிக்கிறான்; பேருந்துகளை உடைக்கிறான். அந்த அரசு யாரையாவது கைது செய்திருக்கிறதா பாருங்க.
தமிழர்களுக்கு மொழிப்பற்று இனப்பற்று கிடையாது. சாதிப்பற்று, மதப்பற்றுதான் இருக்கிறது. தொடர்ச்சியாக இதை சகித்துக்கொண்டே இருப்போம் என்று எதிர்ப்பார்ப்பது மிகப்பெரிய தவறு. எந்த நேரமும் திடீர் என்று கோபம் வரலாம்; எவனையாவது போட்டு நாங்களும் அடிக்கலாம். அது நடக்கலாம். அந்த நிலைக்கு எங்களை தள்ளாமல் ஒரு நியாயமான முடிவை எடுக்க முயற்சிக்க வேண்டும். நான்கு மாநில முதல்வரையும் அழைத்து பேசவேண்டும் என்று சித்தாராமைய்யா பிரதமருக்கு கடிதம் எழுதுகிறார். நியாயமாக பார்த்தால் அம்மையார் ஜெயலலிதானே கடிதம் எழுதியிருக்க வேண்டும். ஏன் எழுதவில்லை.
அங்கே அடிக்க அடிக்க இங்குள்ள உணர்வுள்ளவர்கள் பொறுத்துக்கொண்டே இருப்பார்களா? பதிலுக்கு அடித்தால் இவர்கள் வன்முறையாளர்கள்; இனவெறியர்கள் என்றால் இதை எப்படி ஏற்பது? தமிழன் எங்கு அடி வாங்கினாலும் அது நன்முறை; நாங்கள் அடித்துவிட்டால் அது வன்முறையா? கையை கட்டிக்கிட்டு நிற்போம் என்று எதிர்ப்பார்க்காதீர்கள். மக்களால் தேர்வு செய்யப்பட்டவர்களே காவிரி விவகாரத்தில் சும்மா இருக்கிறார்கள். மக்களை மகிழ்விக்கிற கலைஞர்களை ஏன் எதிர்ப்பார்க்க வேண்டும். இருந்தாலும் கர்நாடகாவில் நடிகர், நடிகைகள் போராடியதுபோல இங்கேயும் குரல் கொடுப்பார்கள் என்று எதிர்ப்பார்க்கலாம். அங்கே உள்ள எழுச்சி இங்கே இல்லை. இது வருந்தத்தக்கது. இப்போது நாங்கள் தெருவில் இறங்கி போராட ஆரம்பித்தால் பற்றி எரியும். அது நடக்கலாம்’’ என்று ஆவேசத்துடன் கூறினார்.