![]() |
| தமிழினி |
நான் என்ற ஆணவம் அதர்மமாக விஸ்வரூபமெடுத்தாலும்-ஒருநாள் தர்மத்தின் காலடியில் விழும்.
பக்கங்கள்
▼
26 ஜூன் 2013
தமிழீழ அரசியற்துறைப் பொறுப்பாளர் தமிழினி விடுதலை!
25 ஜூன் 2013
பாடசாலைச் சிறுமி தாக்கப்பட்ட சம்பவம் மனித உரிமை ஆணைக்குழு விசாரணை!
கொக்குவிலில் உள்ள ஆரம்பப் பிரிவு பாடசாலை ஒன்றில் 8 வயது மாணவியொருவரை ஆசிரியர் தாக்கிய சம்பவம் தொடர்பில் இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் யாழ்.பிராந்தியக்கிளை விசாரணைகளை முன்னெடுத்துள்ளதாக அதன் இணைப்பாளர் த.கனராஜ் தெரிவித்தார். கொக்குவிலில் உள்ள ஆரம்பப் பிரிவு பாடசாலையில் தரம் 3 இல் கல்வி பயிலும் மாணவியொருவர் கடந்த வெள்ளிக்கிழமை கணிதபாட ஆசிரியரால் கடுமையாகத் தாக்கப்பட்டுள்ளார். வகுப்பறையில் பயிற்சிக்காக கணக்கு ஒன்றை தவறாகச் செய்த காரணத்தால் குறித்த ஆசிரியர் மாணவியின் இரண்டு கால்களிலும் பிரம்பால் அடித்துள்ளார். இதனால் ஏற்பட்ட கண்டல் காயம் காரணமாக குறித்த மாணவி யாழ்.போதனா வைத்தியசாலைக்குச் சென்று சிகிச்சை பெற்றுள்ளார். இந்தச் சம்பவம் தொடர்பில் ஊடகங்களில் செய்தி வெளியாகியிருந்தது. இதனையடுத்து இது தொடர்பான விசாரணைகளை, இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் யாழ்.பிராந்தியக் கிளை முன்னெடுத்துள்ளது என கனகராஜ் மேலும் தெரிவித்தார்.
24 ஜூன் 2013
யாழில் சிங்கள மாணவரிடையே மோதல்!
யாழ்.பல்கலைக்கழகத்தில் கல்விபயிலும் தென்பகுதி மாணவர்களுக்கு இடையே ஏற்பட்ட மோதலில் நான்கு மாணவர்கள் காயமடைந்தனர்.யாழ்,நாகவிகாரையில் நடைபெற்ற பொசன் நிகழ்வில் மாணவர் குழுக்களுக்கிடையே ஏற்பட்ட முரண்பாட்டாலேயே இந்த மோதல் இடம்பெற்றுள்ளது.இது குறித்து மேலும் தெரியவருவதாவது,நாகவிகாரையில் இடம்பெற்ற பொசன் நிகழ்வுக்காக யாழ்.பல்கலைக்கழகத்தில் கல்வி பயிலும் தென்பகுதியைச் சேர்ந்த விஞ்ஞான பீட இரண்டாம் வருட மாணவர்களும்,முகாமைத்துவ பீட முதலாம் வருட மாணவர்களும் சென்றனர்.இதன்போது இரண்டாம் வருட மாணவர்களுக்கு உரிய மரியாதையை முதலாம் வருட மாணவர்கள் வழங்கவில்லை என்று முரண்பாடு எழுந்தது.இந்த முரண்பாட்டின் எதிரொலியாக முதலாம் வருட மாணவர்கள் விகாரையால் திரும்பி பரமேஸ்வராச் சந்தியில் பஸ்ஸால் இறங்கியபோது தாக்கப்பட்டனர்.முதலாம் வருட மாணவர்களை சிரேஷ்ட மாணவர்கள் கை,கால்காளாலும் தலைக் கவசங்களாலும் சரமாரியாகத் தாக்கினர் என்று நேரில் கண்டவர்கள் தெரிவித்தனர். இதனால் அந்தப் பகுதியில் பெரும் களேபரம் ஏற்பட்டது.தென்பகுதி மாணவர்களின் மோதலால் பரமேஸ்வராச் சந்தி ஊடான போக்குவரத்தும் தடைப்பட்டது. இதன்போது எட்டு மாணவர்கள் வரை காயமடைந்ததாகக் கூறப்பட்ட போதும் நால்வரே காயங்களுடன் யாழ்.போதனா வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டனர்.பி.ஏரத் (வயது 20), கே.திலக்ஷன (வயது 22), டி.ஜெயரங்க(வயது 23),எஸ்.லக்மண (வயது 22)ஆகியோரே காயங்களுடன் வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டவர்களாவர்.இதனையடுத்து விஞ்ஞானபீட இரண்டாம் வருட தென்பகுதி மாணவர்கள் 6 பேரை விசாரணைக்காக அழைத்துச் சென்ற பொலிஸார் பின்னர் அவர்களை விடுவித்தனர் என்றும் தெரிவிக்கப்பட்டது.
