இலங்கையின் இறுதி யுத்தத்தில் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் தலைவர் பிரபாகரன் இராணுவத்தினரிடம் சரணடையவில்லை. கைத்துப்பாக்கியால் தன்னைத் தானே சுட்டு தற்கொலை செய்து கொண்டார் என முன்னாள் அமைச்சர் விநாயமூர்த்தி முரளிதரன் (கருணா) தெரிவித்துள்ளார். அத்துடன் அவரது மனைவி, மகள் ஆகியோர் ராணுவ ஷெல்வீச்சில் உயிரிழந்தனர் எனவும் தெரிவித்துள்ளார். தமிழக ஊடகமான 'புதிய தலைமுறை' தொலைக்காட்சிக்கு வழங்கி செவ்வியிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். எனக்கும் தலைவர் பிரபாகரனுக்கும் இடையில் சில முரண்பாடுகள் காணப்பட்டன என்பது உண்மையே. நான் என்றும் மதிக்கும் ஒரு தலைவர் பிரபாகரன். அவரது தியாகத்தையும், ஒழுக்கத்தையும் நாம் மதிக்க வேண்டும். போராட்டத்தில் மரணித்தவர்களின் தியாகத்திற்கு நாம் மரியாதை அளிக்க வேண்டும். - என்றார். புதிய தலைமுறை தொலைக்காட்சியின் 'அக்னிப்பரீட்சை' நிகழ்ச்சிக்கு கருணா அளித்த செவ்வி காணொளியாக இங்கே.
நான் என்ற ஆணவம் அதர்மமாக விஸ்வரூபமெடுத்தாலும்-ஒருநாள் தர்மத்தின் காலடியில் விழும்.
பக்கங்கள்
▼
30 ஆகஸ்ட் 2015
28 ஆகஸ்ட் 2015
உள்ளக விசாரணை! தர்மசங்கடத்தில் கூட்டமைப்பு ஆதவாளர்கள்!
தமிழ் தேசியக்கூட்டமைப்பு தலைமை உள்ளக விசாரணைக்கு சாதகமான சமிக்ஞை காட்டியுள்ள நிலையினில் அதன் ஆதவாளர்கள் பலரும் மக்களிடத்தே கடுமையான எதிர்விளைவுகளை எதிர்நோக்க தொடங்கியுள்ளனர்.
குறிப்பாக ஆதரவாளர்களிற்கு பதிலளிப்பதற்காக தெரிவு செய்யப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களது தொலைபேசிகள் தயாராக இல்லையெனவும் கூறப்படுகின்றது.இதனால் பல ஆதவாளர்களும் முடக்க நிலையினை அடையத்தொடங்கியுள்ளனர்.நிஸா பிஸ்வாலுடனான சந்திப்பின் பின்னர் சுமந்திரன் ஊடககங்களிற்கு தெரிவித்துள்ள கருத்தினில் சர்வதேச பொறிமுறைகளின் கீழ் உள்ளக விசாரணையினை கூட்டமைப்பு ஏற்றுக்கொள்வதாக தெரிவித்துள்ளார்.இது தமிழ் மக்களிடையே கடுமையான சீற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.தமிழ் மக்களது இத்தகைய எதிர்ப்பு நிலைப்பாடு தேர்தல் வெற்றிக்காக பாடுபட்ட ஆதவாளர்களை தர்மசங்கடத்திற்குள்ளாக்கியுள்ளது.இதற்கு பதிலளிக்க முடியாது பலரும் தற்போது முடங்கிப்போயுள்ளனர்.குறிப்பாக சமூக வலைத்தளங்களினில் குரல் எழுப்பிய பலரும் தற்போது சுருண்டு போயுள்ளனரென அவதானிப்பாளர்கள் தெரிவிக்கின்றனர்.தொடர்ந்து வரப்போகும் ஜ.நா விசாரணை அறிக்கை வெளியீடு மற்றும் உள்ளக விசாரணை காலங்கள் கடுமையான எதிர்வினைகளினை கூட்டமைப்பு ஆதரவாளர்கள் மற்றும் செயற்பாட்டாளர்களிற்கு கடுமையான தர்மசங்கடங்களை தரலாமென நம்பப்படுகின்றது.
16 ஆகஸ்ட் 2015
மாவையும் சிறீகாந்தாவும் சேர்ந்து திட்டமிட்ட குண்டுத்தாக்குதல்!
15 ஆகஸ்ட் 2015
சுமந்திரனுக்கு மூன்றடுக்கு பாதுகாப்பு!