23 ஜூன் 2013
துப்பாக்கியுடன் ஒருவர் கைது!
வாழைச்சேனை பொலிஸ் பிரிவில் காவத்தமுனை மணிக்கூட்டுச் சந்தியில் வைத்து ரீ- 56 ரக துப்பாக்கியுடன் ஒருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
இன்று ஞாயிற்றுக்கிழமை காலை 05.30 மணியளவில் ஓட்டமாவடி பாலத்தடியில் வீதிச் சோதனையில் ஈடுபட்டிருந்த பொலிஸார், பல்ஸர் மோட்டார் சைக்கிளில் வந்த இருவரை சோதனை செய்வதற்காக சைக்கிளை நிறுத்துமாறு கூறியபோது மோட்டார் சைக்கிளை நிறுத்தாமல் சென்றுள்ளனர். அவர்களை துரத்திச் சென்ற பொலிஸார் காவத்தமுனை மணிக்கூட்டுச் சந்தியில் வைத்து பிடித்து சோதனையிட்ட போது அறுகம்புல்லினால் மறைத்து வைத்து ரீ–56 ரக துப்பாக்கியை கொண்டு வந்தது தெரிய வந்துள்ளது.
பேத்தாளை பாடசாலை வீதியைச் சேர்ந்த தேவமணி பாக்கியம் என்பர் கைது செய்யப்பட்டுள்ளதுடன் இவருடன் வந்த சீலன் தப்பிச் சென்றுள்ளதாகவும் இவர்கள் தொடர்பான விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் வாழைச்சேனை பொலிஸார் தெரிவித்தனர்.
22 ஜூன் 2013
குடாநாட்டு வர்த்தகர்களிடம் பொலிஸ் கப்பம்!
![]() |
| யாழ்ப்பாணம் |
ஜெர்மன் எசன் நகரில் பட்டப்பகலில் வீடுடைத்து திருட்டு!
ஜெர்மன் எசன் அல்றண்டோர்ப் பகுதியில் உள்ள தமிழர் வீட்டில் பட்டப்பகலில் வீடுடைத்து நகைகள் கொள்ளையிடப்பட்டுள்ளது.இது தொடர்பாக குறித்த வீட்டின் உரிமையாளர் எமக்கு தகவல் தருகையில்,சென்ற ஞாயிற்றுக்கிழமை(16.06.2013)காலையில் தேவாலையம் சென்றிருந்ததாகவும் பின்னர் பிரார்த்தனைகளை முடித்துக்கொண்டு வீடு திரும்பிய வேளை வீட்டுக்கதவு உடைக்கப்பட்டு பெறுமதி வாய்ந்த நகைகள் கொள்ளையிடப் பட்டிருந்ததாகவும் இத்தனைக்கும் தாம் குடியிருப்பது பத்தாவது மாடியில் என்றும் தெரிவித்தார்.கொள்ளையர் தொடர்பான தகவல்கள் எதுவும் இதுவரையில் தமக்கு தெரியாது என்றும் தெரிவித்தார்.எசன் காவல்துறையினர் தொடர்ந்தும் விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக தெரியவருகிறது.
21 ஜூன் 2013
சிங்களவனை அடித்து விட்டார்கள் கூக்குரலிடுகிறது சிங்கள அமைப்பு!
![]() |
| கார்டிப் மைதானம் லண்டன் |
20 ஜூன் 2013
லண்டன் மைதானத்தில் புலிக்கொடிகளுடன் புகுந்த தமிழர்கள்!
19 ஜூன் 2013
தமிழர்களின் வீடுகளை எரித்து காடையர்கள் அட்டகாசம்!
நன்றி:தினக்கதிர்
மன உளைச்சல்தான் மணிவண்ணன் மரணத்துக்கு காரணம்! - சீமான்
எதிர்பாராத மன உளைச்சல்களின் அழுத்தம் காரணமாக இதயத்தில் பாதிப்பு ஏற்பட்டதாலேயே இயக்குநர் மணிவண்ணன் மரணத்தைத் தழுவியதாக மருத்துவர்கள் தெரிவித்ததாக நாம் தமிழர் கட்சித் தலைவர் சீமான் கூறினார். தமிழ் சினிமாவின் முக்கிய இயக்குநராக, பிரபல நடிகராக திகழ்ந்த மணிவண்ணன் கடந்த சனிக்கிழமை திடீரென மாரடைப்பால் மரணம் அடைந்தார். அவரது மரணத்துக்கு இரு தினங்களுக்கு முன்பு, அவரது குரு பாரதிராஜா ஆனந்த விகடனில் மிகக் கேவலமாக மணிவண்ணனைத் திட்டி எழுதியிருந்ததுதான் இந்த மரணத்துக்குக் காரணம் என சினிமா உலகில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது. இந்த நிலையில் மணிவண்ணனின் மரணம் குறித்து அவரது நண்பர் பாக்யராஜ், சீடர் சீமான் ஆகியோர் பத்திரிகைக்கு அளித்துள்ள பேட்டி வெளியாகியுள்ளது.பாரதிராஜாவின் திட்டு மற்றும் மணிவண்ணன் மரணம் குறித்து இயக்குநர் கே பாக்யராஜ் கூறுகையில், "மணிவண்ணன் நல்ல படைப்பாளி.. வித்தியாசமான புத்தகங்களைப் படிக்கிற படிப்பாளி. எழுத்தாளர், பேச்சாளர், சமூக சிந்தனை உள்ள முற்போக்குவாதி. ஈழத்தமிழர்கள் மீது எல்லாருக்குமே ஒரு பரிவு இருக்கும். ஆனா அவங்களை ரத்த உறவா பார்த்துப் பழகியவர் மணிவண்ணன். எனக்குப் பிறகுதான் பாரதிராஜாவிடம் சேர்ந்தார். ஆனாலும் பாரதிராஜாவுக்கு பிடித்தமானவராக இருந்தார் மணிவண்ணன். ஈகோவே பார்க்க மாட்டார். டிஸ்கஷன்ல ஒரு நல்ல சீனைச் சொன்னாபோதும், சொன்னவங்க காலைத்தொட்டு வணங்குவார். என்னோட "ஆராரோ ஆரிரரோ' படத்தில வர்ற "அதிர்ச்சி பைத்தியம்' கேரக்டரை அவர்தான் சொன்னார்.பாரதிராஜா கோபம்கிறது குழந்தைக் கோபம் மாதிரி. தன் படங்கள்ல ஸ்கிரிப்ட்ல ஒர்க் பண்ற திறமையானவங்க தன்னை விட்டு விலகும்போது கோபப்படுவார். எல்லார் மேலயும் பாரதிராஜா கோபப்பட மாட்டார். தனக்குப் பிடிச்சவங்க மேலதான் ரொம்ப கோபப்படுவார். ஓவர் அஃபெக்ஷனில் பேசுறது பாரதிராஜா வோட வழக்கம். பாரதிராஜா, மணி வண்ணனைப் பத்தி பதில் சொன்ன நேரத்துல மணிவண்ணனோட துயர மரணம் நிகழ்ந்திருச்சு. அதுதான் வருத்தமா இருக்கு'' என்கிறார் துயரத்துடன்.இயக்குநர் சீமானிடம் பேசியபோது, "எதனால் மரணம் ஏற்பட்டது என்று மருத்துவர்களிடம் நான் விசாரித்தபோது, 'எதிர்பாராத மன உளைச்சல்களின் அழுத்தம் காரணமாக இதயத்தில் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது' என்றனர். அதனால், விமர்சனங்கள் அவரது இதயத்திற்கு பாதிப்பை ஏற்படுத்தியிருக்கலாம். வாய்ப்பிருக்கிறது.இனமானத் தமிழன் ஐயா மணிவண்ணன் அவர்களுக்கு புளியங்கூடல்.கொம் தனது வீர வணக்கத்தை செலுத்துகின்றது.