தமிழரசுக்கட்சி வேட்பாளர் சுமந்திரனிற்கு அமைச்சரவை பாதுகாப்பு இன்று காலை முதல் வழங்கப்பட்டுள்ளது. இதன் படி அமைச்சரவை பாதுகாப்பு பிரிவை சேர்ந்த மூவர் விசேட அதிரடிப்படையினை சேர்ந்த எண்மர் மற்றும் சாதாரண காவல்துறையினை சேர்ந்த நால்வரென பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
தேர்தலை முன்னிட்டு வடமராட்சி வருகை தந்து தங்கியுள்ள சுமந்திரன் தான் மக்களுடன் நெருங்கி உறவாடுவது போல காட்டிக்கொள்ள தனது பாதுகாப்பு பொறிமுறைகளினை நீக்கிக்கொண்டிருந்தார்.பிரச்சாரங்கள் முடிவடைந்ததையடுத்து தற்போது தனது விசேட பாதுகாப்பினை பெற்றுக்கொண்டுள்ளார்.
முன்னதாக ஒட்டுக்குழு தலைவராக இருந்த டக்ளஸ் ஆளுநர் சந்திரசிறி போன்றவர்களிற்கு வழங்கப்பட்டதைவிட அதிக பாதுகாப்பு சுமந்திரனிற்கு வழங்கப்பட்டுள்ளதாக கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரொருவர் தெரிவித்தார்.14 ஆகஸ்ட் 2015
தேவியனை அரசபடைகளுக்கு காட்டிக் கொடுக்க சிறீதரன் 4 கோடி ரூபா பெற்றார்!
![]() |
| தேவியன் |
இவ்வாறு இணையமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.
13 ஆகஸ்ட் 2015
தோல்வி பயத்தால் முன்னணியினர் மீது கூட்டமைப்பு வன்முறைத்தாக்குதல்!
![]() |
| தமிழ்த்தேசிய மக்கள் முன்னணி |
11 ஆகஸ்ட் 2015
கொள்கையின் சின்னமாக உந்து ஊர்தி!
![]() |
| புளியங்கூடல் |
07 ஆகஸ்ட் 2015
மன்னார் ஆயரின் சிகிச்சைக்கு நிதி உதவி கோரப்படுகிறது!
மன்னார் மறைமாவட்ட ஆயர் மேலதிக சிகிச்சைக்காக சிங்கப்பூருக்கு கொண்டு செல்லப்படவுள்ளதாக மன்னார் குருமுதல்வர் விக்டர் சோசை தெரிவித்தார். வவுனியாவில் நேற்று இடம்பெற்ற மனித மாண்பினைக்காக்கும் அமைப்பின் 9ஆவது ஆண்டு நிறைவு நிகழ்வில் கலந்து கொண்டு உரை நிகழ்த்தும்போதே அவர் இதனைத் தெரிவித்திருந்தார்.மன்னார் மறை மாவட்ட ஆயர் இராயப்பு யோசேப்பு ஆண்டகை கடந்த 3 மாதகாலமாக கடும் நோயால் பாதிக்கப்பட்டுள்ளார். எனவே அவர் உடல் நலம் நலம் பெறவும் அவர் முன்பு ஆற்றிய பணிகளை தொடர்வதற்கு நமது நாட்டில் சிகிச்சைகள் பலனின்றி உள்ளதால் சிங்கப்பூரில் 6 வாரம் தங்கியிருந்து மேலதிக சிகிச்சையினை பெறும் நோக்கில் இன்னும் சில தினங்களில் ஆயரை சிங்கப்பூர் கொண்டு செல்ல ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன.அதற்கான செலவாக கிட்டத்தட்ட ஒருகோடி ரூபா தேவை. இந்நிதி உதவியினை புலம்பெயர் எமது உறவுகள் மூலமாகவும் மற்றும் எமது மக்களாகிய உங்களிடமும் தாம் எதிர்பார்ப்பதாகவும் இது தொடர்பான மேலதிக தகவல்களை மன்னார் ஆயர் இல்லத்தில் பெற்றுக் கொள்ளுமாறும் குருமுதல்வர் தனது உரையில் தெரிவித்திருந்தார்.06 ஆகஸ்ட் 2015
சுமந்திரனின் விதண்டாவாதம்!(காணொலி இணைப்பு)
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் யாழ் மாவட்ட வேட்பாளர் சுமந்திரன் அவர்கள் இன்று மதியம் யாழ் ஊடக அமையத்தில் ஊடகவியலாளர் சந்திப்பு ஒன்றினை நடாத்தினார். அதில் முக்கியமான தரவு ஒன்றினை பிழையாகச் சொன்னது மட்டுமல்லாது, மூத்த ஊடகவியலாளர் ஒருவர் அதனைச் சுட்டிக் காட்டிய போது அவரது கருத்தை பரிசீலிக்காமல் தான் சொன்னது தான் சரி என்கிற வகையில் நடந்து கொண்டுள்ளார்.
உண்மையில் 1982 ஆம் ஆண்டு நடந்த ஜனாதிபதித் தேர்தலில் யாழ் மாவட்டத்தில் அமரர் குமார் பொன்னம்பலம் அவர்கள் தான் அதிக வாக்குகளைப் (87,263) பெற்றார். அதே நேரம் கொப்பேக்கடுவ அவர்கள் (77,300) வாக்குகளைப் பெற்று யாழில் இரண்டாவதாக வந்தார்.
ஆனால், சுமந்திரனோ யாழில் கொப்பேக்கடுவா தான் முதலாவதாக வந்தார். குமார் பொன்னம்பலம் இரண்டாவதாக வந்ததாக திரும்பத் திரும்பக் கூறினார்.
குறித்த தேர்தலில் தமிழ்த் தேசியத்தை முன்னிறுத்தி நின்றுதான் குமார் பொன்னம்பலம் அதிக வாக்குகளைப் பெற்று இருந்தமை குறிப்பிடத்தக்கது.
03 ஆகஸ்ட் 2015
கொள்கை மாறாதவர் கஜேந்திரகுமார் என்கிறார் தினேஷ்!
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தேர்தல் விஞ்ஞாபனத்தில் சமஷ்டி முறைமையில் தீர்வு என்று குறிப்பிட்டதன் மூலம் கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தன் பெரும் தவறிழைத்துள்ளார். கஜேந்திரகுமார் பொன்னம்பலத்தை தோற்கடிக்கவே அவர் இவ்வாறு செய்துள்ளார் என்று மக்கள் ஐக்கிய முன்னணியின் தலைவரும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் வேட்பாளருமான தினேஷ் குணவர்த்தன தெரிவித்தார்.
கூட்டமைப்பின் தேர்தல் விஞ்ஞாபனம் குறித்து கருத்து வெளியிட்டுள்ள அவர், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தேர்தல் விஞ்ஞாபனத்தில் சமஷ்டி முறைமையிலேயே தீர்வு என்று குறிப்பிடப்பட்டுள்ளது. அதாவது கூட்டமைப்பின் தலைவர் தீர்வு விடயத்தில் ஒரு கடும்போக்கான கட்டத்துக்கு சென்றுள்ளார். இதன் மூலம் அவர் பெருந் தவறிழைத்துள்ளார் என்பதனை குறிப்பிடுகின்றேன்.
குறிப்பாக இவ்வாறு கடும்போக்குவாதத்தை பின்பற்றி இந்தப் பிரச்சினைக்கு தீர்வு காண முடியாது. குறிப்பாக பெரும்பான்மை மக்களின் சம்மதமின்றி எந்தத் தீர்வையும் இலங்கையில் நடைமுறைப்படுத்த முடியாது. இந்நிலையில் சம்பந்தன் சமஷ்டி என்ற விடயத்தை குறிப்பிட்டவுடன் தென்னிலங்கை மக்கள் எதிர்க்கின்றனர்.
இவ்வாறு தென்னிலங்கையில் எதிர்ப்பு வரும் என்று தெரிந்தும் மக்களின் வாக்குகளை பெறுவதற்காகவும் தேர்தலில் தனித்து ஒரே கொள்கையுடன் களமிறங்கியுள்ள கஜேந்திரகுமார் பொன்னம்பலத்தை தோற்கடிக்கவுமே சம்பந்தன் இந்த சமஷ்டி என்ற கடும்போக்கு நிலைப்பாட்டை எடுத்துள்ளார். சம்பந்தன் அடிக்கடி தமது நிலைப்பாடுகளை கூட்டமைப்புக்காக மாற்றிக்கொண்டிருக்கின்றார். கஜேந்திரகுமாரின் கொள்கைகளை நான் ஏற்றுக்கொள்ள மாட்டேன். ஆனால் அவர் ஒரே கொள்கையில் தொடர்ச்சியாக இருந்து வருகின்றார். எனினும் கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தன் அவ்வப் போது கூட்டமைப்பின் அரசியல் எதிர்காலம் கருதி நிலைப்பாடுகளை மாற்றி வருகின்றார் என்றார்.