02 ஜூன் 2013
தேர்தல் அறிவித்ததும் தமிழரசு கட்சி முடிவெடுக்க தீர்மானம்!
வடமாகாணசபை தேர்லை நடத்துவது தொடர்பில் அரசாங்கம் உறுதியான நிலைப்பாட்டை அறிவித்ததும் அதுபற்றி முடிவெடுப்பதற்கு தமிழரசு கட்சி தீர்மானித்துள்ளது.
இலங்கைத் தமிழரசுக் கட்சியின் மத்திய செயற்குழு கூட்டத்திலேயே இந்த தீர்மானம் எட்டப்பட்டுள்ளதாக கட்சித்தகவல்கள் தெரிவிக்கின்றன.
கட்சியின் மத்திய செயற்குழுக்கூட்டம் கட்சியின் தலைவரும் தமிழ்க்கூட்டமைப்பின் நாடாளுமன்ற குழுக்களின் தலைவருமான ஆர்.சம்பந்தன் தலைமையில் கிளிநொச்சியில் நேற்று சனிக்கிழமை நடைபெற்றது.
இந்த கூட்டம் சனிக்கிழமை காலைவேளையில் ஆரம்பமாகி மாலை 6 மணிவரையும் இடம்பெற்றுள்ளது. இந்த கூட்டத்தில் மத்தியக்குழு அங்கத்தவர்களுக்கு இடையே பலத்த வாதப் பிரதிவாதங்கள் இடம்பெற்றதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பைத் தேர்தல் திணைக்களத்தில் தனிக் கட்சியாக பதிவு செய்வது, மீளகுடியேற்றப் பிரதேசங்களில் பலவந்தமாக மேற்கொள்ளப்படுவதாகக் கூறப்படுகின்ற வெளிமாவட்டங்களைச் சேர்ந்தவர்களின் குடியேற்றம் உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகள் குறித்து இந்த கூட்டத்தில் விரிவாக ஆராயப்பட்டுள்ளன என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்த சந்திப்பு தொடர்பில் நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜா தெரிவிக்கையில்,
இராணுவ தேவைக்காகக் அரசாங்கம்,பொதுமக்களின் காணிகளை கையகப்படுத்துவது, இடம்பெயர்ந்த மக்களை வாக்காளர்களாகப் பதிவு செய்வது, இந்தியாவில் தஞ்சமடைந்துள்ள குடும்பங்கள் தாயகம் திரும்பி மீள்குடியேறுவது தொடர்பில் இலங்கை இந்திய அரசாங்கங்களுடன் பேச்சுக்கள் நடத்துவது, இனப்பிரச்சினை தீர்வு தொடர்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு எடுத்திருந்த நடவடிக்கைகள், அரசிடம் முன்வைக்கப்பட்டுள்ள கூட்டமைப்பின் தீர்வு யோசனைகள் போன்றவை உள்ளிட்ட முக்கிய விடயங்கள் குறித்து இங்கு விரிவாக பேசப்பட்டது.
வடமாகாண சபைக்கான தேர்தலை நடத்துவது தொடர்பில் அரசாங்கம் உறுதியான நிலைப்பாட்டை எடுத்து அரசாங்கம் அறிவிக்கும்போது, தாங்களும் அதுபற்றி முடிவெடுப்பது என்றும் இக்கூட்டத்தில் கலந்துரையாடப்பட்டது.
கூட்டத்தில் கலந்து கொண்டிருந்த பலரும் பல விடயங்கள் தொடர்பில் பல்வேறு கேள்விகளை எழுப்பியதாகவும், அவற்றுக்கு தாங்கள் உரிய விளக்கம் அளித்ததாகவும் மாவை சேனாதிராஜா எம்.பி மேலும் தெரிவித்தார்.
இக்கூட்டத்தில் தலைவர் இரா.சம்பந்தனுக்கும் கட்சியின் மூத்த உறுப்பினர் சிற்றம்பலத்திற்கும் இடையில் பலத்த வாக்குவாதம் இடம்பெற்றதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.






